எனக்கு புடிச்ச கோயம்புத்தூர்

வருங்கால முதல்வர்ல நம்ம நண்பர் ''குடுகுடுப்பை''
தஞ்சை பற்றி பதிவு போட அழைப்பு விடுத்திருந்தார்.
இப்போ அங்க கொங்கு நாட்டு ''மகேசும்''நெல்லை
''நசரேயனும்'' கலக்கிக்கிட்டு இருக்காங்க அதன் பிறகு
என் தஞ்சை பதிவ போடலாம்னு இருக்கேன்.

நம்ம ஊரபத்தி நாமளே எழுதுறது சிறப்புதான்!
ஆனா எங்க தஞ்சைய பத்தி வேற யாரவது புகழ்ந்து
பேசினா ரொம்ப சந்தோசமா இருக்கும்.
நான் ''கோவைல'' மூணு வருஷம் இருந்து இருக்கேன்.
அதுனால கோவை பத்தி ஒரு பதிவு போடனும்னு
கொஞ்ச நாளா ஒரு ஆசை அதான் இந்த பதிவு!

நான் பிறந்தது ''அந்தமான்ல'' அங்க,எழு ,எட்டு
வயசுவரை இருந்து இருப்பேன் அதன் பிறகு
எங்க ஊருக்கு வந்தாச்சு.படிச்சது ,வளர்ந்தது
எல்லாம் எங்க ஊருதான்.இப்போ சென்னைல
குடும்பத்தோடசெட்டில் ஆயாச்சு.பதிமூணு வருஷம் ஆச்சு!
இடைல பன்னண்டாவது முடிச்சுட்டு நகை தொழில்
கத்துக்க கோயம்புத்தூர் போய்இருந்தேன்,அங்கேயே
ஒரு மூணு வருஷம் இருந்தேன்.எல்லோருக்கும் தன்
சொந்த ஊரு சொர்க்கம்தான் எனக்கும் அப்படித்தான்
ஆனா என் சொந்த ஊருக்கு நிகரா நான் நேசிச்ச ஊரு
கோயம்புத்தூரு.இப்போகூட பாருங்க குடும்பம்,
புள்ள குட்டியோட தான் சென்னைல இருக்கேன் ஆனா?
கோவை மேல உள்ள அந்த பாசமும், நேசமும்
சென்னை மேல துளியும் வரல? அப்படி என்னதான்
இருக்கு கோயம்புத்தூர்ல? சொல்லுறேன் கேளுங்க!

என் அப்பாதான் கோவைக்கு அழைச்சிகிட்டு போனார்
என் அப்பா பம்பாய் ல இருந்ததால அங்க அவருக்கு
தெரிஞ்சவங்ககோவைல இருந்தாங்க அவங்க
கிட்டதான் என்னை அழைச்சுகிட்டுபோனார்.

கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் ல
எறங்கி டவுன் பஸ் ஸ்டாண்ட் க்கு போறோம்.
மழை வர்ற மாதிரி குளு.குளுன்னு இருக்கு, நானும்
அப்பாவும் அப்போதான் முதல் முறை அங்க போறது!
நாங்க போக வேண்டியது ''பெரிய கடை வீதி''கைல
விலாசம் இருக்கு.எந்த பஸ்ல போகனும்னு விசாரிக்கணும்.
எனக்கு அறிமுகம் இல்லாத நபர்கிட்ட விலாசம் விசாரிக்க
சின்ன எரிச்சல்!ஏன் அப்படின்னா ?அதுக்கு முன்னாடி சென்னைக்கு
அடிக்கடி போவேன் அப்போ யார்கிட்டயாவது விலாசம்
விசாரிச்சா என்னை பெரிய இவங்க மாதிரி அலட்சியமா
பதில் சொல்லுவாங்க செம கடுப்பா இருக்கும் .

இப்போ அங்க என் அப்பாதான் கேக்குறார் அதுக்கு ஒருத்தர்
அங்க போய் நில்லுங்க, உக்கடம் போற பஸ் வரும்
அதுல போங்க அப்படின்னு.விலாசம் விசாரிக்கும் போது
ஒருத்தர், இவ்ளோ அக்கறையா பதில் சொல்லுறாரே
அப்படின்னு எனக்கு சின்ன ஆச்சர்யம்!

பஸ்ல ஏறி உக்காந்தாச்சு கண்டக்டர் கிட்ட அப்பா
சொல்லுறார்நாங்க ஊருக்கு புதுசு பெரிய கடை வீதி
ஸ்டாப்ல எறக்கி விடுங்கஅப்படின்னு.
(எனக்கு கோவம் ஊருக்கு புதுசுன்னா யாராவது
மதிப்பாங்களா இதெல்லாம் போய் அவர் கிட்ட சொல்லிக்கிட்டு)
அதுக்கு அவர் சொல்லுறார் ...அப்படிங்களா!சரிங்க!
ஸ்டாப்வந்ததும் சொல்லுறேன் எறங்கிகுங்க
அப்படிங்குறார், அட ! எனக்கு இன்னும் ஆச்சர்யம்!
இதுக்கெல்லாம் மேலஎங்க முன்னாடி இருந்த ஒருத்தர்
ஏனுங்க!பெரிய கடைவீதியா போறீங்க?
நானும் அங்கதாங்க போறேன் வாங்க!
நானே இடம் காட்டுறேன் அப்படின்னு! அட என்ன
மக்கள் இவங்க? வந்து எறங்கி சில நிமிசத்துலே
புது ஊர் அப்படிங்கிற ஒரு பயம் போய் ஒரு உற்சாகம்
வந்துடுச்சி.

