''தமிழ்ப்படம்'' -இது விமர்சனம் அல்ல..!


இன்னியோட உன் ஆயுசு முடியபோகுது..! இன்னிக்கு நைட் நீ செத்துடுவே...!அப்படிங்குற கண்டிசன்ல உள்ள ஒருத்தன கூட்டிவந்து இந்தப்படம் பார்க்க சொன்னா அவன்கூட தன்னை மறந்து குலுங்கி குலுங்கி சிரிப்பான் அப்படி ஒரு காமெடி...!

படத்துல உள்ள சில காமெடிகள சொன்னா சுவாரஸ்யம் குறைஞ்சுடும்னு சொல்லுறாங்க ஆனா ..? எனக்கு அப்படி தோணல என்னதான் படத்துல உள்ள முழு நீள காமெடிகள விவரிச்சு சொன்னாலும் படம் பார்க்கும்போது யாராலையுமே சிரிப்ப அடக்க முடியாது...!

பாட்ஷா பட ரகுவரன் கெட் -அப்ல இருக்கும் தளபதி பட தேவா மம்முட்டி;

ஒரு உறைல ரெண்டு கத்தி இருக்க கூடாது .!

ஹீரோ சிவா ;

ஏன் ஒரு குவாட்டர்ல ரெண்டு கட்டிங் இல்லையா ? அதுபோல தான் ..!

ஒரு படத்த நக்கல் பண்ணி காமெடி வருது சுவாரஸ்யமா ரசிச்சு சிரிச்சு முடிச்சா அந்த காமெடி குள்ள கொசுறா இன்னொரு காமெடி வருது அதான் அதான் கலக்குது...!

அந்நியன் பட ஸ்டைல வில்லன எருமை மாடுகள மிதிக்க விட்டு கொல்ல போறாரு ஹீரோ ..! வில்லன் மேல எருமை கள ஏவி விட்டா நகர மாட்டேங்குது குடைய விரிச்சு காட்டி மிரள விட்டா .! நோ யூஸ் உடனே லேப்டாப்ல அந்நியன் படத்த மாடுகளுக்கு போட்டு காட்டுறாரு அப்போவும் மாடுக அசையல..!

இதெயெல்லாம் பார்த்து வில்லனுக்கு சிரிப்பு வந்துடுது விழுந்து .விழுந்து சிரிக்கிறாரு சிரிச்ச சிரிப்புல நெஞ்ச புடிச்சுகிட்டு கீழ விழுந்து செத்து போறாரு..!

ஹீரோ சிவா ; நீ ஹார்ட் பேசன்ட்னு தெரியும்டா ..! மாடுகள விட்டு கொல்ல நான் என்ன சர்க்கஸ் கம்பெனியா வைச்சு இருக்கேன் ..? உன்ன சிரிக்கவைச்சு கொல்லுரதுதான் என் திட்டமே...!


இதுபோல நெறைய சொல்லிகிட்டே போகலாம்..!

படம் பார்க்கும்போது பக்கத்துல இருந்த என் ஆறு வயசு பொண்ணு மட்டும் எதுக்குப்பா எல்லாரும் சிரிக்கிறாங்கன்னு அடிக்கடி கேட்டுகிட்டே இருந்துச்சு..!

குறைகள் ;- குறைகளை கண்டுபிடிச்சு சொல்ல நான் விமர்சகன் அல்ல நான் ரசிகன். நான் ரசித்ததை மட்டும் சொல்லுறேன். ஆமா ..! இவ்ளோதூரம் போய் படம் பார்த்துட்டு குறைகள கண்டு புடிச்சு நம்ம சந்தோசத்த ஏன் கெடுத்துக்கணும் ..?போனமா சிரிச்சமான்னு இல்லாம ..?

தமிழ் படம் பார்ட் 1 ,பார்ட் 2 ன்னு ஆறுமாசத்துக்கு ஒருதடவ இந்த மாதிரி படம் வந்தா கூட அலுக்காம பார்க்கலாம்னு தோணுது ..!


குறிப்பு ;- கூட்டம் குறையட்டும் கொஞ்ச நாள் கழிச்சு படம் பார்த்துக்கலாம்னு யாரும் இருக்காதீங்க ...! தேட்டர்ல அரங்கம் அதிரும் அப்ளாஸ் கூட படம்பார்க்கணும் அதுதான் நிஜமான சுவாரஸ்யம்...!

திருட்டு dvd பார்க்க நினைக்கிறவங்களுக்கு ;- அது வேஸ்ட்டுங்க .! இதமாதிரி படம் எப்போவாச்சும் தான் வரும் அத தியேட்டர்ல போய் பார்க்கும் நல்ல அனுபவத்த மிஸ் பண்ணாதீங்க...!

