ஆவுடையார் கோயிலும், அசர வைக்கும் சிற்பங்களும்

பல பேர் இந்த கோயில் பத்தி சொல்லி இருக்காங்க..! தஞ்சை மாவட்டத்துல பல பிரம்மாண்ட கோயில் எல்லாம் பார்ததால அதுபோல இதுவும் ஒன்னு அப்படின்னு நினைசேன் ..! ஆனா ..? அப்படி இல்ல ..! இந்த கோயில்ல இருக்குற ஒவ்வொரு தூணும் ஒரு கதை சொல்லுது ..! சின்ன சின்ன இடைவெளில கூட சிற்பங்கள் விளையாடுது ..!

மாணிக்க வாசகர்
மாணிக்க வாசகர்தான் இந்த கோயிலின் ஹீரோ...! அவர்கட்டின கோயில்தான் இது. எல்லா கோயில்லையும் முகப்பில் விநாயகரை வழிபட்ட பிறகுதான் கோயில் உள்ள போவோம். ஆனா..! இந்த கோயில் ல முகப்பில் வினாயகர் இல்ல மாணிக்க வாசகர் தான் இருக்கார் இவரை வழிபட்டுத்தான் உள்ள போகணும் .இந்த கோயில் ல திருவிழா மாணிக்க வாசகருக்குதான் நடக்குதாம் தேர்ல பவனி வருவதும் மாணிக்க வாசகர்தான் .
மேலும் இந்த கோயில் பற்றிய முழு விவரங்களுக்கு இங்கே கிளிக்குங்க


முகப்பு

கோபுரம்
அக்னி தீர்த்தம்

உள்ளே இருக்கும் வெளி பிரகாரம்


உள்ளே ஒரு இடம் மனசுல பி .சி ஸ்ரீராம் னு நெனைப்புல எடுத்தது ..!


இந்த குதிரை சிற்பங்கள் ஒரே கல்லால் ஆனவை இதுபோல அங்க நெறைய சிற்பங்கள் இருக்கு ..!


ஒரு பிளவுபோல செதுக்க பட்ட ஒரே கல்லால் ஆன தூண் ..!இந்த தூணை தட்டினால் டங்குன்னு ஒரு இரும்பு குழாயை தட்டினதுபோல சத்தம் கேக்குது உள்ளே இந்த தூண் கூடா இருக்கும் போல ..!


இந்த மேற்கூரையை பாருங்க கல்லுலையே வளையம் வளையமா செதுக்கி சங்கிலி போல தொங்குது ..!ஒவ்வொரு தூணிலும் சிற்பங்கள்
ஆத்மநாதர் மாணிக்க வாசகருக்கு உபதேசம் செய்த காட்சி


ஸ்தல விருட்சம் குருந்த மரம்

இந்த கோயிலுக்கு செல்வோரின் முக்கிய கவனத்திற்கு..

இங்கே இருக்கும் சிலைகளுக்கும் சிற்பங்களுக்கும் நிறைய விளக்கங்கள் உள்ளன அதையெல்லாம் யாரேனும் சொன்னால்தான் தெரியும் விளக்கங்களுடன் சுற்றிகாட்ட அங்கே ஆட்கள் இருக்கிறார்கள் அதனால் இங்கே செல்பவர்கள் அப்படி ஒரு நபரை அமர்த்தி கொள்வது நல்லது..!


இது எங்க வீட்டு சிற்பங்கள்


பின் குறிப்பு;-
நான் கோயில் உள்ளே நுழைந்தவுடன் பார்த்த போர்டு இதுதான்பொதுவாக இந்த விதிமுறைகளை மீறுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது இருந்தாலும் இங்கே போட்டோ எடுக்கலாமா ன்னு அங்க வேலை செய்யும் ஒருவரை கேட்டேன் அவரும் பார்த்து எடுத்துகோங்கன்னு சொன்னார் .
அதோட இந்த கோயில கட்டின மாணிக்க வாசகர் மட்டும் என்ன ..? ரூல்ஸ் படியா பண்ணினார் ..? மதுரை மன்னர் குதிரை வாங்க கொடுத்த காசுல இறைவன் மேல உள்ள ஈர்ப்பால வந்த கடமையை மறந்துட்டு தானே கோயில கட்டினார் ..? அதே போல ஒரு ஆர்வத்துலத்தான் நானும் போட்டோ புடிச்சு பதிவுல போட்டுட்டேன் ..!

>

26 comments:

சத்ரியன் said...

தமிழமுதன்,

பதிவும், பகிர்வும் பலருக்கு உபயோகமுடையது.

