தூண்டில் மீன்

தூண்டில் போட்டு மீன் புடிக்கிறது ரொம்ப சுவாரஸ்யமான
விஷயம்.அப்போ நானும், கன்னையனும் தூண்டி போட
போவோம். கண்ணையன் வந்து என் சித்தப்பா வீட்டுக்கு
எதிர் வீடு. நான் எங்க சித்தப்பா வீட்டோட சண்டைனால,
அங்க போக மாட்டேன் நானும்,கன்னையனும் வெளில
மீட் பண்ணிக்குவோம் .


ஆடி மாசம் ஆத்துல புதுத்தண்ணி வரும்.அந்த தண்ணில
ஏரி,குளம் எல்லாம் நிரப்பிக்குவாங்க அப்போ மீனெல்லாம்
ஒன்னும் இருக்காது.அந்த புது தண்ணி வந்தோன!
விவசாய வேலைய ஆரம்பிப்பாங்க தண்ணி வந்து
ரெண்டு,மூணு மாசத்துல எங்க ஊரு நாத்து பறிக்கிறது;
நாத்து நடுறது
அப்படின்னு ஊரே பச்சை பசேல்னு
ஆயிடும்.அப்போதான் கொக்குக எல்லாம் வந்து மேய
ஆரம்பிக்கும்.தூரத்துல இருந்து பார்த்தா வயல்ல கொக்கு
மேயிறது வந்து,பச்சை துணில வெள்ளை புள்ளி வைச்ச
மாதிரி இருக்கும்.கொக்குக மேயிறது கொள்ளை அழகு.


பட்டு பாவாடை தாவணிபோட்டு,தலைல மல்லிகை
பூவும்,கனகாம்பரமும் கலந்து வச்சு,நெத்தில
சந்தன போட்டு,அதுக்குகீழ கொஞ்சமா துன்னுரு
பூசி,காதுல குடை ஜிமிக்கி போட்டு,கைநெறைய
கண்ணாடி வளையல் போட்டு,கால்ல முழுக்க
சலங்கை வைச்ச கொலுசு போட்டு இந்த
லிப்ஸ்டிக் ஏதும் போடாம இயற்கையான அழகோட
இருக்குற ஒரு பொண்ண சைட் அடிச்சா எப்படி
மனசுல ஜில்லுன்னு இருக்கும் ?


அதுபோல தான் இருக்கும் இந்த, கொக்குக மேயிரத
வேடிக்கை பாக்குறதும்.


சரி சரி மேட்டருக்கு வாரேன்! நெல்லு அறுவடை எல்லாம்
முடிஞ்சு வயல்ல கடல,எள் இதெல்லாம் போடுவாங்க
குளம்,ஏரில எல்லாம் தண்ணி குறைய ஆரம்பிக்கும்.
அப்போதான் தூண்டிபோட போவோம்.எங்க வீட்டு
ஏரியாவ தாண்டி போனா, சின்னதா ஒரு ஆறு வரும்.
அந்த ஆத்தோட பேரு கல்யாண ஓடை கால்வாய்
அந்த ஆத்த தாண்டிபோனா, ஒரு செம்மண் ரோடு வரும்
ரோட்டுக்கு ரெண்டுபக்கமும் வயல்தான்.வயல்ல
கடலை ,எள் இதெல்லாம் போட்டு இருப்பாங்க அங்கங்க
மாடு மேய்ச்சுகிட்டு இருப்பாங்க.செம்மண் ரோடு வழியா
ஒரு கிலோமீட்டர் போனா ஏரி வந்துடும்.

எங்க ஊரு ஏரிய இப்போ நெனைச்சாலும் மனசு ரெக்கை கட்டி
பறக்குது.ஏரி பேரு விக்கிரமம் ஏரி ஏரி கரை ஓரத்துல வரிசையா
இலுப்ப மரங்களா இருக்கும்.மரங்க எல்லாம் கரைல சாய்ச்சி
வச்சது போல இருக்கும்.மர கிளைகள் எல்லாம் தண்ணில
நனைஞ்சபடி இருக்கும்.சின்ன பயலுவ எல்லாம் மரத்துல
ஏறி தண்ணில குதிப்பாணுவ நாங்களும்தான்!

