பயங்கரவாதம் (முனிவரும், கொட்டும் தேளும்)

எல்லோருக்கும் தெரிஞ்ச கதை ஒன்னு

ஒரு ஊருல ஒரு முனிவரும் அவருக்கு சில
சீடர்களும் இருந்தாங்க.ஒரு வாட்டி அந்த
முனிவர் ஒரு குளத்துல தன்
சீடர்களோட
குளிச்சுகிட்டு இருந்தாராம்.அப்போ தண்ணில
ஒரு ''தேளு'' தத்தளிச்சிகிட்டு இருந்திச்சாம்
அத பார்த்த முனிவர் அந்த தேள கைல எடுத்து
கரைல விட்டாராம் கைல எடுக்கும் போது
தேளு கைல ''கொட்டிச்சாம்'' அத பொறுத்துகிட்டு
கரைல விட்டாராம்.கொஞ்ச நேரம் கழிச்சு
அந்த தேளு மறுபடியும் தண்ணிக்குள்ள வந்துச்சாம்
அந்த முனிவர் மீண்டும் அத புடிச்சு கரைல
விட்டாராம் அப்போதும் அந்த தேளு அவர் கைல
கொட்டிச்சாம் பொறுத்துகிட்டு கரைல விட்டாராம்.
இப்படியே நெறைய தடவை ஆச்சு.

இத பார்த்த அவரது சீடர்கள் கேக்குறாங்க ஏன் ?
அந்த தேள்தான் கொட்டுதே அத கொன்னுட்டா
என்ன? அதுக்கு அந்த முனிவர் சொன்னாராம்
''கொட்டுறது தேளோட குணம் அத காப்பாத்துறது
என்னோட குணம்''
அப்படின்னு உடனே அவரது
சீடர்கள் ஆகா!ஓஹோன்னு! புகழ்ந்தாங்கலாம்
அந்த முனிவரை!

சரி! முனிவர் மகா புருசர் தேள் கொட்டினத
பொறுத்துகிட்டார்.. ஆனா அவரால் காப்பாற்ற
பட்ட தேள் அவர் சீடர்களை கொட்டிஇருந்தா?
கரைல இருக்குற மற்ற மக்களை கொட்டி இருந்தா?


இப்படித்தான் ஆச்சு நம்ம நிலைமை! நம்ம நாட்டில
''மஹா'' மனது படைத்த பெரியவர்கள் தங்கள்
பெரிய மனிதாபிமானிகள்,உயர்ந்த குணம்
படைத்தவர்கள் என்ற ஒரு ''இமேஜ்'' க்குகாக
தேள் போல இருந்த தீவிரவாதிகளை காப்பாத்தி
விட்டுட்டு நல்ல பெயரோட செத்து போய்ட்டாங்க
ஆனா அந்த தேள் இப்போ குட்டி போட்டு நல்லா
பெருகி நம்ம எல்லோரையும் கொட்டிகிட்டு இருக்கு!

எல்லாம் நம்ம தலை விதி!!

''ஊடு பூந்து அடிச்சுட்டான்'' பாகிஸ்தான் காரன்
தீவிரவாதிகள எங்க கிட்ட ஒப்படைங்கன்னு
பாகிஸ்தான் கிட்ட கெஞ்சுது நம்ம அரசு!


என்னமோ....
''புது பொண்டாட்டிகிட்டமுத்தம் கேட்டு
கெஞ்சுற புருஷன் காரன் மாதிரி ''


போர் தொடுக்கனும்னு ஒரு பேச்சு அடிபடுது,
எதோ ஒரு தீவிர வாத அமைப்பு செய்த செயலுக்காக
அவசரப்பட்டு போர் தொடுக்க கூடாது அப்படின்னும்
ஒரு சாரார்!

நமக்கும் பாகிஸ்தானுக்கும் தீர்க்க படாத, தீர்க்க
பட வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு!

பாகிஸ்தான் ஆக்கிரமிச்சு வைச்சு இருக்கிற காஸ்மீர்
பகுதிய மீட்கணும் அதுக்கு போர் ஒண்ணுதான் வழி!

போர் தொடுக்க இதுபோல சம்பவங்கள
ஏன் பயன்படுத்திக்கொள்ள கூடாது ??

