நமீதா ரசிகன்அந்த காலம் முதல் இப்போதுவரை கவர்ச்சி நடிகைகளுக்கென ஒரு தனி இடம் உண்டு..! கருப்பு வெள்ளை காலம் அதற்கு அடுத்த நிலை பற்றி தெரியவில்லை ..!ஜெய மாலினியை ஓரளவுக்கு தெரியும், அதன் பிறகு சிலுக்கு ஸ்மிதா ..! சில்க் கவர்ச்சி மட்டுமின்றி நல்ல குணசித்திர நடிகையாகவும் வலம் வந்தவர்..! எனக்கு தெரிந்து தமிழ் திரையுலகில் நீண்ட காலம் கவர்ச்சி கன்னியாக இருந்தவர்.

சிலுக்குக்கு நிகராக இன்றுவரை யாரையும் சொல்ல முடியவில்லை ...!

ஆனால் ..!சமீபகாலமாக இந்த நமீதா கொடுக்கும் தொல்லை சற்று அதிகமாகவே இருப்பதாக தோன்றுகிறது..! சிலுக்குக்கு அடுத்த இடத்தில் சொல்லும் அளவுக்கு அவஸ்தை படுத்துகிறார்..!

பத்து வயசு பசங்க கூட ஹை நமீதாங்குரானுங்க..!நமீதா பாட்டு போகும்போது டிவி சேனல் மாத்தினா பெருசுங்க கூட முணுமுணுக்குது .!
நடிகை,கவர்ச்சி என்பதை விட ஒரு சினேகிதமான முக அமைப்பு அல்லது சினேகிதமான பேச்சு இவை இருந்தால்தான் மனதில் இடம் பிடிக்க முடியும் என தோன்றுகிறது.அப்படி ஒரு அமைப்பு நமீதாவிடம் நெறயவே உள்ளது ..!

கவர்ச்சி ..??? அதுமட்டும் என்ன கொஞ்சமாவா இருக்கு..! ம்ம்ம் நமக்கில்ல..நமக்கில்ல... அப்படின்னு நெனைச்சு சீ ..சீ இந்த பழம் புளிக்கும்னு சொல்லிட்டு விலகி போகவா தோணுது ?நின்னு வேடிக்கை பார்க்கத்தான் தோணுது ..! திருவிழா கூட்டத்துல முட்டாய் கடைய வேடிக்கை பார்க்குரதுபோல பார்க்குரோமோன்னு நமக்கே ஒரு பீல் வருது..!

இதுல நம்மள மட்டும் குறை சொல்லிக்க கூடாது..! அந்த புள்ளையும் என்ன சும்மாவா இருக்கு ...! நம்ம வேலைய பார்த்துகிட்டு சும்மா இருந்தா கூட மச்சான்... மச்சான்... மச்சான்... ன்னு சொல்லி உசுப்பேத்தி விடுது..!

பலபேரு நமீதாவ தன்னோட அத்தை பொண்ணு ரேஞ்சுக்கு நெனைச்சுகிட்டு இருக்காங்க..!

எப்படியோ....! இளைஞர் களின் இதய கிளி..! குலதெய்வம் நமீதா இதே இளமையுடனும் அழகுடனும் வாழட்டும் பல்லாண்டு..!இந்த பதிவு பற்றி ஒரு கேள்வி பதில் கேள்வியும் நானே பதிலும் நானே..!

நல்லாத் தானே போயிட்டு இருந்துச்சி எதுக்கு இப்படி ஒரு பதிவு ???

எல்லா தலைப்புலையும் நான் எழுதுறதா நண்பர்கள் சொன்னாங்க அதான் இப்படி ஒன்னு எழுதலாமேன்னு...!

குடும்ப தலைவனா லட்சணமா இல்லாம ஒரு கவர்ச்சி நடிகைக்காக பதிவு எழுதுறது நல்லவா இருக்கு ???

புத்திக்கு தெரியுது ஆனா ..? நமீதா பேரை கேட்டாலோ இல்ல அந்த புள்ள ஸ்டில் எதாச்சும் பார்த்தாலோ எனக்கு கல்யாணம் ஆனதே மறந்து போய்டுது...!

சரி எப்போலேர்ந்து நமீதா ரசிகன்...?

மாளவிகாவுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து ..!

