ஈழத் தமிழருக்கான ஆதரவு தமிழ்நாட்டில் மேலும் பலமடைய ....

இலங்கையில் இப்போது என்ன நடக்கிறது?
அங்கே நடைபெறும் போராட்டத்தில், தமிழ்
போராளிகளின் நோக்கம் என்ன? தமிழ் போராளிகள்
உருவானது ஏன்? இதையெல்லாம் மறுபடியும்
தமிழ் மக்களுக்கு (தமிழ் நாட்டில் உள்ள)
உணர்த்த வேண்டிய அவசியம்
ஏற்பட்டுள்ளதாக உணர்கிறேன்.

இங்கே தமிழகத்தில் ஒரு தலைமுறை இடைவெளி
ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. உதாரணமாக
சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்
அவருக்கு ஒரு முப்பத்து இரண்டு வயது இருக்கும்.
அப்போது இலங்கை போராளிகள்,இலங்கை தமிழர்கள்
பற்றி பேச முற்படும் போது அவர் இலங்கை போராளிகளை
வெறுப்பதாக கூறினார்! அதற்கு அவர் கூறிய காரணங்கள்
மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது .

அப்போது நான் அவரிடம் கேட்டேன் இலங்கை போராளிகள்
உருவாவதற்கு முன்னர் சிங்கள ராணுவத்தினர் தமிழ்
மக்கள் மீது நடத்திய வன்முறை பற்றி உங்களுக்கு தெரியுமா?
என்று ? என்ன கொடுமை! அவருக்கு எதுவுமே தெரியவில்லை!
ஒரு இருபத்தி இரண்டு வயது இளைஞனை கட்டி போட்டு
அவன் கண்முன்னால் அவனது தாயை , சிங்கள நாய்கள்
கற்பழித்த கதை உங்களுக்கு தெரியுமா என கேட்டேன்?
...........தெரியவில்லை!

ஒரு கர்ப்பிணி தமிழ் தாயின் வயிற்றை கிழித்து!
வயிற்றில் உள்ள குழந்தையை எடுத்து வெட்டி கொன்ற
கதை தெரியுமா? என கேட்டேன்?அதுவும் அவருக்கு
..............தெரியவில்லை! ஆனால்! இதையெல்லாம் கேட்டு
அவர் கொதித்து போய்விட்டார்!
அப்போது நான் சொன்னேன்,சிங்கள ராணுவத்தினர்
செய்த அட்டூழியங்களை நான் உங்களுக்கு முழுவதும்
சொல்லவில்லை நான் முழுவதும் சொன்னால் நீங்கள்
நிம்மதி இழந்து விடுவீர்கள் என்று!


தற்போது முப்பது வயதிற்கு உள்பட்ட தமிழர்களுக்கு
இலங்கை தமிழ் போராளிகள் உருவான கதையை
சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .

இப்போது தமிழகத்தில் உள்ள மக்கள் நினைத்து
கொண்டிருப்பது என்ன?'' இலங்கை தமிழர்கள்
தனி நாடு கேட்டு போராடுகிறார்கள்'' அவ்வளவுதான்

ஆனால் !!

ஏன்? எதற்கு?இலங்கை தமிழர்களுக்கு என்ன
பாதிப்பு ஏற்பட்டது ? என்ற எந்த விவரமும் தெரியாத
மக்களும் இங்கே நெறைய பேர் இருப்பதாக
தோன்றுகிறது.

தற்போது தமிழ் நாட்டில் திமுக,மதிமுக,பாமக,விடுதலை
சிறுத்தைகள்,மற்றும் பல அமைப்புகள் எல்லாம் தீவிர
இலங்கை தமிழர்கள் ஆதரவாளர்கள் தான்.
அந்த அமைப்புகள் எல்லாம் தமிழீழ போராளிகள்
உருவான காரணங்களை மேடைதோறும் முழங்க வேண்டும்!

குறைந்த பட்சம் இலங்கை தமிழ் போராளிகள் உருவான
காரணங்களை,முழுவதும் தெரிந்தவர்கள் வலையேற்றுங்கள் .
>

13 comments:

குடுகுடுப்பை said...