இப்படித்தான் என் கோவை வாழ்க்கை ஆரம்பம்,
முதல்ல ஏறங்கினப்போ மழை வர்ற மாதிரி இருந்துசின்னு
சொன்னேன்ல! இல்லங்க, அங்க எப்போதும் அப்படிதான்
இருக்கும் சும்மா குளு குளுன்னு !

கோவை தண்ணிய பத்தி சொல்ல வேண்டியது இல்ல
சிறுவாணி தண்ணின்னா உலக அளவில் புகழ் பெற்றது
முக்கியமா நான் சொல்ல விரும்புவது, அங்குள்ள மக்கள்!
ஏனுங்க! ஏனுங்க! அப்படின்னு அவங்க கூப்பிடுற
அந்த கொங்கு தமிழ கேட்டுகிட்டே இருக்கலாம்.
புதுசா போறவங்களுக்கு என்ன மரியாதை!

அருமையான ரசனை மிகுந்த மக்கள்!
வயசுல பெரியவங்க கூட சின்னவங்கள
வாங்க,போங்கன்னு அழைக்கிற அந்த அழகு!
நெறைய கத்துகிட்டேன் நான் அங்க இப்போகூட
நான் என்னை விட சின்னவங்கள கூட வாங்க,
போங்கன்னுதான் கூப்பிடுறேன்.

இன்னும் என்ன சொல்லுறதுன்னு யோசிக்கிறேன்!
எனக்கு தொழிலையும்,நல்ல பண்பையும் கத்து
கொடுத்த தங்க மான ஊரு அன்பாலயும்,பாசத்தாலயும்
நனைக்கிற மக்கள்.அடுத்த ஜென்மம் அப்படி இருந்தா
கோவைல தான் பொறக்கணும்.

நான் அங்க இருக்கும் போது வடகோவை மேம்பாலம்
கட்டிக்கிட்டு இருந்தாங்க அத கட்டி முடிச்சோன பார்க்க
ஆசைஇன்னும் வாய்ப்பு கிடைக்கல.

அப்புறம் முக்கியமான விஷயம்!

எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தப்போ
வீட்டுல சொல்லி கோவை பக்கம் பார்க்க சொன்னேன்
எதுக்கு அவ்ளோ தூரம்னு சொல்லி வேணாம்னு
சொல்லிட்டாங்கரொம்ப கம்பல் பண்ணினா
நான் அங்க யாரையும்லவ் பண்ணுறதாநெனைக்க
போறாங்கன்னு விட்டுட்டேன்.அப்படி அங்க மட்டும்
பொண்ணு அமைஞ்சு இருந்தா ''வத்தலோ'' ''தொத்தலோ''
யாரா இருந்தாலும் சரின்னுசொல்லி இருப்பேன் .

கோவைல இருந்தப்போ சாப்பாட்டுக்கு கூட
காசில்லாமநெறைய நாள் இருந்துருக்கேன்
ஆனாலும் அங்கவாழ்ந்ததுஒரு ''பொற்காலம் '' தான்
>

63 comments:

சரவணகுமரன் said...

உங்க கோயம்புத்தூர் பாசம் புல்லரிக்க வச்சிருச்சி...

சரவணகுமரன் said...

உங்க கோயம்புத்தூர் பாசம் புல்லரிக்க வச்சிருச்சி...

சரவணகுமரன் said...

அதுவும் அந்த மொழியை சும்மா சொல்ல கூடாது. ரொம்ப மரியாதையானது. "ஏனுங்க...வாங்க...போங்க..."ன்னு வார்த்தைக்கு வார்த்தை மரியாதை.

அன்புடன் அருணா said...

//கோவைல இருந்தப்போ சாப்பாட்டுக்கு கூட
காசில்லாமநெறைய நாள் இருந்துருக்கேன்
ஆனாலும் அங்கவாழ்ந்ததுஒரு ''பொற்காலம் '' தான்//

இப்படிப் பட்ட பொற்காலம் ஒவ்வொருவர் வாழ்விலும் இருந்திருக்கும் ஜீவன்.
அன்புடன் அருணா

தங்ஸ் said...

படிக்கப்படிக்க ரொம்ப சந்தோஷமா இருக்குங்க...நெம்ப நன்றிங்கோவ்..

அமுதா said...

/*அடுத்த ஜென்மம் அப்படி இருந்தா
கோவைல தான் பொறக்கணும்*/

ஆமாங்க... எவ்ளோ அழகான ஊர். எவ்ளோ இனிய மக்கள். நான் வளர்ந்தது பூரா அங்க தான். இப்ப் முழுசா சென்னை வந்தாச்சு. இப்பவும் கோவைனு நினைச்சா மனசு குளூகுளுனு இருக்கும்

Anonymous said...

Nice post.

நட்புடன் ஜமால் said...

\\அங்குள்ள மக்கள்!
ஏனுங்க! ஏனுங்க! அப்படின்னு அவங்க கூப்பிடுற
அந்த கொங்கு தமிழ கேட்டுகிட்டே இருக்கலாம்.\\

எனக்கு மிகவும் பிடித்த விஷயம்

நட்புடன் ஜமால் said...

\\அப்படி அங்க மட்டும்
பொண்ணு அமைஞ்சு இருந்தா ''வத்தலோ'' ''தொத்தலோ''
யாரா இருந்தாலும் சரின்னுசொல்லி இருப்பேன்\\

அண்ணா ...

ஜீவன் அண்ணா ...

அண்ணா ...

Anonymous said...

ஜீவன்,

கோவை மக்களின் உழைப்புக்கு சலிக்காத மனநிலையையும் பதிவு செய்வீங்கன்னு பார்த்தேன்.

