அதிமுகவின் உட்கட்சி தேர்தல் (மோதல்)

ஜெயலலிதாவை பிடிக்கிறதோ..? இல்லையோ...? திமுகவை பிடிக்காதவர்கள் அதிமுகவிற்கே வாக்களித்து வந்தனர். திமுக -- அதிமுக என ஒரு சம நிலையும் இருந்து வந்தது..! மதிமுக உருவானதால் ஏற்பட்ட பாதிப்பில் வெகு நேர்த்தியாக மீண்டு தன்னை வலிமையாக நிலை நிறுத்தி கொண்டது திமுக..!

இந்த நிலையில் விஜய காந்தின் தேமுதிக வின் தோற்றம் அதிமுகவையே பாதித்தது..! அது திமுகவை மேலும் வலிமையாக்கியது..! தேமுதிக வின் தோற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பினை அதிமுக சரிபடுத்தி கொள்ள முயலவேண்டிய இந்த வேளையில், அதிமுகவின் உட்கட்சி தேர்தல் அறிவிப்பு வருகிறது..!!

இந்த உட்கட்சி தேர்தலினால் பல இடங்களில் மோதலும்,உட்பூசலுமேஉண்டாகி உள்ளதாக தெரிகிறது..! இந்த மோதலினால் கண்டிப்பாகஅதிமுகவிற்கு பதிப்புதான்...!

விஜய காந்தின் வளர்ச்சி அதனால் உண்டான அதிமுகவின் பாதிப்பு எல்லாம் சேர்ந்து திமுகவை அசைக்க முடியாத சக்தியாக காட்டுகிறது..!
கலைஞருக்கு பிறகு என்ற கேள்வி வரும்போது..? கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பதாக கருதப்படும் ஸ்டாலின் வெகு சுலபத்தில் முன் வந்து நிற்கிறார்..! அதிமுக -தேமுதிக உடன் கூட்டணி வைக்காமல் அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை...!

அடுத்த தேர்தலில் பெற வேண்டிய வெற்றிக்கு காய் நகர்த்த வேண்டிய இந்த நேரத்தில் அதிமுகவின் உட்கட்சி தேர்தல் தேவைதானா...????


சமநிலை அற்ற ஒருதலை பட்சமான திமுகவின் வளர்ச்சி ஒரு கவலை அளிக்கும் விசயம்தான்..!

>

அச்சுவுக்கு பிறந்தநாள்

எங்க ரெண்டாவது பொண்ணு அட்சய நந்தினிக்கு ரெண்டாவது பிறந்தநாள் 22-11-2009 -ஞாயிறு..!கேக் எடுத்துக்கோங்க ..!

வாழ்த்து சொல்லுங்க...!.

>

ஜோதிடம் எந்த அளவுக்கு.??

எனக்கு கொஞ்சம் ஜோதிடம் தெரியும்..! கொஞ்சம் அப்படின்னா கொஞ்சமாதான்..!ஜோதிடம் பத்தி ஒரு பிளாக் கூட எழுதினேன் ஆனா வலையுலகத்துல சிலர் ஜோதிடம் பத்தி எழுதுறத பார்த்து பிரம்மிச்சு போய் நமக்கு ஜோதிடம் பத்தி எழுத தகுதி இல்லன்னு முடிவு பண்ணி நிறுத்திகிட்டேன் .

நான் ஜோசியம் கத்துக்கணும்னு நினைக்க ஒரு காரணம் இருக்கு..!என் நண்பர்கள் மற்றும் சிலர் பயங்கரமான ஜோதிட பிரியர்கள் தொட்டதுக்கெல்லாம் ஜோசியம் ,ஜோசியம்னு இருப்பாங்க அன்றாடம் நம்ம நிகழ்வுகள கிரகங்களோட சம்பந்த படுத்தி பேசுறத கேட்டா மண்ட காயும்.