சலவை கடை வைச்சு இருக்குறவங்க வழக்கமா அங்கதான்
துணி தொவைப்பாங்க!

சரி விசயத்துக்கு வர்றேன்....

தூண்டி முள்ளுல கோர்த்து விட மண்புழு வேணும்!
அழுக்கானசேத்துல தான் மண்புழு அதிகமா இருக்கும்.
மண்புழு எடுத்தாச்சு ஏரிக்கரை படிக்கட்டுல
உக்காந்துதான் தூண்டி போடுவோம்.

முள்ளுல மண்புழு வை கோர்த்து தண்ணில போட்டுட்டு
அந்த மெதக்குற தக்கைய வைச்ச கண்ணு வாங்காம
பார்த்துகிட்டே இருப்போம்.அந்த தக்கை லேசா அசைரத
பார்க்கவே செம திர்லிங்கா இருக்கும்.

லேசா அசையும் போது அவசர படக்கூடாது தக்கை
வந்து தண்ணிக்குள்ள முழுசா போகணும்.
இடது பக்கமா தக்கை போகும் போது, இடது பக்கமே
தூண்டி கம்ப ஒரு வெட்டு வெட்டி,வலது பக்கமா வெடுக்குன்னு
தூக்கணும் அப்போதான் மீன் மாட்டும்.


இப்போ பங்கு சந்தையில 100 ரூபாய்க்கு வாங்கின
பங்கு 101,102,1O3,104,105, அப்படி போனா மனசு
எப்படி இருக்கும்?

அப்படிதான் இருக்கும், தூண்டில மீன் மாட்டி அந்த
தக்கை தண்ணிக்குள்ள போகும்போதும்.

ஒருதடவ நாங்க தூண்டி போட்டப்போ மண்புழு
கலியாயிடுச்சி, தூண்டில தண்ணில போட்டுட்டு
கம்புமேல ஒரு செங்கல்ல எடுத்து வைச்சுட்டு
ரெண்டு பேரும் மண்புழு தோண்ட போய்ட்டோம்
திரும்பி வந்து பார்த்தா என் தூண்டிய காணும்!
தேடி பார்த்தா நடு தண்ணில என் தூண்டி கம்பு
மெதந்து போயிட்டு இருக்கு எதோ ஒரு பெரிய மீன்
மாட்டி இழுத்துகிட்டு போகுது,என்ன பண்ணுறதுன்னு
யோசிக்கிறதுக்குள்ள கண்ணையன் சட்டைய
கழட்டிட்டு தண்ணிக்குள்ள குதிச்சுட்டான்.

வேகமா நீச்சல் அடிச்சு போய் தூண்டி கம்ப
புடிச்சுட்டான் புடிச்சு இழுத்துகிட்டு வர தினறுரான்.
வேணாம் கண்ணையா!!விட்டுட்டு வந்துடுன்னு
கத்துறேன்! கேக்காம புடிச்சு இழுத்துகிட்டு வர்றான்
எனக்கும் ஆர்வம் அதுல என்ன மீன் மாட்டி இருக்குன்னு
பார்க்க கண்டிப்பா பெரிய விரா மீன் தான் மாட்டி
இருக்கணும்னு நினைச்சேன்.கரைகிட்ட வந்துட்டான்
படிக்கட்டுல எறங்கி அவன் கைய புடிசுகிட்டேன் .
இன்னொரு கையால தூண்டிகம்ப புடிச்சுட்டேன் .
ரெண்டுபேரும் சேர்ந்து தூண்டி கம்ப மேல தூக்குறோம்
அவ்ளோதான் ''டப்'' ன்னு நரம்போட அறுத்துகிட்டு
போச்சு! ச்சே எவ்ளோ கஷ்ட்டப்பட்டு கண்ணையன்
இழுத்துகிட்டு வந்தான் அத என்னன்னு கூட
பாக்க முடியலயேன்னு ரொம்ப வருத்தமா போச்சு!

