பழைய நெனப்பு

அமிர்த வர்ஷினி அம்மா ஒரு பதிவு போட்டு இருக்காங்க
பணத்தின் ருசி அப்படின்னு. அத படிச்சோன நமக்கும்
பழைய நெனப்பு வந்துடுச்சிஎன்ன பதிவு போடலாம்ன்னு
சரக்கு இல்லாம முழிச்சிகிட்டு இருந்தப்போ
நல்ல மேட்டர் மாட்டிகிச்சு.

ஆமாங்க! ஊருல வேப்பங்கொட்டை பொறுக்கி
கிலோ ஒரு ரூபாய்க்கு எங்க ஊரு எஸ் எஸ் பி மில்லுல
வித்துபுட்டு, எங்க ஊரு ஐயப்பா தேட்டர்ல
அம்பது காசு டிக்கடுல
(ஆமா! பெஞ்சு அம்பது காசு,பேக் பெஞ்சு எழுவத்தி அஞ்சு காசு,
சேர் ஒரு ரூவா! அப்போ நெனைச்சுக்குவேன்
என்னிக்காவது ஒருநாள் ஒரு ரூவா சேர் டிக்கடுல
உக்காந்து படம் பாக்கணும்)
மூட்ட பூச்சி கடியோட 'தாய் மீது சத்தியம்'படம் பார்த்த
அந்த ''எபெக்ட்'' இப்போ இங்க ''சத்யம்'' லயும் ''அபிராமி'' லயும்
இருக்குற'' DTS '' எபெக்ட்'' டுக்கு இல்லையே ?

என்ன பாத்து எங்கம்மா அடிக்கடி சொல்லுற வார்த்தை!
''நாய்க்கு வேலையும் இல்லையாம் அதுபோல
அலைச்சலும் இல்லையாம்''ஊரெல்லாம் வெயில்ல
சுத்திட்டு பசியோட வீட்டுக்கு வந்து எங்கம்மா போடுற
ஒரு சட்டி பழையது அதுக்கு தொட்டுக்க நார்த்தங்கா ஊறுகா,
உப்புல ஊறவைச்ச பச்ச மாங்கா,கொத்தவரங்கா வத்தல்.
அந்த பழைய சோறு கொடுத்த அந்த நிறைவான சுவை
இப்போ எத தின்னாலும் கிடைக்கலையே?

தீவாளிக்கு பத்துநாள் முன்னாடில இருந்து கிடைக்கிற
காசுல கொஞ்ச,கொஞ்சமா வெடியும் மத்தாப்புமா
வாங்கி சேர்த்து தீவாளிக்கு முதநாள் கண்ணு முழிச்சு
கொளுத்தி கொண்டாடுன அந்த தீவாளி எங்க ?


பொங்கல் நேரத்துல பள்ளிக்கூடம் போகும்போது
எந்த கடைல நல்ல எட்டி எட்டி கரனை இருக்கோ,
அந்த கடைலதான் கரும்பு வாங்கனும்னு
முன்னாடியே பார்த்து வைச்சுக்குவோமே
அந்த பொங்கலும் காணா போச்சே ?


ஆனா! ஆனா!

இப்போ, கொஞ்ச நாளா நான் தொலைச்ச அந்த தீவாளியும்,
பொங்கலும் என் புள்ளைங்க முகத்துல தெரியுதே!
தீவாளிக்கும், பொங்கலுக்கும் புள்ளைங்க பழைய
நெனப்ப கொண்டு வருதே! அப்போ கெடைச்ச
சந்தோசம் இப்போயும் கிடைக்குதே! இது போதுமே !


இப்போ நாம எல்லோரும் கடந்த காலத்த நெனைச்சு
ம்ம்ம்..... அதெல்லாம் ஒருகாலம் அதெல்லாம்
மறுபடி கிடைக்குமா? அப்படின்னு ஒரு ஏக்கமா
நெனைச்சு பாக்குறோமே? ஏன்? வருங்காலத்த
ஒரு பசுமையான காலமா உருவாக்க முயற்சி
பண்ணினா என்ன?

