மத்திய பிரதேச எல்லையில் மதிமுக படையுடன் வைகோ போராட்டம்...!( படங்கள் தொகுப்பு)

 படங்கள் அனைத்தும் முகநூலில் கிடைத்தவை....!












மத்திய பிரதேச எல்லையான பட்சிசோலி கிராமத்துப் பெண்களின் ஆதரவோடு








>

கா(நா)ட்டில் இருந்து தப்பிய மான்குட்டி..!

அடர்ந்த அந்த காட்டுப்பகுதியை ஒட்டியே கருணாவின் பண்ணை வீடு இருந்தது..! பண்ணை  வீடு  மிகவும் அழகானது..! மலர்த்தோட்டங்கள் காய்கறிச் செடிகள் மரங்கள் என ரம்மியமாக  இருக்கும்..! மேலும் அங்கே ஒரு ஆட்டுபண்ணை,கறவை மாடுகள் இருந்தன. கோழிகளையும் வளர்த்து  வந்தான் கருணா..! 
பண்ணையை  அடுத்த காட்டுக்குள்.   சிங்கம் ,புலி கரடி போன்ற கொடிய மிருகங்கள் இருந்தன. மான்கள்,காட்டு மாடுகள்,குரங்குகள் போன்ற ஏனைய விலங்குகளும் வசித்து வந்தன.காட்டு விலங்குகள் பண்ணைக்குள்
புகுந்துவிடாமல் இருக்க வலிமையான கம்பி வேலி அமைத்து இருந்தான்...! 
 

ஒருநாள் நள்ளிரவில் ஏதோ  ஒரு காட்டு மிருகத்துக்கு இரையாவதில் இருந்து  தப்பித்த அழகிய மான் குட்டி ஒன்று.எப்படியோ  கம்பி வேலியை  தாண்டி ஆட்டு பண்ணைக்குள் புகுந்து  விட்டது..! உயிர்பயத்தில் ஓடிக்களைத்த மான் அங்கேயே  படுத்து உறங்கிவிட்டது..!

அதிகாலையில் விழித்து கொண்ட மான்  ஆடுகள்,மாடுகள்,கோழிகள் என அவை வளரும் விதம் கண்டு அந்த பண்ணை  சூழலில்  மனதை பறிகொடுத்து  விட்டது..! எவ்வளவு பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இங்கு இவைகள் வசிக்கின்றன..என ஏங்கி போன மான் மெல்ல அங்கிருந்த ஒரு ஆட்டிடம் பேச்சு கொடுத்தது..!
உங்களை எல்லாம் மனிதர்கள் எவ்வளவு அன்புடன் உணவு கொடுத்து
வளர்த்து வருகின்றனர் கொடுத்து  வைத்தவர்கள் நீங்கள்  நானும் உங்களுடன் தங்கிவிடலாமா ..?

அதனை கேட்ட ஆடு  ஒன்று  உரக்க  சிரித்தது..!


ஏன் சிரிக்கின்றாய்  நான் வந்தது பிடிக்கவில்லையா..?

காட்டில்  இருந்து  தப்பிய அழகிய மானே உனக்கு ஏன் இந்த துர் நிலை நீகாட்டுக்கே சென்றுவிடு..!

இது  துர் நிலையா நீங்கள்  எல்லாம் நன்றாகத்தானே உள்ளீர்கள்..?

நீ காட்டுக்குள் எவ்வளவு காலம் உயிர் வாழ்வாய்..? ஆடு கேட்டது..

அது  சொல்ல முடியாது  எப்போது வேண்டுமானாலும் சாகலாம்  இது தான்  துர் நிலை..!

உயிர் தப்பி வாழ்ந்தால்  பல்லாண்டுகாலம்  உயிர் வாழ முடியும் தானே..?
ஆமாம்  முடியும்..!


ஆனால்  எங்களால்  முடியாது...!

ஏன்...?

