மிளகாய்ச் செடி

அப்போ எனக்கு பத்து,பதினோரு வயசு இருக்கும்.எங்க வீடும் எங்க சித்தப்பா வீடும் பக்கத்து பக்கத்து வீடு. ரெண்டு வீட்டுக்குமா சேர்த்து வேலி போட்டு இருந்தாங்க.
கிலுவை முள்ளு வேலி.(கிலுவை.எங்க ஊருபக்கம் வேலி அமைப்பதற்காகவே
இறைவனால் படைக்கப்பட்ட ஒரு தாவர இனம் ).

எங்க வீடு முதல்ல இருக்கும், எங்க சித்தப்பா வீடு அடுத்து இருக்கும். நாலு பக்கமும் வேலி. ஆனா வெளில போறதுக்கு கேட் வந்து எங்க சித்தப்பா வீட்டு வாசல் கிட்ட இருக்கும்.எங்க வீட்டு வாசல் வேலிய பார்த்த மாதிரி இருக்கும்.

ஒருவாட்டி நான் ஒரு மிளகாய்செடிய பாத்தேன்.அத அப்படியே புடிங்கி கொண்டாந்து, வீட்டு வாசல்ல வேலி ஓரமா ஒரு அருவாள எடுத்து குழி பறிச்சு நட்டு வச்சுட்டேன்.

காலைல எந்திரிச்சதும் முதல் வேல, மிளகாய் செடிக்கு தண்ணி ஊத்துரதுதான்.
ரெண்டுநாள்ல செடி நல்லா துளிர்த்துக்குச்சி.அதே போல ஸ்கூல் விட்டு வந்தா உடனே செடிக்கு தண்ணிதான்.நெறைய தண்ணி ஊத்தினா செடி அழுகிடும்னு எங்கம்மா திட்டும்.நான் கேக்காம நெறைய தண்ணி ஊத்துவேன்.
செடிக்கு உரம் எல்லாம் போட்டு வளர்த்தேன்.மாட்டு சாணிதான் உரம் அப்புறம் கொஞ்சம் காப்பித்தூள்.

ஒருநாள் காலைல வாசல் கூட்ட போன எங்கம்மா,டேய், உன் மிளகாய் செடில மொட்டு விட்டுருக்குடா!ன்னாங்க, அடிச்சு,புடிச்சுகிட்டு எந்திரிச்சு ஓடிபோய் பார்க்குறேன் கடுகு சைஸ்ல மொட்டு விட்டுருந்தது.எனக்கு சந்தோசம் தாங்கல!

மொட்டு விட்டத பார்க்க கூடவே என் தம்பியும்,தங்கச்சியும் வந்துட்டாங்க!

நான் உடனே ரெண்டுபேர் கிட்டயும் சொல்லுறேன் யாராவது செடிய தொட்டிங்க?அவ்ளோதான் யாரும் செடிய தொடக்கூடாது சரியா ? ரெண்டும் சரின்னு தலைய ஆட்டுதுங்க.

மொட்டு விட்டதுல அதுங்களுக்கும் சந்தோசம். அவங்கள தொட கூடாதுன்னு சொல்லிட்டு ஆர்வ கோளாறுல மொட்ட தொட்டு தொட்டு பார்க்குறேன்.
அன்னிக்கு ஸ்கூல் போகவே மனசுஇல்ல.ஸ்கூல் ல அதே நெனைப்புதான்.
ஸ்கூல் விட்டதும் நேரா செடி கிட்டதான். மொட்டு கொஞ்சம் பெருசானது போல இருக்கு இப்போதும் மெதுவா தொட்டு பார்க்குறேன்.எங்கம்மா திட்டுறாங்க,
மொட்ட தொட்டின்னா கருகி கீழ விழுந்துடும் ஆமா சொல்லிட்டேன் . மறுநாள் காலைல சீக்கிரமே எந்திரிச்சுட்டேன்,மொட்டு இன்னும் கொஞ்சம் பெருசனதுபோல இருக்கு தண்ணி ஊத்திட்டு ஆசைல மொட்ட தொட்டு பார்க்குறேன்.

சாயங்காலம் ஸ்கூல் ல இருந்து வந்து பார்க்குறேன் செடில மொட்ட காணூம்
எனக்கு அழுகாத குறைதான் எங்கம்மா கிட்ட கேட்டா மொட்ட தொடாதேன்னு
சொன்னேனே கேட்டியா ? கீழ விழுந்துடிச்சு அப்படின்னாங்க.
என்'' மூஞ்சிய பார்த்து'' வேற மொட்டு வரும் அத தொடாதன்னு சொன்னாங்க!

