''பட்டாம் பூச்சி விருது''


எனக்கு இந்த பட்டாம்பூச்சி விருது கொடுத்த
அமிர்த வர்ஷினி அம்மா வுக்கு
ரொம்ப நன்றி ! எனக்கு முதன் முதலா பின்னுட்டம்
போட்டது அவங்கதான்.அரைகுறையா கணினி
அறிவை வைச்சுகிட்டு நாமளும் ஏதும் எழுதலாமேன்னு
ஒருபதிவ போட்டுட்டு யாராவது பின்னுட்டம்
போடமாட்டாங்களா?அப்படின்னு ஏக்கமா பார்த்துகிட்டு
இருந்தப்போ அவங்கதான் முதல்ல பின்னுட்டம்
போட்டு உற்சாக படுத்தினது.அப்புறம் பிலாக்
சம்பந்தமா சில விசயங்களுக்கு உதவி பண்ணினது
புழுதிக்காடு சிம்பா அவருக்கும் நன்றி சொல்லணும்.

அப்புறம் இந்த விருதின் ரூல்ஸ் படி ஏழு பேருக்கு
கொடுக்கணுமாம் நான் கொடுக்க நெனைக்கிற சிலர்
முன்னாடியே வாங்கிட்டாங்க! ஏற்கனவே
வாங்கினவங்களுக்கு மறுபடியும் கொடுக்க
கூடாதுன்னு ரூல்ஸ் இல்ல அதுனால நான்
அஞ்சு பேருக்கு கொடுக்குறேன்

என் வானம்; அமுதா ;;; இவங்க கவிதை வரிகள்
நினைத்து நினைத்து ரசிக்க வைக்கும்.

///அதிகாலை மலர்ந்த மலரில்
உறங்கும் பனித்துளி போல்
கனவுகளின் இனிய தாக்கத்தில்
புன்னகை உன் முகத்தில் உறங்குகிறது

புன்னகை கலைக்காது உன்
உறக்கத்தை கலைக்க யோசிக்கிறேன்...///

///இறைக்கப் படாத பொருட்கள்
கிழிக்கப் படாத காகிதங்கள்
சிந்தப் படாத வண்ணங்கள்
என
களையிழந்து உள்ளது வீடு///


///மெளனத்தின் ஓசை
செவியில் அறைகிறது///

இதெல்லாம் இவங்க கவிதை வரிகளில் சில
சமீபத்தில இவங்க ''திண்ணை'' கவிதை ரொம்ப டாப்!!

ஆகாய நதி ;;இவங்க பதிவுகளில் ''வெறியர்களின்
வெறித்தனத்திற்கு முற்றுப்புள்ளி எங்கே?''
என்ற இந்த பதிவில்


//அக்காலத்தில் வீரத்தமிழ்த்தாய் ஒருத்தி தன்
இரண்டு வயது மகன் கையில் வாளினைக்
கொடுத்துப் போர்முனைக்கு அனுப்பி
வைத்தாளாம். அத்தகைய தாய்மார்கள்
வாழ்ந்த இந்நாட்டிலே தான் நாமும் வாழ்கிறோம்.
நமக்கும் அதில் பாதி எண்ணமாவது வர வேண்டும்.

குழந்தை பருவத்திலிருந்தே நம் பிள்ளைகளுக்கு
நாட்டுப்பற்றினையும் வீரத்தையும் சேர்த்து
ஊட்டிவிட வேண்டும். நம் பிள்ளைகள் இராணுவத்தை
எதிர்காலமாக தேர்ந்தெடுத்தால் பாசத்தில் தடுக்காமல்
ஊக்கப்படுத்த வேண்டும்.//

என்ற இந்த வார்த்தைகள் மிக சிறப்பானவை.


புழுதிக்காடு சிம்பா; இவரது எழுத்தில்,
அவலங்களை சுட்டி காட்டுவதில் ''வாள் வீச்சு''
இருக்கும் இவர் நெறைய எழுத வேண்டும்

ரம்யா; இப்போது வலை பதிவுகளில் நகைச்சுவையில்
கலக்குவது இவர்தான் கலக்கல் பதிவர்!. நடிகர் வடிவேலுக்கு
இவர் ஸ்கிரிப்ட் எழுதலாம். இவரை வடிவேலுவுக்கு
தெரியாமல் இருப்பது வடிவேலுவின் துரதிஷ்டம்.

அதிரை ஜமால் ; பறந்து பறந்து பின்னுட்டம் போடுபவர்
பட்டாம் பூச்சி போல அதற்க்காக இவருக்கு இந்த விருது.
>

20 comments:

வித்யா said...