அது வேறயா ...? அது என்ன மாளவிகாவுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து ....???

இல்ல இன்னொருத்தர் மனைவிக்கு எப்படி ரசிகன்னு சொல்லுறது நம்ம பண்பாடு கலாசாரம் ...இதெல்லாம் ...!

சரி ..சரி.. அது என்ன ஒரு நடிகைய போயி குலதெய்வம்னு ...! இப்படியெல்லாம் உனக்கு யார் சொல்லி கொடுக்குறது ....?

அது வந்து எங்க ..... இல்ல நாங்கல்லாம் அப்படித்தான் சொல்லுவோம்...!இந்த நமீதா மேட்டர் உங்க வீட்டுகார அம்மணிக்கு தெரியுமா ?ம்ம் .. தெரியும் தெரியும்...! நமீதா வ என்ன வீட்டுக்கா கூட்டியார போறார்னு நினைச்சுதோ என்னமோ தொலைஞ்சு போகட்டும்னு விட்டுடுச்சி ..!வீட்டுகார அம்மிணி க்கே தெரியும்போது வேற யாருக்கு பயப்புடனும்னு சொல்லி தான் இந்த பதிவு ...!

சரி தொலைஞ்சு போ...!
>

46 comments:

தமிழரசி said...

அங்க ஒருத்தர் நயன் புராணம் பாடி ஓய்ந்திருக்கும் வேலையில் நல்லாயிருந்த தமிழே உனக்கென்ன ஆச்சி...

தமிழரசி said...

//ஆனால் ..!சமீபகாலமாக இந்த நமீதா கொடுக்கும் தொல்லை சற்று அதிகமாகவே இருப்பதாக தோன்றுகிறது..! சிலுக்குக்கு அடுத்த இடத்தில் சொல்லும் அளவுக்கு அவஸ்தை படுத்துகிறார்//

ஒரு மார்கமாக தான் இருக்கீங்க தமிழ்...இந்த பதிவு முடியும் வரை உங்க பெயர் ஜீவன் என்றே அழைக்கப்படும்...

தமிழரசி said...

//நமீதா பாட்டு போகும்போது டிவி சேனல் மாத்தினா பெருசுங்க கூட முணுமுணுக்குது .!//

அப்ப நீங்க இன்னும் பெருசுங்க லிஸ்ட்ல சேரலையா? அதான் இந்த புலம்பலா?

தமிழரசி said...

//நடிகை,கவர்ச்சி என்பதை விட ஒரு சினேகிதமான முக அமைப்பு அல்லது சினேகிதமான பேச்சு இவை இருந்தால்தான் மனதில் இடம் பிடிக்க முடியும் என தோன்றுகிறது.அப்படி ஒரு அமைப்பு நமீதாவிடம் நெறயவே உள்ளது ..!//

அட அட அட என்னப்பா பி ஹெச் டி வாங்கப்போறீங்களா? கொஞ்சம் வீட்டு தொலைபேசி எண் தாரேளா?

தமிழரசி said...

//இதுல நம்மள மட்டும் குறை சொல்லிக்க கூடாது..! அந்த புள்ளையும் என்ன சும்மாவா இருக்கு ...! நம்ம வேலைய பார்த்துகிட்டு சும்மா இருந்தா கூட மச்சான்... மச்சான்... மச்சான்... ன்னு சொல்லி உசுப்பேத்தி விடுது..! //

ஒஹ் அந்த அழைப்புக்கு இத்தனை சக்தியா? நமீதா மேடம் இப்படி நீங்க எங்கள் இளைஞர்களை பாடாய் படுத்தலாமா? கொஞ்சம் யோசியுங்களேன்...

தமிழரசி said...

குடும்ப தலைவனா லட்சணமா இல்லாம ஒரு கவர்ச்சி நடிகைக்காக பதிவு எழுதுறது நல்லவா இருக்கு ???

புத்திக்கு தெரியுது ஆனா ..? நமீதா பேரை கேட்டாலோ இல்ல அந்த புள்ள ஸ்டில் எதாச்சும் பார்த்தாலோ எனக்கு கல்யாணம் ஆனதே மறந்து போய்டுது...!

சரி எப்போலேர்ந்து நமீதா ரசிகன்...?

மாளவிகாவுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து ..!