(இதுநடந்து ஒரு 22,23 வருஷம் இருக்கும் இப்போகூட அந்த தூண்டில மாட்டுனத பார்க்கலையேன்னு சின்ன பீல் இருக்கு )
>

29 comments:

அமுதா said...

/*அத என்னன்னு கூட
பாக்க முடியலயேன்னு ரொம்ப வருத்தமா போச்சு*/
ஆஹா சுவாரசியமா எழுதிட்டு மாட்டியது என்னனு பார்க்காம விட்டுட்டீங்களே...
/*இப்போ பங்கு சந்தையில 100 ரூபாய்க்கு வாங்கின
பங்கு 101,102,1O3,104,105, அப்படி போனா மனசு
எப்படி இருக்கும்? */
நல்லாருக்கு. கடைசில வாங்கின பங்கு இருக்குதானே தெரியாத மாதிரி இருந்திச்சா?

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு, நானும் மீன் பிடிசிருக்கேன், கலயாண ஓடை கால்வாய்ல கண்டியன் தெருல குளிச்சுமிருக்கேன்.

ஒருவேளை நீங்க பிடிச்சது ஆமையா இருக்குமோ?

ஆயில்யன் said...

//பட்டு பாவாடை தாவணிபோட்டு,தலைல மல்லிகை
பூவும்,கனகாம்பரமும் கலந்து வச்சு,நெத்தில
சந்தன போட்டு,அதுக்குகீழ கொஞ்சமா துன்னுரு
பூசி,காதுல குடை ஜிமிக்கி போட்டு,கைநெறைய
கண்ணாடி வளையல் போட்டு,கால்ல முழுக்க
சலங்கை வைச்ச கொலுசு போட்டு இந்த
லிப்ஸ்டிக் ஏதும் போடாம இயற்கையான அழகோட
இருக்குற ஒரு பொண்ண சைட் அடிச்சா எப்படி
மனசுல ஜில்லுன்னு இருக்கும் ?
///

அட பாரேன் இவுக மனசுல எம்புட்டு ஆசை இருக்குன்னு :))))

AMIRDHAVARSHINI AMMA said...

ரொம்ப நல்ல வர்ணணை நல்லா இருக்கு.

ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.

தூண்டிலுக்கும் பின்வரும் வரிகளுக்கும் என்ன சம்பந்தம்.

பட்டு பாவாடை தாவணிபோட்டு,தலைல மல்லிகை
பூவும்,கனகாம்பரமும் கலந்து வச்சு,நெத்தில
சந்தன போட்டு,அதுக்குகீழ கொஞ்சமா துன்னுரு
பூசி,காதுல குடை ஜிமிக்கி போட்டு,கைநெறைய
கண்ணாடி வளையல் போட்டு,கால்ல முழுக்க
சலங்கை வைச்ச கொலுசு போட்டு இந்த
லிப்ஸ்டிக் ஏதும் போடாம இயற்கையான அழகோட
இருக்குற ஒரு பொண்ண சைட் அடிச்சா எப்படி
மனசுல ஜில்லுன்னு இருக்கும் ?

AMIRDHAVARSHINI AMMA said...

நான் நினைக்கிறேன் அது பெண் மீனா இருக்கும்னு. எங்க மறுபடியும் மாட்டிக்குவோம்னு நெனச்சு டபக்குன்னு போயிடுச்சு.

AMIRDHAVARSHINI AMMA said...

அப்படியா குடுகுடுப்பை அண்ணே.

அப்ப நீங்களும் கூடிய சீக்கிறம் ஒரு "தூண்டில் பதிவு" போடுவீங்க.

ஜீவன் said...

Blogger அமுதா said...

/*அத என்னன்னு கூட
பாக்க முடியலயேன்னு ரொம்ப வருத்தமா போச்சு*/
ஆஹா சுவாரசியமா எழுதிட்டு மாட்டியது என்னனு பார்க்காம விட்டுட்டீங்களே...
/*இப்போ பங்கு சந்தையில 100 ரூபாய்க்கு வாங்கின
பங்கு 101,102,1O3,104,105, அப்படி போனா மனசு
எப்படி இருக்கும்? */
நல்லாருக்கு. கடைசில வாங்கின பங்கு இருக்குதானே தெரியாத மாதிரி இருந்திச்சா?