கணபதி, சிங்காநல்லூர் பகுதியில் வீட்டு வராண்டாவில் ஒரு தடுப்புச் செய்து ஒரு லேத்தோ அல்லது அது சார்ந்த எதோ ஒன்றோ ஓடும். சுயதொழில் இங்கு பெரிதும் மதிக்கப் படுகிறது. வேலைக்குப் போகும் மாப்பிள்ளையய்விட சொந்தத் தொழில் செய்பவருக்கே முன்னுரிமை அளிப்பதுமிங்கேதான்.

வால்பையன் said...

//கோவைல இருந்தப்போ சாப்பாட்டுக்கு கூட
காசில்லாமநெறைய நாள் இருந்துருக்கேன்
ஆனாலும் அங்கவாழ்ந்ததுஒரு ''பொற்காலம் '' தான் //

அப்போ அந்த ஊர் எந்த அளவுக்கு உங்களிடம் நெருங்கி இருக்குன்னு இதன் மூலம் தெரியுது.

கிரி said...

//எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தப்போ
வீட்டுல சொல்லி கோவை பக்கம் பார்க்க சொன்னேன்
எதுக்கு அவ்ளோ தூரம்னு சொல்லி வேணாம்னு
சொல்லிட்டாங்கரொம்ப கம்பல் பண்ணினா
நான் அங்க யாரையும்லவ் பண்ணுறதாநெனைக்க
போறாங்கன்னு விட்டுட்டேன்.அப்படி அங்க மட்டும்
பொண்ணு அமைஞ்சு இருந்தா ''வத்தலோ'' ''தொத்தலோ''
யாரா இருந்தாலும் சரின்னுசொல்லி இருப்பேன்//

ஹா ஹா ஹா ஹா

எங்க ஊரை பற்றி பெருமையா கூறியதற்கு ரொம்ப நன்றிங்க. உண்மையில் கொங்கு மக்கள் ரொம்ப மரியாதையானவங்க, நீங்க கூறியது போல சின்னவங்களை கூட வாங்க போங்கன்னு தான் பேசுவாங்க. இல்லைன்னு என்ன கண்ணு! சொல்லு கண்ணுன்னு நம்மை புல்லரிக்க வைத்துடுவாங்க.

கோவை என்றாலே உடனே நினைவிற்கு வருவது குளுகுளு சீதோஷ்ண நிலையும், அன்னபூர்ணா சாம்பார் வடையும்..தற்போது சுவை குறைந்து விட்டாலும் இன்னும் நான் கோவை சென்றால் மறக்காமல் சாப்பிடுவேன்.

தற்போது சாலை அகலம் செய்ய வேண்டும் என்பதற்காக பல மரங்களை வெட்டி விட்டார்கள், மனதிற்கு மிக வருத்தமாக இருந்தது.

சந்தனமுல்லை said...

மரியாதையோட பழகுவாங்க-ன்ன்னு கேள்விப்பட்டதோட இல்லாம நேரில் உணர்ந்துமிருக்கிறேன்! என்னோட பெஸ்ட் பிரண்ட் இருக்கிறது கோவையில் தான்! ரொம்ப நல்ல ஊர்!

குடுகுடுப்பை said...

அன்னபூர்ணா சாம்பார் வடையும்..தற்போது சுவை குறைந்து விட்டாலும் இன்னும் நான் கோவை சென்றால் மறக்காமல் சாப்பிடுவேன்.//

பாவக்கா சிப்ஸும் நல்ல ருசி.

ராஜ நடராஜன் said...

சொந்த ஊர் சுகம் நன்றாகத்தான் இருக்கிறது.நன்றி.
தரமணியில் இப்படித்தான் ஒரு டீக்கடையில் ஒரு டீ கொடுங்கன்னு சொன்னதும் தம்பி கோயம்புத்தூரான்னு கேட்டாங்க:)

ராஜ நடராஜன் said...

//பாவக்கா சிப்ஸும் நல்ல ருசி.//

எங்கிட்ட யாரும் சொல்லவேயில்லை!

சிம்பா said...

ஜீவன் எங்க ஊரு மாதிரியே குழு குளுன்னு இருக்கு பதிவு.. அருமை அருமை... இந்த ஊரு பக்கம் வாழ்ந்து வேற ஊருக்கு வர்றதுக்கு கூட புடிக்கலை.. அதன் காரணமாவே சென்னை வந்து ரெண்டு நாள் கூட என்னால இருக்க முடியலை..

வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து விசயங்களும் இங்க இருக்கு.. அதே போல் அருமையான மக்கள்.. வாழ்வோ சாவோ... நம்ம வாழ்க்கை இங்க தான்.. :)))

நசரேயன் said...

அருமை ஜீவன், இன்னும் நிறைய எழுதுங்கள்

RAMYA said...

//
இன்னும் என்ன சொல்லுறதுன்னு யோசிக்கிறேன்!
எனக்கு தொழிலையும்,நல்ல பண்பையும் கத்து
கொடுத்த தங்க மான ஊரு அன்பாலயும்,பாசத்தாலயும்
நனைக்கிற மக்கள்.அடுத்த ஜென்மம் அப்படி இருந்தா
கோவைல தான் பொறக்கணும்.
//

ஜீவன், என்ன சொல்லறதுன்னே தெரியலை.
மனது மிகவும் நெகிழ்ந்து விட்டது. கோவையை பற்றி ரசனை மற்றும் பாராட்டு --> ரொம்ப பெருதன்மை உங்களக்கு, .
வாழ்க ஜீவன்.

RAMYA said...