அது வேறயா ...? அது என்ன மாளவிகாவுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து ....???

இல்ல இன்னொருத்தர் மனைவிக்கு எப்படி ரசிகன்னு சொல்லுறது நம்ம பண்பாடு கலாசாரம் ...இதெல்லாம் ...!


ஜீவன் தாங்கலை உங்கள் லொல்லு பண்றதெல்லாம் பண்ணிட்டு இது என்ன நல்ல புள்ள தொணி?

டவுசர் பாண்டி... said...

உங்களுக்கு நமீதா மேல என்ன கோவம், ஏன் இப்படி படமெல்லாம் போடறீங்க....

தமிழரசி said...

இந்த நமீதா மேட்டர் உங்க வீட்டுகார அம்மணிக்கு தெரியுமா ?ம்ம் .. தெரியும் தெரியும்...! நமீதா வ என்ன வீட்டுக்கா கூட்டியார போறார்னு நினைச்சுதோ என்னமோ தொலைஞ்சு போகட்டும்னு விட்டுடுச்சி ..!வீட்டுகார அம்மிணி க்கே தெரியும்போது வேற யாருக்கு பயப்புடனும்னு சொல்லி தான் இந்த பதிவு ...!

சரி தொலைஞ்சு போ...!


மேடம் அவசரப்பட்டு ஆக்செப்ட் பண்ணீட்டீங்கன்னு நினைக்கிறேன்...இல்லை இவர் வீட்டில் தர தொல்லை தாங்கமல் நீங்க நிம்மதியா இருக்க இப்படி எங்களை மாட்டி விட்டுடீங்களே...இது என்ன ஞாயம்...

தமிழரசி said...

ஹிஹிஹிஹி
எழுத்தோசை தமிழரசி முதன் முதலா ஒரு நல்ல பதிவுக்கு இத்தனை கமெண்ட் போட்டு இருக்கேன் வழி மொழியுங்கள் தோழர்களே...அடிப்பதாக இருந்தால் ஜீவனையே போட்டு தள்ளுங்கள்...

ஐய்யோ ஒரு வேளை நானும் நமிதா ரசிகையோ?இத்தனை பின்னுட்டம் போட்டுட்டேன்... என்னமோ உருப்பட்டா சரி...

டவுசர் பாண்டி... said...

தமிழரசி....நீங்க சாதா தமிழரசியா...இல்லை சைதை தமிழரசியா?

இப்படி ரவுண்டு கட்டி அடிக்கறீங்க!

ஜீவன் said...

test

அமிர்தவர்ஷினி அம்மா said...

மத்தவங்க பின்னூட்டத்தில் என்னன்னலாம் கேட்பாங்கன்னு நெனச்சீங்களோ அதையெல்லாம் நீங்க கேள்வி பதிலா மாத்திக்கிட்டீங்களா?

இப்ப உங்களிடம் ஒரு கேள்வி
சிங்கமணிக்கு பிடித்த நடிகர் யார்? :)

இளவட்டம் said...

///அது வேறயா ...? அது என்ன மாளவிகாவுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து ....???

இல்ல இன்னொருத்தர் மனைவிக்கு எப்படி ரசிகன்னு சொல்லுறது நம்ம பண்பாடு கலாசாரம் ...இதெல்லாம் ...!////

இது பஞ்ச்!:-))))))

வானம்பாடிகள் said...

அடிச்சிட்டு போலீஸ்ல முதல் கம்ப்ளெயிண்ட் குடுக்குறா மாதிரி கேள்விபதில்னு பார்த்தா அதையும் மீறி நமீதா ஜெயிச்சிட்டாங்க. ஜீவன் அங்க இருக்கு போல=))

S.A. நவாஸுதீன் said...

என்ன ஆச்சு தல.

மானாட மயிலாட விடாமல் பார்க்குறீங்களோ. இருக்கட்டும் இருக்கட்டும்.

ஜகன்மோகினி எத்தனை தடவை பார்த்தீங்க தல?

அமுதா said...

:-))

க.பாலாசி said...

//அப்படி ஒரு அமைப்பு நமீதாவிடம் நெறயவே உள்ளது ..!//

ம்ம்ம்ம்ம்ம்.........(ரொம்ப ரசிச்சிருப்பார் போலிருக்கு)


//சரி எப்போலேர்ந்து நமீதா ரசிகன்...?
மாளவிகாவுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து ..!//

தொடரும்.....

