காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு அவசர கடிதம்....!

நீங்கள்  இப்படி ஆட்சிசெய்வீர்கள் என தெரிந்து இருந்தால் ரத்தம் சிந்தி உயிர்த்தியாகம்  செய்து நாட்டின்  சுதந்திரத்துக்காக போராடிய என் மூத்தோர்கள் ...! கடுமையாக போராடி இருக்க மாட்டார்கள்...!  அவர்கள்  விரும்பியது என்ன...? தன்மானமும்  சுயகவுரவமும் கூடிய ஒரு சுய ஆட்சியைத்தானே...! ஆனால்  நீங்கள்  என்ன செய்துகொண்டு இருக்கின்றீர்கள்...?  கொஞ்சம் கொஞ்சமாக  நாட்டை  அன்னியர்வசமாக்கி கொண்டூள்ளீர்கள்..! இதைத்தானா  நம் முன்னோர்  விரும்பினார்கள்...?

மிளகு விளையும் தேசத்துக்கு,அன்னியநாட்டில் இருந்து மிளகு இறக்குமதி..! உள்ளூர் தேயிலைக்கு விலை இல்லையாம் வெளிநாட்டில் இருந்து தேயிலை இறக்குமதி....! இந்தியாவில் விளையும் பொருளை இந்திய மக்களிடம் விற்று  லாபம் மட்டும்  அன்னிய வால்மார்ட்டுக்கு....என்ன கொடுமை இது....! இப்படியாக  பொருட்களை  வெளிநாட்டிலிருந்து  இறக்குமதி  செய்து தேசப்பற்றை  மட்டும்  ஒட்டு மொத்தமாக ஏற்றுமதி செய்கின்றீகள்..!

இலங்கை பிரச்சனையை,தமிழக மீனவர்கள்  பிரச்சனையை  நீங்கள் கையாண்ட விதத்தில் ஒட்டு மொத்த  தமிழர்களுக்கு  உங்களை பிடிக்கவில்லை. காஷ்மீர் பிரச்சனையை நீங்கள் கையாளும் விதத்தில் ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்கு  உங்களை  பிடிக்கவில்லை.தேசபற்றினை உங்களால்காக்க முடியவில்லை...! 

                                                அன்னை  இந்திரா காந்தி...!


இந்தியாவின் இரும்பு பெண்மணியாக விளங்கிய அன்னை இந்திராவின் வழி வந்தவர்கள் என சொல்லிகொள்ள  தற்கால காங்கிரஸார்  வெட்கப்பட வேண்டும்...! அந்த மரியாதைக்குரிய பெண்மணி  தேசம் என்னும் கோவிலுக்கு கும்பாபிஷேகம்  செய்து விழா  நடத்தினார்...! ஆனால்  நீங்கள்  அந்த திருவிழாவில்  கடை போட்டு காசள்ளி கொண்டூள்ளீர்கள்...! அந்த கூட்டத்திலே ஒருவர்  ராட்டினம் சுற்றுகின்றார்.! ஒருவர் சூதாட்டகடை நடத்துகின்றார் அவரவர் வசதிகேற்ப பணம் பார்க்கின்றீகள்.அங்குவருபவர்களை அந்த பெண்மணி பக்தர்களாக பார்த்தார் நீங்கள்  வாடிக்கையாளர்களாக பார்க்கின்றீர்கள்...! பெரும்பான்மை கடைகளில் தேசப்பற்றை  விற்று கல்லா கட்டுகின்றீகள்...!

                                                         கர்ம வீரர் காமராஜர்..!


முதலில்  மீண்டும் இவர் வரலாற்றை புரட்டி பாருங்கள்  தற்கால காங்கிரஸார்களே...!  இவர் எத்தனை  தொழிற்சாலைகளை  உருவாக்கினார்...! எத்தனை  எத்தனை அணைகட்டுகளை கட்டினார்..! இவர் கட்டிய அணைகட்டுகளால் பாசனம் அடைந்து  விளைந்த ஒவ்வொரு நெல்மணிகளிலும்  காமராஜர் உயிர்த்து  இருக்கின்றாரே..அதை கவனியுங்களேன்....! அந்த அணைகட்டுகளில் இருந்து சீறிப்பாய்ந்து புறப்பட்ட நீர்  உருவாக்கிய குளங்களிலும், குட்டைகளிலும்  பூத்துகுலுங்கும்  தாமரை,அல்லி,குவளை மலர்களில் காமராஜர் முகம் ஜொலித்து கொண்டுள்ளதே அது  தெரியவில்லையா...!