வாங்க அமுதா!

கடசில வாங்கின பங்கு
நம்மளையும் தண்ணிக்குள்ள
இழுத்துகாம போனதே சந்தோசம்தான் !

ஜீவன் said...

Blogger குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு, நானும் மீன் பிடிசிருக்கேன், கலயாண ஓடை கால்வாய்ல கண்டியன் தெருல குளிச்சுமிருக்கேன்.

ஒருவேளை நீங்க பிடிச்சது ஆமையா இருக்குமோ?வாங்கண்ணே ரொம்ப சந்தோசம்! அது ஆமையா இருக்கும்னுதான்
நானும் நெனச்சேன் ஆனா ஒரு கைல தூண்டிகம்ப புடிச்சுகிட்டு ஆமைய
இழுத்துகிட்டு நீந்தி வர முடியும்மான்னு தெரியல! பெரிய மீனாதான் இருக்கணும்!

ஜீவன் said...

Delete
Blogger ஆயில்யன் said...

//பட்டு பாவாடை தாவணிபோட்டு,தலைல மல்லிகை
பூவும்,கனகாம்பரமும் கலந்து வச்சு,நெத்தில
சந்தன போட்டு,அதுக்குகீழ கொஞ்சமா துன்னுரு
பூசி,காதுல குடை ஜிமிக்கி போட்டு,கைநெறைய
கண்ணாடி வளையல் போட்டு,கால்ல முழுக்க
சலங்கை வைச்ச கொலுசு போட்டு இந்த
லிப்ஸ்டிக் ஏதும் போடாம இயற்கையான அழகோட
இருக்குற ஒரு பொண்ண சைட் அடிச்சா எப்படி
மனசுல ஜில்லுன்னு இருக்கும் ?
///

அட பாரேன் இவுக மனசுல எம்புட்டு ஆசை இருக்குன்னு :))))


வாங்க சார் ஏன் சார்? இந்த மாதிரி ஆசையெல்லாம் வரக்குடாதா?

ஜீவன் said...

Blogger AMIRDHAVARSHINI AMMA said...

ரொம்ப நல்ல வர்ணணை நல்லா இருக்கு.

ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.

தூண்டிலுக்கும் பின்வரும் வரிகளுக்கும் என்ன சம்பந்தம்


அது வந்து! அதுல ஒரு தத்துவம் இருக்கு!

நாங்க எங்க போறோம்? தூண்டில் போட்டு மீன் புடிக்க!
அப்படி தூண்டில் போட்டு மீன் புடிக்க போகும் போது
நாங்களே தூண்டில்ல மாட்டிக்க கூடாது!அப்படிங்கிறதுதான்
அந்த தத்துவம்! நான் சொல்லுறது புரியுதா ? இல்லாட்டி
அப்படியே விட்டுடுங்க ..... முடியல!Blogger AMIRDHAVARSHINI AMMA said...

நான் நினைக்கிறேன் அது பெண் மீனா இருக்கும்னு. எங்க மறுபடியும் மாட்டிக்குவோம்னு நெனச்சு டபக்குன்னு போயிடுச்சு.

எப்படித்தான் உங்களுக்கு தோணுதோ?AMIRDHAVARSHINI AMMA said...

அப்படியா குடுகுடுப்பை அண்ணே.

அப்ப நீங்களும் கூடிய சீக்கிறம் ஒரு "தூண்டில் பதிவு" போடுவீங்க.

குடுகுடுப்பை காரர் நீங்களும் ஒரு பதிவு போடுங்க!

cable sankar said...

எனக்கு தூண்டில் போட்ட அனுபவம் இல்ல.. அனா உங்க பதிவ படிச்சதும் அந்த அனுபவத்தை பெறனும்னு தோணுது.. மிக நல்ல பதிவு.

சிம்பா said...