அப்போதான் என் அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் பெரிய சண்டை. சண்டைக்கு
சொத்து பிரச்சினையாம் காரணம்.
சண்டை பெருசாகி பஞ்சாயத்து வரை போய்டுச்சி. அப்புறம் எங்கப்பா இனிமே நாம இங்க இருக்க வேணாம்னு சொல்லிட்டு வேற வீடு வாங்கிட்டாரு நானும் என் மிளகாய் செடிய விட்டுட்டு வந்துட்டேன்.
சித்தப்பா வீட்டோட சுத்தமா பேச்சு வார்த்தை கூட இல்ல.வேற வீட்டுக்கு வந்தோன நானும் எல்லாம் மறந்துட்டேன் .
கொஞ்ச நாள் கழிச்சு எங்க சித்தப்பா வீட்டுக்கு எதிர் வீட்டு பாட்டி செத்து போய்ட்டாங்க!
சாவுக்கு எல்லாரும் போகணும், எங்கப்பா யாரும் அவன்வீட்டுக்கு (சித்தப்பா) போக்குடாது அப்படின்னு கண்டிசன் போட்டு கூட்டிகிட்டு போறாரு!

சாவுக்கு போயிட்டு திரும்பும்போது! பார்க்குறேன் !

அந்த கிலுவை வேலி ஓரமா! நான் வச்ச! நான் வச்ச! என் மிளகாய் செடில!

அழகா நாலைஞ்சு மிளகாய் காய்ச்சு இருக்கு!

அத வேலிக்கு வெளிய நின்னு பார்க்குறேன்! அங்க ஏன்டா நிக்குற வாடா எங்கப்பா அதட்டவே ஓடிட்டேன் !

(அந்த பதினோரு வயசு சிறுவனின் மன வேதனையை உங்களால உணர முடியுதா? )

>

22 comments:

சந்தனமுல்லை said...

நிச்சயமாக!!
அந்த வலிகளை நானும் உணர்ந்திருக்கிறேன்..சொத்டுப் பிரச்சினையில் பாட்டி வீட்டுக் கொல்லையில் இருக்கும் நாவல்பழ மரமும், மாமரமும் வெட்டப்பட்டுவிட்டன். தாங்க முடியாத வலிகள். என்ன செய்வது? பெரியோர்களில் பிடிவாத்திற்கு முதலில் இரையாவது ஆசையாய் வள்ர்த்த மரங்களும் செடிகளூம்தான். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!!

சிம்பா said...

இந்த முறையும் நானே முதல். ஜீவன் நீங்க உணர்வுகள வெளிப்படுத்துகிற விதம் மிகவும் அருமை. இத இரண்டாவது முறையா பண்ணிடீங்க. (அதான் உங்களுக்கு அதிகாமான பெண் ரசிகைகள் போல).

//கிலுவை முள்ளு வேலி.(கிலுவை.எங்க ஊருபக்கம் வேலி அமைப்பதற்காகவே
இறைவனால் படைக்கப்பட்ட ஒரு தாவர இனம் ).//

பழைய நினைவுகளை கிளறி விட்டுடீங்க. அதுல காத்தாடி செஞ்சு ஊற சுத்தின காலம், திரும்ப வருமா.

//நான் உடனே ரெண்டுபேர் கிட்டயும் சொல்லுறேன் யாராவது செடிய தொட்டிங்க?அவ்ளோதான் யாரும் செடிய தொடக்கூடாது சரியா ? ரெண்டும் சரின்னு தலைய ஆட்டுதுங்க.//

அது எப்படி ஒரு சம்பவத்த விவரிக்கும் போது, அந்த நிலைக்கு தகுந்த மாதிரி மாறிடறீங்க. சடார்னு ஒரு பத்து வயசு பைய்யனா மாறது அவ்வளவு சுலபம் இல்ல. காட்சிகள் இல்லாமல், அதை கண்ணெதிரே கொண்டுவர்றது எவ்வளோ கஷ்டம்.

மறுபடி கலக்கிடீங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உணரமுடிகிறது.

எனக்கு இதுபோன்ற அனுபவமில்லை. ஆனால் உங்கள் எழுத்து அதை உணர்த்திவிடுகிறது.

"சிம்பா"வின் கடைசி வரிகளை நான் வழிமொழிகிறேன்.

Unknown said...

அண்ணா இத படிச்சதும் என் அண்ணா வளத்த ரோஜா செடி நியாபகம் வந்துடுச்சு.. அந்த செடி காய்ந்ததும் அவன் அழுதது இன்னும் கண் முன்ன இருக்கு.. :( அவன் அழுததுக்குக் காரணம் தெரியாம நானும் அழுதேன்...:) இப்ப நினைச்சா ஒரு செடிக்கா அவ்ளோ கவலைப்பட்டோம்னு இருந்தாலும் அதுல ஏதோ ஒரு சந்தோஷம் இருக்கதான் செய்யுது..!! :))ரொம்ப அழகா உங்க சின்ன வயசுக்கு எங்கள கொண்டு போயிட்டீங்க..!! :)))

தமிழ் அமுதன் said...

