மதிப்பிற்குரிய பெண்மணிகள் (பகத் சிங்கின் தாயார்)

.
என்னை வியக்கவைத்த, பெண்களில் ஒருவர் பகத் சிங்கின் தாயார் .
ஏன் ? சொல்லுகிறேன் கேளுங்கள்
ஆங்கிலேயர்களின் சட்ட சபையில் வெடிகுண்டு வீசிய குற்றத்திற்காக பகத் சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கிறது ஆங்கில அரசு !!!
தண்டனையை ஏற்று கொண்ட பகத் சிங் சிறைச்சாலையில் ,ஆங்கில சிறை அதிகாரிகளிடம் சற்றும் வளைந்து கொடுக்காமல் வீரத்துடனும் ,இறுமாப்புடனும் நடந்து கொள்கிறான் .
பகத் சிங்கை எப்படியும் வழிக்கு கொண்டுவர நினைத்து ,
பகத் சிங்கிடம் நீ , மன்னிப்பு கேள் ! உன் மரண தண்டனையை ரத்து செய்கிறோம் என சொல்லுகிறது ஆங்கில அரசு !!
அதற்கு பகத்சிங் , உங்களிடம் மன்னிப்பு கேட்டு உயிர் வாழ்வதை விட ,மரணம் அடைவதயே விரும்புகிறேன் என்று சொல்ல ,ஆங்கில அரசுக்கு மகா எரிச்சல் !!
உடனே ,ஆங்கில அரசு அதிகாரிகள் , பகத் சிங்கின் தாயாரிடம் சென்று உன் மகனை மன்னிப்பு கேட்க சொல் அவன் மரண தண்டனையை ரத்து செய்கிறோம் என கேட்கிறார்கள் .
ஒரு மகன் உயிர் வாழ்வதில் எந்த தாய்க்குத்தான் விருப்பம் இருக்காது ?
ஆனால் ?
ஒரு மாவீரனை பெற்றெடுத்த வீரத்தாய் அல்லவா அவள் !
” மன்னிப்புகேட்டு என் மகன்உயிர் வாழ்வதைவிட மரணம் அடையட்டும்”
என்று கூறி விடுகிறாள்
கோபத்தின் உச்சிக்கு சென்ற அதிகாரிகள் ,சரி அவன் மன்னிப்பு கேட்க வேண்டாம்
நீ மன்னிப்புகேள் , அவனை விடுதலை செய்கிறோம் என கேட்க !
அதற்கும் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை அந்த வீரத்தாய் !!
மன்னிப்பு கேட்க மறுத்து விடுகிறாள் !!!
தூக்குமேடைக்கு அழைத்து செல்ல படுகிறான் பகத்சிங் ,தூக்கில் போடுவதற்க்காக
பகத் சிங் முகத்தை கருப்பு துணியால் மூட முற்படுகிறார்கள் உடனே ,பத்சிங் நான் மரணமடையும் போதும் என் இந்தியாவை பார்த்துக்கொண்டே சாக விரும்புகிறேன் என் முகத்தை மூட வேண்டாம் என கேட்டு கொள்கிறான் ……….
மரண தண்டனை நிறைவேற்ற படுகிறது …. அவன் சொந்த ஊருக்கு அவனுடைய அஸ்தி கொண்டுவர படுகிறது .
துக்க வெள்ளத்தில் இருந்த அந்த கிராம தாய்மார்கள் பகத்சிங்கின் அஸ்தியை எடுத்து தங்களுக்கு இப்படி ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என பகத்சிங்கின் அஸ்தியை தங்கள் வயிற்றில் பூசி கொண்டார்களாம் ..
( பிள்ளைஎன்று பிறந்தால் பகத்சிங்கின் தாய் போல ஒருதாய்க்கு பிள்ளையாய் பிறக்க வேண்டும் .இல்லைஎன்றால் அவன் அஸ்தியை வயிற்றில் பூசி கொண்டார்களே அந்த தாய்மார்களுக்கு பிள்ளையாய் பிறக்க வேண்டும் )

>

5 comments:

AMIRDHAVARSHINI AMMA said...

A GREAT MOTHER

ஜீவன் said...

வாங்க.. வாங்க... அமிர்தவர்ஷிணி அம்மா ! என் வீட்டுக்கு வந்த முதல் விருந்தாளி !
ரொம்ப நன்றி !!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வணக்கம் திரு. ஜீவன்,.

அருமையான பதிவு.

படித்துவிட்டு மெய் சிலிர்த்து போயிவிட்டது!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

பதிவுன்னு போட்டா இப்படி நல்ல பதிவா போடனும்!

இல்லாட்டி இப்படி நல்ல பதிவு போட்டவங்கள பாரட்டி கமெண்ட் போடனும்!

Thamilselvan said...

in recent only i saw ur blog. very interesting and great work sir, i copy ur some of valuable content in my blog too... plz visit and share your comments
thanks