நாங்கள்  வளக்கப்படுவதே கொல்லபடுவதற்க்குதான்...! எங்கள்  சாவு  எப்போது  என்று எங்களுக்கே  தெரியும்..! வளர்ந்து ஒரு நிலையை அடைந்த பிறகு உடனே மனித உணவுக்காக கொல்ல பட்டு விடுவோம்..! எங்களுடன்  வளர்ந்தவர்கள் தினமும் ஒவ்வொருவராக கொல்ல படுகின்றோம்..! உனக்கு  உன் உயிரை காப்பாற்றி கொள்ள தப்பித்து ஓட சுதந்திரம் உள்ளது  எங்களால் அது கூட முடியாது..!

ஒஹ்ஹ்...!

இந்த கோழிகள்  எல்லாம் அன்புடன்தானே  வளர்க்க படுகின்றன...?

ஹா..ஹா  வளர்க்கபடும்  போது அன்பு காட்டுவது போலதான் தோன்றும்..! ஆனால் வளர்த்தவனே இந்த கோழிகளை  கொன்று குழம்பு  வைத்து சாப்பிட்டு விடுவான்..!

ஐயோ..!

சரி  இந்த மாடுகள்  சுத்தமாக நிறைய  உணவு கொடுக்க பட்டுதானே உள்ளன..!

அதிலும் காரணம் உள்ளது..
என்ன காரணம்...?

புரியாத  காட்டு மானே  உன் தாயிடம்  எவ்வளவு காலம் தாய்ப்பால் குடித்தாய்..!

ம்ம் அது  தெரியவில்லை என் விருப்பம் போல குடித்தேன்..!

இந்த மாடுகளின் கன்றுகளுக்கு   அந்த உரிமை  கிடையாது..கன்றுகளுக்கு  கொடுப்பது போல கொடுத்துவிட்டு மொத்த பாலையும் அபகரித்து மனிதன் குடித்து விடுவான் அதற்காகத்தான் இந்த பாசம்,பாது காப்புஎல்லாம்...!

மானுக்கு காட்டின் அருமை புரிந்தது...! 

இந்த வாழ்க்கை தேவையா மான்குட்டியே...?

 என கேட்ட ஆட்டினை பரிதாபமாக பார்த்த மான் குட்டி காட்டுக்குள்  செல்ல எத்தணிக்கையில் காட்டில் வெகு  தூரத்தில் வரிப்புலி  ஒன்று
தட்டுப்பட அஞ்சி நின்றது...!

அப்போது பண்ணை வீட்டுக்குள்  இருந்து  ஒருவன் வெளியே  வர ...! ஆடு  எச்சரித்தது  இந்த  மனிதன் உன்னை பார்த்துவிட்டால் என்ன ஆவாய் என்றே  புரியவில்லை ஓடிவிடு..!

மனிதன் அருகே வர.... காட்டில்  புலியின் சத்தமும் சற்று நெருங்கியது..! காட்டுக்குள்ளாவது  ஓடி  தப்பிக்க முடியும் இங்கே....??  சட்டென முடிவெடுத்த மான் துள்ளி குதித்து காட்டுக்குள் ஓடி மறைந்தது..!



>

தஞ்சை பெரிய கோவில்...படங்கள்...!

உறவினர் திருமணத்துக்கு தஞ்சை விஜயம்...அப்படியே பெரிய  கோவிலுக்கும் ஒரு விசிட்...!  கையில்  மொபைல் கேமரா....  கை  சும்மா இருக்குமா...??









ஒன்னும் புரியல....





>

புதையலாய் கிடைத்த சோழர் கால நாணயங்கள்..!

சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்...

உச்சி பொழுது  முதலே அந்த பதிநான்கு வயது  சிறுவன் வயல் வெளியில் ஆங்காங்கே  பள்ளம்  தோண்டுவதும்..எதையோ  தேடுவதுமாக இருந்தான்..!
இருள் கவ்வ தொடங்கியது  அவன்  முயற்சியை  விடுவதாக  இல்லை..! அருகில் இருந்த குடிசையில்  இருந்து வெளிவந்த அவனது தாய் கிடைத்ததா என கேட்க இல்லையென கவலையுடன்  தலையாட்டுகின்றான். சரி காலையில் பார்த்துகொள்ளலாம்  என்ற எண்ணத்தில் இருவரும் சென்று விடுகின்றனர்..!