( குமுற வைத்த அமிர்த வர்ஷினி அம்மாவுக்கு நன்றி)

>

30 comments:

வருங்கால முதல்வர் said...

பாகிஸ்தான் வளர்க்கும் தீவரவாதம் அவர்களது அழிவில் தான் கட்டுப்படும் அதற்கு இன்னும் 50 முதல் 60 ஆண்டுகள் ஆகும்.குழப்பத்தில்தான் தெளிவு பிறக்கும் அவர்கள் இன்னும் குழம்பவே இல்லை.

வைகரைதென்றல் said...

(போர் தொடுக்கனும்னு ஒரு பேச்சு அடிபடுது,
எதோ ஒரு தீவிர வாத அமைப்பு செய்த செயலுக்காக
அவசரப்பட்டு போர் தொடுக்க கூடாது அப்படின்னும்
ஒரு சாரார்!)
இப்ப இருக்கிறபொருளாதாரதில் போர் தொடுத்தால் நமக்கு தன் பெரும் பின்னடைவு ஏற்படும் நம் பொருளாதாரத்தை சீர்குலைகவே இந்த தாக்குதல், அதை தடுப்பது எப்படி என்றுதான் பார்க்கவேண்டுமே ஒழிய மேலும் நாம் தாக்குதலுக்கு முற்பட்டால் அவன் எண்ணம் நிறைவேறிவிடும்
நம் பொருளாதாரம் மற்றநாட்டைகாட்டிளும் மிகவலிமையனது அதன் மேல் ஏற்பட்ட பொறாமையின் வெளிபாடுதான் இந்த தாக்குதல்

PoornimaSaran said...

//''மஹா'' மனது படைத்த பெரியவர்கள் தங்கள்
பெரிய மனிதாபிமானிகள்,உயர்ந்த குணம்
படைத்தவர்கள் என்ற ஒரு ''இமேஜ்'' க்குகாக
தேள் போல இருந்த தீவிரவாதிகளை காப்பாத்தி
விட்டுட்டு நல்ல பெயரோட செத்து போய்ட்டாங்க
ஆனா அந்த தேள் இப்போ குட்டி போட்டு நல்லா
பெருகி நம்ம எல்லோரையும் கொட்டிகிட்டு இருக்கு!
//

சரியான ஆதங்கமே

PoornimaSaran said...

நமக்கும் பாகிஸ்தானுக்கும் தீர்க்க படாத, தீர்க்க
பட வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு!

சிம்பா said...

எனக்கு இது நீண்ட நெடுங்கால ஆசை..

ஆனா அங்கயும் அரசியல் வியாதிகள் பண்ற தருக்கு பொது மக்கள் பாதிக்கப்ட்றாங்க..

ஜீவன் போர் வேணாம். இன்னும் கொஞ்ச நாள்ல பொருளாதார சீரளிவுல அவுங்களே தூக்கு மாட்டிகுவாங்க..

புதியவன் said...

//சரி! முனிவர் மகா புருசர் தேள் கொட்டினத
பொறுத்துகிட்டார்.. ஆனா அவரால் காப்பாற்ற
பட்ட தேள் அவர் சீடர்களை கொட்டிஇருந்தா?
கரைல இருக்குற மற்ற மக்களை கொட்டி இருந்தா? //

சரியான கேள்வி...?

உணர்வுகள் வார்த்தைகளில் தெரிகிறது...
இதை தலைவர்கள் உணர வேண்டும்...

அமுதா said...

நல்ல கதை.

//போர் தொடுக்க இதுபோல சம்பவங்கள
ஏன் பயன்படுத்திக்கொள்ள கூடாது ??//
ஒரு ஆத்திரத்தில அப்படி தோன்றினாலும், போர் என்பது உடனடியா முடிவு எடுக்கிற விஷயம் இல்லை. ஏன்னா, அந்த போரினால் ஏற்படும் பல சீரழிவுகளைத் தாங்க நாம தயாரா இருக்கோமானு பார்க்கணும். அதுக்காக தீவிரவாத்தை விடக்கூடாது. தீவிரவாதம் தலையெடுக்க முடியாத அளவுக்கு அடிக்கணும். நமக்கு நல்ல தலைவர்கள் வேணும், இது மாதிரி விஷயங்களைக் கையாள... இருக்காங்களா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

''மஹா'' மனது படைத்த பெரியவர்கள் தங்கள்
பெரிய மனிதாபிமானிகள்,உயர்ந்த குணம்
படைத்தவர்கள் என்ற ஒரு ''இமேஜ்'' க்குகாக
தேள் போல இருந்த தீவிரவாதிகளை காப்பாத்தி
விட்டுட்டு நல்ல பெயரோட செத்து போய்ட்டாங்க
ஆனா அந்த தேள் இப்போ குட்டி போட்டு நல்லா
பெருகி நம்ம எல்லோரையும் கொட்டிகிட்டு இருக்கு!
ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க, இல்ல குமுறியிருக்கீங்க.


