பழவேற்காடும் மீன் வாங்கிய அனுபவமும் (படங்கள்)


விடுமுறை நாட்களில மீன் வாங்க போறதுன்னா மெரீனா பீச் லைட் ஹவுஸ் பக்கம் எப்போவாச்சும் போவோம்..! நல்லா பிரெஷா வாங்கலாம்...! இப்போ பழவேற்காடு போய் மீன் வாங்கலாமுன்னு நண்பர்கள் சொன்னவுடன் உற்சாகமா கிளம்பிட்டேன் ..! இதுவர அங்க போனதில்ல..! அது சுற்றுலா தலமாகவும் இருக்குறதால கூடுதல் உற்சாகம்..! காலைல அஞ்சர மணிக்கு கிளம்பிட்டோம் பெரம்பூர் -செங்குன்றம் -சோழவரம் -பொன்னேரி -பழவேற்காடு இதான் ரூட் நாற்பது கிலோமீட்டருக்கு மேல இருக்கும்...! எங்க ஊர்பக்கம் போனதுபோல இருந்தது அழகான வயல்வெளி கிராமங்கள் ...!


காருக்குள்ளிருந்து காலை கதிரவன்




நான் ஒருமாதிரி கற்பனை பண்ணி போனேன் கடற்கரை ஓரமா போட்ல புடிச்சு வர்ற மீன வாங்கலாம்னு....! மெரீனா பீச்ல அப்படித்தான் வாங்குவோம் ஆனா இங்க அப்படி இல்ல புடிச்சு வர்ற மீனுங்கள மார்கெட்க்கு கொண்டுவந்துடுறாங்க அங்கதான் விற்பனை ..!





இந்த வகை மீனும் இறாலும் வாங்கினேன் இந்த திவ எழுதும்போது நான் வாங்கின மீனு வீட்டுல கொழம்புல கொதிச்சுட்டு இருக்கும் ;;)





இங்க நல்ல இறால் கிடைக்குது சைசுக்கு தகுந்த மாதிரி கிலோ எழுபது ரூபாய்ல இருந்து முன்னுறு ரூபாய் வரை..!




சம்பா நண்டு கிடைக்குது இது உயிரோட தான் இருக்கும் கொடுக்குகளை கயிறு போட்டு கட்டி வைச்சு இருக்காங்க ஒரு நண்டு விலை நூத்தி இருபது ரூபாயாம்.!




பழவேற்காடு சுற்றுலா செல்ல....!

இங்க நெறைய தீவுகள் இருக்கு அங்க அழகான மணல்வெளி இருக்காம் படகுல அழைச்சுகிட்டு போய் படகுகாரங்க நம்ம கூடவே இருந்து கூட்டிகிட்டு வராங்களாம் தீவுக்குள்ள ஒன்னும் கிடைக்காதாம் எல்லாத்தையும் வாங்கிகிட்டு போய்டணும் .


கலங்கரை விளக்கம்


தூரத்தில் தெரியும் தீவுகள்




>