அ.மு.செய்யது said...

இன்னிக்கு தமிழ்மணத்துல தாறுமாறா ஹிட் கொடுக்கப் போவுது பதிவுன்னு மட்டும் தெரியும்.

நடத்துங்க தல..!!!

////சரி எப்போலேர்ந்து நமீதா ரசிகன்...?
மாளவிகாவுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து ..!////

பட் ! எனக்கு இந்த டீலிங் ரெம்ப பிடிச்சிருக்கு.

எம்.எம்.அப்துல்லா said...

தமிழ்மணத்தில் இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே கண்டிப்பா ஒரு படம் போட்டிருப்பீருன்னு ஓடி வந்தேன். இப்பிடி ஒரு படத்தப் போட்டுருப்பிருன்னு தெரிஞ்சுருந்தா இந்த பக்கமே தலைகாட்டிருக்க மாட்டேன்.

:))

Mrs.Menagasathia said...

ஜகன்மோகினி எத்தனை தடவை பார்த்தீங்க?

இராகவன் நைஜிரியா said...

சரி வந்தாச்சு.. அதுக்கு ஒரு ஓட்டும் போட்டாச்சு..

நல்லாயிருங்க அப்பு...

அபுஅஃப்ஸர் said...

நமீதாவுக்கு பதிவுலகத்திலேயும் ரசிகர் மன்றம்... நடத்துங்க தல

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப லேட்டா வந்துட்டேனோ...

தமிழரசி இந்த கும்மு கும்மியிருக்காங்க...

அத்திரி said...

))))))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஜீவன் said...
test
//

சோதனைன்னு தமிழ்ல இருக்கனும்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இப்படி நமீதாவை போட்டு நயந்தாரா ஆளுங்களை வெறுப்பேத்தலாமா?

:)

அவ(நா)ங்களும் பதிவு போட ஆரம்பிச்சுட்டா...!?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

திருவிழா கூட்டத்துல முட்டாய் கடைய வேடிக்கை பார்க்குரதுபோல பார்க்குரோமோன்னு நமக்கே ஒரு பீல் வருது..!
//

சரியா சொல்லி இருக்கீங்க!

இதை சில சிட்டிபாபுக்கள் வேறு மாதிரி சொல்லுவார்கள். அது எனக்குப் பிடிப்பதில்லை. வெறுப்பை ஏற்படுத்தும்.

ஏன்னா நானும் பட்டிக்காட்டான் தான்!

வால்பையன் said...

நமிதா உங்க வீட்டுக்கு வந்துகிட்டு இருக்குறதா தகவல்!

ஹேமா said...

தொலஞ்சு போகட்டும் இந்தப் பதிவு.அடுத்த பதிவைப் பாத்துக்கலாம் !எல்லாம் வயசுக் கோளாறுப்பா !

கவிதை(கள்) said...

இதெல்லாம் ரொம்ப ஓவரு

சொல்லிபுட்டேன் ஆமா

விஜய்

RAMYA said...

//
நமீதா ரசிகன்
//

அப்படியா சொல்லவே இல்லே:-)

RAMYA said...

//
இந்த பதிவு பற்றி ஒரு கேள்வி பதில் கேள்வியும் நானே பதிலும் நானே..!
//

அது சரி! வீட்டுக்கு போங்க அவங்களும் கேள்வி கேப்பாங்க :)

ங்கேன்னு! முழிக்கப் போறீங்க :)

RAMYA said...

//
நல்லாத் தானே போயிட்டு இருந்துச்சி எதுக்கு இப்படி ஒரு பதிவு ???

எல்லா தலைப்புலையும் நான் எழுதுறதா நண்பர்கள் சொன்னாங்க அதான் இப்படி ஒன்னு எழுதலாமேன்னு...!
//

ஆமாம்! நல்ல ரசிகர்ன்னு இப்போ நிரூபிச்சிட்டீங்க!!

RAMYA said...

//
குடும்ப தலைவனா லட்சணமா இல்லாம ஒரு கவர்ச்சி நடிகைக்காக பதிவு எழுதுறது நல்லவா இருக்கு ???