''ஊடு பூந்து அடிச்சுட்டான்'' பாகிஸ்தான் காரன்
தீவிரவாதிகள எங்க கிட்ட ஒப்படைங்கன்னு
பாகிஸ்தான் கிட்ட கெஞ்சுது நம்ம அரசு!

'' புது பொண்டாட்டிகிட்டமுத்தம் கேட்டு
கெஞ்சுற புருஷன் காரன் மாதிரி ''
ஆஹ், இது என்ன உதாரணம்
நல்லாதான் இருக்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

போர் தொடுக்க இதுபோல சம்பவங்கள
ஏன் பயன்படுத்திக்கொள்ள கூடாது ??

போரா வேணாமே
எவ்வளவு உயிர்கள் அழியும்
பாதிப்பு இருசாராருக்கும் இருக்கும்

அழிவு நேராமல் நாடுகளுக்குள்ளாகவே “நல்ல” தலைவர்களால் பேச்சுவார்த்தையின் மூலமாகவே இப்பிரச்சினை தீர்ந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்.

ம்ஹும், என் கனவோ வெறும் கானலாய்.

அதிரை ஜமால் said...

\\போர் தொடுக்கனும்னு ஒரு பேச்சு அடிபடுது,
எதோ ஒரு தீவிர வாத அமைப்பு செய்த செயலுக்காக
அவசரப்பட்டு போர் தொடுக்க கூடாது அப்படின்னும்
ஒரு சாரார்!\\

இப்படியே குழப்பத்துல நம்மல விட்டுட்டு இருக்காங்களே அந்த “மஹா” க்களை சீக்கிரம் கவனிக்கனும்.

அண்ணன் வணங்காமுடி said...

கவலை படாதீங்க நம்ம கேப்டன் கிட்ட சொன்னா...
பறந்து பறந்து எல்லாரையும் அவர் ஒருத்தரே காலி பண்ணிடுவார்...

நம்ம கைல ஒன்னும் இல்லைங்க...

RAMYA said...

//
இப்படித்தான் ஆச்சு நம்ம நிலைமை! நம்ம நாட்டில
''மஹா'' மனது படைத்த பெரியவர்கள் தங்கள்
பெரிய மனிதாபிமானிகள்,உயர்ந்த குணம்
படைத்தவர்கள் என்ற ஒரு ''இமேஜ்'' க்குகாக
தேள் போல இருந்த தீவிரவாதிகளை காப்பாத்தி
விட்டுட்டு நல்ல பெயரோட செத்து போய்ட்டாங்க
ஆனா அந்த தேள் இப்போ குட்டி போட்டு நல்லா
பெருகி நம்ம எல்லோரையும் கொட்டிகிட்டு இருக்கு!
//

அருமை அருமை ஜீவன்
இன்றைக்கு நாடு இருக்கும் நிலையை
கண்ணாடி போல் காட்டி இருக்கிறீர்கள்
உங்கள் குமுறல்கள் மிக நியாயமானதே

வால்பையன் said...

இது தான் சாக்குன்னு அவன் நியூக்கிளியர் குண்டு போட்டால் அவ்வளவு தான்

ஜீவன் said...

///வருங்கால முதல்வர் ..

பாகிஸ்தான் வளர்க்கும் தீவரவாதம் அவர்களது அழிவில் தான் கட்டுப்படும் அதற்கு இன்னும் 50 முதல் 60 ஆண்டுகள் ஆகும்.குழப்பத்தில்தான் தெளிவு பிறக்கும் அவர்கள் இன்னும் குழம்பவே இல்லை///


வாங்க முதல்வர்! ''அவர்கள் இன்னும் குழம்பவே இல்லை''

நூத்துல ஒரு வார்த்தைனு சொல்லுவாங்களே!

