பதிவர் சந்திப்பு

 

ம்ம பாசக்கார ஜமால் சென்னை வந்து பல நாள் ஆயிடுச்சு சந்திக்குற வாய்ப்பு தள்ளிகிட்டே போக ..!ரெண்டுநாள் முன்னாடி ஜமால் நம்பர்ல இருந்து போன்...!   ஆனா பேசுனது ஜமால் இல்ல பேசுனது நம்ப மூளைக்காரன் பிரியமுடன் வசந்த் ..!
சென்னை வந்து இருப்பதாக சொல்ல      மூணு பேரும் ஒரு பதிவர் சந்திப்பு நடத்திடலாம்னு முடிவு பண்ணிட்டோம் அதன்படி பதிவர் சந்திப்பு இன்னிக்கு சென்னை பெரம்பூர்ல இனிதே நடை பெற்றது ..!

 ஜமால் 

எப்போதும் சிரிப்பு மாறாத முகம் நெறைய தடவை போன் ல மட்டும் பேசி இருக்கேன் இப்போதான் முதல் சந்திப்பு ..!  புதிய மனுசன பார்க்குற    உணர்வு கொஞ்சம் கூட இல்ல பலநாள் பேசி பழகுன ஒரு நண்பனை பார்க்குரதுபோல இருந்தது ...!  கணினி பத்தி நெறைய விஷயங்கள் தெரிஞ்சு வைச்சு இருக்கார் நெறைய சொல்லி கொடுத்தார்...!

 பிரியமுடன் வசந்த் 

பிளாக்ல யாராலும் யூகிக்க முடியாத அளவு சேட்டை பண்ணுற இந்த வசந்த் நேர்ல சாந்தம்னா சாந்தம் . ஒரு அமைதியா அதிர்ந்து பேசாம அழகு புள்ளயா இருந்தாரு பையனுக்கு வீட்டுல பொண்ணு பாக்குறாங்க அதுனால நல்ல புள்ளயா நடக்குறார் போல ;;)) இவர் கூட நான் சாட் பண்ணினது கூட இல்ல வெறும் கமெண்ட்ஸ் மட்டுமே எங்க தொடர்பு ..! இவரையும் புதிய மனுசனா எனக்கு பார்க்க தோணல ..!  முதல் தடவை பார்த்தாலும் ஒரு பழகிய நண்பனை பார்க்கும் உணர்வை வலையுலகம் மட்டுமே கொடுக்கும்.

 நாங்க பல விசயங்கள பத்தி பேசினோம் பதிவர் சங்கம் பத்தி நெறைய விவாதம் பண்ணினோம் , எதிர் கமெண்ட் பத்தி , சில பதிவர்கள் பதிவுலகம் தங்களுக்கே சொந்தம் அப்ப்டிங்குறது போல இருப்பதாக பேசினோம்.சில திரை விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்களாக இருப்பது ,இன்னும் ,இன்னும் பல விஷயங்கள்     பேசி  கல கலப்பாக முடிந்தது இந்த சந்திப்பு .      

 

   

DSC00224  DSC00228

DSC00225

பாட்டிலும் கையுமாக ஜமால் 

DSC00202

அனியாயத்துக்கு அமைதி

DSC00216

சேருக்குள் தொப்பையை மறைக்கும் ஜமால்

 

DSC00205


>

93 comments:

விஜய் said...

நடத்துங்க நடத்துங்க

வாழ்த்துக்கள்

விஜய்

இராகவன் நைஜிரியா said...

இரண்டு பேர் சந்தித்தால் சந்திப்பு... 3 பேர் இருந்தால் அது மாநாடு.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே ஜீவன் அண்ணே கலக்கறீங்க.

இராகவன் நைஜிரியா said...

// இந்த வசந்த் நேர்ல சாந்தம்னா சாந்தம் . ஒரு அமைதியா அதிர்ந்து பேசாம அழகு புள்ளயா இருந்தாரு //

அண்ணே புயல் கூட வருவதற்கு முன் ரொம்ப அமைதியாகத்தாங்க இருக்கு.

இராகவன் நைஜிரியா said...

// சேருக்குள் தொப்பையை மறைக்கும் ஜமால் //

பிரிக்கமுடியாதது - ஜமாலும் தொப்பையும்

இராகவன் நைஜிரியா said...

// ஜமால் எப்போதும் சிரிப்பு மாறாத முகம் நெறைய தடவை போன் ல மட்டும் பேசி இருக்கேன் இப்போதான் முதல் சந்திப்பு ..! //

சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய் என பாட வேண்டியதுதானே அண்ணே.