ஜோதிடத்த நம்பி சிலர் பண்ணின சொல்லுறேன் ..!

தெரிஞ்ச ஒருத்தர் தீவிர ஜோதிட நம்பிக்கை உள்ளவர். அவருக்கு கல்யாணமாகி ஒரு அவங்க மனைவி கர்பமாகவே ,இவர்நேரா அவங்க குடும்ப ஜோசியர்கிட்ட போய் இப்போ இந்த குழந்தை பெத்துக்கலாமா கேக்க அந்த மேதாவி ஜோசியரும் இப்போ வேணாம்.! இந்த குழந்தைபெத்துகிட்டா பெரிய கஷ்டம் வரும்னு சொல்ல, இவரும் அவர் மனைவிய கட்டாய படுத்தி அபார்சன் பண்ணிட்டாரு.
அதுக்கப்புறம் அவங்களுக்கு சில வருடங்கள் குழந்தை பிறக்கல அஞ்சு வருஷம் கழிச்சுதான் பிறந்தது.

எனக்கு அந்த ஜோசியர பார்த்தா கொலைகாரனை பாக்குறதுபோல பாக்குறதுபோல இருக்கும் . அப்படியென்னகருவை கொல்லுற அளவுக்கு என்ன ..? ஜோசியம்..?

Justify Full
இன்னொரு சம்பவம் என் நண்பன் ஒருத்தன் ஒரு பொண்ண லவ் பண்ணினான். கல்யாணம் பண்ண ரெண்டு பக்கமும் செம எதிர்ப்பு..! ஒரு வழியா கொஞ்ச கொஞ்சமா எல்லாரும் சம்மதிக்க பையனோட அம்மா மட்டும் சம்மதிகல..! அவங்க சம்மதத்த வாங்க பெரிய கஷ்டமாயிடுச்சி கடசியா அவங்க சொன்னது ஜாதகம் பொருத்தம் இருந்தா ஒத்துகிறேன் அப்படின்னு சொல்ல,பையனுக்கு லேசா பயம் வந்துட்டு...! ஜாதகம் சரியா இல்லாட்டி என்ன பண்ணுறதுன்னு ..? ஒடனே அவன் அந்த பொண்ணுகிட்ட யாருக்கும் தெரியாம ஜாதகத்த கொண்டுவரசொல்லி பொருத்தம் பார்த்தா ..?பொண்ணுக்கு மூல நட்சத்ரம்...! மூல நட்சத்ரம் இருந்தா மாமனாருக்கு ஆகாது...! வீட்டுல கண்டிப்பா சம்மதிக்க மாட்டாங்க..! ஒடனே இவன் அந்த பொண்ணு ஜாதகத்தயே பொருத்தம் இருக்குதுபோல மாத்திட்டான் . கல்யாணமும் ஆச்சு பையனோட அப்பா நல்லா தீர்கயுசா இருந்துதான் காலமானார்....! அப்படின்னா ? மூல நட்சத்ரம் ...? என்ன ஜோசியம் ..? ஜாதகம் ...?

ஜோதிட நம்பிக்கை உள்ளவங்க கிட்ட இதையெல்லாம் எடுத்துசொல்லி ஜாதகம் பொய்ன்னு சொன்னா பெரிய வாக்குவாதம்தான் வந்தது. ஜாதகம் பொய் அப்படின்னு ஆதாரத்தோட சொல்லனும்னுதான் ஜோசியம் பத்தின புத்தகங்கள படிக்க ஆரம்பிச்சேன்..!ஆரம்பத்தில் ஜோதிடம் ஒட்டவில்லை ஆனால் ..!படிக்க படிக்க ஆர்வம் அதிகமானது. ஜோதிடத்தில் பல உண்மைகள் இருப்பதாக நினைத்தேன்.என் ஜாதகம்,மற்றும் எனக்கு தெரிந்தவர்கள் ஜாதகத்தை வைத்து கணிக்கும் போது கொஞ்சம் வியப்பு ஏற்பட்டது உண்மை..! இந்த இடத்தில் ஒன்றை சொல்ல வேண்டும் .! இங்கே ஜோதிட கடலில் நீந்தி முத்தெடுத்த பல வல்லுனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கற்ற அந்த ஜோதிட கல்விக்காக அவர்களை வணங்க தோன்றியது...! என்னை பொறுத்தவரை ஜோதிட கடலில் நான் வெறும் கால் நனைத்தவன் அவ்வளவுதான் ..! ஜோதிடத்தில் உண்மை இருக்கிறது ஆனால் ..?சில ஜோதிடர்கள்தான் குழப்புகிறார்கள்..!!