இந்த பதிவ நீங்க எனக்கு முன்னாடியே காட்டிடீங்க. அப்போவே கேட்டேன் தூண்டில்ல மாட்டினது என்னனு..

நம்ம ஊரு பக்கம் ஆறு கிடையாது. அதனால இதுவரை அந்த அனுபவம் இல்ல. இன்னும் சொல்ல போனால், மீன் தொட்டியில தூண்டில் போட்டா கூட நமக்கு ஏதும் சிக்காது.

அவளோ தெறமை நமக்கு... ஹி ஹி

வால்பையன் said...

தூண்டில மீன் சிக்கலைனா புழு மட்டும் தான் போகும்
வாங்கின பங்கு ஏறலைனா டவுசர் அவுரும்

வால்பையன் said...

தூண்டிலில் மீன் பிடிப்பது நல்ல பொழுது போக்கு

வால்பையன் said...

அதை நாமே சமைத்து சாப்பிடுவது இன்னும் சிறப்பு

குடுகுடுப்பை said...

..AMIRDHAVARSHINI AMMA said...

அப்படியா குடுகுடுப்பை அண்ணே.

அப்ப நீங்களும் கூடிய சீக்கிறம் ஒரு "தூண்டில் பதிவு" போடுவீங்க.....

நானும் நெறய தூண்டில் போட ஆசைப்பட்டிருக்கேன்.ஆனால் தெரியல.
ஆனா நானே ஒரு வலையில் மாட்டிகிட்டேன். இப்ப தினமும் வறுவல் தான்

AMIRDHAVARSHINI AMMA said...

முடியலனா விட்டுடுங்க வற்புறுத்தல.

ம்ஹும் ம்ஹும் அதெல்லாம் அப்படித்தான், தானா தோனும். தோனனும் அப்ப்த்தான் தூண்டில்ல் கரெக்க்ட்டா மீன் சிக்கும்.

ஜீவன் said...

AMIRDHAVARSHINI AMMA said...

முடியலனா விட்டுடுங்க வற்புறுத்தல.

ம்ஹும் ம்ஹும் அதெல்லாம் அப்படித்தான், தானா தோனும். தோனனும் அப்ப்த்தான் தூண்டில்ல் கரெக்க்ட்டா மீன் சிக்கும்.


நீங்க சொன்னா சரிதான்!

ஜீவன் said...

cable sankar said...

எனக்கு தூண்டில் போட்ட அனுபவம் இல்ல.. அனா உங்க பதிவ படிச்சதும் அந்த அனுபவத்தை பெறனும்னு தோணுது.. மிக நல்ல பதிவு.


சென்னைல செங்குன்றம் பக்கம் போனா தூண்டில் போட்டு மீன் புடிக்கலாம்
சங்கர் சார் வருகைக்கு நன்றி!

ஜீவன் said...

சிம்பா said...

இந்த பதிவ நீங்க எனக்கு முன்னாடியே காட்டிடீங்க. அப்போவே கேட்டேன் தூண்டில்ல மாட்டினது என்னனு..

நம்ம ஊரு பக்கம் ஆறு கிடையாது. அதனால இதுவரை அந்த அனுபவம் இல்ல. இன்னும் சொல்ல போனால், மீன் தொட்டியில தூண்டில் போட்டா கூட நமக்கு ஏதும் சிக்காது.

அவளோ தெறமை நமக்கு... ஹி ஹி


தொட்டில எதுக்கு தூண்டில் போட்டுக்கிட்டு ? தொட்டிய கவுத்துற வேண்டியதுதானே ?
நன்றி சிம்பா!

ஜீவன் said...

Blogger வால்பையன்

தூண்டில மீன் சிக்கலைனா புழு மட்டும் தான் போக்கும்
வாங்கின பங்கு ஏறலைனா டவுசர் அவுரும்

நீங்க mcx ஆளு அதான்!

தூண்டிலில் மீன் பிடிப்பது நல்ல பொழுது போக்கு

உண்மைதான்!