இராகவன் நைஜிரியா said...

// ஆனா பேசுனது ஜமால் இல்ல பேசுனது நம்ப மூளைக்காரன் பிரியமுடன் வசந்த் ..! //

காலேஜ்ல கொடுத்த ப்ராக்சி போதாதா... இங்க வந்து போன்ல வேற ப்ராக்சி கொடுக்கின்றாரு... அவ்...அவ்... :-)

இராகவன் நைஜிரியா said...

// புதிய மனுசன பார்க்குற உணர்வு கொஞ்சம் கூட இல்ல பலநாள் பேசி பழகுன ஒரு நண்பனை பார்க்குரதுபோல இருந்தது ...! //

புதிய மனுஷனா ... யாரு ... ஜமாலா...

எதோ சொல்றீங்க... ஒத்துக் கொள்ளுகின்றேன்.

தமிழ் அமுதன் (ஜீவன்) said...

வாங்க விஜய்..!

இராகவன் நைஜிரியா said...

அண்ணே ஒரு மெயில் அனுப்பியிருந்தேன்

கிடைச்சுதா?

இராகவன் நைஜிரியா said...

// கணினி பத்தி நெறைய விஷயங்கள் தெரிஞ்சு வைச்சு இருக்கார் நெறைய சொல்லி கொடுத்தார்...! //

அப்ப ஜமால வாத்தியார் அப்படின்னு சொல்லலாமா?

தமிழ் அமுதன் (ஜீவன்) said...

ஹே.... நம்ப ராகவன் அண்ணன் பழைய பார்முக்கு வந்துடாரேய்...!

இராகவன் நைஜிரியா said...

// பையனுக்கு வீட்டுல பொண்ணு பாக்குறாங்க அதுனால நல்ல புள்ளயா நடக்குறார் போல ;;)) //

இதுதான் அண்ணன் ஜீவன் என்கிறது... சரியா பாயிண்ட பிடிச்சீங்க பாருங்க... தூள் கிளப்புங்க அண்ணே.

இராகவன் நைஜிரியா said...

// இன்னும் பல விஷயங்கள் பேசி கல கலப்பாக முடிந்தது இந்த சந்திப்பு //


பல விஷயங்களா... நடத்துங்க.

தமிழ் அமுதன் (ஜீவன்) said...

// இராகவன் நைஜிரியா said...

அண்ணே ஒரு மெயில் அனுப்பியிருந்தேன்

கிடைச்சுதா?//

ஆஹா இல்லையே அண்ணே...!

இராகவன் நைஜிரியா said...

// தமிழ் அமுதன் (ஜீவன்) said...
ஹே.... நம்ப ராகவன் அண்ணன் பழைய பார்முக்கு வந்துடாரேய்...!//

பழைய ஃபார்மா... அது வராது அண்ணே... அது ஒரு கனாக்காலம்.

இராகவன் நைஜிரியா said...

// பாட்டிலும் கையுமாக ஜமால் //

பாட்டில் மூடிய பார்த்தாலே... நல்லா கேட்டுகுங்க பார்த்தாலே... டப்பா டான்ஸ் ஆட ஆரம்புச்சுடும்... இந்த விஷயத்தில் பாவம் பச்சபுள்ள அண்ணே அவரு..

இராகவன் நைஜிரியா said...

// தமிழ் அமுதன் (ஜீவன்) said...
// இராகவன் நைஜிரியா said...

அண்ணே ஒரு மெயில் அனுப்பியிருந்தேன்

கிடைச்சுதா?//

ஆஹா இல்லையே அண்ணே...! //

raghavannigeria@gmail.com - ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புங்க அண்ணே.

இராகவன் நைஜிரியா said...

// விஜய் said...
நடத்துங்க நடத்துங்க

வாழ்த்துக்கள்

விஜய் //

நடத்துவதா... அண்ணே எல்லாம் முடிச்சுட்டு நமக்கு சொல்லிகிட்டு இருக்கார் அண்ணே

Chitra said...

///இரண்டு பேர் சந்தித்தால் சந்திப்பு... 3 பேர் இருந்தால் அது மாநாடு.///

....."பதிவர் மாநாட்டை" குறித்த தகவல் தொகுப்பை, படங்களுடன் உடனே வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள்!

ஜெஸ்வந்தி said...

Glad to see your smiling faces.

தமிழரசி said...