ஒரு உதாரணம் அவர் பிரபலமான ஜோதிடர் அக்ஷய திரிதியை அன்று ஒரு பிளாட்டின நகை விற்பனை செய்யும் கடைக்கு விளம்பரம் செய்கிறார் எப்படி...? அக்ஷய திரிதியை அன்று வெள்ளை நிற உலோகம் தான் வாங்கவேண்டும் அது பிளாட்டினம் தான் என்ற ரீதியில் சொல்கிறார்..! ஏன் ? வெள்ளியும் வெள்ளை நிற உலோகம்தான் அதை ஏன் அவர் சொல்லவில்லை...???

இன்னொருவர் சனி பெயர்ச்சிக்கு பரிகார யாகம் நடத்துகிறார்...! இந்த சனி பெயர்ச்சியில் பாதிப்பு அடையும் கீழ்க்கண்ட ராசிக்காரர்களே...! உங்கள் கஷ்டங்கள் நீங்க பரிகார யகத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று விளம்பரம் செய்து காசு பார்க்கிறார் ..!
சில ஜோதிடர்கள் தங்கள் வருமானத்திற்காக கிரகங்களை காட்டி பயமுறுத்துகின்றனர்..!

என்னை பொறுத்தவரை ஜோதிடம் என்பது ஒரு வானிலை அறிக்கை மாதிரி மழை பெய்யும்,அல்லது பலத்த காற்று வீசும் என்பதுபோல...!

அல்லது இப்படியும் சொல்லாம்..!

அதாவது ஆற்று வெள்ளத்தில் பயணம் செய்வதுபோல ஜோதிடத்தை நம்பி விதியே என பயணம் செய்தல் அதன் போக்கில் தான் போகும் ..!

ஜோதிடத்தை இப்படி கூட சொல்லலாம்..!

கிரிக்கெட்டில் வரும் பிட்ச் ரிப்போர்ட் போல இது பேட்டிங் செய்ய ஏதுவான பிட்ச் .அல்லது பந்து வீச ஏதுவான பிட்ச் என்பதுபோல ...!

ஜோதிட சக்தியா ..?மனித சக்தியா ..?

ஒருவர் தான் மாமன் மகளை திருமணம் செய்து கொண்டார் சொந்தம் என்பதால் ஜாதகம் பார்க்காமல் திருமணம் நடந்தது. ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.அப்போதுதான் அவர்களுக்கு ஜாதகம் பார்க்க தோன்றியது .ஜாதகத்தில் இருவருக்குமே ஐந்தாம் இடத்தில் ராகு..! மேலும் புத்திர ஸ்தானத்தில் இருவருக்குமே குரு நீசம் .இவர்களுக்கு குழந்தையே பிறக்காது இருவரும் திருமணமே செய்திருக்க கூடாது என பல ஜோதிடர்கள் சொல்ல மிகவும் கவலை அடைந்தார்கள்.இவர்களில் இந்த நிலையை பயன்படுத்தி பரிகாரம் என்ற பெயரில் சில போலிகள் வருமானம் கண்டார்கள். பரிகாரம் செய்ததோடு இவர்கள் அதிநவீன மருத்துவத்தையும்
கையாண்டார்கள் மருத்துவம் கை கொடுக்க இவர்களுக்கு இப்போது நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது ..?