அதை நாமே சமைத்து சாப்பிடுவது இன்னும் சிறப்பு

சுட்டு கூட சாப்பிடலாம்

வருகைக்கு நன்றி வால் பையன் !

Thooya said...

முதலில் ஒரு தூண்டில் வாங்கணும்..[உங்க பதிவுகளின் பாதிப்பு அப்படி]

புதுகை.அப்துல்லா said...

உங்க தூண்டில என்னைய சிக்க வச்சுட்டீங்க...அருமையா இருக்குண்ணே.
:)

ஜீவன் said...

Blogger Thooya said...

முதலில் ஒரு தூண்டில் வாங்கணும்..[உங்க பதிவுகளின் பாதிப்பு அப்படி]

October 18, 2008 6:26 PM


வாங்குங்க தூயா நீங்களும் மீன் புடிச்சு பாருங்க!
வந்ததுக்கு நன்றி !!

ஜீவன் said...

Blogger புதுகை.அப்துல்லா said...

உங்க தூண்டில என்னைய சிக்க வச்சுட்டீங்க...அருமையா இருக்குண்ணே.
:)

October 19, 2008 5:42 PM

வாங்க அப்பு! வந்ததுக்கு நன்றி அப்பு !

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//பட்டு பாவாடை தாவணிபோட்டு,தலைல மல்லிகை
பூவும்,கனகாம்பரமும் கலந்து வச்சு,நெத்தில
சந்தன போட்டு,அதுக்குகீழ கொஞ்சமா துன்னுரு
பூசி,காதுல குடை ஜிமிக்கி போட்டு,கைநெறைய
கண்ணாடி வளையல் போட்டு,கால்ல முழுக்க
சலங்கை வைச்ச கொலுசு போட்டு இந்த
லிப்ஸ்டிக் ஏதும் போடாம இயற்கையான அழகோட
இருக்குற ஒரு பொண்ண சைட் அடிச்சா எப்படி
மனசுல ஜில்லுன்னு இருக்கும் ? //

அய்யா அய்யா...

ராசா ராசா...

இப்படித்தான் கவுத்துட்டாங்க!
கவுந்து போயிட்டேன்!!!

kunthavai said...

உங்க அனுபவத்தை நன்றாக எழுதியிருக்கீங்க.
கற்பனையில் எங்க ஊருக்கே போய்விட்டேன்.

ஆனா நாங்க மீன், நண்டு, நத்தை எதையும் விட்டு வைக்க மாட்டோம்.......

ஜீவன் said...

Anonymous kunthavai said...

உங்க அனுபவத்தை நன்றாக எழுதியிருக்கீங்க.
கற்பனையில் எங்க ஊருக்கே போய்விட்டேன்.

ஆனா நாங்க மீன், நண்டு, நத்தை எதையும் விட்டு வைக்க மாட்டோம்.......
வாங்க குந்தவை! வருகைக்கு
நன்றி!

பாம்பெல்லாம் புடிக்க மாட்டிங்களா?

ஜீவன் said...

Delete
Blogger சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//பட்டு பாவாடை தாவணிபோட்டு,தலைல மல்லிகை
பூவும்,கனகாம்பரமும் கலந்து வச்சு,நெத்தில
சந்தன போட்டு,அதுக்குகீழ கொஞ்சமா துன்னுரு
பூசி,காதுல குடை ஜிமிக்கி போட்டு,கைநெறைய
கண்ணாடி வளையல் போட்டு,கால்ல முழுக்க
சலங்கை வைச்ச கொலுசு போட்டு இந்த
லிப்ஸ்டிக் ஏதும் போடாம இயற்கையான அழகோட
இருக்குற ஒரு பொண்ண சைட் அடிச்சா எப்படி
மனசுல ஜில்லுன்னு இருக்கும் ? //

அய்யா அய்யா...

ராசா ராசா...

இப்படித்தான் கவுத்துட்டாங்க!
கவுந்து போயிட்டேன்!


வாங்க சுடர்! அப்படிதான்
கவுரனும்னு இருந்தா யார்
என்ன பண்ண முடியும்

வருகைக்கு நன்றி !