/*அடுத்த ஜென்மம் அப்படி இருந்தா
கோவைல தான் பொறக்கணும்*/

அமாங்க ஜீவன் எனக்கு கூட அந்த ஊரு ரொம்ப பிடிக்கும்

தாரணி பிரியா said...

ஆஹா எங்க ஊரை பத்தி இத்தனை அழகா பதிவு போட்டிருக்கிங்களே ஜீவன். ரொம்ப சந்தோஷங்க.

நாங்க ரொம்ப பெருமை படற விஷயமே எங்க தமிழுக்குதான்.
எங்க போனாலும் ரெண்டு வார்த்தை பேசுனவுடனே நீங்க கோயமுத்தூர்காரங்களான்னு கேட்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குமுங்க.

எங்க ஊர்ல இருந்துட்டு வேற எந்த ஊருக்கு போனாலும் நீங்க எதையோ இழந்தது மாதிரிதான் இருக்கும். பொதுவா கோயமுத்தூர்க்கு வேலைக்குன்னு வர்றவங்க இங்கய செட்டில் ஆகத்தான் விரும்புவாங்க. எங்க ஊர் இயல்பு அப்படிங்க.

வடகோவை மேம்பாலம் பாக்கணுமா வாங்க வாங்க.

அப்புறம் வேலன் சார் சொன்ன மாதிரி எங்க ஊர்காரங்க உழைப்பு பத்தியும் சொல்லியிருக்கலாம்.

எல்லோரையும் தன்னோட சொந்த பந்தமா நினைக்கிறதுதான் எங்க ஊர்காரங்களோட ஸ்பெஷாலிட்டி.

புதியவன் said...

//அருமையான ரசனை மிகுந்த மக்கள்!
வயசுல பெரியவங்க கூட சின்னவங்கள
வாங்க,போங்கன்னு அழைக்கிற அந்த அழகு!//

கோவைல எனக்கு ரொம்பப் பிடுச்ச விசயம் இது...

ராமலக்ஷ்மி said...

என் கணவர் பொறியியல் பயின்றது கோவை பிஎஸ்ஜி-யில். கோவையைப் பற்றி எப்போதும் ரொம்ப உயர்வாகச் சொல்வார்.

Anonymous said...

வணக்குமுங்கோ ஜீவன்,
எங்க கோவைய பத்தி இந்த அளவு சொன்னதுக்கு ரொம்ப சந்தோசம்முங்கோ,
நீங்க வாங்க நாம வடகோவை பாலத்தை போய் பாக்கலமுங்கோ.......

தமிழ் said...

வாழ்த்துகள்

தொடர்ந்து எழதவும்

நட்புடன் ஜமால் said...

புரபைல் போட்டா நல்லயிருக்குங்கண்ணா

மங்கை said...

எங்க ஊரை பத்தி எழுதினதுக்கு நன்றிங்கோவ்... ஊரு பக்கம் போகனும் போல இருக்கு... கோவை கோவை தான்... பாட்டி கிட்ட திட்டு வாங்கவே அங்க போகலாம்..:-) திட்டறதுலே கூட அன்பிருக்கும்....

தீரன் said...

//அப்படி அங்க மட்டும்
பொண்ணு அமைஞ்சு இருந்தா ''வத்தலோ'' ''தொத்தலோ''
யாரா இருந்தாலும் சரின்னுசொல்லி இருப்பேன் //

ஏனுங்க கோவையை பற்றி நல்ல மதிப்பு வெய்ததற்கு மிக்க நன்றி...இருந்தாலும் எங்கள் மகளீரை வத்தல் என்றும் தொத்தல் என்றும் கூறியதை வன்மையாக கண்டிக்கறேன்...எங்க ஊரு அம்முணிகள் எல்லாம் உலக அழகிகள் என்றும் பறைசாற்ற கடமைப்பட்டுள்ளேன்... .

Poornima Saravana kumar said...

//அடுத்த ஜென்மம் அப்படி இருந்தா
கோவைல தான் பொறக்கணும்.
//

அவ்ளோ பிடிக்குமா எங்க ஊரு ??கேட்கவே சந்தோசமா இருக்குங்க அண்ணா:))

நான் நரேந்திரன்... said...

ரொம்பவும் நெகிழ்வாவும் சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்குங்க ஜீவன் ...நன்றி

தமிழ் அமுதன் said...

/// சரவணகுமரன் said...

உங்க கோயம்புத்தூர் பாசம் புல்லரிக்க வச்சிருச்சி..///

நம்புறேங்க அதான் ரெண்டுவாட்டி சொல்லி இருக்கீங்களே?

///அதுவும் அந்த மொழியை சும்மா சொல்ல கூடாது. ரொம்ப மரியாதையானது. "ஏனுங்க...வாங்க...போங்க..."ன்னு வார்த்தைக்கு வார்த்தை மரியாதை.//

உண்மை! உண்மை!! உண்மை!!! வருகைக்கு
நன்றி சரவண குமரன்!

தமிழ் அமுதன் said...

///அன்புடன் அருணா said...

//கோவைல இருந்தப்போ சாப்பாட்டுக்கு கூட
காசில்லாமநெறைய நாள் இருந்துருக்கேன்
ஆனாலும் அங்கவாழ்ந்ததுஒரு ''பொற்காலம் '' தான்//

இப்படிப் பட்ட பொற்காலம் ஒவ்வொருவர் வாழ்விலும் இருந்திருக்கும் ஜீவன்.
அன்புடன் அருணா///

வாங்க அருணா மேடம்!

ஆனா! ''அப்படிப்பட்ட'' ''பொற்காலம்''

அதை நினைக்கும் போது

இப்போது ஒரு தற்பெருமை தான்
தோன்றுகிறது!

தமிழ் அமுதன் said...