ஆனா,

அந்த போட்டோ எடுத்ததுக்கு ஒரு விளக்கம் குடுத்திருக்கீங்க பாருங்க. மாணிக்கவாசகரையே வாரி விட்டுட்டீங்க.

தோழி said...

நல்ல விளக்கங்களும் படங்களும்... நன்றி...

உங்க வீட்டு சிற்பங்களும் அழகா இருக்கே...

உங்க மனைவி ஜாடையோ...

RAMYA said...

படங்கள் அனைத்தும் அருமை. படம் எடுத்த ஜீவனுக்கு வாழ்த்துக்கள்!

விளக்கமும் அருமை உங்களுக்குன்னே எப்படி தோணுமோ போங்க ஜீவன்:)

மிகவும் நேர்த்தியாக பிரமிக்கத்தக்க வகையில் சிற்பங்கள் அமைந்துள்ளது.

உங்க வீட்டுச் சிற்பங்களும் அழகோ அழகு கொள்ளை அழகு:)

மன்னார்குடி said...

அருமை.

thiru said...

For such great sculptural marvels visit
http://www.poetryinstone.in

Its available in Tamil also

Mrs.Menagasathia said...

உங்க வீட்டு சிற்பங்களும்,போட்டோவும் மிக அழகு...

நட்புடன் ஜமால் said...

உங்கள் வீட்டு சிரிக்கும் சிற்பங்கள் அருமை.

பின்குறிப்பு - ஹி ஹி ஹி

dheva said...

திருவாதவூரார்......பாண்டிய மன்னரின் அமைச்சர்....குதிரை வாங்க வந்து இறைவனின் கட்டளைக்கு இணங்க....இந்த கோவிலை கட்டினார். சிவலிங்கத்தின் ஆவுடை கட்டி விட்டு லிங்கம் பிரதிஸ்டை செய்வதற்கு முன் மன்னர் சிறைச்சேதம் செய்து விட்டார் நமது திருவாதவூராரை (மாணிக்க வாசகர்). அதனால்தான் இன்றளவும் லிங்கம் இல்லாமல் ஆவுடை மட்டும் இங்கு இருக்கும். அதனால்தான் ஆவுடையார் கோவில்.

சிவபுராணத்தை இங்கே தான் சிவபெருமனே வந்து எழுதி மாணிக்க வாசகருக்கு கொடுத்திருக்கிறார்....


" சிவன் அவன் என் சிந்தையுள் நின்றதனாலே....
அவன் தாள் வணங்கி அவனருளாலே...
சிந்தை மகிழ சிவ புராணம் தன்னை...
என் முந்தை வினை முழுதும் ஓய
உரைப்பன் யான் "

என்று கூறியிருப்பார்......! மேலும் அரேபியவிலி இருந்து நமது தொண்டி துறைமுகத்திற்கு குதிரைகள் எல்லாம் வந்திருக்கின்றன....அதன் பொருட்டு சென்ற வழியில் தான்....இந்தக் கோவில்! இது சத்தியமான உண்மை....!

அழகான புகைப்படங்கள்.... நல்ல செய்தி....வாழ்த்துக்கள் அமுதன்! நம்ம வீட்டு தேவதைகளும் அழகு!

ஹேமா said...

ஜீவன்.கோவில் பக்தி என்பதைவிட நான் கோயில்களுக்குப் போனால் ரசிப்பது சிற்பங்கள்தான்.ஒரே கல்லில் குடைந்து சிற்பமாகுவதென்பது சுலபமல்ல.தொழில் நுட்பங்கள் இல்லாத அன்றைய காலகட்டங்களிலேயே இப்படி இன்றைய ஓவியங்கள் சிற்பகளை விட அழகாக அதிசயமாக உருவாக்கிய பிரமாக்கள் அவர்கள்.

நீங்கள் தந்த விளக்கங்களும்
அருமை.நகைச்சுவையோடு
முடித்தது மிக மிக ரசிப்பு.

உங்கள் சிற்பங்களின் கள்ளமில்லாச் சிரிப்பும் அழகு ஜீவன்.

bala said...

அழகு நிறைந்த பதிவு அழகான {உங்க வீட்டு }சிற்பங்கள் .....என்ன இப்பல்லாம் கோவில் பக்கமா பயணம் போகறீங்க

ச.சங்கர் said...

நல்ல பதிவும் தகவல்களும்..நன்றி

அழகு மகள்களுக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்.

மாதேவி said...

கோயிலும் அழகு சிற்பங்களும் அழகு.