வாழ்த்துக்கள் நட்புக்கள் இப்படியே என்றும் வாழ....

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ம்ம்ம்! அருமை!

சேருக்குள்ள தொப்பையை மறைக்கும் செந்தமிழ் அரசன் ஜமால் வாழ்க!(படம் எடுத்தது அருமை)

SUFFIX said...

அடடே சூப்பர், நண்பர் ஜமாலுடன் வசந்த்தையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, நாங்களும் வருவோம்ல...

அபுஅஃப்ஸர் said...

ரெண்டு பேரா இருந்தாலும், மூனா இருந்தாலும் பிளாக் மூலம் கிடைக்கும் நட்பு இனிப்புதான்

எல்லோரையும் பார்த்ததுலே மகிழ்ச்சி

நட்புடன் ஜமால் said...

ஆஹா! போட்டாச்சா, இன்னும் நிறைய பேசுனோமே! அதெல்லாம் சென்ஸார்டா.

அந்த மீன் பிரியாணி, மற்றும் இரால் தொக்கு அதை பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்

இன்று கனவில் வந்து அழுதாலும் அழலாம்.

Jaleela said...

சென்னையில் மநாடு கூடியாச்சா, சந்தோஷங்கள் முகத்த்தில் தெரியுது.

நடத்துங்க நடத்துங்க..

Jaleela said...

//ஆஹா! போட்டாச்சா, இன்னும் நிறைய பேசுனோமே! அதெல்லாம் சென்ஸார்டா.

அந்த மீன் பிரியாணி, மற்றும் இரால் தொக்கு அதை பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்

இன்று கனவில் வந்து அழுதாலும் அழலாம்./


அப்படியா யார் மீன் பிரியாணி செய்தது, யார் இறால் தொக்கு செய்தது. அப்ப பெரிய மாநாடு தான்.

நிஜமா நல்லவன் said...

சந்திப்பு சூப்பர்...ஜமால் அண்ணன் தொப்பை மறைக்கும் படம் அருமையோ அருமை:))

நிஜமா நல்லவன் said...

அட ஜமால் அண்ணன்...

நிஜமா நல்லவன் said...

/ நம்ம பாசக்கார ஜமால் சென்னை வந்து/

ஜமால் அண்ணே....பேரு மாத்தீட்டீங்களா??? முன்னாடி எல்லாம் நட்புடன் ஜமால் தானே:))

நிஜமா நல்லவன் said...

/ரெண்டுநாள் முன்னாடி ஜமால் நம்பர்ல இருந்து போன்...! /

ஓ...இப்போ எல்லாம் நம்பர் இருந்தே போன் வருதா????சோனி எரிக்சன் நோக்கியா ஐ போன் இது மாதிரி எது வந்தாலும் எனக்கும் ஒண்ணு வாங்கி கொடுங்க:))

நட்புடன் ஜமால் said...

அப்படியா யார் மீன் பிரியாணி செய்தது, யார் இறால் தொக்கு செய்தது. அப்ப பெரிய மாநாடு தான்.]]

ஹி ஹி ஹி

கடையில போய் சாப்பிட்டோம், அதை பற்றி சொல்ல சொன்னேன் ஹி ஹி

நிஜமா நல்லவன் said...

/ஆனா பேசுனது ஜமால் இல்ல பேசுனது நம்ப மூளைக்காரன் பிரியமுடன் வசந்த் ..! /


ஹா...ஹா..ஹா...இப்போ என்ன சொல்ல வர்றீங்க...ஜமால் அண்ணனுக்கு மூளை இல்லைன்னா????இருந்திருந்தா தான் முன்னாடியே பேசி இருப்பாரே...நான் சொல்லுறது சரியா:))))

Annam said...

ஹை எங்க ஜமால்னா:)

Annam said...

எப்போதும் சிரிப்பு மாறாத முகம்
///////////////////////
இது தெரிஞ்ச விஷயம் தான...

ஒன்னு பேசிட்டு சிரிக்கலாம் இல்ல சிரிச்சு முடிச்சிட்டு பேச முடியும் :)அது எப்படி தான் சிரிச்சிக்கிட்டே பேச முடியுமோ:)

நிஜமா நல்லவன் said...

/ ஜமால் எப்போதும் சிரிப்பு மாறாத முகம்/

ஆமாம்...ஆமாம்...அவரு தனியா நடந்து போறப்போ கூட சிரிச்சிட்டே தான் போவாருன்னு தானே சொல்லவர்றீங்க:))

Annam said...