அப்படியெனில் ஜோதிடம் ...?

விதி என்ற ஜோதிடம் அவர்களிடம் வேலையை காட்டியது ஆனால் ?மருத்துவம் என்ற மதி அதை வென்றுகாட்டியது ...!

ஜோதிட சக்தியா..? மனித சக்தியா..? என கேட்டால் கண்டிப்பாக மனித ஆற்றலுக்கு நிகரானது எதுவும் இல்லை என்றுதான் சொல்லுவேன்..!

ஜோதிடம் வானிலை அறிக்கை போல, மழை வரும் என்றால் அதில் நனையாமல் இருப்பது நம் சாமர்த்தியம் .

ஜோதிடம் ஆற்று வெள்ள பயணம் போல விதியே என பயணம் செய்யாமல் எதிர் நீச்சல் போட்டால் வெற்றி நமக்குதான்..!

ஜோதிடம் ஒரு பிட்ச் ரிப்போர்ட் பந்து வீச்சுக்கு சாதகமான பிச்சில் சதம் அடிப்பதும் ,பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சில் அதிக விக்கட்டுகள் எடுப்பதும் அவரவர் திறமை, முயற்சி, உழைப்பை பொறுத்தது.

ஜோதிடத்திலேய மனித சக்திதான் சிறந்தது என்பதற்கு நழுவலான ஒரு விதியை சொல்லி இருக்கிறார்கள். ஒருவனுக்கு எல்லா கிரககங்களும் பாதகமான நிலையில் இருந்து, துன்பம் அளிக்கும்போது அவன் அந்த துன்பங்களை எதிர்த்து கடினமாக உழைத்தால் துன்பம் அளித்த கிரகங்களே மனம் இளகி அவனுக்கு நன்மை செய்யுமாம்.


தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும்
>

ஐயோ....வீணாய் போகுதே ...மழைச்செல்வம்...!!!

இந்நேரம் இந்த மழையில் ஒரு வருடத்தில் விவசாயத்திற்கு நமக்கு தேவைப்படும் நீரில் கணிசமான அளவு நீர் வீணாய் கடலில் போய் கலந்திருக்கும்.

இப்படி இங்கேயே உற்பத்தியாகும் நீரிணை கடலில் கலக்கவிட்டு அடுத்தவருடம் கர்நாடகா காரனிடம் கையேந்தி நிற்க போகிறோம்.


வீராணம் ஏரி

அய்யா தமிழக முதல்வரே...!!

ராஜராஜ சோழன் காலத்துக்கு முந்தய காலத்துல கொள்ளிடம் ஆத்துல உபரி தண்ணி அநியாயமா கடல்ல கலக்குரத பார்த்து பொறுக்க முடியாம கட்டுனதுதானே அய்யா வீராணம் ஏரி..! இன்னிக்கு அந்த வீராணம் ஏரியால எவ்ளோ நிலங்கள் பாசன வசதி பெருது...!

நல்லா மேம்பாலம் எல்லாம் கட்டுறீங்க..! அதேபோல இந்த வீணா போற மழை தண்ணிய தேக்கி வைக்குற மாதிரி தடுப்பு அணைகள கட்ட கூடாதா..!

இலவச கலர் டிவி வேணாம்யா...! ஒரு ரூபாய்க்கி அரிசி வேணாம்யா...!

அநியாயமா கடல்ல போயி கலக்குற தண்ணிய தேக்கி வைக்கிறமாதிரி எதாச்சும் நீர்த்தேக்கம், அணை,ஏரி உருவாக்குங்கையா புண்ணியமா போகும்...!

>

கள்ளுக்கடையின் அவசியமும் அதன் அரசியலும்...


கள்ளுக்கடை திறப்பதால் உண்டாகும் பலன்கள்..!