கடந்த சில வருடங்களாக சிங்கள இன வெறியர்கள் தமிழ் மக்களை கொல்வதை உலக செய்தி ஊடகங்கள் மறைத்து விட்டதே இதற்கு காரணம்.

சிம்பா said...

ஜீவன் உண்மைய சொல்லனும்னா எனக்கும் இத பத்தி ஒன்னும் தெரியாது. இலங்கையில் மட்டும் இல்ல, பொதுவாக இந்த மாதிரியான சம்பவங்கள் உலகம் முழுசும் நடந்துகிட்டு இருக்கு.

அங்க என் நீங்க போறீங்க.. வீரப்பன தேடுரோம்ன்னு சொல்லி, அதிரடிப்படை இங்க பண்ண அட்டகாசம் தெரியாதா உங்களுக்கு, ஒரு சில காவல்துறை அதிகாரிகள் தாகப்படதால ஒரு கிராமத்தையே காவலாளிகள் சூரையாடிருக்காங்க... இது மாதிரி சம்பவங்கள், அடக்குமுறைகள் இங்கே, நம்ம நட்டுலையே நடக்கும் பொது, நாம இங்க உள்ள பிரச்சனைகளை பற்றி கவலைப்படலாம். இதுக்கு ஒரு தீர்வு வர்றதுக்காக போராடலாம். ஆனா ஈழம் கடல் கடந்து இருக்க பிரச்சனை. அதுக்கு நாம அதரவு அளிப்போம். ஆனா இது அரசியல். இது நம்ம கவலைபட்ரதால மட்டும் இது முடிவுக்கு வருமானா, இல்ல, கண்டிப்பா வராது.

Anonymous said...

நான் பல முறை சிங்கபூரில் சிங்களவர்களும் இலங்கை தமிழர்களும் கை கோர்த்து நெருக்கமான நண்பர்களாக இருப்பதை பார்த்து இருக்க்கிறேன்.
பிரச்சனை யாருக்கி இடையில்? இலங்கை ரானுவத்துக்கும் விடுதலைபுலிகளுக்கும்.

இடையில் பகடைகாய்க்கள் அப்பாவி தமிழர்களும் கூடவே அப்பாவி சிங்களவர்களும் தான்.

போர் தொடர்சியாக நடக்கும் போது அமைதி புறாக்களை கூட சுட்டு சாப்பிடுவார்கள்.

ரானுவம் எந்த ஊருக்கு வந்தாலும் அது ஆமை புகுந்த வீட்டின் நிலைதான்.

ரானுவம் ஊருக்குள் வராமல் பார்த்து கொள்வது அந்த ஊரில் வசிபப்வரின் கடமையும் கூட.

இலங்கை பிரச்சனை அவங்க பார்த்து கொள்ளட்டும்.,இந்த விடயத்தில் நம் நாடு ஏற்கனவே பலமாக மூக்குடைபட்டுள்ளது. நாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள் இந்தியா தலையிட வேண்டாம் என்று புலிகள் சொன்னார்களாம்.

இரு தரப்பும் வன்முறையை கைவிட்டு அமைதி வழிக்கு இணங்கும் வரை இங்கு தமிழ்நாட்டில் போராட்டம் செய்வது தேவை இல்லாத வேலை.நமக்கே இங்கு ஆயிரம் பிரச்சனைகள். இதில் அடுத்த வீட்டு வம்பு எதற்க்கு?

அமிர்தவர்ஷினி அம்மா said...

உண்மையே.

ஊடகங்கள் இல்லாத கால கட்டத்திலெயே அவர்கள் பட்ட துன்பங்கள் வெளிவந்தன. ஆனால் ஆளுக்கொரு சேனலையும், கட்சியையும் கையில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையை சொல்லத்தான் யாரும் இல்லை.

இது ஒருபக்கம் இருக்கட்டும். இங்கு பாதுகாப்பு கருதி வரும் இலங்கை மக்கள் நிம்மதியாய் இருப்பதாய் நினைக்கிறீர்களா. சோதனை என்ற பெயரில் நம்ம ஆட்கள் மட்டும் என்ன செய்கிறார்கள்.