நிஜமா நல்லவன் said...
/ஆனா பேசுனது ஜமால் இல்ல பேசுனது நம்ப மூளைக்காரன் பிரியமுடன் வசந்த் ..! /


ஹா...ஹா..ஹா...இப்போ என்ன சொல்ல வர்றீங்க...ஜமால் அண்ணனுக்கு மூளை இல்லைன்னா????இருந்திருந்தா தான் முன்னாடியே பேசி இருப்பாரே...நான் சொல்லுறது சரியா:))))
////////////////////////

மூளை சம்பந்தமான கேள்விய நீ ஏன்னா எடுக்குற:)

நிஜமா நல்லவன் said...

/
Annam said...

ஹை எங்க ஜமால்னா:)/

அதான் போட்டோல இருக்கிறாரே....கண்ணு தெரியலையா????எங்கன்னு கேள்வி எல்லாம் கேட்டுட்டு:)))

நிஜமா நல்லவன் said...

/
Annam said...

நிஜமா நல்லவன் said...
/ஆனா பேசுனது ஜமால் இல்ல பேசுனது நம்ப மூளைக்காரன் பிரியமுடன் வசந்த் ..! /


ஹா...ஹா..ஹா...இப்போ என்ன சொல்ல வர்றீங்க...ஜமால் அண்ணனுக்கு மூளை இல்லைன்னா????இருந்திருந்தா தான் முன்னாடியே பேசி இருப்பாரே...நான் சொல்லுறது சரியா:))))
////////////////////////

மூளை சம்பந்தமான கேள்விய நீ ஏன்னா எடுக்குற:)/

நீயே எடுக்கிறப்போ நாங்க ஏன் எடுக்க கூடாது:))

நிஜமா நல்லவன் said...

/
நட்புடன் ஜமால் said...

ஆஹா! போட்டாச்சா, இன்னும் நிறைய பேசுனோமே! அதெல்லாம் சென்ஸார்டா.

அந்த மீன் பிரியாணி, மற்றும் இரால் தொக்கு அதை பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்

இன்று கனவில் வந்து அழுதாலும் அழலாம்./

பக்கத்து இலைக்காரன் கனவில் வந்து அழுவுற அளவுக்கு சாப்பிட்டு இருக்கீங்க போல:))

Annam said...

நட்புடன் ஜமால் said...

கடையில போய் சாப்பிட்டோம், அதை பற்றி சொல்ல சொன்னேன் ஹி ஹி
///////////

கடை காலி ஆகி இருக்குமே:) இல்ல கடையில மீன் சாப்பாடு காலி ஆகி இருக்குமேன்னு சொல்ல வந்தேன்:)

SUFFIX said...

//இராகவன் நைஜிரியா said...
அண்ணே ஒரு மெயில் அனுப்பியிருந்தேன்

கிடைச்சுதா?//

ஸ்டாம்ப்பு ஒட்டாம போட்டா எப்புடி கிடைக்கும்?

r.selvakkumar said...

இந்த மாநாடு எப்போ நடந்தது?
அதே நீல உடையில்தான் ஜமால் சென்ற ஞாயிறு காலை என்னை சந்தித்து அட்டகாசமான புன்னகையை உதிர்த்துவிட்டுச் சென்றார்.

அதே நாள் அதே உடையா?
அதே உடை வோறொரு நாளா?

நிஜமா நல்லவன் said...

/
SUFFIX said...

அடடே சூப்பர், நண்பர் ஜமாலுடன் வசந்த்தையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, நாங்களும் வருவோம்ல.../


ஷபி நம்ம மாநாட்டை மறந்துடாதீங்க....:))

நிஜமா நல்லவன் said...

/
SUFFIX said...

//இராகவன் நைஜிரியா said...
அண்ணே ஒரு மெயில் அனுப்பியிருந்தேன்

கிடைச்சுதா?//

ஸ்டாம்ப்பு ஒட்டாம போட்டா எப்புடி கிடைக்கும்?/

இல்ல ஷபி...இராகவன் அண்ணா ஸ்டாம்ப் ஒட்டி தான் போட்டாராம்....ஆனா வெளிப்பக்கம் ஓட்டுறதுக்கு பதிலா உள்பக்கம் ஒட்டிட்டாராம்:))

SUFFIX said...

//நட்புடன் ஜமால் said...
ஆஹா! போட்டாச்சா, இன்னும் நிறைய பேசுனோமே! அதெல்லாம் சென்ஸார்டா.