விஷயம்  இதுதான்..!  அவனது தந்தை,தாய்  இருவரும்  விவசாய கூலித்தொழிலாளர்கள்.அவ்வப்போது  இவனும் கூலி வேலைகளில் பங்கெடுத்து கொள்வான்.அதற்கென அவனுக்கும் கூலியாக செப்பு காசுகள் கிடைக்கும்.அந்த காசுகளை  எல்லாம் சேமித்து ஒரு மண் கலயத்தில்  வைத்து இருந்தான். அதனை பாதுகாப்பாக வைக்க நினைத்து ஒரு இரவு வேளையில் அந்த மண்கலயத்தை வயலில்  புதைத்து  வைத்து விட்டான். வைத்த  இடம் மறந்து போயிற்று..அதைத்தான்  தேடி கொண்டு இருக்கின்றான்...!

இப்போது  அதனை  தேட காரணம்...?

அவர்கள்  இருந்த இந்த கிராமம் பஞ்சத்தில்  அடிபட்டு  கடும் வறட்சியால் பாதிக்க பட்டுவிட, அங்கு வசித்து வந்த மக்கள் ஒரு சிறுகுழுவாக கூடி பேசி வேறு இடத்துக்கு  இடம் பெயர முடிவு  செய்தாகி  விட்டது.அதன் படி மறுநாள் மூட்டை முடிச்சுகளுடன்  புறப்பட ஆயத்தம் ஆயினர்..!

அதிகாலையிலேயே  எழுந்து  தேட துவங்கினான்  பலன் இல்லை...!மூட்டை முடிச்சுகளை மாட்டு  வண்டிகளில் ஏற்றி விட்டு அவன் தாய்,தந்தையும் கூடவே  தேடினர் செப்புகாசுகள் ஆயினும்  வழி செலவுக்காவது  உதவுமே...! ம்ஹூம்  அவன்  சொன்ன அடையாள  இடங்களில் எல்லாம்  தேடி ஆகிவிட்டது..! கிடைக்கவே  இல்லை..!அனைவரும் கிளம்பி விட்டனர் சிறுவனோ  அழ ஆரம்பித்து விட்டான்...! இனி  கிடைக்கும் என்ற  நம்பிக்கை இல்லை..!தாயும்,தந்தையும் அவனை  தேற்றி அழைத்து  செல்ல அவனும் அழுது கொண்டே  போய்விட்டான்...!

அவர்கள் செல்ல திட்டம் போட்டு இருக்கும் இடமானது எப்படியும்நூறு மைல்  தொலைவு இருக்கும்...! ஆங்காங்கே தங்கி ...கொண்டுசென்ற உணவு பொருட்களை  சமைத்து  உண்டு ஓய்வெடுத்து  சென்றனர்..! ஒரு மதிய வேளை ஒரு பெரிய ஆலமர நிழலில்  உண்டு ஓய்வெடுத்து கொண்டு இருந்தனர் அப்போது அவ்வழியே ஒரு  வண்டியில் ஒரு மகானை போன்ற தோற்றம் கொண்டவர் உதவியாளர்கள்  சிலருடன் சென்று கொண்டு இருந்தார். மர நிழலை  கண்டவுடன் அவர்களும் ஓய்வெடுக்க  எண்ணி இறங்கி அமர்ந்தனர். அந்த மகான் அங்கு இருந்த அனைவரிடமும் அன்புடன் பேசி ஆசி வழங்கினார்...!

அப்போது கவலை தோய்ந்த முகத்துடன்  இருந்த இந்த  சிறுவனை அருகில் அழைத்தார்..!  என்ன உன் கவலை  என அவனிடம் பரிவுடன் கேட்க  அவனது தாய் விஷயத்தை  சொல்ல  அந்த மகான்  அவனது தலையில்  கை  வைத்து..இப்படி   சொன்னார்...!