நம் நாட்டில் மது அருந்தும் பழக்கம் பெரும்பாலும் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கே அதிகம் உள்ளதாக ஒரு கணிப்பு தெரிவிக்கிறது. கட்டிட வேலை செய்பவர்,தச்சு வேலை செய்பவர்,சுமை தூக்குபவர், விவசாய வேலை செய்பவர்,சாக்கடை சுத்தம் செய்பவர் இப்படி நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் அடிப்படை தொழிலாளர்களே அதிகம் மது அருந்துகின்றனர்.

லட்சகணக்கான தென்னை,மற்றும் பனை மரங்களை கொண்ட வளமான பூமிநம் தமிழகம். கள் இயற்கை அளித்த கெடுதல் குறைந்த போதை பானம்.காலங்காலமாக போதையை விரும்புபவர்களுக்கு கள் ஒரு வரப்பிரசாதம்.கள்ளுக்கடையை திறப்பதால் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெறுவார்கள். தென்னை மரத்திலிருந்து கள் இறக்குவதால் தேங்காய் உற்பத்தி சற்று குறையும் அதனால் தேவை அதிகரித்து விவசாயிக்கு நல்ல விலை கிடைக்கும்.


கள் -டாஸ் மார்க் ஒரு பொருளாதார ஒப்பீடு...ஒரு நாளைக்கு ஒரு குவாட்டர் அடிப்பவருக்கு ஆகும் செலவினை பார்ப்போம் ஒரு குவாட்டர் 80 ரூபாய் என வைத்து கொண்டால், சைடு டிஷ் செலவு 10 ரூபாய் மொத்தம் 90 ரூபாய் ஆகிறது .

ஒரு குவாட்டருக்கு உண்டான போதையை 1 1/2 முதல் 2 லிட்டர் கள் கொடுத்து விடும்.

2 லிட்டர் கள் (லிட்டர் 15 ரூபாய் எனில்) 30 ரூபாய் ஆகிறது சைடு டிஷ் 10 ரூபாய் என்று வைத்து கொண்டால் கூட 40 ரூபாயில் மேட்டர் முடிந்து விடுகிறது.

அதாவது ஒரு நாளைக்கு ஒரு குவாட்டர் அடிப்பவர் கள்ளுக்கு மாறினால் ஒரு நாளில் அவருக்கு மிச்சப்படும் தொகை 90-40= 50

ஒரு நாளில் ஐம்பது ரூபாய் மிச்ச படுவதோடு உடல்நலமும் காக்க படுகிறது. ஒரு சராசரியான தொழிலாளியின் வீட்டுக்கு ஐம்பத்து ரூபாய் கூடுதலாக சென்றால் அந்த குடும்பம் கண்டிப்பாக பலனடையும்.
அது மட்டும் இல்லாமல் கிராம புறங்கள் வளர்ச்சி அடையும், பலருக்கு வேலை வாய்ப்பையும் பெற்றுத்தரும்.

இப்படி எல்லா வகையிலும் நன்மை தருகிற கள்ளுக்கடையை திறக்க அரசு ஏன் மறுக்கிறது????

ஒரே ஒரு காரணம் தான் மதுபான விற்பனை (டாஸ் மார்க்) மூலம் அரசுக்கு கிடைக்கும்.!
வருமானம்.! வருமானம்..!! வருமானம்...!!!

மதுபானம் விற்று அரசு கோடிகணக்கில் வருமானம் பார்க்கிறது. அல்லது மதுபானம் விற்று அரசு தன் பிழைப்பை ஓட்டுகிறது.

தன் நாட்டு மக்கள் குடித்து குட்டிசுவரானால் பரவாயில்லை ..!அவன் குடும்பம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை..! தனக்கு கிடைக்க வேண்டிய வருமானம் குறைந்து விட கூடாது இதுதான் அரசின் நிலைப்பாடு..!

கள்ளுக்கடையை திறந்து விட்டால் அரசின் மதுபான வியாபாரத்தில் மண் விழுந்து விடும் அதனால் தான் அரசு கள்ளுக்கடையை திறக்க மறுக்கிறது.