/// தங்ஸ் said...

படிக்கப்படிக்க ரொம்ப சந்தோஷமா இருக்குங்க...நெம்ப நன்றிங்கோவ்.//

வாங்க ''தங்ஸ்'' வந்ததுக்கு தாங்க்ஸ்!!

தமிழ் அமுதன் said...

/// அமுதா said...

/*அடுத்த ஜென்மம் அப்படி இருந்தா
கோவைல தான் பொறக்கணும்*/

ஆமாங்க... எவ்ளோ அழகான ஊர். எவ்ளோ இனிய மக்கள். நான் வளர்ந்தது பூரா அங்க தான். இப்ப் முழுசா சென்னை வந்தாச்சு. இப்பவும் கோவைனு நினைச்சா மனசு குளூகுளுனு இருக்கும்///

ஆமா அமுதா மேடம்! வந்ததுக்கு
நன்றி!

தமிழ் அமுதன் said...

/// அதிரை ஜமால் said...

\\அங்குள்ள மக்கள்!
ஏனுங்க! ஏனுங்க! அப்படின்னு அவங்க கூப்பிடுற
அந்த கொங்கு தமிழ கேட்டுகிட்டே இருக்கலாம்.\\

எனக்கு மிகவும் பிடித்த விஷயம்///

வருகைக்கு நன்றி ஜமால்!

///\\அப்படி அங்க மட்டும்
பொண்ணு அமைஞ்சு இருந்தா ''வத்தலோ'' ''தொத்தலோ''
யாரா இருந்தாலும் சரின்னுசொல்லி இருப்பேன்\\

அண்ணா ...

ஜீவன் அண்ணா ...

அண்ணா ... ///

;;;;))))

தமிழ் அமுதன் said...

//// வடகரை வேலன் said...

ஜீவன்,

கோவை மக்களின் உழைப்புக்கு சலிக்காத மனநிலையையும் பதிவு செய்வீங்கன்னு பார்த்தேன்.

கணபதி, சிங்காநல்லூர் பகுதியில் வீட்டு வராண்டாவில் ஒரு தடுப்புச் செய்து ஒரு லேத்தோ அல்லது அது சார்ந்த எதோ ஒன்றோ ஓடும். சுயதொழில் இங்கு பெரிதும் மதிக்கப் படுகிறது. வேலைக்குப் போகும் மாப்பிள்ளையய்விட சொந்தத் தொழில் செய்பவருக்கே முன்னுரிமை அளிப்பதுமிங்கேதான்.////

வாங்க வேலன் சார்! கோவை மக்கள் உழைப்பு
மட்டும் இல்ல மேலும் பல விசயங்கள
சொல்லாம விடுபட்டு போச்சு!

என் வேற பதிவுகள்ல விடுபட்ட
விசயங்கள சேர்த்துக்கிறேன்

நன்றி!

தமிழ் அமுதன் said...

/// வால்பையன் said...

//கோவைல இருந்தப்போ சாப்பாட்டுக்கு கூட
காசில்லாமநெறைய நாள் இருந்துருக்கேன்
ஆனாலும் அங்கவாழ்ந்ததுஒரு ''பொற்காலம் '' தான் //

அப்போ அந்த ஊர் எந்த அளவுக்கு உங்களிடம் நெருங்கி இருக்குன்னு இதன் மூலம் தெரியுது.///

வாங்க அருண்! கருத்துக்கு நன்றி!

தமிழ் அமுதன் said...

//// கிரி said...

//எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தப்போ
வீட்டுல சொல்லி கோவை பக்கம் பார்க்க சொன்னேன்
எதுக்கு அவ்ளோ தூரம்னு சொல்லி வேணாம்னு
சொல்லிட்டாங்கரொம்ப கம்பல் பண்ணினா
நான் அங்க யாரையும்லவ் பண்ணுறதாநெனைக்க
போறாங்கன்னு விட்டுட்டேன்.அப்படி அங்க மட்டும்
பொண்ணு அமைஞ்சு இருந்தா ''வத்தலோ'' ''தொத்தலோ''
யாரா இருந்தாலும் சரின்னுசொல்லி இருப்பேன்//

ஹா ஹா ஹா ஹா

எங்க ஊரை பற்றி பெருமையா கூறியதற்கு ரொம்ப நன்றிங்க. உண்மையில் கொங்கு மக்கள் ரொம்ப மரியாதையானவங்க, நீங்க கூறியது போல சின்னவங்களை கூட வாங்க போங்கன்னு தான் பேசுவாங்க. இல்லைன்னு என்ன கண்ணு! சொல்லு கண்ணுன்னு நம்மை புல்லரிக்க வைத்துடுவாங்க.

கோவை என்றாலே உடனே நினைவிற்கு வருவது குளுகுளு சீதோஷ்ண நிலையும், அன்னபூர்ணா சாம்பார் வடையும்..தற்போது சுவை குறைந்து விட்டாலும் இன்னும் நான் கோவை சென்றால் மறக்காமல் சாப்பிடுவேன்.

தற்போது சாலை அகலம் செய்ய வேண்டும் என்பதற்காக பல மரங்களை வெட்டி விட்டார்கள், மனதிற்கு மிக வருத்தமாக இருந்தத////

வாங்க கிரி! மிக்க நன்றி வருகைக்கும்
கருத்துக்கும்!!

தமிழ் அமுதன் said...

/// சந்தனமுல்லை said...

மரியாதையோட பழகுவாங்க-ன்ன்னு கேள்விப்பட்டதோட இல்லாம நேரில் உணர்ந்துமிருக்கிறேன்! என்னோட பெஸ்ட் பிரண்ட் இருக்கிறது கோவையில் தான்! ரொம்ப நல்ல ஊர்!///

வாங்க பப்பு அம்மா! நன்றி!