அது இதுதானோ? நன்றி!

ஜீவன் said...

///வைகரைதென்றல் said...

(போர் தொடுக்கனும்னு ஒரு பேச்சு அடிபடுது,
எதோ ஒரு தீவிர வாத அமைப்பு செய்த செயலுக்காக
அவசரப்பட்டு போர் தொடுக்க கூடாது அப்படின்னும்
ஒரு சாரார்!)
இப்ப இருக்கிறபொருளாதாரதில் போர் தொடுத்தால் நமக்கு தன் பெரும் பின்னடைவு ஏற்படும் நம் பொருளாதாரத்தை சீர்குலைகவே இந்த தாக்குதல், அதை தடுப்பது எப்படி என்றுதான் பார்க்கவேண்டுமே ஒழிய மேலும் நாம் தாக்குதலுக்கு முற்பட்டால் அவன் எண்ணம் நிறைவேறிவிடும்
நம் பொருளாதாரம் மற்றநாட்டைகாட்டிளும் மிகவலிமையனது அதன் மேல் ஏற்பட்ட பொறாமையின் வெளிபாடுதான் இந்த தாக்குதல்///வாங்க முருகன்! ஒவ்வொரு நிதி ஆண்டிலும்
நம் அரசு ராணுவத்திற்கு ஒதுக்கும் நிதியை
கவனித்து பாருங்கள்! போரினால் நமக்கு
பெரும் இழப்பு இல்லாமல் காத்து
கொள்ளலாம்!

ஆனால்! போரை எதிர் கொண்டால்
பாகிஸ்தான் நிலைமை என்னாகும்?

இது அந்த சைத்தான் களுக்கு புரியவில்லை!

ஜீவன் said...

/// PoornimaSaran said...

//''மஹா'' மனது படைத்த பெரியவர்கள் தங்கள்
பெரிய மனிதாபிமானிகள்,உயர்ந்த குணம்
படைத்தவர்கள் என்ற ஒரு ''இமேஜ்'' க்குகாக
தேள் போல இருந்த தீவிரவாதிகளை காப்பாத்தி
விட்டுட்டு நல்ல பெயரோட செத்து போய்ட்டாங்க
ஆனா அந்த தேள் இப்போ குட்டி போட்டு நல்லா
பெருகி நம்ம எல்லோரையும் கொட்டிகிட்டு இருக்கு!
//

சரியான ஆதங்கமே///

வாங்க பூர்ணிமா! நன்றி !/// நமக்கும் பாகிஸ்தானுக்கும் தீர்க்க படாத, தீர்க்க
பட வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு! ///

கண்டிப்பா!

ஜீவன் said...

/// சிம்பா said...

எனக்கு இது நீண்ட நெடுங்கால ஆசை..

ஆனா அங்கயும் அரசியல் வியாதிகள் பண்ற தருக்கு பொது மக்கள் பாதிக்கப்ட்றாங்க..

ஜீவன் போர் வேணாம். இன்னும் கொஞ்ச நாள்ல பொருளாதார சீரளிவுல அவுங்களே தூக்கு மாட்டிகுவாங்க..///

வாங்க! சிம்பா! கண்டிப்பா நம்ம ஆசை நிறைவேறும்!

நன்றி!

ஜீவன் said...

/// புதியவன் said...

//சரி! முனிவர் மகா புருசர் தேள் கொட்டினத
பொறுத்துகிட்டார்.. ஆனா அவரால் காப்பாற்ற
பட்ட தேள் அவர் சீடர்களை கொட்டிஇருந்தா?
கரைல இருக்குற மற்ற மக்களை கொட்டி இருந்தா? //

சரியான கேள்வி...?

உணர்வுகள் வார்த்தைகளில் தெரிகிறது...
இதை தலைவர்கள் உணர வேண்டும்..///

நன்றி புதியவன்! வருகைக்கும் கருத்துக்கும்!

ஜீவன் said...

/// அமுதா said...

நல்ல கதை.