கள்ளுக்கடையை திறக்காததற்கு அரசு வேறு வகையில் காரணம் சொல்லி சப்பை கட்டு கட்டலாம். ஆனால்? பக்கத்து மாநிலங்களான ஆந்திரா,கேரளா
பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் கள்ளுக்கடை திறக்கபட்டுதான் உள்ளது.

லாட்டரி ஒழிப்பும் கடை திறப்பும்

கடந்த ஆட்சியில் லாட்டரி ஒழிக்கப்பட்டது அதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது அதனை சரிகட்டவே அரசு மதுபான வியாபாரத்தில்நேரடியாக இறங்கியது. இந்த அரசும் அதயே தொடர்கிறது.அதனால் தான் அரசின் மதுபான வியாபாரத்துக்கு பங்கம் வரும் எந்த செயலையும் செய்ய அரசு தயாரில்லை..! எப்படி பார்த்தாலும் அடிப்படை ஏழை மக்களின் ரத்தமே உறிஞ்சப்படுகிறது..!


இப்படி பாரம்பரியம் மிக்க இயற்கை தரும், கெடுதல் இல்லாத கள்ளை நிராகரித்துவிட்டு, வருமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு மக்களுக்கு கெடுதல் தரும் மதுபானத்தை விற்பனை செய்கிறதே இந்த அரசு..!

இது நியாயமா...!!!!

>

புடிச்ச பத்து..! புடிக்காத பத்து...!

கதிர் ஈரோடு மற்றும் அகல் விளக்கு ஆகியோரின் அழைப்பினை ஏற்று இந்த பதிவு..! எதோ நம்மால முடிஞ்சது ..!அரசியல்
தலைவர்


பிடித்தவர் ; எம் ஜியார்

பிடிக்காதவர் ;தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள்


நடிகர்


பிடித்தவர் ; கமல்ஹாசன்,ரகுவரன்

பிடிக்காதவர்; சிம்பு

நடிகை


பிடித்தவர் ; முள்ளும் மலரும் ஷோபா

பிடிக்காதவர் ; ஸ்ரேயா (மூஞ்சியும் மொகற கட்டையும்)


பாடகர்

பிடித்தவர் ; பாலமுரளிகிருஷ்ணா, எஸ். பி. பாலசுப்ரமணியம்

பிடிக்காதவர் ; தேவா (இவரெல்லாம் பாடகரான்னு கேக்க கூடாது)


பாடகி

பிடித்தவர் ; எஸ் .ஜானகி

பிடிக்காதவர் ; எல்.ஆர் . ஈஸ்வரி


இயக்குனர்

பிடித்தவர் ;சேரன்

பிடிக்காதவர் ; இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள்


கவிஞர்


பிடித்தவர்;

டி.ராஜேந்தர் 90 களில் (உம்) கருவண்டு நடனம் தருகின்ற நளினம் இதயத்தில் சலனம் அம்மம்மா.....!

பிடிக்காதவர்

டி .ராஜேந்தர் 90 களுக்கு பிறகு (உம்) டாய் டாய் டக்கிரி டாய் டோய் டோய் டிக்கிரி டோய் கத்தரி கோலு ..!


இசைஅமைப்பாளர்

பிடித்தவர் ; இளையராஜா

பிடிக்காதவர் ;தேவா


எழுத்தாளர்


பிடித்தவர் ; பால குமாரன்

பிடிக்காதவர் ; படித்ததில்லை


பேச்சாளர்

பிடித்தவர் ; வைகோ

பிடிக்காதவர் ; குமரி ஆனந்தன்
பதிவினை தொடர நான் அழைப்பது ..!

டவுசர் பாண்டி

அத்திவெட்டி ஜோதிபாரதி

அமித்து அம்மா

ரம்யா

தமிழரசி
>