 
அவர் அணைகட்டுகளை  விட்டு  சென்று இன்னும் வாழ்ந்துகொண்டுள்ளார்..! ஆனால் நீங்களோ அணுஉலையை உருவாக்கி இருக்கும் மக்களுக்கும் கேடு செய்கின்றீர்கள்..!

பல முன்னேறிய  நாடுகளே அணு உலைகளை மூடி  வரும்போது நீங்கள்  அதனை  உருவாக்க நினைப்பது என்ன நியாயம். அதுமட்டுமா..!  அணு உலையை   எதிர்த்து போராடும்  இந்திய தேசதிருமகன் மீது துப்பாக்கி சூடு நடத்துகின்றீர்கள் ..!  

கடைசியாக ஒன்று அதுவும்  தமிழக காங்கிரசாருக்கு...!

சனி பகவான் என்னும் ஒரு கிரகம் அதை நீதிமான் என சொல்வார்கள்.  அதன் பார்வை பட்டால் அதோகதிதான்...! இன்று  சனி பகவானாக அவதாரம் எடுத்து இருப்பவர்கள் தமிழக மாணவர்கள்....!  அவர்கள் பார்வை இப்போது நேருக்கு நேராக உங்கள்  மீதுதான்....!

என்னதான் காங்கிரசாராக இருந்தாலும் தமிழ் நாட்டில் வேறு சில காரணங்களுக்குக்காக மரியாதைக்கு உரிய சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள்...! அவர்களுக்கு.....!
 நீங்கள்  இந்தனை நாள் உழைத்ததெல்லாம்  வீணாக போகின்றது.
உங்கள் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகபோகின்றது..!
நீங்கள் மேலும் காங்கிரசில் நீடித்தால் நாசமாய் போய்விடுவீர்கள்..!

எனவே  எவ்வளவு  சீக்கிரம் வேறு கட்சிக்கு போகமுடியுமோ,உடனே கட்சி மாறிவிடுங்கள்...! யாரும் தப்பாக  நினைக்க மாட்டார்கள் ..! உங்கள்  அரசியல் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ளுங்கள்...!  >

8 comments:

பாலா said...

மிக சரியான நேரத்தில் சரியான பதிவு ......அதுலயும் கடைசியா சொன்ன போல வேற கட்சிக்கு இவுங்க போயிட்டாசரியாய் இருக்கும் இல்லனா இவுங்க அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி தான் ..... வாழ்த்துக்கள் அமுதன் :)

velayutham R said...

ராஜீவ் அமைதிப்படைகளை அனுப்பியது ஒரு நல்லெண்ணத்தின் பேரில். மற்ற நாடுகளைப் போல் கண்டுகொள்ளாமல் இருப்பதை காட்டிலும் உதவி செய்யவே அமைதிப்படைகளை அனுப்பினார். சில சிப்பாய்களின் பாதக செயல்களால் ராஜிவை கொன்றது எந்த விதத்தில் நியாயம். இல்லை ராஜீவ் தான் போய் இலங்கை பெண்களை கற்பழித்து விட்டு வா என்றா சொல்லி அனுப்பினார். அந்த சிப்பாய்களை தண்டிப்பதை விடுத்து ஒரு நாட்டின் பிரதமரை குண்டு வைத்து கொல்வது தீவிரவாதம்.

Anonymous said...

enna sairadhu. oruthara pandra thapulla, otu motha katikararukum tha kata paru.. think and act... u congress people.Leaders are meant to be humans so all change time to time. not God to be same..

ramkaran said...

ரோம் தீப்பிடித்து எரியும் போது, இசையின் மேல் உள்ள மோகத்தால், நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருப்பது போல், பல வலைப் பூ, வலை தள எழுத்தாளர்கள் அவர்களின் சினிமா மோகத்தால் சினிமா விமர்சனம் மட்டுமே எழுதிக் கொண்டு இருக்கும் போது, தாங்கள் தமிழகத்தின் மேல் தங்களுக்கு உள்ள அக்கறையை வெளிப்படுத்திய விதத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தியாவின் பேனா said...

கடிதம் சரிதான்... ஆனால் இதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கே

தியாவின் பேனா said...

கடிதம் சரிதான்... ஆனால் இதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கே

SASIKUMAR said...

நல்ல பதிவு partner !

SASIKUMAR said...

நல்ல பதிவு PARNER.