உங்கவீட்டுஅழகு + அழகு :)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

1973 லேர்ந்து ஒரே போர்டா? நல்லா பாதுகாக்கறாங்க போல இருக்கே!

--

படங்கள் மிகவும் அருமை! பகிர்வுக்கு நன்றிங்க!

கக்கு - மாணிக்கம் said...

படங்கள் பிரமாதமாக வந்துள்ளன.
நண்பர் dheva வின் விளக்கமும் அருமை.
உங்கள் வீட்டு சிற்பங்களும் மிக அழகுதான்.
நல்ல பகிர்வு

P said...

நண்பருக்கு வணக்கம்.
திருநாவுக்கரசு‌ சுவாமிகள் தனது "திருஅங்கமாலை" என்னும் பதிகத்தில் மனித உறுப்புகளான தலை, கால்கள், கைகள், கண்கள், நா, மூக்கு, நெஞ்சு போன்றவைகளின் பணிகள் பற்றி பாடியுள்ளார்.
அதில் கால்களின் பணி பற்றி சொல்லும் போது

"கால்க ளாற்பயனென் ‍‍‍ கறைக் கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூலாக் கால்க ளாற்பயனென்"

நாம் பிறந்த இந்த பிறவியின் பயன், எம் பெருமானை நினைத்தலும், சிவக் கோயில்களில் சென்று வழிபடுதலும், பிறவியறுக்கும் பெருமானின் திருவடிகளை பற்றுதலுமே ஆகும்.
இதன் வழியே நீங்கள் "ஆவுடையார் கோயில்" கோயில் சென்று வழிபட்டதோடு நில்லாமல் அங்குள்ள சிற்பங்களை பற்றியும், கோயில் பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும் வெளியிட்டமைக்கு பாராட்டுகள் நன்றிகள்...
ஆனால் நீங்கள் புகைப்படம் எடுத்த செய்தி பற்றி சொல்லும் போது,

"அதோட இந்த கோயில கட்டின மாணிக்க வாசகர் மட்டும் என்ன ..? ரூல்ஸ் படியா பண்ணினார் ..? மதுரை மன்னர் குதிரை வாங்க கொடுத்த காசுல இறைவன் மேல உள்ள ஈர்ப்பால வந்த கடமையை மறந்துட்டு தானே கோயில கட்டினார் ..?"

சிவமாகவே வாழ்ந்த மாணிக்கவாசகர் நிலை வேறு; நம் நிலை வேறு; திருவாசகம் பற்றி சொல்ல வந்த நம் முன்னோர் "தொட்டாரை சிவமாக்கும்
திருவாசகம்" என்றே பறை கொட்டினர். கைகாளால் எடுத்து படிப்போரையே ஒரு நூல் சிவமாக்கும் என்றால், அதை உள்ளம் கசிந்து, கசிந்து பாடிய மாணிக்கவாசகரின் புகழை என்னவென்று சொல்வது. . .
சொல்வற்கு நிறைய உள்ளது அவையடக்கத்தோடு முடிக்கிறேன்.

எனவே மாணிக்கவாசகர் விதிமுறைகள் படி நடந்தாரா? போன்ற ஆய்வுகள் வேண்டாமே...

தாரணி பிரியா said...

இது போல போட்டோவுல எங்களை போல இருக்கிறவங்க பாக்க முடியும் அதுக்காக நன்றிகள்.

உங்க வீட்டு சிற்பங்கள் ரொம்ப அழகு அண்ணா :)

தமிழ் அமுதன் (ஜீவன்) said...

//"அதோட இந்த கோயில கட்டின மாணிக்க வாசகர் மட்டும் என்ன ..? ரூல்ஸ் படியா பண்ணினார் ..? மதுரை மன்னர் குதிரை வாங்க கொடுத்த காசுல இறைவன் மேல உள்ள ஈர்ப்பால வந்த கடமையை மறந்துட்டு தானே கோயில கட்டினார் ..?"

சிவமாகவே வாழ்ந்த மாணிக்கவாசகர் நிலை வேறு; நம் நிலை வேறு; திருவாசகம் பற்றி சொல்ல வந்த நம் முன்னோர் "தொட்டாரை சிவமாக்கும்
திருவாசகம்" என்றே பறை கொட்டினர். கைகாளால் எடுத்து படிப்போரையே ஒரு நூல் சிவமாக்கும் என்றால், அதை உள்ளம் கசிந்து, கசிந்து பாடிய மாணிக்கவாசகரின் புகழை என்னவென்று சொல்வது. . .
சொல்வற்கு நிறைய உள்ளது அவையடக்கத்தோடு முடிக்கிறேன்.