வாழ்த்துக்கள்:)

வால்பையன் said...

வாழ்த்துக்கள் ஜீவன்!

உங்களிடமிருந்து விருதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

சிம்பா said...

வணக்கம் ஜீவன்...

இப்பரிசு உங்களுக்கு இதை விட விரைவாக கிடைத்திருக்க வேண்டும்.. இன்னும் சொல்ல போனால் நினைவலைகளை உங்களை விட சிறப்பாக எடுத்து வைக்க ஆள் இல்லை.. மிளகாய் செடியை இன்று வரை மறக்க முடியவில்லை..

ஒரு எழுத்தாளன் எனப்படுபவன் எந்த மாதிரியான சூழ்நிலையையும் எழுத வேண்டும். எனக்கு அவ்வாறு எதுவும் தெரியாயாது. சுற்றி நடப்பவற்றை சுட்டி காடுகிறேன். அவளவுதான். எனக்கு இந்த பரிசு அதிகம். இருந்தாலும் இதனை உங்கள் அன்பு பரிசாக எடுத்துகொள்கிறேன்.

ஆனா இன்னொருவருக்கு கொடுக்கும் அளவு எனக்கு capacity இருக்கா...

வைகரைதென்றல் said...

வாழ்த்துக்கள் ஜீவன்!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள் அண்ணேன்

அப்புறம் நன்றிகள்.

தங்களை போன்றோரின் ஊக்கம் தரும் வார்த்தைகள் என்னை போன்றவர்களுக்கு நல்லதொரு ஊட்டம்

PoornimaSaran said...

விருது கொடுத்தவருக்கும், அதை வாங்கியவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் :)

PoornimaSaran said...

விருது கொடுத்தவருக்கும், அதை வாங்கியவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் :)

குடுகுடுப்பை said...

விருது கொடுத்தவருக்கும், அதை வாங்கியவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

தங்கராசா ஜீவராஜ் said...

வாழ்த்துக்கள் ஜீவன்!

புதியவன் said...

வாழ்த்துக்கள் ஜீவன் அண்ணா
உங்களுக்கும் உங்களிடமிருந்து
விருதை பெற்றவர்களுக்கும்...

அமுதா said...

/*ஏற்கனவே
வாங்கினவங்களுக்கு மறுபடியும் கொடுக்க
கூடாதுன்னு ரூல்ஸ் இல்ல அதுனால நான்
அஞ்சு பேருக்கு கொடுக்குறேன் */
சரிதான்.

ரொம்ப நன்றி ஜீவன் உங்கள் பாராட்டுகளுக்கும் விருதுக்கும். உங்கள் பாராட்டு என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.

விருது பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

சந்தனமுல்லை said...

உழவர் திருநாள் வாழ்த்துகள்!

thevanmayam said...

காலை வணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக!
தேவா..

RAMYA said...

//
இப்போது வலை பதிவுகளில் நகைச்சுவையில்
கலக்குவது இவர்தான் கலக்கல் பதிவர்!. நடிகர் வடிவேலுக்கு
இவர் ஸ்கிரிப்ட் எழுதலாம். இவரை வடிவேலுவுக்கு
தெரியாமல் இருப்பது வடிவேலுவின் துரதிஷ்டம்
//

மிக்க நன்றி ஜீவன் இந்த விருது பெற்ற நாளில் என்னை நினைவு கூர்ந்தமைக்கு

எனக்கு மறுபடியும் பட்டாம்பூச்சி
விருது அளித்துள்ளீர்கள்.

மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
மிக்க நன்றி மிக்க நன்றி!!!

RAMYA said...

விருது வாங்கிய உங்களுக்கு
எனது வாழ்த்துக்கள்!!!

உங்களிடம் இருந்து விருது
வாங்கியவர்களுக்கும்
எனது வாழ்த்துக்கள் !!!

thevanmayam said...

என் ப்ளாகில் அறிவியல்
பதிவு உங்கள் கருத்துரைக்காக
காத்திருக்கிறது..
தேவா..

VASAVAN said...

உங்களுக்கும் அனைவருக்கும் இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்.

MayVee said...

வாழ்த்துக்கள் தோழரே.....

அன்புமணி said...

விருது பெற்றவர்களுக்கும், முன்பே பெற்றவர்களுக்கு மீண்டும் வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் (அதாவது அதரவளிக்கும்) உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள்!