குடுகுடுப்பை said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

கருணாநிதியின் நிம்மதியின்மைக்கும் நித்திரையின்மைக்கும் உண்மையான காரணங்கள் இவைதான்!
பார்த்தசாரதி
இலங்கை தமிழர்படும் இன்னல்களை நினைத்து தான் நிம்மதியும் இல்லாமல், நித்திரையும் இல்லாமல் தவிப்பதாக தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி சமீபத்தில் கூறியிருந்தார். அவரது இந்த கூற்றை பார்க்கும்போது, இந்த தள்ளாத வயதிலும் எவ்வளவு சாதுரியமாக அவரால் நடிக்க முடிகிறது என்ற வியப்புதான் ஏற்படுகின்றது. ஆனால் இலங்கை தமிழருக்காக கருணாநிதி நிம்மதியையும் நித்திரையையும் இழப்பதானால், அதனை அவர் எப்போதோ இழந்திருக்க வேண்டும். அதுவும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒரு பங்காளியாக இருக்கும் கருணாநிதிக்கு, நாலரை ஆண்டுகளாக வராத இலங்கை தமிழர் மீதான பாசம், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அந்த இரண்டரை ஆண்டுகளாக வராத அக்கறை, இப்பொழுது திடீரென பொத்துக்கொண்டு வந்தது ஏன் என்ற கேள்வியை தமிழக மக்கள் கேட்பதில் தவறேதும் இல்லை.
ஏறத்தாள கடந்த கால் நூற்றாண்டாக புலிகள் செய்துவந்த படுகொலைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருப்பது அல்லது அவர்களுடன் ஊடல்பாணியில் சரசம் விடுவது, கருணாநிதியின் அரசியல் நாகரீகத்தில் அல்லது ராஜதந்திரத்தில் ஒன்று. எனவே அதைவிட்டுவிடுவோம். ஆனால் இலங்கை அரசாங்கத்தின் மீது இப்பொழுது திடீரென சீறிப்பாயும் கருணாநிதி, இவ்வளவு காலமும் ஏன் கண்ணை மூடிக்கொண்டிருந்தார் என கேட்கும் உரிமை நமக்குண்டு. இலங்கை இராணுவம் கிழக்கு மாகாணத்தில் சம்பூரை கைப்பற்றியபோது,வாகரையை கைப்பற்றியபோது, குடும்பிமலையை கைப்பற்றியபோது, கொக்கட்டிச்சோலையை கைப்பற்றியபோது,திருகோணமலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது, வடக்கில் மன்னாரை விடுதலை செய்தபோது, துணுக்காயை கைப்பற்றி முறிகண்டிவரை முன்னேறியபோது, நிம்மதியையும் நித்திரையையும் இழக்காத கருணாநிதி, இப்பொழுது பிரபாகரனின் கடைசி இருப்பிடமான கிளிநொச்சியும் முல்லைத்தீவும் பறிபோகும் நிலையில், விழித்துக்கொண்டு வீராவேசம் கொள்வதற்கு காரணம் என்ன?
மேற்குறிப்பிட்ட இடங்களிலெல்லாம் இராணுவ நடவடிக்கையின்போது இலங்கைத்தமிழர்கள் கொல்லப்படவில்லையா? அல்லது அந்தப்பகுதிகளில் வாழ்பவர்கள் எல்லாம் இலங்கைத்தமிழர்கள் இல்லையா? அல்லது இப்போதைய வீராவேசத்துக்கு ஏதாவது சொந்த சுயநலம் காரணமாக இருக்கின்றதா என தமிழகத்தின் இதர அரசியல்வாதிகளும் அரசியல் விமர்சகர்களும் பத்திரிகையாளர்களும் ஆராய்வதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஏனெனில் கருணாநிதியின் அரசியல் குள்ளத்தனம் அவ்வகையானது. ஆனால் தமிழகத்தின் விடயமறிந்த