ஒரு கதை

இந்த கதை சமீபத்துல ஜெயா டிவி ல சொன்னாங்க..........

ஒரு ஊருல ஒரு புருஷன் பொண்டாட்டி, முணு புள்ளைங்கன்னு ஒரு குடும்பம் .

புருஷன் பொண்டாட்டிக்குள்ள அடிக்கடி சண்டைவரும் பொண்டாட்டிகாரி சொல்லுறா ,... இந்த வீட்டுக்கு நான்தான் அதிக வேலை செய்யுறேன் துணி தொவைக்கிறது,சமைக்கிறது ,புள்ளைங்கள கவனிக்கிரதுன்னு எனக்குதான் வேலை அதிகம்னு .
புருஷன் சொல்லுறான் .... நான்மட்டும் என்ன ? சும்மாவா இருக்கேன் ,இந்த குடும்பத்துக்காகத்தான் மாடா உழைக்கிறேன் வெயில்லயும் மழைல அலைஞ்சு திரிஞ்சு வேலை செய்யுறேன் அப்படின்னு ...


சண்டை அதிகரிச்சுகிட்டே போகுது இவங்க சத்தம் தாங்க முடியாம ,அவங்க முன்னாடி கடவுள் தோன்றுகிறார்!
ஏன் இப்படி சண்டை போடுறீங்க என்ன விவரம்ன்னு கேக்குறார் ?
ரெண்டுபேரும் நான்தான் அதிக வேலை செய்கிறேன் !!நான்தான் அதிக வேலை செய்கிறேன் !! அப்படின்னு சொல்லுறாங்க .

உடனே கடவுள் ஒரு யோசனை சொல்லுறார் ,,, அதாவது புருஷனை பொண்டாட்டியாகவும்,பொண்டாட்டியை புருஷனாகவும் மாத்திடுறேன் புருஷன் வேலைய பொண்டாட்டியும் ,பொண்டாட்டி வேலைய புருசனும் பாருங்க யாருக்கு வேலை அதிகம்னு உங்களுக்கே புரியும்னு சொல்லுறார் .


ரெண்டுபேரும் ஒத்துகிறாங்க !! அதுபோல கடவுள் ரெண்டுபேரையும் மாத்திடுறார்

இப்போ புருஷன் காரன் காலைல சீக்கிரம் எழுந்து புள்ளைங்கள ஸ்கூலுக்கு கிளப்பிவிட்டு ,டிபன் பண்ணி ,பாத்திரம் கழுவி , புருஷனை வேலைக்கு அனுப்பி ,வீடுபெருக்கி ,மதியம் சாப்பாடு பண்ணி , புள்ளைங்களுக்கு மதிய சாப்பாடு கொடுத்து , அப்புறம் மாலை ஆனதும் துணி தொவைச்சு ,அப்படி இப்படின்னு பெண்டு நிமிருது !!

கொஞ்சநாள் கழிச்சு புருஷன் ஒத்துகிறான் பொண்டாட்டிக்குதான் வேலை அதிகம்னு !

அவனால சமாளிக்க முடியாம கடவுள் கிட்ட போய் என்னால முடியல மறுபடியும் என்ன ஆம்பிளையா மாத்திடுங்கன்னு !

உடனே கடவுள் இதுக்குதான் அவங்க அவங்க வேலைய அவங்களே செய்யணும்

அடுத்தவங்க வேலையே சாதாரணமா நினைக்க கூடாதுன்னு சொல்லுறார் !!

அவனும் ஒத்துகிறான் ...................

சரி... கதை இதோட முடிஞ்சுதா ?
அதுதான் இல்ல !

சரி என்னை ஆம்புளையா மாத்துங்க ன்னு சொல்லுறான்
அதுக்கு கடவுள் என்ன சொன்னார் தெரியுமா ?
இப்போ நீ கர்ப்பமா இருக்கே இப்போ மாத்த முடியாது !! பிரசவம் முடிஞ்சு வா !!


............................
>

11 comments:

நட்புடன் ஜமால் said...

இத சமீபத்தில் தான் படிச்சேன் ...

நட்புடன் ஜமால் said...

ஆனா எங்கன்னு ஞாபகம் வரலை

நட்புடன் ஜமால் said...

\\அவங்க வேலைய அவங்களே செய்யணும்

அடுத்தவங்க வேலையே சாதாரணமா நினைக்க கூடாதுன்னு சொல்லுறார் !!\\

சரியான செய்தி ...

இராகவன் நைஜிரியா said...

இக்கரைக்கு அக்கரை பச்சை.

Vidhya Chandrasekaran said...

:))

ராமலக்ஷ்மி said...

//
அடுத்தவங்க வேலையே சாதாரணமா நினைக்க கூடாதுன்னு சொல்லுறார் !!//

மிகச் சரி, ஜீவன்!

அப்துல்மாலிக் said...

நல்ல தொகுப்பு கதை
எல்லா குடும்பத்திலேயும் இதே பிரச்சினைதான்

அப்துல்மாலிக் said...

//இதுக்குதான் அவங்க அவங்க வேலைய அவங்களே செய்யணும்
//

சரிதான்..

புதியவன் said...

கதை அருமை...

///அதுக்கு கடவுள் என்ன சொன்னார் தெரியுமா ?
இப்போ நீ கர்ப்பமா இருக்கே இப்போ மாத்த முடியாது !! பிரசவம் முடிஞ்சு வா !!//

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...

அமுதா said...

/*அவங்க அவங்க வேலைய அவங்களே செய்யணும்*/
அப்படி செஞ்சா பெண்ணுக்குதானே வேலை அதிகம். இது தானே பிரச்னை :-)



/*அடுத்தவங்க வேலையே சாதாரணமா நினைக்க கூடாது*/
மிகச்சரி

அமிர்தவர்ஷினி அம்மா said...

கேட்ட கதைய நல்லாவே சொல்லியிருக்கீங்க உங்க பாணியில.

\\அவங்க வேலைய அவங்களே செய்யணும்
ஆமாம்

அடுத்தவங்க வேலையே சாதாரணமா நினைக்க கூடாதுன்னு சொல்லுறார் !!\\
அதுக்கும் ஒரு ஆமா.

சரி... கதை இதோட முடிஞ்சுதா ?
அதுதான் இல்ல !
ஆமாம் அதுதான் இல்ல
இந்த வெபரம் தெரிஞ்சிருந்த்தும் தங்க்ஸ் & ரங்க்ஸ் ஓயாம சண்டை போட்டுக்கறாங்களே ஏன்.
உங்க விஷயத்துல மட்டும் சிங்க்ஸ் (சிங்கமணி)