Blogger சந்தனமுல்லை said..

பாட்டி வீட்டுக் கொல்லையில் இருக்கும் நாவல்பழ மரமும், மாமரமும் வெட்டப்பட்டுவிட்டன். தாங்க முடியாத வலிகள். என்ன செய்வது?

வாங்க ... சந்தன முல்லை
நாம் ஆசையாய் வளர்த்த, மரம் செடிகளை பிரிவதும், நெருங்கிய ஒரு துணையை பிரிவதும் ஒன்றுதான்.

தமிழ் அமுதன் said...

Blogger சிம்பா said...
பழைய நினைவுகளை கிளறி விட்டுடீங்க. அதுல காத்தாடி செஞ்சு ஊற சுத்தின காலம், திரும்ப வருமா.

நன்றி சிம்பா! உங்க கருத்தை படிச்சிட்டு, நானே நான் எழுதியதை திரும்ப,திரும்ப
படிச்சேன். (பெண் ரசிகைகளா ? அப்படியா சொல்லுறீங்க?)

தமிழ் அமுதன் said...

AMIRDHAVARSHINI AMMA said...

உணரமுடிகிறது.

எனக்கு இதுபோன்ற அனுபவமில்லை. ஆனால் உங்கள் எழுத்து அதை உணர்த்திவிடுகிறது.

"சிம்பா"வின் கடைசி வரிகளை நான் வழிமொழிகிறேன்.

வருகைக்கு நன்றி அமிர்த வர்ஷினி அம்மா!

தமிழ் அமுதன் said...

Blogger ஸ்ரீமதி said...

அண்ணா இத படிச்சதும் என் அண்ணா வளத்த ரோஜா செடி நியாபகம் வந்துடுச்சு.. அந்த செடி காய்ந்ததும் அவன் அழுதது இன்னும் கண் முன்ன இருக்கு.. :( அவன் அழுததுக்குக் காரணம் தெரியாம நானும் அழுதேன்...:) இப்ப நினைச்சா ஒரு செடிக்கா அவ்ளோ கவலைப்பட்டோம்னு இருந்தாலும் அதுல ஏதோ ஒரு சந்தோஷம் இருக்கதான் செய்யுது..!! :))ரொம்ப அழகா உங்க சின்ன வயசுக்கு எங்கள கொண்டு போயிட்டீங்க..!! :)))

வாங்க தங்கச்சி! உன் அண்ணாவும் என்ன போலதானா?

Cable சங்கர் said...

மிக நல்ல பதிவு .. அதை உண்ர்ந்தவர்களுக்கே புரியும்.. பிரிவு அது.. வாழ்த்துக்கள்.

RAMYA said...

ஹாய் ஜீவன்

மிளகாய் செடி, அருமையான உணர்வுகள். மனதை திருப்பி போட்டது போல் உள்ளது. ஏன் என்றால் நானும் ஒரு ரோஜா செடி வளர்த்தேன். ஆனால் அதை ஆடு என்ற ஒரு அரக்கனால் சாப்பிடப்பட்டு விட்டது. மிகவும் துக்கமான நாளாகஅன்று முழுவதும் கண்ணிற் மல்க இருந்து உள்ளேன். அதனால் அந்த பிஞ்சு உள்ளத்தின் சோகம் மனதிற்கு புரிகிறது. அருமையான உணர்வின் வெளிப்பாடு ஜீவன்.

ரம்யா

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

மிக நல்ல பதிவுங்கண்ணா...

எழுத்து நடை இயல்பா நல்லா இருக்கு.

நான் இப்ப vacctaion ல ஊருக்கு போனப்ப ஒரு பாத்தி மொளா செடி வச்சி தெனமும் தண்ணி ஊத்த போகும்போது என் மொவளும் எங்கூட வருவா..

நான் திரும்பி வந்தபின்ன அது காய்ச்சி குலுங்கும் போது அதுக்கு பக்கத்துல நின்னு போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி கொடுத்தா...

4 வயசு பொண்ணோட மனசு இப்ப ந்ல்லா புரியுது இல்ல...

நன்றி என் மகளின் நினைவுகளை ஏற்படுத்தியதற்கு...

தமிழ் அமுதன் said...

Blogger cable sankar said...

மிக நல்ல பதிவு .. அதை உண்ர்ந்தவர்களுக்கே புரியும்.. பிரிவு அது.. வாழ்த்துக்கள்.