அரசியல் விற்பன்னர்களின் கருத்துப்படி, கருணாநிதியின் நிம்மதியின்மைக்கும் நித்திரையின்மைக்கும் பிரதான காரணம் வேறு இரண்டு முக்கிய விடயங்களாகும். ஓன்று, அவரது வருங்கால அரசியல் கூட்டணி சம்பந்தமானது. மற்றது, தமிழ்நாட்டின் அனைத்துதுறை மக்களையும் கடுமையாக பாதிக்கும் மின்சாரவெட்டு சம்பந்தமானது. இந்த மின்சாரவெட்டு கிராமப்புறங்களில் எட்டுமணிநேரம் அமுலாக்கப்படுவதினால், விவசாயம்,மாணவர்களின் கல்வி, சிறுதொழிற்துறை என சகல மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பொதுவாகவே கிராமப்புறங்களில் அதிக செல்வாக்கை வைத்திருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மேலும் செல்வாக்கை பெற்றுவிடுமோ என கருணாநிதி அஞ்சுகிறார். இது அவரது நிம்மதி மற்றும் நித்திரையின்மைக்கு ஒரு காரணம். ஆனால் இதையும்விட அவரை வாட்டிவதைப்பது தி.மு.க. தலைமையிலான அவரது அரசியல் கூட்டணியில் ஏற்பட்ட உடைவுதான்.
கடந்த தமிழக மாநில தேர்தலில் தி.மு.க. ஒரு மகா கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. அ.தி.மு.கவையும் ம.தி;மு.கவையும் தவிர, மிகுதி அனைத்து கட்சிகளும் தி.மு.க. தலைமையிலான அக்கூட்டணியில் இடம் பெற்றன. அப்படி இருந்தபோதும் கருணாநிதியால் ஏனைய கூட்டணிகட்சிகளின் உதவியுடன் ஒரு சிறுபான்மை அரசையே அமைக்கமுடிந்தது. 243 பேர் அங்கத்துவம் கொண்ட தமிழக சட்டசபையில், தி.மு.கவுக்கு வெறுமனே 96 ஆசனங்களே கிடைத்தன. தி.மு.கவுக்கு ஏற்பட்ட இந்த தோல்வியை கண்டு,அன்றே கருணாநிதிக்கு நிம்மதி போய்விட்டது. அதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. மேற்கொண்ட அரச ஊழியர்கள், தொழிலாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர் மீதான அடக்குமுறை காரணமாகவேஅ.தி.மு.கவுடன் அதிருப்தியுற்றிருந்த அரசியல்கட்சிகளை இணைத்து, தி.மு.கவால் இந்த மகாகூட்டணியை உருவாக்க முடிந்தபோதிலும்,அதற்கு மக்கள் எதிர்பார்த்த ஆதரவை வழங்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டின. மக்களுக்கு அ.தி.மு.க. மீது அதிருப்தி இருந்தபோதிலும்,தி.மு.கவுக்கு வாக்களிக்காததிற்கு கருணாநிதி உருவாக்கி வந்த குடும்ப அரசியலே பிரதான காரணம். அண்ணாதுரை,நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், சத்தியவாணிமுத்து போன்றோரால் பல தியாகங்களின் ஊடாக உருவாக்கிய தி.மு.கவை, கருணாநிதி தனது குள்ள தந்திரங்களின் மூலம் இதனது குடும்ப சொத்தாக மாற்றியபின்னர், சாதாரண தி.மு.