தமிழ் அமுதன் said...

///குடுகுடுப்பை said...

அன்னபூர்ணா சாம்பார் வடையும்..தற்போது சுவை குறைந்து விட்டாலும் இன்னும் நான் கோவை சென்றால் மறக்காமல் சாப்பிடுவேன்.//

பாவக்கா சிப்ஸும் நல்ல ருசி.///

வாங்க குடுகுடுப்பையாரே!நன்றி!

தமிழ் அமுதன் said...

/// ராஜ நடராஜன் said...

சொந்த ஊர் சுகம் நன்றாகத்தான் இருக்கிறது.நன்றி.
தரமணியில் இப்படித்தான் ஒரு டீக்கடையில் ஒரு டீ கொடுங்கன்னு சொன்னதும் தம்பி கோயம்புத்தூரான்னு கேட்டாங்க:)///

வாங்க ராஜ நடராஜன்! நன்றி!

/////பாவக்கா சிப்ஸும் நல்ல ருசி.//

எங்கிட்ட யாரும் சொல்லவேயில்லை! ///

ஏன் சொல்லல ?

தமிழ் அமுதன் said...

/// சிம்பா said...

ஜீவன் எங்க ஊரு மாதிரியே குழு குளுன்னு இருக்கு பதிவு.. அருமை அருமை... இந்த ஊரு பக்கம் வாழ்ந்து வேற ஊருக்கு வர்றதுக்கு கூட புடிக்கலை.. அதன் காரணமாவே சென்னை வந்து ரெண்டு நாள் கூட என்னால இருக்க முடியலை..

வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து விசயங்களும் இங்க இருக்கு.. அதே போல் அருமையான மக்கள்.. வாழ்வோ சாவோ... நம்ம வாழ்க்கை இங்க தான்.. :)))///

வாங்க சிம்பா! கொடுத்து வைச்ச ஆளுங்க
அனுபவிங்க!வாழ்த்துக்கள்! நன்றி !

தமிழ் அமுதன் said...

/// நசரேயன் said...

அருமை ஜீவன், இன்னும் நிறைய எழுதுங்கள்//

வாங்க நசரேயன்! மிக்க நன்றி!

தமிழ் அமுதன் said...

//// RAMYA said...

//
இன்னும் என்ன சொல்லுறதுன்னு யோசிக்கிறேன்!
எனக்கு தொழிலையும்,நல்ல பண்பையும் கத்து
கொடுத்த தங்க மான ஊரு அன்பாலயும்,பாசத்தாலயும்
நனைக்கிற மக்கள்.அடுத்த ஜென்மம் அப்படி இருந்தா
கோவைல தான் பொறக்கணும்.
//

ஜீவன், என்ன சொல்லறதுன்னே தெரியலை.
மனது மிகவும் நெகிழ்ந்து விட்டது. கோவையை பற்றி ரசனை மற்றும் பாராட்டு --> ரொம்ப பெருதன்மை உங்களக்கு, .
வாழ்க ஜீவன்.////

////*அடுத்த ஜென்மம் அப்படி இருந்தா
கோவைல தான் பொறக்கணும்*/

அமாங்க ஜீவன் எனக்கு கூட அந்த ஊரு ரொம்ப பிடிக்கும்///

மிக்க நன்றி ரம்யா!
வருகைக்கும்!
கருத்துக்கும்!

தமிழ் அமுதன் said...

/// தாரணி பிரியா said...

ஆஹா எங்க ஊரை பத்தி இத்தனை அழகா பதிவு போட்டிருக்கிங்களே ஜீவன். ரொம்ப சந்தோஷங்க.

நாங்க ரொம்ப பெருமை படற விஷயமே எங்க தமிழுக்குதான்.
எங்க போனாலும் ரெண்டு வார்த்தை பேசுனவுடனே நீங்க கோயமுத்தூர்காரங்களான்னு கேட்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குமுங்க.

எங்க ஊர்ல இருந்துட்டு வேற எந்த ஊருக்கு போனாலும் நீங்க எதையோ இழந்தது மாதிரிதான் இருக்கும். பொதுவா கோயமுத்தூர்க்கு வேலைக்குன்னு வர்றவங்க இங்கய செட்டில் ஆகத்தான் விரும்புவாங்க. எங்க ஊர் இயல்பு அப்படிங்க.

வடகோவை மேம்பாலம் பாக்கணுமா வாங்க வாங்க.

அப்புறம் வேலன் சார் சொன்ன மாதிரி எங்க ஊர்காரங்க உழைப்பு பத்தியும் சொல்லியிருக்கலாம்.

எல்லோரையும் தன்னோட சொந்த பந்தமா நினைக்கிறதுதான் எங்க ஊர்காரங்களோட ஸ்பெஷாலிட்டி.///

வாங்க தாரணி பிரியா!

கோவை மக்கள் உழைப்பை
மட்டுமல்ல வேறு பல விசயங்கள
போடணும்!

கண்டிப்பா போட்டுருவேன்
மிக்க நன்றி வருகைக்கு!

தமிழ் அமுதன் said...

// புதியவன் said...

//அருமையான ரசனை மிகுந்த மக்கள்!
வயசுல பெரியவங்க கூட சின்னவங்கள
வாங்க,போங்கன்னு அழைக்கிற அந்த அழகு!//

கோவைல எனக்கு ரொம்பப் பிடுச்ச விசயம் இது...//

வாங்க புதியவன் மிக்க நன்றி வருகைக்கும் !
கருத்துக்கும்!

தமிழ் அமுதன் said...