அந்த மீன் பிரியாணி, மற்றும் இரால் தொக்கு அதை பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்

இன்று கனவில் வந்து அழுதாலும்//

என்னா மீனு, எம்மாம்பெரிய சைஸ் ராலுன்னு சொன்னா நாங்களும் சேர்ந்து அழுவோம்...

Annam said...

நிஜமா நல்லவன் said...
/ ஜமால் எப்போதும் சிரிப்பு மாறாத முகம்/

ஆமாம்...ஆமாம்...அவரு தனியா நடந்து போறப்போ கூட சிரிச்சிட்டே தான் போவாருன்னு தானே சொல்லவர்றீங்க:))
//////////////////

ஜமால்னா நடக்கும் போது தான் சிரிப்பாரு ஆனா நீ எத சொன்னாலும் சிரிப்பு :) தான் போடுவீங்க:)....சோ யு நோ வாய் பேசிங் ஒக்கேவானா

SUFFIX said...

நிஜமா நல்லவன் said...ஷபி நம்ம மாநாட்டை மறந்துடாதீங்க....:))//

நோட் செஞ்சு வச்சிட்டேன்ப்பா பிப்ரவரி 30 தானே?

Annam said...

SUFFIX said...
//இராகவன் நைஜிரியா said...
அண்ணே ஒரு மெயில் அனுப்பியிருந்தேன்

கிடைச்சுதா?//

ஸ்டாம்ப்பு ஒட்டாம போட்டா எப்புடி கிடைக்கும்?
/////////////////

என்ன ஒரு புத்திசாலித்தனமான் கேள்வி பாஸ்...நீங்க எங்க பாஸாக இருப்பதில் மொக்கை குடும்பத்தார் பெருமை கொள்கிறோம்:)

Annam said...

SUFFIX said...
நிஜமா நல்லவன் said...ஷபி நம்ம மாநாட்டை மறந்துடாதீங்க....:))//

நோட் செஞ்சு வச்சிட்டேன்ப்பா பிப்ரவரி 30 தானே?
///////////////////////

பிப்ரவரி 30 நல்ல நாள் இல்லையாம் :) 31 நடத்துங்க பாஸ்:)

SUFFIX said...

சே 50, அன்னத்திற்கு போயிடுச்சா...

தமிழ் அமுதன் (ஜீவன்) said...

ரைட்டு...! மடைய தொறந்து உட்டாச்சு..!

நல்லா கும்முங்க மக்களே..!

நானு அப்பால வாரேன் ...!;;)

நிஜமா நல்லவன் said...

/
SUFFIX said...

நிஜமா நல்லவன் said...ஷபி நம்ம மாநாட்டை மறந்துடாதீங்க....:))//

நோட் செஞ்சு வச்சிட்டேன்ப்பா பிப்ரவரி 30 தானே?/


அவ்வ்வ்வவ்...சரியா நோட் பண்ணுறது இல்லையா????இப்போ நோட் பண்ணிக்கோங்க...31/13/2010

SUFFIX said...

ஆட்ட நாயகர்கள் எங்கேப்பா, ஜமால் இன்னுமா லன்ச்சிங்?

SUFFIX said...

//தமிழ் அமுதன் (ஜீவன்) said...
ரைட்டு...! மடைய தொறந்து உட்டாச்சு..!

நல்லா கும்முங்க மக்களே..!

நானு அப்பால வாரேன் ...!;;)//

அண்ணே ஆனந்த கண்ணீர் வருது, என்ன ஒரு தாராள மனசு....

நிஜமா நல்லவன் said...

/
தமிழ் அமுதன் (ஜீவன்) said...

ரைட்டு...! மடைய தொறந்து உட்டாச்சு..!/


ஹா...ஹா...ஹா...இதை தானே எதிர் பார்த்தோம்:)))

Annam said...

SUFFIX said...
நிஜமா நல்லவன் said...ஷபி நம்ம மாநாட்டை மறந்துடாதீங்க....:))//
////////////////////

ஷபி பாஸ் உங்களுக்கு எதுக்கு நல்லவங்களோட கூட்டணி :)

நிஜமா நல்லவன் said...

/
SUFFIX said...

ஆட்ட நாயகர்கள் எங்கேப்பா, ஜமால் இன்னுமா லன்ச்சிங்?/

ஒரு கடையை காலி பண்ணுறது சும்மாவா....இருங்க வருவாரு:)))

Annam said...