 உனது தூய்மையான  உழைப்பில் கிடைத்த அந்த பொருள் நிச்சயம் உனக்கு கிடைக்கும்..! இந்த பிறவியில் இல்லாவிடினும் எந்த பிறவியிலாவது அந்த காசுகள் உன்னை  வந்து சேரும்..!

என சொல்லி புறப்பட்டார்...!

சற்று ஆறுதல்  அடைந்த அவனை பார்த்து அவனது  தாய்  கேட்டாள்...? எத்தனை காசுகளடா அதில்  வைத்து இருந்தாய்..? 
எழுபத்து இரண்டு காசுகள் அம்மா  என்றான்....!

v
v
v
v
v
v

திடுக்கென விழிப்பு  வந்தது  எனக்கு...! என்ன கனவு இது...? வேகமாக  எழுத்து  லைட்டை போட்டேன் ...! பீரோவை அவசரமாக திறக்க...! லைட் வெளிச்சத்தில்  விழித்து கொண்ட மனைவி  இந்த அர்த்த ராத்திரியில  எதுக்கு லைட்ட போட்டு பீரோவ  திறக்குறீங்க..? என அரைகுறை தூக்கத்தில் கேட்ட மனைவிக்கு  பதில் சொல்லாமல்..!  பீரோவில்  இருந்த அந்த பொட்டலத்தை பிரித்தேன்...! பச்சை நிறம் படிந்த செப்புக்காசுகள் ..! இப்போது அதனை  தொடும் போது லேசாக நடுங்கியது...! நேற்று  இதை எண்ணிப்பார்க்கவில்லை..! இப்போது  எண்ணினேன்  சரியாக எழுபத்து  இரண்டு காசுகள்....!!  .உடல்  முழுவதும் அப்படியே  சிலிர்த்து  போனது ..! வியர்த்து  கொட்டியது ஸ்தம்பித்து போய் அப்படியே தரையில்  அமர்ந்து விட்டேன்...!

நடந்தது இதுதான்...! 

நேற்று  மதியம்  நகைபட்டறையில் அமர்ந்து  வேலை  செய்து கொண்டு இருந்த போது ஒரு பெரியவர்  வந்து சில காசுகளை  கொடுத்து  இது என்ன காசுகள்  என கேட்டார்..! கையில்  எடுத்த உடனேயே  இது பழங்கால  செம்பு காசுகள் என தெரிந்தது. இவை  செம்பு  காசு  என்றவுடன் அவருக்கு ஏமாற்றம்...பெரிதாக  எதிர் பார்த்து வந்து  இருப்பார் போல..அவர்  திருப்திக்காக கொஞ்சம் திராவகம்  வைத்து சோதித்து பார்த்தேன் பச்சையாக பொங்க..இவை அந்த கால செம்புகாசு  என சொல்லி அவரிடம் கொடுத்து விட்டேன்..!அவரும் அதனை வாங்கி கொண்டு  சென்றுவிட்டார்..!

ஒரு மணி நேரம்  இருக்கும் மீண்டும் திரும்பி வந்தவர்..! இன்னும்  நிறைய காசுகளை காட்டினார்...!இரண்டு கைப்பிடி அளவு காசுகள் இருந்தன...இவற்றை  விற்க  விரும்பி ஒரு பழைய பாத்திர கடைக்கு  சென்றாராம் அங்கே  காசுகளை  எடை போட்டு பார்த்து விட்டு  அவற்றை இருபது ரூபாய்க்கு மட்டும் எடுத்து கொள்வதாக  சொன்னார்களாம்..! அவ்வளவு தானா  இதன் மதிப்பு என கேட்டார்..செம்பு  என்ற  வகையில்  அவ்வளவுதான் போகும்  என்றேன்...! சரி   என கிளம்பியவரிடம் இருவது ரூவாய்க்குதானே  கேட்டாங்க இருபத்து அஞ்சு ரூவா  தரேன் கொடுக்குறீங்களா  என கேட்டேன்... அவரும் சற்று  திருப்தியுடன் கொடுத்து விட்டு பணம் வாங்கி  சென்றார்...!