/// ராமலக்ஷ்மி said...

என் கணவர் பொறியியல் பயின்றது கோவை பிஎஸ்ஜி-யில். கோவையைப் பற்றி எப்போதும் ரொம்ப உயர்வாகச் சொல்வார்.///

மிக்க நன்றி! அம்மாவின் வருகைக்கும்
கருத்துக்கும்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா, நல்லாருக்கு உங்க கோவைப்பற்று.

இதுக்கெல்லாம் மேலஎங்க முன்னாடி இருந்த ஒருத்தர்
ஏனுங்க!பெரிய கடைவீதியா போறீங்க?
நானும் அங்கதாங்க போறேன் வாங்க!
நானே இடம் காட்டுறேன் அப்படின்னு! அட என்ன
மக்கள் இவங்க? //
இங்க நம்ம சென்னையிலும் சாரி உங்களுக்குதான் சென்னை பிடிக்காதே,
சரி சென்னையிலும் இப்படி இருக்காங்க, ஆனா பாருங்க, இப்படி சொன்னா கேக்குற ஜெனங்க நம்மள ”கேனப்பய”ன்னு நெனச்சிக்கிறாங்க, இவன் என்ன கேக்குற்துக்கு முன்னாடி முந்திரிக்கொட்டை மாதிரி சொல்றான், இப்படி சொல்றானே, இவன் கூட போனா, என்ன பண்ணுவானோ, இப்படியெல்லாம்.
உதவி செய்றவங்க எங்கேயும் இருக்காங்க, ஆனா ஒரு சின்ன மாற்றம், சூழ்நிலையும் ஒரு காரணம்.
நான் இந்த மாதிரி நிறைய பார்த்திருக்கேன்..,
தவறா சொல்லியிருந்தா மன்னிச்சுடுங்க.

ப்ரொஃபைலில் இருப்பது உங்களுடைய போட்டோவா, இருந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன், ஏன்னா, என் அண்ணன் ரமேஷ் (சித்தியின் மகன்) அவர் இதுபோலவே இருப்பார், போட்டோ பார்த்தவுடன் ஒரு நிமிஷம் அசந்தே போயிட்டேன், அவர் இப்போது இருப்பது ஹூப்ளியில்.

தமிழ் அமுதன் said...

///said...

வணக்குமுங்கோ ஜீவன்,
எங்க கோவைய பத்தி இந்த அளவு சொன்னதுக்கு ரொம்ப சந்தோசம்முங்கோ,
நீங்க வாங்க நாம வடகோவை பாலத்தை போய் பாக்கலமுங்கோ...///

நன்றி சார்! வருகைக்கும் கருத்துக்கும்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

கோயமுத்தூர் - கொங்கு தமிழ் எனக்கு பிடித்தமான ஒன்று.

முடிந்தால் பழமைபேசி அவர்களின் பதிவில் எனது பின்னூட்டங்களைப் படிக்கவும்.

தமிழ் அமுதன் said...

// திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

தொடர்ந்து எழதவும்//

நன்றி ''திகழ்மிளிர்'' நன்றி !

தமிழ் அமுதன் said...

/// அதிரை ஜமால் said...

புரபைல் போட்டா நல்லயிருக்குங்கண்ணா//

நிஜமாவா? ஜமால் ?
என்னை வைச்சு காமடி கீமடி?

தமிழ் அமுதன் said...

// மங்கை said...

எங்க ஊரை பத்தி எழுதினதுக்கு நன்றிங்கோவ்... ஊரு பக்கம் போகனும் போல இருக்கு... கோவை கோவை தான்... பாட்டி கிட்ட திட்டு வாங்கவே அங்க போகலாம்..:-) திட்டறதுலே கூட அன்பிருக்கும்..///.

வாங்க மங்கை மேடம்! வருகைக்கு நன்றி!

இப்போகூடவா? பாட்டிகிட்ட திட்டு வாங்குறீங்க ?

தமிழ் அமுதன் said...

///தீரன் said...

//அப்படி அங்க மட்டும்
பொண்ணு அமைஞ்சு இருந்தா ''வத்தலோ'' ''தொத்தலோ''
யாரா இருந்தாலும் சரின்னுசொல்லி இருப்பேன் //

ஏனுங்க கோவையை பற்றி நல்ல மதிப்பு வெய்ததற்கு மிக்க நன்றி...இருந்தாலும் எங்கள் மகளீரை வத்தல் என்றும் தொத்தல் என்றும் கூறியதை வன்மையாக கண்டிக்கறேன்...எங்க ஊரு அம்முணிகள் எல்லாம் உலக அழகிகள் என்றும் பறைசாற்ற கடமைப்பட்டுள்ளேன்//

வாங்க தீரன்! நான் என்ன கோவைல பொண்ணுங்க
அழகா இருக்க மாட்டங்க அப்படியா சொன்னேன் ?
எனக்கு வத்தலோ தொத்தலோ போதும்னுதான்
சொன்னேன்!

வருகைக்கு ரொம்ப நன்றி !

தமிழ் அமுதன் said...

///PoornimaSaran said...

//அடுத்த ஜென்மம் அப்படி இருந்தா
கோவைல தான் பொறக்கணும்.
//

அவ்ளோ பிடிக்குமா எங்க ஊரு ??கேட்கவே சந்தோசமா இருக்குங்க அண்ணா:))///

ஆமாங்க! தங்கச்சி உங்க ஊரு எனக்கு அவ்ளோ புடிக்கும்!
நன்றி வருகைக்கு!

தமிழ் அமுதன் said...

// Naren said...

ரொம்பவும் நெகிழ்வாவும் சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்குங்க ஜீவன் ...நன்றி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நரேன்!