க. உறுப்பினர்களுக்கு கட்சி மீதான பற்றுதல் விட்டுப்போய் நீண்டநாட்களாகிவிட்டன. இப்பொழுது கட்சியுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள், அரசபதவிகளுக்காகவும் அரசாங்க கொந்தராத்துக்களுக்காகவும், வேறு பிற சலுகைகளுக்காகவும் வந்து சேர்ந்தவர்களே. கட்சியில் எத்தனையோ சிரேஸ்ட உறுப்பினர்கள் இருக்க, தனது மகன் ஸ்டாலினை தனக்குப்பின் அடுத்த முதலமைச்சராக்க கருணாநிதி திட்டமிட்டு வேலை செய்து வருகின்றார். அத்துடன் தனது மகள் கனிமொழியை ராஐயசபா உறுப்பினராக்கியதுடன், அவரை மத்திய மத்திய அமைச்சரவையிலும் சேர்க்க முயன்று வருகின்றார். (ஆனால் கனிமொழியின் தயாரும்,கருணாநிதியின் மூன்றாவது மனைவியுமான ராசாத்தி அம்மாள், தனது மகளை கருணாநிதிக்குப்பின் முதலமைச்சராக்க வேண்டும் என வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு பெண்ணை நிறுத்துவது கூடுதலான பயனைக்கொடுக்கும் என கருணாநிதிக்கு நெருக்கமான சிலரும் ஆலோசனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கெனவே தயாநிதி மாறன் விவகாரத்தால் சீர்குலைந்திருக்கும் குடும்ப விவகாரம், இதனால் மேலும் சிக்கலுக்குள் உள்ளாகிவிடுமோ என்ற கவலையும் கருணாநிதியைப் பீடித்துள்ளது என விடயமறிந்தவர்கள் கூறுகின்றனர்)
இத்தகைய ஒரு சூழலில்,தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே அவருக்கு தினமும் தொந்தரவு கொடுத்துவந்த,ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியை கருணாநிதியே வெளியேற்றிவிட்டார். ‘இங்கில்லாவிட்டால் அங்கு’என்பது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் எழுதப்படாத விதி என்பதால், ராமதாஸ் அடுத்த தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பார் என்பது நிச்சயம். இந்த சூழ்நிலையில் கருணாநிதிக்கு மேலும் ஒரு துரதிஸ்டம் நிகழ்ந்துவிட்டது. அமெரிக்காவுடனான இந்தியாவின் அணுஆயுத ஒப்பந்த விவகாரத்தால், இடதுசாரி கட்சிகள் மத்திய அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியபோது, கருணாநிதி அவ்வாறு செய்யாமல் அதை ஆதரித்து வாக்களித்து இடதுசாரிகளின் வெறுப்பை தேடிக்கொண்டுவிட்டார். அதனால் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் (சி.பி.ஐ.(எம்),சி.பி.ஐ.) தமிழ்நாட்டில் இனிமேல் தி.மு.கவுடனான கூட்டணி இல்லையென்று அறிவித்துவிட்டன. எனவே அவ்விருகட்சிகளும் கூட அடுத்த தேர்தலின்போது,அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது பெரும்பாலும் நிச்சயமாகிவிட்டது. அதை உறுதிசெய்வதுபோல ஒக்டோபர் 2ந் திகதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.)இலங்கை தமிழர் பிரச்சினையை ஒட்டி ஏற்பாடு செய்த உண்ணாவிரதத்துக்கு தி.மு.க. அழைக்கப்படாததுடன், அ.தி.மு.கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் தாக்கத்தால் கவலைக்குள்ளான கருணாநிதி, ஒரு பத்திரிகை அறிக்கை மூலம் வெளிப்படையாகவே தனது கவலையை தெரியப்படுத்தியிருந்தார். அத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்து உரையாடியுமிருந்தார். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் உறவினரான தா.பாண்டியன், சென்ற தேர்தலின்போதே அ.தி.மு.கவுடன் கூட்டுச்சேரும் முயற்சியில் ஈடுபட்டவர் என்பது தமிழக அரசியல் வட்டாரங்கள் நன்கு அறிந்த ஒரு விடயம். இதனால் கருணாநிதியின் நிம்மதியும் நித்திரையும் மேலும் குலைவதற்கு இதுவும் ஒரு காரணம்.
அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜயகாந்,தனது கட்சி யாருடனும் கூட்டுச்சேராது என்று அடிக்கடி சொல்லி வந்தாலும், (கருணாநிதி அவரது முதலாவது எதிரியாக இருப்பதால்) கடைசி நேரத்தில் ஜெயலலிதாவுடன் சேரக்கூடும் என்ற பயம் கருணாநிதிக்கு உண்டு. பெரும் செல்வாக்கு எதுவும் இல்லாவிட்டாலும்,திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் வெற்றிக்காற்று எந்தப்பக்கம் வீசுகின்றது என்று பார்த்து, அ.தி.மு.க. பக்கம் சேர்ந்துவிடுவார். பணத்துக்காக புலிகளுக்கு சார்பாக தீவிரமாக குலைத்துவந்தாலும், திருமாவளவன் அரசியல் இலாபத்துக்காக ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேர தயங்கப்போவதில்லை. ஏற்கனவே கடந்த தேர்தலின் போது,அ.தி.மு.க. அணியில் நின்று தேர்தலில் வென்றபின்னரே, சுயலாபம் கருதி திருமாவளவன் தி.மு.க. அணிக்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிலைமை இவ்வாறு போனால் தி.மு.கவையும் காங்கிரசையும் தவிர்ந்த ஏனைய அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய மகா கூட்டணியாக அ.தி.மு.க. கூட்டணி அமைவதுடன், அடுத்த தமிழக அரசாங்கம் ஜெயலலிதா தலைமையில் அமையும் என்பதும் திண்ணம். இந்த தலையிடி நிலைமைதான் கருணாநிதியின் நிம்மதியின்மைக்கும் நித்திரையின்மைக்கும் பிரதான காரணம். உண்மையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) தன்னை உண்ணாவிரதத்துக்கு அழைக்கவில்லை என்றதும்தான், கருணாநிதிக்கு இலங்கை தமிழர்மீது திடீர் அக்கறை பிறந்தது. அதனால் சென்னை மாங்கொல்லையில் கூட்டம்போட்டு,தான் இலங்கை தமிழர்; பிரச்சினையில் அக்கறையுடன் இருப்பதாக காட்ட முயன்றார். அப்பொழுதும் அவருக்கு திருப்தி வரவில்லை. கூட்டணிக் கட்சிகள் தன்னுடன்தான் இருக்கின்றன என காட்டவேண்டுமே என எண்ணினார். அதற்காக சர்வகட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அதில் அவரது முன்னைய கூட்டணி கட்சிகளான பா.ம.க.,இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் என்பன கலந்துகொண்டது அவருக்கு சற்று மகிழ்ச்சியேயாயினும், அவர்கள் தொடர்ந்தும் கூட்டணியில் இருப்பார்களா என்ற சந்தேகமும் அவரது மனதை அரித்துக்கொண்டே இருக்கின்றது. அதனால் இரு வாரங்களுக்குள் இலங்கையில் மத்திய அரசாங்கம் தலையிட்டு இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தாவிட்டால், தமிழக எம்.பிக்கள் இருவாரங்களுக்குள் பதவி விலகுவார்களென எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதன்மூலம் காங்கிரசை விட்டு விலகவும் தயங்கமாட்டேன் என்றவொரு செய்தியை இடதுசாரிகளுக்கு தெரிவித்து, அவர்கள் அ..தி.மு.க. பக்கம் போகாமல் பார்த்துக்கொள்வது கருணாநிதியின் தந்திரமாகும்.