இது  ஏது   என கேட்ட போது  வயலில் பாசனத்துக்காக  கிணறு  தோண்டிய போது சிறிய  மண் பானையில்  கிடைத்ததாக  சொன்னார் ...!


////உனது தூய்மையான  உழைப்பில் கிடைத்த அந்த பொருள் நிச்சயம் உனக்கு கிடைக்கும்..! இந்த பிறவியில் இல்லாவிடினும் எந்த பிறவியிலாவது அந்த காசுகள் உன்னை  வந்து சேரும்..!///

ஒரு வேளை  அந்த கனவில்  வந்த மகான் சொன்னதில் எதும் உண்மைஇருக்குமோ...???


...............................................................................................................................................................
பின் குறிப்பு;- கிட்ட  தட்ட பதினெட்டு ஆண்டுகளுக்கு  முன்னர் 1995 வாக்கில்  இந்த காசுகளை வாங்கியது  உண்மை தான்...! அவை சோழர் கால நாணயங்கள் என்பதை பிறகு தெரிந்து கொண்டேன்..!பத்திரமாக பொக்கிஷமாக பாதுகாத்து வைத்து உள்ளேன் அந்த காசுகளை...கையில் எடுக்கும் போது ஏதோ ஒரு உணர்வு ...!அதன் பிரதிபலிப்பே  அந்த  கற்பனை கனவு ...! கனவு மற்றும் பிற விஷயங்கள் என் கற்பனை..மட்டுமே..! இதோ  இவைதான் அந்த காசுகள்...!
















 ..

>

கங்கைகொண்ட சோழபுரம் (படங்கள்)


பல வருட ஆசை கங்கைகொண்டசோழபுரம் கோவிலுக்கு செல்ல..!
பகல் நேரங்களில்  கும்பகோணம்  வழியே  ஊருக்கு போகும் போது இந்த கோவிலை பார்த்துக்கொண்டே  செல்வேன்  ஜெயம்கொண்டம் சாலையில் சற்று தூரத்தில் தெரியும்..!  பஸ்ஸில்  செல்வது அவ்வளவு  சவுகரிய படாது காரில் குடும்பத்துடன் ஊருக்கு போகும் சமயங்களில் ஒருதடவை இங்கே போக வேண்டுமென்ற ஆசை இனிதே  நிறைவேறியது..!

தஞ்சை கோவிலை போல தோற்றம் தந்தாலும் மனதிற்க்கு  மிகவும் நெருக்கம் தந்தது இந்த கோவில்.! பரந்த பசும்புல்வெளிக்கு மத்தியில் இருக்கும் கோவிலின் அந்த  கம்பீர  கோபுரத்தை எந்த  திசையில் இருந்து பார்த்தாலும் வெவ்வேறு  வித அழகை காட்டியது..!  ஆங்காங்கே சில மரங்களும் அழகை கூட்டியது..! குழந்தைகளுடன்  குதூகலமாய் கழிந்தது  ஒருநாள் பொழுது..!



 
















>

ஆனந்தம் அளித்த ஆனந்த விகடன்...!

இந்த வார சோழ மண்டல விகடன் வலையோசையில் எனது வலைத்தளம்..!

வெளியிட்ட விகடனுக்கு மனமார்ந்த  நன்றிகள்....!!!!