//போர் தொடுக்க இதுபோல சம்பவங்கள
ஏன் பயன்படுத்திக்கொள்ள கூடாது ??//
ஒரு ஆத்திரத்தில அப்படி தோன்றினாலும், போர் என்பது உடனடியா முடிவு எடுக்கிற விஷயம் இல்லை. ஏன்னா, அந்த போரினால் ஏற்படும் பல சீரழிவுகளைத் தாங்க நாம தயாரா இருக்கோமானு பார்க்கணும். அதுக்காக தீவிரவாத்தை விடக்கூடாது. தீவிரவாதம் தலையெடுக்க முடியாத அளவுக்கு அடிக்கணும். நமக்கு நல்ல தலைவர்கள் வேணும், இது மாதிரி விஷயங்களைக் கையாள... இருக்காங்களா?///


வாங்க அமுதா மேடம்! போர் தொடுக்கவேண்டும்
என தோன்றியது ஒரு அவசரத்தில் அல்ல
ஒரு நிதானத்தில்! நமது இந்திய வரைபடத்தில்
காஸ்மீர் உள்ளது! அதில் ஒரு பகுதி
பாகிஸ்தானால் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது
அதை எப்படி மீட்பது? நாமாக போர் தொடுத்தால்
நமக்கு கெட்ட பெயர். இதுபோன்ற சம்பவங்களை
சாதகமாக ஏன் பயன்படுத்தி கொள்ள கூடாது?

கஷ்மீர் பகுதிக்காக நம் வாழ்நாளில் கண்டிப்பாக
ஒரு போரை சந்திக்க போகிறோம் இது உறுதி !!

நன்றி! வருகைக்கு!

ஜீவன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா

'' புது பொண்டாட்டிகிட்டமுத்தம் கேட்டு
கெஞ்சுற புருஷன் காரன் மாதிரி ''
ஆஹ், இது என்ன உதாரணம்
நல்லாதான் இருக்கு.///
;;;)))))


///போரா வேணாமே
எவ்வளவு உயிர்கள் அழியும்
பாதிப்பு இருசாராருக்கும் இருக்கும்

அழிவு நேராமல் நாடுகளுக்குள்ளாகவே “நல்ல” தலைவர்களால் பேச்சுவார்த்தையின் மூலமாகவே இப்பிரச்சினை தீர்ந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்.

ம்ஹும், என் கனவோ வெறும் கானலாய்.///

இந்தியனாய் இருந்தாலும் சரி
பாகிஸ்தானியாய் இருந்தாலும் சரி

எந்தஒரு அப்பாவிக்கும்
போரினால் சின்ன காயம் கூட வரக்கூடாது
இந்த கருத்தில் மாற்றம் இல்லை!

ஆனால்! இங்கே போரை தூண்டுவது நாம் இல்லை!


////ம்ஹும், என் கனவோ வெறும் கானலாய்////

(ஆகா ஆரம்பிச்சுட்டீங்களா)

ஜீவன் said...

// அதிரை ஜமால் said...

\\போர் தொடுக்கனும்னு ஒரு பேச்சு அடிபடுது,
எதோ ஒரு தீவிர வாத அமைப்பு செய்த செயலுக்காக
அவசரப்பட்டு போர் தொடுக்க கூடாது அப்படின்னும்
ஒரு சாரார்!\\

இப்படியே குழப்பத்துல நம்மல விட்டுட்டு இருக்காங்களே அந்த “மஹா” க்களை சீக்கிரம் கவனிக்கனும்.///


வாங்க ஜமால்! கண்டிப்பா அந்த ''மஹா'' க்கள்
எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும்
நாம எல்லாம் ஒன்னு சேர்ந்தா
ஊதி தள்ளிடலாம்!

ஜீவன் said...

/// அண்ணன் வணங்காமுடி said...

கவலை படாதீங்க நம்ம கேப்டன் கிட்ட சொன்னா...
பறந்து பறந்து எல்லாரையும் அவர் ஒருத்தரே காலி பண்ணிடுவார்...

நம்ம கைல ஒன்னும் இல்லைங்க///...

;;;;))))) சூப்பரு!

நன்றி அண்ணன் வணங்காமுடி!

ஜீவன் said...

/// RAMYA said...

////அருமை அருமை ஜீவன்
இன்றைக்கு நாடு இருக்கும் நிலையை
கண்ணாடி போல் காட்டி இருக்கிறீர்கள்
உங்கள் குமுறல்கள் மிக நியாயமானதே///


வாங்க ரம்யா! நன்றி வருகைக்கும்! கருத்துக்கும்!