அத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ.(எம்)) தமிழ் மாநில செயலாளர் என்.வரதராசன் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, மகன் ஸ்டாலினையும் மகள் கனிமொழியையும் நேரடியாக அனுப்பி நலம் விசாரித்து வரச்செய்தார் அத்துடன் தேவையேற்பட்டால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியை மையமாக வைத்து நாடாளாவிய ரீதியில் உருவாக்க முயலும் மூன்றாவது அணியில் கூட, தான் இணையக்கூடும் என்ற சைகைகளையும் கருணாநிதி இடதுசாரிகளுக்கு காட்டிவருகின்றார். அதனால்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேருவதில் வெளிப்படையாக கோடிட்டுக் காட்டுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சற்று அடக்கி வாசிக்கிறது. அதற்கு காரணம் கருணாநிதி மூன்றாவது அணிக்கு தற்செயலாக வரக்கூடிய சூழல் உருவானால், அதை ஏன் கெடுப்பான் என்ற எண்ணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உண்டு. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள கூட்டணிக் குழப்பங்களால் நிம்மதியும் நித்திரையும் இழந்துள்ள கருணாநிதி, தன்னுடைய முன்னைய கூட்டணி கட்சிகளை தொடர்ந்தும் தன்னுடன் வைத்திருக்கும் ஒரு உத்தியாகவே, அடுத்ததாக இலங்கை தமிழர் பிரச்சினையை வைத்து மனித சங்கிலி போராட்டம் ஒன்றுக்கு ஒக்டோபர் 21ந் திகதி அழைப்பு விடுத்துள்ளார். (சென்னையில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மனித சங்கிலி போராட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.) இப்போதைக்கு வேறு எந்தப்பிரச்சினையை வைத்து அவர்; கூட்டணி கட்சிகளை அழைத்தாலும், அவர்கள் முன்வரப்போவதில்லை என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆனால் தமிழகத்திலுள்ள் ஏறத்தாள எல்லாக்கட்சிகளும் இலங்கைத்தமிழர் பிரச்சினையை தூக்கிப்பிடித்திருப்பதால், அடுத்த தேர்தல்வரை கூட்டணி கட்சிகளை தன்பிடிக்குள் வைத்திருப்பதற்காக, இலங்கை தமிழர் பிரச்சினையை தொடர்ந்தும் ஒரு ஆயுதமாக பாவிப்பதே அவரது திட்டமாகும். இலங்கை தமிழர் படும் இன்னல்களால்தான், நிம்மதியையும் நித்திரையையும் தான் இழந்திருப்பதாக கருணாநிதி வெளியே சொல்லிக்கொண்டாலும், தன்னுடையதும் தனது குடும்ப வாரிசுகளினதும் அரசியல் எதிர்காலம் பற்றிய அச்ச உணர்வே அவரது அனைத்து அவலங்களுக்கும் அடிப்படைக் காரணங்களாகும். ஆனால் கருணாநிதி கையாளும் எந்தவிதமான தந்திரோபாயங்களும், அடுத்த தேர்தலில் அவரைக் காப்பாற்றி நிம்மதியையும் நித்திரையையும் கொடுக்கக்கூடிய சூழல் தமிழகத்தில் இல்லையென்பதே அங்குள்ள உண்மையான நிலவரமாகும்.
http://www.thenee.com/html/221008-2.html