எனவே மாணிக்கவாசகர் விதிமுறைகள் படி நடந்தாரா? போன்ற ஆய்வுகள் வேண்டாமே...///வணக்கம்..! நண்பரே.. நான் சொன்ன அந்த வாசகங்கள் எந்த ஒரு குதர்க சிந்தனையும் இல்லாமல் வெகு சாதாரணமாக வெளிப்படை யாக சொல்ல பட்டது தயவு செய்து அதை பெரிது படுத்த வேண்டாம் ..! உங்கள் கருத்தை மதிக்கின்றேன் வருகை க்கு மிக்க நன்றி..!

P said...

நண்பருக்கு வணக்கம்.

தங்களது குறிப்பு கிடைக்கப் பெற்றேன்.

"நம்மையும் ஓர் பொருளாக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த‌
அம்மை எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே..."

என்ற திருவாசக சொற்றொடர் வழியே நன்றி கூறுகிறேன். எவ்வளவோ பணிகளுக்கு இடையிலும் எனது கருத்துரைக்கு பதில் அளித்தமைக்கு நன்றிகள்.

தங்கள் பதிப்பை குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தின் ஊடே நான் அதை சொல்லவில்லை. பன்னிரு திருமுறைகளும், சைவப் பெரியோர்களும் தமிழை வளர்த்தில் பெரும் வகித்தவர்கள் என்ற கருத்துக்கிற்கு மாற்று கருத்து கூறுபவர்கள் யாருமே இருக்க முடியாது.

தமிழ் பற்றுடையவன் என்ற எண்ணத்திலேயே கூற முற்பட்டேன். தங்கள் பதிவுகள் படிப்போர்க்கு பயன் தருவனவாக இருக்கின்றன. மேலும் உங்கள் பதிவுகளில் ஆங்கில சொற்களை அறவே தவிர்த்து முழுக்க தமிழ்ச் சொற்களாகவே வந்தால் அகம் மகிழ்வேன். பெயரிலேயே "தமிழ்" கொண்டு இருக்கும் தாங்கள் இதை ஏற்பீர்கள் என கருதுகிறேன்.

* * * திருச்சிற்றம்பலம் * * *

virutcham said...

நல்ல பதிவு. சிற்பங்கள் அழகு. உங்க வீடு சிற்பங்களும் தான். சமீபத்தில் சன் தொ.கா கூட இந்தக் கோவில் பற்றி வந்தது தெய்வ தரிசனத்தில்னு நினைக்கிறேன். ஆனா பார்க்கம விட்டே குறை இப்போதீர்ந்தது

http://www.virutcham.com

மங்கை said...

நீங்களும் பிரயாண கதைகள் நல்லா தொகுக்க ஆரம்பிச்சுட்டீங்க... நல்ல தகவல்கள் அமுதன்...ஆத்மநாதர் கோவில்னு சொல்வாங்களே அதுதானே.. இந்த கோவில் மூலவர் தெற்கு நோக்கி இருப்பாராமே..

ஜெயந்தி said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

சி. கருணாகரசு said...

பொதுவாக இந்த விதிமுறைகளை மீறுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது இருந்தாலும் இங்கே போட்டோ எடுக்கலாமா ன்னு அங்க வேலை செய்யும் ஒருவரை கேட்டேன் அவரும் பார்த்து எடுத்துகோங்கன்னு சொன்னார் .
அதோட இந்த கோயில கட்டின மாணிக்க வாசகர் மட்டும் என்ன ..? ரூல்ஸ் படியா பண்ணினார் ..? மதுரை மன்னர் குதிரை வாங்க கொடுத்த காசுல இறைவன் மேல உள்ள ஈர்ப்பால வந்த கடமையை மறந்துட்டு தானே கோயில கட்டினார் ..? அதே போல ஒரு ஆர்வத்துலத்தான் நானும் போட்டோ புடிச்சு பதிவுல போட்டுட்டேன் ..! //

உங்க நேர்மையை வியந்தேன்....

படங்களும் மிக நேர்த்தி.

உங்க வீட்டு சிற்பங்களுக்கு... என் வாழ்த்து.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பகிர்வுக்கு நன்றி தமிழ் அமுதன்,

அருமை!

ராமலக்ஷ்மி said...

இப்போதான் பார்க்கிறேன். எல்லாப் படங்களுமே மிக அருமையாய் எடுத்துள்ளீர்கள். விவரங்களுடன் பதிவு அருமை.

ப்ரியமுடன்...வசந்த் said...

சிற்பங்கள் பற்றிய விளக்கமும் புகைப்படங்களும் அருமை அண்ணா...