ஜீவன் said...

/// வால்பையன் said...

இது தான் சாக்குன்னு அவன் நியூக்கிளியர் குண்டு போட்டால் அவ்வளவு தான்///


வாங்க அருண்!

இப்படி யோசிக்க வேண்டியது
பாகிஸ்தான் காரன்தான்

அப்படி ஒருவேள பாகிஸ்தான்காரன்
குண்டு போட்டா?

''அவ்வளவுதான்'' பாகிஸ்தான்

நன்றி!

ராமலக்ஷ்மி said...

கதை நல்லாத்தான் இருக்கு. ஆனா போர் தொடுக்கிற ஐடியா சரியா? நேரப் போகும் உயிரழப்புகளை நினைத்தால் ‘பகீர்’ன்னு இருக்கே? அமுதா சொன்ன மாதிரி திடமான முடிவுகளைச் சரிவர எடுக்கக் கூடிய தலைமை, தீவிர வாதத்தை முளையிலேயே நசுக்கிடக் கூடிய சாதுர்யம் கொண்டு உள்துறை, எப்போதும் நாட்டின் அமைதி, எல்லைப் பாதுகாப்பு ஆகியவற்றில் அலர்ட்நெஸ்.. இதற்கெல்லாம் வழியே இல்லையா? வருங்கால முதலமைச்சரே சொல்லுங்க உங்க கருத்தை.

சந்தனமுல்லை said...

//அண்ணன் வணங்காமுடி said...

கவலை படாதீங்க நம்ம கேப்டன் கிட்ட சொன்னா...
பறந்து பறந்து எல்லாரையும் அவர் ஒருத்தரே காலி பண்ணிடுவார்...//

ரிப்பீட்டு!!

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு பதிவு...கொட்டீங்க உங்க உள்லக்குமுறல்களை!!

ஜீவன் said...

/// ராமலக்ஷ்மி said...

கதை நல்லாத்தான் இருக்கு. ஆனா போர் தொடுக்கிற ஐடியா சரியா? நேரப் போகும் உயிரழப்புகளை நினைத்தால் ‘பகீர்’ன்னு இருக்கே? அமுதா சொன்ன மாதிரி திடமான முடிவுகளைச் சரிவர எடுக்கக் கூடிய தலைமை, தீவிர வாதத்தை முளையிலேயே நசுக்கிடக் கூடிய சாதுர்யம் கொண்டு உள்துறை, எப்போதும் நாட்டின் அமைதி, எல்லைப் பாதுகாப்பு ஆகியவற்றில் அலர்ட்நெஸ்.. இதற்கெல்லாம் வழியே இல்லையா? வருங்கால முதலமைச்சரே சொல்லுங்க உங்க கருத்தை.///

வாங்க அம்மா! தீவிரவாதிகள் தாக்கி விட்டார்கள்
அதனால் போர் தொடுக்கவேண்டும் என சொல்லவில்லை!

இழந்த கஷ்மீர் பகுதியை மீட்க இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள
வேண்டும் என்றுதான் சொன்னேன்!


இந்தியனாய் இருந்தாலும் சரி
பாகிஸ்தானியாய் இருந்தாலும் சரி

எந்தஒரு அப்பாவிக்கும்
போரினால் சின்ன காயம் கூட வரக்கூடாது
இந்த கருத்தில் மாற்றம் இல்லை!


ஆனால்! இழந்த கஷ்மீர் பகுதியை எப்படி மீட்பது?
போரினால்தான் மீட்க்கமுடியும்!
வேறு வழி இல்லை!

நன்றி அம்மா வருகைக்கு!

ஜீவன் said...

/// சந்தனமுல்லை said...

//அண்ணன் வணங்காமுடி said...

கவலை படாதீங்க நம்ம கேப்டன் கிட்ட சொன்னா...
பறந்து பறந்து எல்லாரையும் அவர் ஒருத்தரே காலி பண்ணிடுவார்...//

ரிப்பீட்டு!!////

;;;;))))

ஜீவன் said...

// சந்தனமுல்லை said...

நல்லாருக்கு பதிவு...கொட்டீங்க உங்க உள்லக்குமுறல்களை!!//


நன்றி, பப்பு அம்மா வருகைக்கு!