>

ஒகனேக்கலில் ஒரு நாள்..! (படங்களுடன்)

இரவு  8.30 மணி அளவில்  சென்னையில் இருந்து கிளம்பினோம்.டிரைவருடன் சேர்த்து  மொத்தம் ஐவர். அதிகாலையில் ஒகனேக்கல் சென்று அடைந்தோம்.ஒரு அறை எடுத்து சின்னதாக ஒரு குட்டித்தூக்கம்  போட்டு அருவிக்கு புறப்பட்டோம்.! எனக்கு இங்கு வருவது முதல் முறை.இதுவரை  திரைப்படங்களிலும்,புகைப்படத்திலும் பார்த்த  இடத்தை நேரே பார்க்க போவதால் ஒரு பரவசமான ஆர்வம்.! மெயின் பால்ஸ்சுக்கு  செல்லும்  வழி என்ற தகவல் பலகையை பார்த்தவுடன் நம்மை அறியாமல் கால்கள் வேகம் எடுக்க.....! குற்றாலம்  போல குளுமை இல்லை ஆனால் ..! சுற்றிலும் தெள்ள தெளிவான சல சல  நீரோட்டம்..!  உயர்ந்து வளர்ந்த மரங்கள் மரத்தின்  வேர்களை  நனைத்து கொண்டே செல்லும் நீரோட்டம் எந்த  திசையில் இருந்து  வருகின்றது எங்கு செல்கிறது என சரியாக புரியவில்லை..! ஆழம் குறைந்த இடங்களில்  ஆண்களும்,பெண்களும் குழந்தைகளுமாக உற்சாகமாக தண்ணீரில் இறங்கி ஆட்டம் போட்டு கொண்டு இருக்க ....! ஒன்றிரண்டு  குரங்குகளும் கண்ணில் பட்டன..! இன்னும் சற்று  தொலைவு சென்றவுடன் மசாஜ் செய்யும்  ஆட்கள் நம்மை சுற்றிக்கொள்ள முக்கிய அருவியை  நெருங்கி விட்ட படியால் அவர்களுடன்  நின்று பேச முடியாத அளவு ஆர்வம் ..! முதலில் அருவியை பார்க்க வேண்டும் ..! தூரத்தில்  இருந்து பார்த்தால் அருவி தெரியவில்லை அருகில்சென்று படிகட்டு வழியே இறங்கி சென்றோம்..! 

 அருவியை கண்டால்  மட்டும் காந்தத்தை கண்ட  இரும்பு துண்டைப்போல  மனம் ஒட்டி கொள்கின்றது..!  திரும்ப  மேலே  வந்து மசாஜ் செய்தோம் துணியை துவைத்து பிழிவதை போல ஒரு வழி செய்து விட்டார்கள்..! அடுத்து அருவியில் ஆட்டம் .. எவ்வளவு நேரம் குளித்தோம் என தெரியாத அளவுக்கு...குளித்து கரையேறி தொங்கு பாலத்தை நோக்கி  சென்றோம்..! 
























 தொங்கு பாலத்தில்  இருந்து
தொங்குபாலத்தை கடந்து சென்றால் அங்கே  சில கடைகள் ..மேலும் அருவி பின்னனியில்  மக்கள் சந்தோசமாக படம் எடுத்து தள்ளி கொண்டுஇருந்தனர்..! திரும்பிய  திசை எங்கும் சிரிப்பும்,கும்மாளமுமாக.....இது போன்ற ஒரு சூழலை சுற்றுலா ஸ்தலங்களில்  மட்டுமே காணமுடியும்..!
 

  நாங்களும் சில படங்கள் பிடித்து திரும்பினோம்  ..

அடுத்து நாங்கள் சென்றது மீன் வாங்க..! 
 மேட்டூர் அணையில் பிடிக்கபட்டு இங்கே விற்பனைக்கு வருகின்றனவாம் ..! எங்களுக்கு உணவு  ஆகுவதற்காகவே  பிறவி எடுத்த மீன்களை  வாங்கி கொண்டோம்..! சில வகை மீன்கள் உயிருடன் காணப்பட்டன..!

 எங்கள் மீன்களை அங்கேயே வெட்டி ஓரளவு சுத்தம் செய்து வாங்கி கொண்டோம்.! நாங்கள் தங்கி இருந்த விடுதி அருகிலேயே சமைத்து கொடுக்க ஆள் இருந்தார்கள் ..! எனவே  வெட்டிய மீனுடன் கிளம்பினோம் விடுதியை நோக்கி...!  பொரியலுக்கு மீன் ரெடி... குழம்புக்கு...? ஒரு நாட்டு கோழிக்கடைக்கு சென்று உயிருடன் இருந்த ஒரு கோழியை போட்டு தள்ளினோம்..!