புத்திக்கு தெரியுது ஆனா ..? நமீதா பேரை கேட்டாலோ இல்ல அந்த புள்ள ஸ்டில் எதாச்சும் பார்த்தாலோ எனக்கு கல்யாணம் ஆனதே மறந்து போய்டுது...!
//

மறந்து போகும்! வீட்டுக்கு போங்க :)

அப்போ என்ன நடக்குதுன்னு தெரியும். மறந்து போகாம அதை எங்ககிட்டே சொல்லுங்க!

RAMYA said...

//
சரி எப்போலேர்ந்து நமீதா ரசிகன்...?
மாளவிகாவுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து ..!
//

அது சரி இது வேறேயா ? ஹையோ ஹையோ ஜீவன் :-)

//
அது வேறயா ...? அது என்ன மாளவிகாவுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து ....???

இல்ல இன்னொருத்தர் மனைவிக்கு எப்படி ரசிகன்னு சொல்லுறது நம்ம பண்பாடு கலாசாரம்.. இதெல்லாம்...!
//

அடேங்கப்பா கவுண்டமணி ஸ்டைல்லே நீங்க பதில் சொல்லி இருக்கீங்க:)


//
சரி ..சரி.. அது என்ன ஒரு நடிகைய போயி குலதெய்வம்னு ...! இப்படியெல்லாம் உனக்கு யார் சொல்லி கொடுக்குறது ....?

அது வந்து எங்க ..... இல்ல நாங்கல்லாம் அப்படித்தான் சொல்லுவோம்...!
//

அது சரி! சொல்லுவீங்க சொல்லுவீங்க! தங்கமணி நாளைக்கு இதை படிப்பாங்க :)

அப்போ சொல்லுங்க பார்க்கலாம் :)


//
இந்த நமீதா மேட்டர் உங்க வீட்டுகார அம்மணிக்கு தெரியுமா ?

ம்ம் .. தெரியும் தெரியும்...! நமீதா வ என்ன வீட்டுக்கா கூட்டியார போறார்னு நினைச்சுதோ என்னமோ தொலைஞ்சு போகட்டும்னு விட்டுடுச்சி ..!வீட்டுகார அம்மிணி க்கே தெரியும்போது வேற யாருக்கு பயப்புடனும்னு சொல்லி தான் இந்த பதிவு ...!
//

பாவம் தங்கமணி!

நம்பிக்கை! நம்பிக்கை! ஒன்னும் சரி இல்லே தங்கமணி :)

Rajalakshmi Pakkirisamy said...

en ippidi :)

பிரியமுடன்...வசந்த் said...

;))

Rajeswari said...

நல்ல ரசனை...

ஆனா மாளவிகாவிற்கு அப்புறம் என்று சொன்னதுதான் மனதிற்கு கஷ்டமா இருக்கு...

sanjeevi said...

நண்பர் தமது எல்லைகளை விரிவு படுத்திக்கொண்டு செல்வது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள் !!
நமிதா கவர்ச்சி நடிகை என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இப்போது எல்லா நடிகையுமே கவர்ச்சியாக நடிக்கத் தயங்குவதில்லை!!
நமிதாவைப் பொறுத்தவரை அவருடைய இந்த வெற்றிக்கு அவருடைய தொழில் பற்றியும் மக்களின் எதிர்பார்ப்பு பற்றி அவர் முழுமையாக புரிந்து கொண்டு அதன் படி நடப்பதால் கிடைத்தது!! இதை நாமும் பின்பற்றலாமே?

கல்யாணி சுரேஷ் said...

:)

தியாவின் பேனா said...

அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html

" உழவன் " " Uzhavan " said...

என்ஜாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :-)

tamiluthayam said...

நமிதாவை பத்தி எழுதினதுக்கு இத்தனை கமெண்ட்ஸா. தமிழா பாவம் நீ என்ன செய்வ. அரசியல் தல யே நமிதாவை ரசிக்கும் போது.

Patta Patti said...

:-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

இப்ப இது ரொம்பத்தேவை.! :-)

நட்புடன் ஜமால் said...

ஏன் அண்ணா ...

இருந்தாலும் நீங்க நெம்ப விவரமண்ணே

நாங்க கேட்க்க வேண்டிய கேள்விகளை நீங்களே போட்டுட்டீங்க ...

வேற என்ன சொல்ல ...