காந்திஜி செய்தது சரிதானா ?



ரொம்ப வருசமா மனசுக்குள்ள ஒரு கேள்வி
கெடந்து அரிச்சுகிட்டே இருக்குது .

நாம வெளியில போகும்போது,அதாவது
ஒரு விசேசத்துக்கோ,வெளி ஊருக்கோ
போகும் போது எப்படி போவோம்?
என்னதான் நம்மகிட்ட போட்டுக்க
நல்ல துணிமணி இல்லாட்டியும் இருக்குறதுலேயே
நல்ல துணியா பார்த்து நல்லா துவைச்சு,
முடிஞ்சா அயன்பண்ணிதான் போட்டுக்கிட்டு
போவோம் .அதுல ஒரு தன் மானமும்,
சுய கவுரவமும் இருக்கு இல்லையா?

ஆனா!
நம்ம தேச பிதா!மஹாத்மா காந்தி!
நம்ம நாட்டில போட்டுக்க கூட துணி இல்லாம
மக்கள் சில இடங்கள்ல இருந்ததால,இனிமேல
நானும் சட்டை போட்டுக்க மாட்டேன், எல்லா
மக்களுக்கும் போட்டுக்கொள்ள உடை கிடைக்கிர
வரையில் இப்படித்தான் இருப்பேன்னு மேல் சட்டையே
போட்டுக்கல.அதுல நம்ம நாட்டு மக்கள் மேல அவர்
வைச்சு இருக்குற அன்பும்,மனிதாபிமானமும்
தெரிஞ்சது.

சரி!
அதேபோல சட்டையே போட்டுக்காம
உலகம் முழுவதும் சுத்தியும் வந்தார்.
அப்போ அதை பார்த்த வெளிநாட்டுகாரங்க
நம்ம இந்திய மக்களை பத்தி என்ன நினைச்சு
இருப்பாங்க? இந்திய மக்கள் எல்லோரும்
போட்டுக்க கூட துணி இல்லாத பஞ்ச,பரதேசிங்க
அப்படின்னு நினைச்சு இருக்க மாட்டாங்களா ?

அதுனால! இந்திய மக்களோட தன்மானமும்
சுய கவுரவமும் பாதிக்க பட்டு இருக்காதா ?


நான் கேக்குறது, சரியா? தப்பா?
>

8 comments:

தாரணி பிரியா said...

சரின்னுதான் நினைக்கிறேன்.என்னோட மக்களுக்கு கிடைக்காத ஒரு விஷயம் எனக்கும் வேண்டாமுன்னு அவர் நினைச்சிருக்கார். அது மட்டுமில்லாம அப்ப நாம கஷ்டப்பட்டுகிட்டு இருந்ததுக்கு காரணமான ஆங்கில அரசுக்கு தன்னுடைய எதிர்ப்பை காட்டற விதமா கூட இதை எடுத்துக்கலாம்தானே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உலகம் முழுவதும் சுத்துற காலத்துல அவர் பாப்புலர் பெர்சனாலிட்டியா (மகாத்மாவா) இருந்திருப்பார். அதனால அவர் மேல ஒரு தனி மரியாதை வந்து, அதனால இந்தியா மேலயும் மரியாதை வந்திருக்கும்.
சோ நம்ம கவுரவத்துக்கு ஒரு பங்கமும் வந்திருக்காது.

வால்பையன் said...

//ரொம்ப வருசமா மனசுக்குள்ள ஒரு கேள்வி
கெடந்து அரிச்சுகிட்டே இருக்குது .//

நாம தான் சொறிஞ்சுக்கோனும்
வேற யாரும் வர மாட்டாங்க

வால்பையன் said...

அறுபது வருஷத்துக்கு முன்னாடி அந்த மனுசன் சட்டை இல்லாம இருந்தாரு

இன்றைக்கும் கிராமங்கள்ல நிறைய காந்திகள் இருக்காங்க தெரியுமா?

குடுகுடுப்பை said...

அத விடுங்க, எல்லாரும் சட்டை போடுற மாதிரி பொருளாதார முன்னேற்றத்துக்கு ஏதாவது வழி பண்ண முடியுமா?

சிம்பா said...

ஜீவன் இந்த பதிவுக்கு ஒரு சிறிய விளக்கம்,

காந்தி அய்யா அந்த போராட்டத்தை தொடங்கிய வேளையில், நமது நாட்டில் உள்ள அனைத்து வகையான விளைநிலங்களையும் அழித்து பருத்தி மட்டுமே சாகுபடி செய்யுமாறு வெள்ளையர்கள் உத்தரவு போட்டனர். அதன் மூலம் இங்கு உள்ள விளை நிலங்கள் அனைத்தும் வீணாயின.. ஒரு முறை பருத்தி சாகுபடி செய்தால் அந்த நிலத்தில் வேறு எதுவும் போட முடியாது. மேலும் அந்த பருத்தியை கொண்டு செய்யப்பட்ட ஆடைகளை இங்கேயே விற்ப்பனை செய்தனர். அதன் மூலம் கொள்ளை லாபம் பார்த்தனர்.

இதை மக்களுக்கு உணர்த்தும் விதமாகவே அவர் தமது புற அழகை துறந்து, ராடினத்தை கையில் எடுத்தார். அந்நிய ஆடை எதிர்ப்பு போராட்டம் அதன் மூலமே உலகுக்கு தெரிந்தது. ஆகவே அவர் அவ்வாறு செய்ததில் எந்த வித தவறும் இருப்பதாக றனக்கு தோன்றவில்லை...

Jeevan said...

தன் சோந்த மண்ணில் சுதந்திரம் இல்லாமல், சுய மரியா-
தை இழந்து அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் இதை பற்றி-
யேல்லாம் சிந்தித்திருப்பார்களா என்று தெரியவில்லை.

தமிழ் அமுதன் said...

நன்றி! தாரணி பிரியா !
நன்றி!அமிர்தவர்ஷினி அம்மா!
நன்றி!அருண் ! சொறிஞ்சு கிட்டுதான் இருக்கோம்!
நன்றி! வருங்கால முதல்வர் அண்ணே !
நன்றி!சிம்பா!
நன்றி! ஜீவன் !

வாழ்க! காந்தீயம்!