SUFFIX said...
ஆட்ட நாயகர்கள் எங்கேப்பா, ஜமால் இன்னுமா லன்ச்சிங்?
///////////////

ssuu ippo thaan sapida poying koranjathu 1 hr aakum:)

SUFFIX said...

//Annam said...

ஷபி பாஸ் உங்களுக்கு எதுக்கு நல்லவங்களோட கூட்டணி :)//

இது புது கட்சி, அரசியல்ல இறங்கிட்டோம்ல..

Annam said...

நிஜமா நல்லவன் said...
/
SUFFIX said...

ஆட்ட நாயகர்கள் எங்கேப்பா, ஜமால் இன்னுமா லன்ச்சிங்?/

ஒரு கடையை காலி பண்ணுறது சும்மாவா....இருங்க வருவாரு:)))
////////////////////

அதெல்லாம் எங்க அண்ணனுக்கு சாதாரணம்:)

P.S
ஜமாலன கரீட்டா சப்போர்ட்டு பன்ணுறேனா:)

SUFFIX said...

// இராகவன் நைஜிரியா said...

சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய் என பாட வேண்டியதுதானே அண்ணே.//

அடடா அடுத்த படத்துக்கு இது டைட்டிலா வச்சிடுவாங்க...

நிஜமா நல்லவன் said...

/
Annam said...

நிஜமா நல்லவன் said...
/
SUFFIX said...

ஆட்ட நாயகர்கள் எங்கேப்பா, ஜமால் இன்னுமா லன்ச்சிங்?/

ஒரு கடையை காலி பண்ணுறது சும்மாவா....இருங்க வருவாரு:)))
////////////////////

அதெல்லாம் எங்க அண்ணனுக்கு சாதாரணம்:)

P.S
ஜமாலன கரீட்டா சப்போர்ட்டு பன்ணுறேனா:)/

காலேஜ் கேண்டீனை சுத்தமா காலி பண்ணிட்டவங்க சப்போர்ட் தானே பண்ணுவாங்க:))

Annam said...

SUFFIX said...
//Annam said...

ஷபி பாஸ் உங்களுக்கு எதுக்கு நல்லவங்களோட கூட்டணி :)//

இது புது கட்சி, அரசியல்ல இறங்கிட்டோம்ல..
/////////////////////


உங்களுக்கு கிரகம் தல கீழா சுத்துது போல :)....:))

SUFFIX said...

// இராகவன் நைஜிரியா said...
அண்ணே ஜீவன் அண்ணே கலக்கறீங்க.//

கும்மியடிக்கணும்னு ஆஃபிஸ்ல ஒரு மணி நேரம் பர்மிஷன் கிடைக்காதுங்களா, முயற்சி செய்யுங்களேன்...;)

நிஜமா நல்லவன் said...

/
SUFFIX said...

// இராகவன் நைஜிரியா said...

சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய் என பாட வேண்டியதுதானே அண்ணே.//

அடடா அடுத்த படத்துக்கு இது டைட்டிலா வச்சிடுவாங்க.../

இது டைட்டில் இல்ல ...அடுத்த படத்தோட கதை:))

நிஜமா நல்லவன் said...

/
இராகவன் நைஜிரியா said...

// இந்த வசந்த் நேர்ல சாந்தம்னா சாந்தம் . ஒரு அமைதியா அதிர்ந்து பேசாம அழகு புள்ளயா இருந்தாரு //

அண்ணே புயல் கூட வருவதற்கு முன் ரொம்ப அமைதியாகத்தாங்க இருக்கு./


இராகவன் அண்ணா...உண்மைய சொல்லுங்க....இந்த கமெண்ட் நீங்க வீட்டில் இருந்து போட்டது தானே:))

Annam said...

காலேஜ் கேண்டீனை சுத்தமா காலி பண்ணிட்டவங்க சப்போர்ட் தானே பண்ணுவாங்க:))
////////////////////////

கேண்ட்டீன் பொருளாதரத்த வள்ர்த்து விடுறவங்கள பார்த்து ..காலி பண்ணீட்டீஙனு மனசாட்சி இல்லாம பேசுறாங்கப்பா:)

நிஜமா நல்லவன் said...

/
இராகவன் நைஜிரியா said...