சமைக்க செய்ய கொடுக்கவே இரண்டு மணி ஆகிவிட்டது . சாதம்,கோழிகுழம்பு,மீன் பொரியல்,ரசம் இதுதான்  மெனு..! சாப்பாடு தயார் ஆகும் வரை அனைவரும் சற்று ”உற்சாகத்துடன்’’காத்திருந்தோம்..!
சாப்பிட்டு முடித்தோம் .
அடுத்து அவசரமாக கிளம்பியது  பரிசல் சவாரிக்கு..!
5 மணி வாக்கில் பரிசல் பயணம் துவங்கியது ..!அழகிய அனுபவம் ஆங்காங்கே அருவிகள்... அருகில்  சென்றால் சாரல் என அருமையாக இருந்தது..! ஆனால் நீச்சல் தெரியாதவர்கள் லைஃப் ஜாக்கெட்  அணிவது முக்கியம்..! சிலர் குழந்தைகளுடன் லைஃப் ஜாக்கெட் அணியாமல் 60, 70 அடி ஆழம் இருக்கும் என சொல்ல படும் இடங்களில் பயணிப்பதை பார்த்தால் ’பக்’ கென இருந்தது..!



 





பரிசலில் மிதக்கும் கடை..! குளிர் பானங்கள் நொறுக்கு தீனிகள் கிடைக்கும்..!  இதற்கும் மேலாக  ஒருவர் பரிசலியேலே கேமரா மற்றும் பிரிண்ட்டர் சகிதமாக படம் பிடித்து உடனேயே பிரிண்ட் போட்டு தருகின்றார்..!







 பரிசல் சவாரி முடிந்து மீண்டும் முக்கிய அருவியில் இரவு 7.30 வரை
குளியல்...! குளியல் முடித்து விடுதிக்கு வந்து பிரிய மனமின்றி திரும்பினோம்  சென்னைக்கு..!
........................................................................................................................................................

எச்சரிக்கை;- 
 ஒகனேக்கலில்  எந்த அளவுக்கு அழகு நிரம்பி வழிகின்றதோ அதே அளவும் இங்கு ஆபத்துகளும் அதிகம் உள்ளனவாம்...!   வருடந்தோறும் கவன குறைவால் சுற்றுலா பயனிகள் பலர் உயிரிழப்பதாக கூறுகின்றனர் இங்குள்ளவர்கள்..!
 
கவனத்தில் கொள்ள வேண்டியவை..!
 
ஆழம் குறைவென எண்ணி குளிக்க நினைக்கும் பல இடங்களில் கிடு கிடு பள்ளங்கள் உள்ளனவாம் ஒன்றுக்கு பல தடவை அங்கு உள்ளர்களிடம் கேட்டுவிட்டு தண்ணீரில் இறங்க வேண்டும்..!
 
பாறைகள் அதிகம் வழுக்குகின்றன கவனமாக இருக்க வேண்டும்.. ஹீல்ஸ் செருப்புகளை  தவிர்ப்பது நல்லது.!

பரிசல் சவாரியில் செல்லும் போது நீச்சல் தெரியாதவர்கள் கண்டிப்பாக லைஃப் ஜாக்கெட் அணிய வேண்டும் ..! பரிசல் ஒன்றும் பெரிய பாதுகாப்பானது இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். லைஃப் ஜாக்கெட் அங்கே கட்டாயமாக்க படவில்லை தேவைப்படுவோர் ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கி கொள்ளலாம் என்ற நிலையே உள்ளது..! பரிசல் பல இடங்களில் 60,70 அடி ஆழத்திற்கு மேல்  மிதந்து செல்வதை நினைத்து கொள்ளவும்..!






>