நல்லா சொன்னிங்க சங்கர்! வருகைக்கு நன்றி!!

தமிழ் அமுதன் said...

Blogger RAMYA said...

ஹாய் ஜீவன்

மிளகாய் செடி, அருமையான உணர்வுகள். மனதை திருப்பி போட்டது போல் உள்ளது. ஏன் என்றால் நானும் ஒரு ரோஜா செடி வளர்த்தேன். ஆனால் அதை ஆடு என்ற ஒரு அரக்கனால் சாப்பிடப்பட்டு விட்டது. மிகவும் துக்கமான நாளாகஅன்று முழுவதும் கண்ணிற் மல்க இருந்து உள்ளேன். அதனால் அந்த பிஞ்சு உள்ளத்தின் சோகம் மனதிற்கு புரிகிறது. அருமையான உணர்வின் வெளிப்பாடு ஜீவன்.

ரம்யா

நன்றி ரம்யா! உணர்வுடன் புரிந்து கொண்டீர்கள்!!!

தமிழ் அமுதன் said...

Blogger சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

மிக நல்ல பதிவுங்கண்ணா...

எழுத்து நடை இயல்பா நல்லா இருக்கு.

நான் இப்ப vacctaion ல ஊருக்கு போனப்ப ஒரு பாத்தி மொளா செடி வச்சி தெனமும் தண்ணி ஊத்த போகும்போது என் மொவளும் எங்கூட வருவா..

நான் திரும்பி வந்தபின்ன அது காய்ச்சி குலுங்கும் போது அதுக்கு பக்கத்துல நின்னு போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி கொடுத்தா...

4 வயசு பொண்ணோட மனசு இப்ப ந்ல்லா புரியுது இல்ல...

நன்றி என் மகளின் நினைவுகளை ஏற்படுத்தியதற்கு

நன்றி சுடர் !! இப்போ கூட நான் என் அஞ்சு வயசு மகளோட ரோஜா செடி வளர்க்கிறேன்

வருகைக்கு நன்றி !!!

புகழன் said...

பெரியவர்களின் சண்டையில் சிறிய மொட்டுகளும் அவர்கள் மனதில் மொட்டுவிடும் உணர்வுகளும் கருகி விழுந்து விடுகின்றன.
அந்த வலிகளை நானும் உணர்ந்திருக்கிறேன்.

தமிழ் அமுதன் said...

Blogger புகழன் said...

பெரியவர்களின் சண்டையில் சிறிய மொட்டுகளும் அவர்கள் மனதில் மொட்டுவிடும் உணர்வுகளும் கருகி விழுந்து விடுகின்றன.
அந்த வலிகளை நானும் உணர்ந்திருக்கிறேன்.

வருகைக்கு நன்றி! புகழன்.

Anonymous said...

உங்கள் பதிவை படித்த பின்னர் எழுத நினைத்ததை ஒரு பதிவாகவே எழுதியுள்ளேன்..

http://thooyaskitchen.blogspot.com/2008/10/blog-post_11.html

Raj said...

எல்லோருக்கும் அவங்கவங்க சிறு பிராயத்தை நினைவூட்டிட்டிங்க...சரி அப்பாவும் சித்தப்பாவும் இப்பவாச்சும் பேசிக்கறாங்களா!

தமிழ் அமுதன் said...

Blogger Thooya said...

உங்கள் பதிவை படித்த பின்னர் எழுத நினைத்ததை ஒரு பதிவாகவே எழுதியுள்ளேன்..

http://thooyaskitchen.blogspot.com/2008/10/blog-post_11.html

நல்லது சகோதரி மிக்க நன்றி !

தமிழ் அமுதன் said...

Raj said...

எல்லோருக்கும் அவங்கவங்க சிறு பிராயத்தை நினைவூட்டிட்டிங்க...சரி அப்பாவும் சித்தப்பாவும் இப்பவாச்சும் பேசிக்கறாங்களா!

வாங்க ராஜ்! இப்போ எங்க அப்பாவும்,சித்தப்பாவும் பாசமழைல நனையாத கொறைதான். வந்ததுக்கு நன்றி!

குடுகுடுப்பை said...

ஒரு மிளகாய் செடி மூலம் மிளகாய் மனங்களை சொல்லியிருக்கிறீர்கள்
பட்டுக்கோட்டை ஜீவன்.

தமிழ் அமுதன் said...

Blogger குடுகுடுப்பை said...

ஒரு மிளகாய் செடி மூலம் மிளகாய் மனங்களை சொல்லியிருக்கிறீர்கள்
பட்டுக்கோட்டை ஜீவன்.

நல்லா சொன்னிங்க! நன்றி!