// சேருக்குள் தொப்பையை மறைக்கும் ஜமால் //

பிரிக்கமுடியாதது - ஜமாலும் தொப்பையும்/

அண்ணே...ஏன் இப்படி ஒரு கமெண்ட் போட்டீங்க...பாருங்க ஜமால் சாப்பிட்டு முடிச்சதும் ஜிம்முக்கு போயிட்டு இருக்கார்...என்னவெல்லாம் உடைய போகுதோ...ஒரு ஜிம்மை காலி பண்ணின பாவம் நைஜீரியா நோக்கி வந்துட்டு இருக்கு:))

நட்புடன் ஜமால் said...

1 மணிநேரமா சாப்பிட

அதெல்லாம் கிடையாது

நட்புடன் ஜமால் said...

இராகவன் அண்ணா...உண்மைய சொல்லுங்க....இந்த கமெண்ட் நீங்க வீட்டில் இருந்து போட்டது தானே:))]]

ஆஹா! பெரிய ஆராய்ச்சியா இருக்கே!

நிஜமா நல்லவன் said...

/
Annam said...

காலேஜ் கேண்டீனை சுத்தமா காலி பண்ணிட்டவங்க சப்போர்ட் தானே பண்ணுவாங்க:))
////////////////////////

கேண்ட்டீன் பொருளாதரத்த வள்ர்த்து விடுறவங்கள பார்த்து ..காலி பண்ணீட்டீஙனு மனசாட்சி இல்லாம பேசுறாங்கப்பா:)/

அப்புறம் ஏன் உங்க கேண்டீன் ஓனரு நேத்து துண்டை தலைல போட்டுட்டு போனாரு:)))

நிஜமா நல்லவன் said...

/
நட்புடன் ஜமால் said...

1 மணிநேரமா சாப்பிட

அதெல்லாம் கிடையாது/

நீங்க சாப்பிட்ட கடைல தான் இனிமே ஒண்ணுமே கிடையாதே....சொல்லி வேற தெரியணுமா:))

நட்புடன் ஜமால் said...

நீங்க சாப்பிட்ட கடைல தான் இனிமே ஒண்ணுமே கிடையாதே....சொல்லி வேற தெரியணுமா:))]]


அண்ணே ஃபுல் ஃபார்ம்ல இருக்கிய போல ...

நிஜமா நல்லவன் said...

/
இராகவன் நைஜிரியா said...

// புதிய மனுசன பார்க்குற உணர்வு கொஞ்சம் கூட இல்ல பலநாள் பேசி பழகுன ஒரு நண்பனை பார்க்குரதுபோல இருந்தது ...! //

புதிய மனுஷனா ... யாரு ... ஜமாலா..


எதோ சொல்றீங்க... ஒத்துக் கொள்ளுகின்றேன்/

அண்ணே...ஜமால் ஆதி காலத்து மனுஷர்....அதானே சொல்ல வந்தீங்க:))

SUFFIX said...

//நட்புடன் ஜமால் said...
இராகவன் அண்ணா...உண்மைய சொல்லுங்க....இந்த கமெண்ட் நீங்க வீட்டில் இருந்து போட்டது தானே:))]]

ஆஹா! பெரிய ஆராய்ச்சியா இருக்கே!//

ஆமாம்ப்பா,அதன் நுணுக்கத்தை நாமளும் தெரிஞ்சுக்கணும்!!

நிஜமா நல்லவன் said...

/
நட்புடன் ஜமால் said...

நீங்க சாப்பிட்ட கடைல தான் இனிமே ஒண்ணுமே கிடையாதே....சொல்லி வேற தெரியணுமா:))]]


அண்ணே ஃபுல் ஃபார்ம்ல இருக்கிய போல .../

அண்ணே...புல்லா சாப்பிட்டு வந்தது நீங்க...நான் இங்க நல்ல சோத்துக்கு வழி இல்லாம கிடக்கிறேன்:))

நிஜமா நல்லவன் said...

/
இராகவன் நைஜிரியா said...

அண்ணே ஒரு மெயில் அனுப்பியிருந்தேன்

கிடைச்சுதா?/

ஒத்தைல போக மெயிலுக்கு பயமா இருக்காம்...எதுக்கும் அடுத்த தடவை ரெட்டையா மெயிலு அனுப்புங்க....போய் சேர்ந்திடும்:))

SUFFIX said...

இராகவன் அண்ணன் மட்டும் இங்கிருந்தால் 150 தொட்டிருக்கும், நாம இன்னும் கத்துக்குட்டிகளாகவே இருக்கோம்!!

SUFFIX said...

//r.selvakkumar said...

அதே நாள் அதே உடையா?
அதே உடை வோறொரு நாளா?//

உடையும் நாளும் வேறாக இருக்கலாம் ஆனா அதே சிரிப்பு தான்-:)

நட்புடன் ஜமால் said...