>

21 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

// தேட்டர்ல அரங்கம் அதிரும் அப்ளாஸ் கூட படம்பார்க்கணும் அதுதான் நிஜமான சுவாரஸ்யம்...! //


எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சா நாமும் சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே இருக்கலாம்.

நமக்கு புரியலேண்னாலும் சிரிப்பு வந்துவிடும்..,

SUFFIX said...

சொல்லிட்டியல்ல பார்த்துடுறோமுங்க...டேங்க்ஸ்

Rajeswari said...

ticketey kidaikalai.seekiram paarkkanum.

S.A. நவாஸுதீன் said...

ஊருக்கு வறோம்ல தல. பட்டுக்கோட்டையில் எங்கே தல ஓடுது (அய்யா தியேட்டரா இருந்தா நல்லா இருக்கும்) .

Kolipaiyan said...

Good review.

நட்புடன் ஜமால் said...

பட்டுக்கோட்டைக்கு வந்திடிச்சா

சீக்கிரம் வாறோம்ல - சேர்ந்தே சிரிப்போம்

பின்னோக்கி said...

குறிப்புல நீங்க சொன்னது உண்மைதான். தியேட்டர்ல பார்க்குறது தான் பெஸ்ட்.

டவுசர் பாண்டி... said...

இத்தனை காலமா நம்மளை எப்படியெல்லாம் இம்சை பண்ணீருப்பானுங்க மசாலா படம்னு சொல்லி....

தியேட்டர்ல கேக்கற சிரிப்பு சந்தோசத்துல வரலை, அம்புட்டும் கொலவெறி...

ஹா...ஹா...ஹா...

ஹாலிவுட் பாலா said...

அவதார் படத்தை ஐமேக்ஸில் பாருங்கன்னு சொல்லி வயித்தெரிச்சலை கிளப்புற மாதிரி இருக்கு.., திருட்டு டிவிடியில் பார்க்காதீங்கன்னு சொல்லுறது! :( :( :(

எங்களுக்கு.. எங்கிங்க இந்தக் கொடுப்பினையெல்லாம்...?? வெளங்காதவனுங்க... வேட்டைக்காரனை இங்க போடுறானுங்க. இப்படியொரு படத்தை ரிலீஸ் பண்ண மாட்டாங்க.

அத்திரி said...

படம் பாத்துர வேண்டியதுதான்

அண்ணாமலையான் said...

நல்லா சொன்னீங்க..

பிரபாகர் said...

பாத்தாச்சுங்க, இங்கல்லாம் ரிலீஸ் ஆகுமான்னு சந்தேகமா இருந்துச்சி! வேற படத்துக்கு போக, இத உடனே பாத்தாச்சு. அருமையா இருந்துச்சி... கொஞ்சம் தலைவலி, வயித்துவலி, அதிகமா சிரிச்சதால...

பிரபாகர்.

அக்பர் said...

நல்லா சொல்லியிருக்கீங்க.

விமர்சனம் அருமை.

அபுஅஃப்ஸர் said...

இந்தளவுக்கு சொல்லிருக்கீங்கன பார்த்துட வேண்டியதுதான், இங்கே வெளங்கா பசங்க வேட்டைக்காரன், குட்டினு போட்டு சாவடிக்கிறானுங்க...

Cable Sankar said...

jeevan.. நீங்களும் பாத்திட்டீங்களா..?
:))

புலவன் புலிகேசி said...

வெள்ளிக்கிழமை பாத்தேன். இன்னும் நெனச்சி நெனச்சி சிரிச்சிட்டிருக்கேன்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

குறைகளை கண்டுபிடிச்சு சொல்ல நான் விமர்சகன் அல்ல நான் ரசிகன்.

:)))))))))

சூப்பர் ஜீவன்

தாரணி பிரியா said...

பார்த்துடலாம் :)

அமுதா said...

பார்த்திடறேன்

தமிழரசி said...

இம்புட்டு சொன்ன நீங்க அப்படியே ஒரு டிக்கெட்டும் போட்டு கொடுத்திருக்கலாம்..எப்படியோ படம் பார்க்கும் ஆவலை தூண்டிட்டீங்க தமிழ்

தமிழரசி said...

S.A. நவாஸுதீன் said...
ஊருக்கு வறோம்ல தல. பட்டுக்கோட்டையில் எங்கே தல ஓடுது (அய்யா தியேட்டரா இருந்தா நல்லா இருக்கும்) .

இதையே தான் சொல்லிட்டு இருக்கீங்க வந்த பாடில்லை நவாஸ்