என் பசுமையான எதிர்காலத்துக்கு நான் ஒரு கனவு
வைச்சு இருக்கேன்.ஒரு நூறு தென்ன மரம் இருக்குற
ஒரு தோப்பு, அதுல சின்னதா ஒரு குளம் அதுல மீன்
வளர்த்து தூண்டி போட்டு மீன் புடிக்க.
அப்புறம் இறகு பந்து ஆட ஒரு களம்.
சின்னதா ஒரு தோட்டம் அதுல நெறைய
செடி வளர்க்கணும் மிளகாய் செடி உட்பட.
நடுவுல பம்பு செட்டு இருவது அடி உயரத்துல
இருந்து தண்ணி ஊத்துரதுபோல அருவிபோல
அமைச்சுக்கனும். நேரம் கிடைக்கிறப்போ
அங்க உக்காந்து தண்ணி அடிக்கணும் .
(ராம லட்சுமி அம்மா இந்த வரிய மட்டும் படிக்காதிங்க )
>

18 comments:

பலசரக்கு said...

பழைய சோறு பத்தி படிச்துலருந்து நாக்கெல்லாம் ஊருது.. ம்ம்... அது அந்த காலம். என் பொண்டாட்டி ஃப்ரிட்ஜெல வச்சி அடித்த நாள் சூடு பண்ணி புது சோரா ஆக்கிடரா.. சொன்னா கேக்க மாட்டேங்கறா..

அந்த கடைசி பத்தி மாதிரி மட்டும் நீங்க ரெடி பண்ணிடீங்கன்னா என்னையும் சேர்த்துகோங்க ப்ளீஸ்.. ஹி ஹி..

பதிவு ரொம்ப நல்லா இருந்தது..

நட்புடன் ஜமால் said...

\\சரக்கு இல்லாம முழிச்சிகிட்டு இருந்தப்போ
நல்ல மேட்டர் மாட்டிகிச்சு.\\

என்ன அண்ணேன் இது ...

நட்புடன் ஜமால் said...

\\ஒரு சட்டி பழையது அதுக்கு தொட்டுக்க நார்த்தங்கா ஊறுகா,
உப்புல ஊறவைச்ச பச்ச மாங்கா\\

அண்ணேன் நாக்கு ஊறுது ...

அமுதா said...

"காணி நிலம் வேண்டுமா?". நல்லா இருந்ததுங்க பழைய நினைப்பு. பதிவுல எல்லாம் அருமை (கடைசி வரி தவிர...) ஏன் தென்னை மரத்தில இருந்து இளநீர் குடியுங்களேன் :-))

நட்புடன் ஜமால் said...

\\அப்புறம் இறகு பந்து ஆட ஒரு களம். \\

அண்ணேன் எனக்கும் ரொம்ப பிடிக்கும்

விளையாடவும் தெரியும்.

ஒரு முறை வாய்ப்பு கிடைக்குதான்னு பார்ப்போம்.

நட்புடன் ஜமால் said...

\\பதிவுல எல்லாம் அருமை (கடைசி வரி தவிர...) ஏன் தென்னை மரத்தில இருந்து இளநீர் குடியுங்களேன் :-))\\

கண்ணா பின்னாவென்று ரிப்பீட்ட்டேய்ய்ய்ய்ய்

நட்புடன் ஜமால் said...

என்னதான் சொன்னாலும் இப்ப உள்ள ஜெனரேஷன் நாம அனுபவித்தது போல் அனுபவிப்பதில்லை.

கிட்டி புல்லு, பளிங்கி, கோ.கோ., பே.பே, இன்னும் எத்தனை எத்தனையோ,

எல்லாம் இனைய வழி விளையாட்டு தான் இப்போ ...

சிம்பா said...

நினைவுகள் அருமை.. எந்த காலத்திலும் டுரிங் டாக்கீஸ் போய் படம் பார்தத மறக்க முடியாது..

அதே போல் கனவுகள் மிகவும் அருமை.. தோட்டம் நீச்சல் குளம், விளையாட்டு மைதானம் அதோட சரக்கு.. சைடு டிஷ்க்கு நம்ம அக்கா யோசனை சொல்லிட்டு போய்ட்டாங்க... இளநீர் என்று...

ஒரு மனுஷனுக்கு இத விட வேற என்ன சுகம் வேணும்...

வால்பையன் said...