தமிழ் அமுதன் said...

/// அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா, நல்லாருக்கு உங்க கோவைப்பற்று.

இதுக்கெல்லாம் மேலஎங்க முன்னாடி இருந்த ஒருத்தர்
ஏனுங்க!பெரிய கடைவீதியா போறீங்க?
நானும் அங்கதாங்க போறேன் வாங்க!
நானே இடம் காட்டுறேன் அப்படின்னு! அட என்ன
மக்கள் இவங்க? //
இங்க நம்ம சென்னையிலும் சாரி உங்களுக்குதான் சென்னை பிடிக்காதே,
சரி சென்னையிலும் இப்படி இருக்காங்க, ஆனா பாருங்க, இப்படி சொன்னா கேக்குற ஜெனங்க நம்மள ”கேனப்பய”ன்னு நெனச்சிக்கிறாங்க, இவன் என்ன கேக்குற்துக்கு முன்னாடி முந்திரிக்கொட்டை மாதிரி சொல்றான், இப்படி சொல்றானே, இவன் கூட போனா, என்ன பண்ணுவானோ, இப்படியெல்லாம்.
உதவி செய்றவங்க எங்கேயும் இருக்காங்க, ஆனா ஒரு சின்ன மாற்றம், சூழ்நிலையும் ஒரு காரணம்.
நான் இந்த மாதிரி நிறைய பார்த்திருக்கேன்..,
தவறா சொல்லியிருந்தா மன்னிச்சுடுங்க.

ப்ரொஃபைலில் இருப்பது உங்களுடைய போட்டோவா, இருந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன், ஏன்னா, என் அண்ணன் ரமேஷ் (சித்தியின் மகன்) அவர் இதுபோலவே இருப்பார், போட்டோ பார்த்தவுடன் ஒரு நிமிஷம் அசந்தே போயிட்டேன், அவர் இப்போது இருப்பது ஹூப்ளியில்.////

வாங்க அமிர்த வர்ஷினி அம்மா!

சென்னையிலும் நல்லவங்க இருக்காங்க
நான் இல்லேன்னு சொல்லல!

அவங்க தங்கள் நல்ல குணத்த
வெளிப்படுத்த முடியாததற்கு
சூழ் நிலையும் காரணம் நீங்க சொல்லுறது
சரிதான்!

அப்புறம் அந்த போட்டோல இருக்குறது
நானேதான் உங்க அண்ணா போல இருக்கேனா
அட! ரொம்ப சந்தோசம்!

பழமை பேசி யில் உங்க பின்னூட்டங்கள
படிக்கிறேன்

நன்றி! நன்றி!

Divya said...

\\விலாசம் விசாரிக்கும் போது
ஒருத்தர், இவ்ளோ அக்கறையா பதில் சொல்லுறாரே
அப்படின்னு எனக்கு சின்ன ஆச்சர்யம்!\\

எங்கூர் காரங்க ரொம்பபப....நல்லவங்க:))
மரியாதை தெரிஞ்ச ஊர்காரங்க!!

பதிவு...ரொம்ப பிடிச்சிருக்கு, கோவை பத்தி எழுதியிருந்ததால்:)))

தமிழ் அமுதன் said...

/// Divya said...

\\விலாசம் விசாரிக்கும் போது
ஒருத்தர், இவ்ளோ அக்கறையா பதில் சொல்லுறாரே
அப்படின்னு எனக்கு சின்ன ஆச்சர்யம்!\\

எங்கூர் காரங்க ரொம்பபப....நல்லவங்க:))
மரியாதை தெரிஞ்ச ஊர்காரங்க!!

பதிவு...ரொம்ப பிடிச்சிருக்கு, கோவை பத்தி எழுதியிருந்ததால்:)))//

நன்றி திவ்யா வருகைக்கு!

Geetha6 said...

சரியா சொன்நீர்கள் தமிழ் அமுதன்!

manjoorraja said...

நானும் பல ஊர்கள் சுத்தியிருக்கேன். ஆனால் கோவை தான் ரொம்பவும் பிடிச்சிருக்கு. இப்ப அங்கேயே கிட்டத்தட்ட செட்டிலும் ஆகிகிட்டிருக்கேன்.

நல்ல பதிவு

manjoorraja said...

கோவையில் பல உணவகங்களில் அருமையான உணவும் கிடைக்கும்.

கடந்த 50 வருடங்களாக பிரபலமாக இருக்கும் அங்கண்ண விலாஸ் பிரியாணி கடையில் சாப்பிட்டிருக்கிறீர்களா? வெறைட்டி ஹால் ரோடு டிலைட் தியேட்டர் எதிரில் கொஞ்சம் தள்ள் இருக்கும்.

RAGUNATHAN said...

//இப்போ அங்க என் அப்பாதான் கேக்குறார் அதுக்கு ஒருத்தர்
அங்க போய் நில்லுங்க, உக்கடம் போற பஸ் வரும்
அதுல போங்க அப்படின்னு.விலாசம் விசாரிக்கும் போது
ஒருத்தர், இவ்ளோ அக்கறையா பதில் சொல்லுறாரே
அப்படின்னு எனக்கு சின்ன ஆச்சர்யம்!//

இது உங்களுக்கு மட்டுமில்ல நண்பரே... என்னுடைய மத்தியப் பிரதேச நண்பர் ஒருவருக்கும் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது... அப்படிப்பட்ட ஊர் கோவை...இல்லையில்லை..மொத்த கொங்கு மண்டலமும்தான்...எங்க ஊரப் பத்தி எழுதி புல்லரிக்க வச்சுட்டீங்க...