அதே நாள் அதே உடையா?
அதே உடை வோறொரு நாளா?]]

அதே போன்ற உடை வேறொரு நாள்

நட்புடன் ஜமால் said...

செந்தமிழ் அரசன் ]]

அய்யா! ஜோதிபாரதி, செம்மொழி மாநாட்டில் எதுனா சீட்டு இருக்கா எனக்கு :)

நிஜமா நல்லவன் said...

/நட்புடன் ஜமால் said...

செந்தமிழ் அரசன் ]]

அய்யா! ஜோதிபாரதி, செம்மொழி மாநாட்டில் எதுனா சீட்டு இருக்கா எனக்கு :)/


மிச்சம் இருந்த ஒரு சீட்டை இரண்டு பேரில் யாருக்கு கொடுப்பது என்று இழுபறியா இருக்காம் அண்ணே...அதனால உங்களுக்கு சீட் இல்லையாம்:)))

நட்புடன் ஜமால் said...

மிச்சம் இருந்த ஒரு சீட்டை இரண்டு பேரில் யாருக்கு கொடுப்பது என்று இழுபறியா இருக்காம் அண்ணே]]


யார்ப்பா அந்த 2 பேர் ...

SUFFIX said...

//நட்புடன் ஜமால் said...
செந்தமிழ் அரசன் ]]

அய்யா! ஜோதிபாரதி, செம்மொழி மாநாட்டில் எதுனா சீட்டு இருக்கா எனக்கு :)//

மேடையிலா ஜமால்?

SUFFIX said...

//
மிச்சம் இருந்த ஒரு சீட்டை இரண்டு பேரில் யாருக்கு கொடுப்பது என்று இழுபறியா இருக்காம் அண்ணே]]//

அந்த ஏரியாவுல நல்ல நாட்டாமையா பார்த்து ஒரு தீர்ப்ப சொல்லிட சொல்லுங்க

’மனவிழி’சத்ரியன் said...

ஆஹா....! அது நடந்துருச்சா...?

மாப்ள ஜமால் என்னய்யா இதெல்லாம்?

தம்பி வசந்து.... அண்ணங்கிட்ட ஒரு வார்த்த சொல்லல பாத்தியா?

நல்லாருங்க.

dheva said...

என்னங்க தமிழ் சொல்லாம கொள்ளாம திடீர்னு கூட்டத்த கூட்டினா எப்படி? ஜமால் தொப்பைய மறைச்சது தான் ஹைலைட்டானா மேட்டர் தமிழ்! சூப்பர்.... நட்புகள் பதிவுலகம் கொடுப்பது என்னவோ உண்மைதான்.... ஆனால் ஒரே ஊர்க்காரங்களான நம்மை சேத்து வைத்ததே இந்த பதிவுலகம் அதுக்கு கோடி நமஸ்காரங்கள் தமிழ்!

இரசிகை said...

///இரண்டு பேர் சந்தித்தால் சந்திப்பு... 3 பேர் இருந்தால் அது மாநாடு.///


:))

vaazhthukal!

சி. கருணாகரசு said...

நல்லது .... பட்டைய கிளப்புங்க....

ஜமால் கருத்தது போல தெரியுது.... வெயில் அதிகமா?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//நட்புடன் ஜமால் said...
செந்தமிழ் அரசன் ]]

அய்யா! ஜோதிபாரதி, செம்மொழி மாநாட்டில் எதுனா சீட்டு இருக்கா எனக்கு :)//

ஜமால்,

செம்மொழி மானாட்டுல(எழுத்துபிழை அல்ல, வரலாற்றுப்பிழை) உங்களுக்கு சீட்டு இல்லையாம். தலைவர் ஆற்றொணா வேதனையுடன் இதை அறி வித்திருக்கிறார். இருப்பினும் தனது இதயத்தில் இடம் தருகிறேன் என்று பகர்ந்திருக்கிறார்.

அது போதாதா?

அவருடைய இதயம் மிகச்சிறியதாக இருப்பதால் உங்களை போன்ற பெரிய மனிதர்கள் அமர்வதற்கு அங்கு நாற்காலி போடுவது அவ்வளவு எளிதல்ல என்பது எனது தாழ்மையான கருத்து!

தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்!?

:)

ப்ரியமுடன்...வசந்த் said...

மிக்க மகிழ்ச்சி ஜீவன் அண்ணா..