//நேரம் கிடைக்கிறப்போ
அங்க உக்காந்து தண்ணி அடிக்கணும் .//

கூடவே வால்பையனையும் சேர்த்துகனும்னு எழுதுறதுக்கு என்னாவாம்

குடுகுடுப்பை said...

நேரம் கிடைக்கிறப்போ
அங்க உக்காந்து தண்ணி அடிக்கணும் .//

நல்லா இருங்கண்ணே.

வித்யா said...

பதிவு ரொம்ப நல்லா இருந்தது.
\\ஒரு நூறு தென்ன மரம் இருக்குற
ஒரு தோப்பு\\
அம்பூட்டு காசாப்பு வைச்சீருக்கீக. அதெல்லாம் அம்பானியால தான் முடியும்ங்கறது என் நினெப்பு:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

"காணி நிலம் வேண்டுமா?". நல்லா இருந்ததுங்க பழைய நினைப்பு. பதிவுல எல்லாம் அருமை (கடைசி வரி தவிர...) ஏன் தென்னை மரத்தில இருந்து இளநீர் குடியுங்களேன் :-))

ரிப்பீட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஎ

அமிர்தவர்ஷினி அம்மா said...

என் பசுமையான எதிர்காலத்துக்கு நான் ஒரு கனவு
வைச்சு இருக்கேன்.ஒரு நூறு தென்ன மரம் இருக்குற
ஒரு தோப்பு, அதுல சின்னதா ஒரு குளம் அதுல மீன்
வளர்த்து தூண்டி போட்டு மீன் புடிக்க.
அப்புறம் இறகு பந்து ஆட ஒரு களம்.
சின்னதா ஒரு தோட்டம் அதுல நெறைய
செடி வளர்க்கணும் மிளகாய் செடி உட்பட.
நேரம் கிடைக்கிறப்போ
அங்க உக்காந்து தண்ணி அடிக்கணும் //

எந்த மடம் போனாலும் சந்த மடம் தான் அப்படின்னு கங்கணமோ..

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆமாங்க! ஊருல வேப்பங்கொட்டை பொறுக்கி
கிலோ ஒரு ரூபாய்க்கு எங்க ஊரு எஸ் எஸ் பி மில்லுல
வித்துபுட்டு, எங்க ஊரு ஐயப்பா தேட்டர்ல
அம்பது காசு டிக்கடுல
(ஆமா! பெஞ்சு அம்பது காசு,பேக் பெஞ்சு எழுவத்தி அஞ்சு காசு,
சேர் ஒரு ரூவா! அப்போ நெனைச்சுக்குவேன்
என்னிக்காவது ஒருநாள் ஒரு ரூவா சேர் டிக்கடுல
உக்காந்து படம் பாக்கணும்)

கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது இதை ஜீரணிக்க...

அமிர்தவர்ஷினி அம்மா said...

சரக்கு இல்லாம முழிச்சிகிட்டு இருந்தப்போ
நல்ல மேட்டர் மாட்டிகிச்சு.//

சரக்கு - ??????????????

ராமலக்ஷ்மி said...

முதலில் கண்ணில பட்டது அந்தக் கடைசி வரிதான்:))!

சரியாப் போச்சு. பம்பு செட்டு வரை ஆகான்னு போன பதிவில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா? ஆக ‘த்ரில், சந்தோஷம்’ எல்லாம் அது இருந்தால்தானா:)? போட்டுட வேண்டியதுதான் எதிர் பதிவு:))!

புதியவன் said...

//பழைய நெனப்பு"//

ஏன் ஜீவன் அண்ணா
தலைப்ப ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு
வச்சிருக்கலாமோ...?

//இப்போ நாம எல்லோரும் கடந்த காலத்த நெனைச்சு
ம்ம்ம்..... அதெல்லாம் ஒருகாலம் அதெல்லாம்
மறுபடி கிடைக்குமா? அப்படின்னு ஒரு ஏக்கமா
நெனைச்சு பாக்குறோமே? ஏன்? வருங்காலத்த
ஒரு பசுமையான காலமா உருவாக்க முயற்சி
பண்ணினா என்ன?//

முயற்சி பண்ணிடலாம் அண்ணா...

ஜோதிபாரதி said...

அருமை!
அப்படியே எனது அனுபவங்களும் கூட.