மாற்றாந்தாய்

நம் உறவு முறைகளில் மிகவும் மதிக்க பட வேண்டிய,உயர்வாக போற்றப்பட வேண்டிய உறவு முறை எது என கேட்டால் மாற்றாந்தாய்
அதாவது தந்தையின் இரண்டாவது மனைவி என்று தான் சொல்ல வேண்டும் .
சரி! எந்த சூழ்நிலையில் ஒரு பெண் இரண்டாம் தாரமாக வாழ்க்கைபடுகிறாள்.சிற்சில இடங்களை தவிர பெரும்பாலும் வறுமையும், ஏழ்மையும் தான் அவ்வாறு வாழ்க்கைப்பட வைக்கிறது.

ஒருவனை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்ளும் ஒரு இளம் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்? அவளும் எல்லா பெண்களை போல கனவு கண்டுதானே வளர்ந்திருப்பாள்? ஆனால் தன் பெற்றோரின் வறுமைக்காக ஒரு ''செகண்ட் ஹேன்ட்'' கணவனை அடையும் போது அவள் எந்த அளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பாள்?

தனது ஆசைகளையும்,கனவுகளையும் தியாகம் செய்துவிட்டு ஏற்கனவே திருமணமாகி எல்லா இன்பங்களையும் அடைந்து அனுபவித்த ஒருவனை திருமணம் செய்ய எந்த அளவு தன் மனதை தயார் செய்ய வேண்டும் ?

ஒரு ஆண் ஒரு விதவையையோ, விவாகரத்து,ஆனவரையோ திருமணம் செய்தால் அவன் மிக உயர்வாக மதிக்க படுகிறான்.
ஆனால்
?
இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு வருகின்ற பெண்? வரும்போதே ஒரு வில்லியைப்போல பார்க்க படுகிறாள்.
அதுவும் முதல் தாரத்தின் பிள்ளைகளை கவனிக்கும் போது சுற்றுபுறம் அவளை மிகவும் கொடுமைபடுத்துகிறது!

'''ஆயிரம்தான் இருந்தாலும் பெற்றதாய் போல வருமா?'''

இது
போன்ற கேள்விகள் அவளை மிகவும் பாதிப்படைய செய்கிறது!

முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்! இப்படி இரண்டாம் தாரமாக வருபவள் ஏற்கனவே மிகுந்த மன உளைச்சலோடும்,நிறைய ஏமாற்றங்களோடும் இருப்பாள்.அதனால் அவளின் கோபங்களையும்,
வெறுப்புகளையும் மற்றவர்கள்தான் பொறுத்து கொள்ள வேண்டும்.(இந்த வாழ்க்கையில் அவள் நிலை பெறும் வரை)
எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி தனது கணவரின் முதல் மனைவியின் பிள்ளைக்கு ஒரு ''கிட்னியையே'' தானமாக கொடுத்து இருக்கின்றார்.
கிட்னியை பெற்றுக்கொண்ட அந்த நபருக்கு இரண்டு உடன் பிறந்த சகோதரிகள் அவர்கள் கிட்னி கொடுக்க தயாராக இல்லை.
ஆனால் ஒரு மாற்றாந்தாய் கிட்னி வழங்கி இருக்கிறார். அவரும் திருமணமான புதிதில் கணவர் வீட்டாரால் கடும் இன்னலுக்கு ஆளாக்க பட்டவர்தான்.
இது போன்ற மாற்றாந்தாய் பெண்களை அவரின் சுற்றுபுறம் போற்றவேண்டும்,அவளுக்கு அமைதியை கொடுக்காவிட்டாலும்,அவள் நிம்மதியை கெடுக்காமல் இருக்கவேண்டும்.

''பெற்ற தாயை போலவே மாற்றாந்தாய்மார்களும்
போற்றப்பட வேண்டும்''


..............

>

13 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

வித்தியாசமான பார்வை. உண்மையும் கூட.

நட்புடன் ஜமால் said...

தாய் என்றும் தாய் தான் - 2ஆவதாக இருந்தாலும் சரிதான்

நீங்கள் சொல்லியிருப்பது போல் அவங்களை அனுசரிச்சி மற்றவங்க நடத்தனும்

Chitra said...

nice post

தோழி said...

வித்தியாசமான கோணத்தில் அணுகியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

டுபாக்கூர் பதிவர் said...

பத்திகளிடையே இருக்கும் இடைவெளி வாசிப்பவரின் ஸ்வாரச்யத்தை குறைத்துவிடும். அதை கவனியுங்கள்.

வாழ்த்துக்கள்!

அப்துல்மாலிக் said...

எங்கேயும் புரிதல் அவசியம்

எம்.எம்.அப்துல்லா said...

well said.

ஜோதிஜி said...

அற்புதம்.

பத்தி மட்டும் நண்பர் சொன்னது போல் கவனிக்க.

Anonymous said...

புதுசா பார்த்து இருக்கீங்க இந்த உறவை ......மாற்றந்தாய் என்றால் இப்படி தான் என்ற நோக்கு நம்மில் பதிந்தும் விட்டது ...மற்றும் பெரும் பான்மையானோர் முதல் தாரத்தின் பிள்ளைகளை தங்கள் பிள்ளைகள் போல் பார்க்க தவறுகிறார்கள் என்று கருத்தும் உண்மையே ஆனால் நீங்க இதில் அந்த பெண்ணின் மனதை அழகா பரிசிலித்து எழுதி இருக்கீங்க நெறைய ஏற்று கொள்ள கூடிய விஷயங்களை உதாரணமா சொல்லியும் இருக்கீங்க...நானும் இதை முதல் முறைய யோசிக்க ஆரம்பிச்சி இருக்கேன் ..புதுசா பார்த்து இருக்கீங்க இந்த உறவை ......மாற்றந்தாய் என்றால் இப்படி தான் என்ற நோக்கு நம்மில் பதிந்தும் விட்டது ...மற்றும் பெரும் பான்மையானோர் முதல் தாரத்தின் பிள்ளைகளை தங்கள் பிள்ளைகள் போல் பார்க்க தவறுகிறார்கள் என்று கருத்தும் உண்மையே ஆனால் நீங்க இதில் அந்த பெண்ணின் மனதை அழகா பரிசிலித்து எழுதி இருக்கீங்க நெறைய ஏற்று கொள்ள கூடிய விஷயங்களை உதாரணமா சொல்லியும் இருக்கீங்க...நானும் இதை முதல் முறைய யோசிக்க ஆரம்பிச்சி இருக்கேன் ..

க.பாலாசி said...

சரிதானுங்க... எங்கள் வீட்டு அருகாமையில் ஒருவரின் வலிகளை உணர்ந்திருக்கிறேன்.

ஹேமா said...

மாற்றாந்தாய் என்பவரை மேலோட்டமாக இல்லாமல் ஆழமாகச் சிந்தித்தால் இத்தனை வலிகளும் இருக்குமோ !

sakthi said...

தனது ஆசைகளையும்,கனவுகளையும் தியாகம் செய்துவிட்டு ஏற்கனவே திருமணமாகி எல்லா இன்பங்களையும் அடைந்து அனுபவித்த ஒருவனை திருமணம் செய்ய எந்த அளவு தன் மனதை தயார் செய்ய வேண்டும் ?


சத்தியமான வார்த்தை அமுதன் சார்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

A good post .