Vidhya Chandrasekaran said...

ஈழத்தமிழர்கள் படுகொலை செய்வது கண்டனத்துக்குரியதுதான். ஆனால் இந்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை(இந்திய அரசு ராணுவ உதவி செய்வதும் தவறே). ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் தலையிடவதை நாம் அனுமதிப்போமா???

தமிழ் அமுதன் said...

வருங்கால முதல்வர்

கடந்த சில வருடங்களாக சிங்கள இன வெறியர்கள் தமிழ் மக்களை கொல்வதை உலக செய்தி ஊடகங்கள் மறைத்து விட்டதே இதற்கு காரணம்.

நீங்கள் சொல்வதுதான் உண்மை!
நன்றி! முதல்வரே!

தமிழ் அமுதன் said...

Blogger சிம்பா said...

ஜீவன் உண்மைய சொல்லனும்னா எனக்கும் இத பத்தி ஒன்னும் தெரியாது. இலங்கையில் மட்டும் இல்ல, பொதுவாக இந்த மாதிரியான சம்பவங்கள் உலகம் முழுசும் நடந்துகிட்டு இருக்கு.

அங்க என் நீங்க போறீங்க.. வீரப்பன தேடுரோம்ன்னு சொல்லி, அதிரடிப்படை இங்க பண்ண அட்டகாசம் தெரியாதா உங்களுக்கு, ஒரு சில காவல்துறை அதிகாரிகள் தாகப்படதால ஒரு கிராமத்தையே காவலாளிகள் சூரையாடிருக்காங்க... இது மாதிரி சம்பவங்கள், அடக்குமுறைகள் இங்கே, நம்ம நட்டுலையே நடக்கும் பொது, நாம இங்க உள்ள பிரச்சனைகளை பற்றி கவலைப்படலாம். இதுக்கு ஒரு தீர்வு வர்றதுக்காக போராடலாம். ஆனா ஈழம் கடல் கடந்து இருக்க பிரச்சனை. அதுக்கு நாம அதரவு அளிப்போம். ஆனா இது அரசியல். இது நம்ம கவலைபட்ரதால மட்டும் இது முடிவுக்கு வருமானா, இல்ல, கண்டிப்பா வராது.




நீங்களே! இப்படி சொல்லிட்டா எப்படி சிம்பா!
அங்க நடக்குற கொடுமைய பார்த்துகிட்டு
எனக்கு என்னன்னு இருக்க முடியலையே சிம்பா!

தமிழ் அமுதன் said...

இலங்கை பிரச்சனை அவங்க பார்த்து கொள்ளட்டும்.,இந்த விடயத்தில் நம் நாடு ஏற்கனவே பலமாக மூக்குடைபட்டுள்ளது. நாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள் இந்தியா தலையிட வேண்டாம் என்று புலிகள் சொன்னார்களாம்.


அணானி நண்பரே!... தமிழர்களும்,சிங்களவர்களும்
சகோதரர்களா?....அப்படி இருந்தால் மிக்க மகிழ்ச்சி!
ஆனால்? அங்கே நடைபெறும் போரில் தமிழர்கள்
மட்டும் தானே அகதியாக வெளியேறுகிறார்கள் ?
மேலும் தமிழ் நாட்டில் போராட்டம் நடத்துவது
பாதிக்க படும் மக்களுக்காகத்தான்!
போராளிகள் பக்கமும் நியாயம் இருப்பதை
உணர்த்தவே இந்த பதிவு!

தமிழ் அமுதன் said...

AMIRDHAVARSHINI AMMA said...

உண்மையே.

ஊடகங்கள் இல்லாத கால கட்டத்திலெயே அவர்கள் பட்ட துன்பங்கள் வெளிவந்தன. ஆனால் ஆளுக்கொரு சேனலையும், கட்சியையும் கையில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையை சொல்லத்தான் யாரும் இல்லை.

இது ஒருபக்கம் இருக்கட்டும். இங்கு பாதுகாப்பு கருதி வரும் இலங்கை மக்கள் நிம்மதியாய் இருப்பதாய் நினைக்கிறீர்களா. சோதனை என்ற பெயரில் நம்ம ஆட்கள் மட்டும் என்ன செய்கிறார்கள்.


வாங்க! அமிர்தவர்ஷிணி அம்மா!
உங்க கருத்துதான் என் கருத்தும்!

தமிழ் அமுதன் said...

Anonymous Anonymous said...

கருணாநிதியின் நிம்மதியின்மைக்கும் நித்திரையின்மைக்கும் உண்மையான காரணங்கள் இவைதான்!
http://www.thenee.com/html/221008-2.html

நன்றி! நண்பரே!
இங்கே! இப்போது! இந்த ஆராய்ச்சியைவிட
இலங்கை தமிழர்களுக்கு எப்படியோ!
பலத்த ஆதரவு குரல் எழும்பியுள்ளது!
அந்த குரலை பலப்படுத்துவதே!
தமிழனின் முதல் கடமை!

தமிழ் அமுதன் said...

Blogger Vidhya C said...

ஈழத்தமிழர்கள் படுகொலை செய்வது கண்டனத்துக்குரியதுதான். ஆனால் இந்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை(இந்திய அரசு ராணுவ உதவி செய்வதும் தவறே). ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் தலையிடவதை நாம் அனுமதிப்போமா???



நீங்கள் சொல்லுவது சரி என வைத்து
கொண்டாலும், காஷ்மீரில் இந்திய
இராணுவம் அங்குள்ள மக்களை
துன்புறுத்தவில்லை.
மேலும்! இந்தியா பங்களா தேஷ்
விசயத்தில் தலையிட்டு அதை தனி
நாடாக ஆக்கவில்லையா?