ஒம்பேச்சு ''க்கா''

வெள்ளி கிழமை இரவு வீட்டை நெருங்குகிறேன் வண்டி சத்தம் கேட்டு அப்பா வந்தாச்சு! அப்பா வந்தாச்சுன்னு! கேட்டு மேல ஏறி நின்னு சத்தம் போடும் பெரிய பொண்ண காணும்!! சின்னவங்க மட்டும் அப்பா! ன்னு ஓடிவந்து காலை ட்டி புடிச்சுகிடாங்க! அம்மு எங்க? அதுக்குள்ளே துங்கிடுச்சா ன்னு தங்கமணிகிட்ட கேட்டா? பக்கத்து வீட்டு ஜனனி அம்முகூட ''காய்'' விட்டுடுச்சாம் அழுதுகிட்டு படுத்து இருக்கு சொல்ல! அவ்ளோதானா! ன்னு சொல்லி அம்முவ பார்த்தா அழுது முகமெல்லாம் வீங்கி போய் சோகமா படுத்து இருக்கு! கிட்ட போய் சமாதான படுத்தி தூங்கவைக்கிறதுக்குள்ள பெரிய பாடா போச்சு!!


சனி கிழமை கடைக்கு கிளம்புறேன்! கேட்டுக்கு வெளிய பக்கத்து வீட்டு ஜனனி இன்னும் ரெண்டு பிள்ளைங்க கூட எதோ விளையாடிகிட்டு இருக்கு! அம்மு கேட்டுக்குள்ள நின்னுகிட்டு எனக்கு டாட்டா காட்டுது முகத்த சோகமா உம்முன்னு வைச்சுக்கிட்டு! வண்டில போகும்போது யோசிச்சுகிட்டே போறேன் குழந்தைகள் சண்டை வந்து ரொம்ப.... ரொம்ப.....சாதாரண விஷயம்தான் அடிச்சுகிறதும் சேர்ந்துகிறதும்,சகஜமான விஷயம்! ஆனா? குழந்தைகளை பொறுத்தவரை அவங்களுக்கு அது பெரிய விஷயம் தானே? கடைக்கு வந்தபின்னரும் அம்முவின் டல்லான முகம் மீண்டும் மீண்டும் வந்து மனசில் சின்ன உறுத்தல்! ஒருவரை மற்றவர்கள் நிராகரித்தால் ஒரு சங்கடம் உருவாகுமே?அதுபோல தானே அம்முவுக்கும் இருக்கும்! இந்த நிலைமையை சமாளிக்கும் அல்லது தாங்கும் ஒரு திறன் அம்முவுக்கு இருக்குமா ? அம்முவின் முகம் என்னை இயல்பாக இருக்க விடவில்லை!




எப்போதும் ஒன்றாக விளையாடும் பிள்ளைகள் ஒரு பிள்ளை மட்டும் தனித்து விடப்பட்டால் ஒரு மன கஷ்டம் தோன்றதானே செய்யும்?

மதியம் சாப்பிட வீட்டிற்கு செல்ல! எப்போதும் மதியம் சாப்பாடு கொடுத்து அனுப்பும் தங்கமணி வீட்டிற்கு சாப்பிட வந்ததை சற்று அதிசயமாய் பார்க்க? அம்மு அச்சுவோடு விளையாடி கொண்டு இருக்க !! அம்மு ஜனனி கூட சேர்ந்துடுச்சா ன்னு தங்க மணிக்கிட்ட கேக்கவே கொஞ்சம் வெக்கமா இருக்கு சும்மாவே நம்மள வைச்சு காமடி பண்ணும் தங்கமணிக்கு சொல்லவே வேணாம்!


இருந்தாலும் கேக்குறேன் அம்முவும்,ஜனனியும் சேர்ந்துட்டாங்கலான்னு!
தங்கமணி என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு .....ம்ம்ம்ம் .....ரொம்ப.... முக்கியம்.... ன்னு சொல்ல! நானும் விடாம போய் ஜனனிய கூட்டிகிட்டு வாயேன் அம்முவ பாரு காலைல இருந்து டல்லா இருக்குன்னு சொல்ல!

உங்களுக்கு என்ன பைத்தியமா குழந்தைங்க அடிச்சுக்கும் சேர்ந்துக்கும் இதுங்களுக்கு என்ன நீங்க பஞ்சாயத்தா? அதுங்க கூட சேர்ந்தா கேட்டுக்கு வெளிய போய் வெளையாடும் நான் தேடி தேடி புடிக்கணும் இப்போதான்
வீட்டுக்குள்ளயே இருக்கு போய் வேலைய பாருங்க அம்மு என்ன டல்லவா? இருக்கு? நல்லாத்தான் இருக்கு பாருங்க ன்னு சொல்ல! அம்மு நல்லா சகஜமா இருக்குறது போல இருந்தாலும் என் கண்ணுக்கு என்னமோ டல்லாதான் தெரியுது!


அன்னிக்கு சாயங்காலம் வரை வீட்டுலையே இருந்து குழந்தைகள் கூட விளையாடிட்டு கடைக்கு வந்துட்டு நைட் வீட்டுக்கு போறேன்! அப்போவும் அம்மு முகத்துல சின்ன கவலை தெரியுது! ''சனி கிழமை நைட்'' நானும் தூங்கிடுறேன்!

ஞாயிறு காலை குழந்தைகள் சேர்ந்துட்டாங்கலானு ரகசியமா கவனிக்கிறேன் அப்படி ஒன்னும் தெரியல! அம்மு கவலை படக்கூடாதுன்னு! வண்டில வைச்சு வெளில கூட்டி போய் அதுக்கு புடிச்ச சில பொருள்கள வாங்கி கொடுத்து கூட்டி வரேன்.

மதியம் ஆச்சு நல்ல தூக்கம்!

தூங்கி எழுகிறேன் வீட்டு திண்ணைல குழந்தைகள் சத்தம்! அம்மு,ஜனனி எல்லாம் ஒன்னா விளையாடுறாங்க!;;))

என்ன? எல்லாம் ஒன்னு சேர்ந்தாச்சா ன்னு கேக்குறேன்?

ஆமாம்பா! நீ தூங்கிகிட்டு இருந்தில்ல அப்போவே நாங்க பழம் விட்டுடோம்னு அம்மு உற்சாகமாய் சொல்ல!

மனதில் இருந்த ஒரு சின்ன பாரம் நீங்கி உற்சாகம் பிறந்தது!

அதோடு ஞாயிறு இரவை உற்சாகமாய் கழிக்க ஆயத்தமானேன்!!
>

21 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

குழந்தைகளோட உலகம் மிக ஆச்சர்யமானது ஜீவன், இதை நான் இப்போது அமித்து வளர வளர புரிந்து கொண்டே வருகிறேன்.

ஒருவரை மற்றவர்கள் நிராகரித்தால் ஒரு சங்கடம் உருவாகுமே?அதுபோல தானே அம்முவுக்கும் இருக்கும்! இந்த நிலைமையை சமாளிக்கும் அல்லது தாங்கும் ஒரு திறன் அம்முவுக்கு இருக்குமா ? அம்முவின் முகம் என்னை இயல்பாக இருக்க விடவில்லை! //

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஆழமான அப்பா - மகள் பாசம்.
அழகான புரிதல்.

:)-

அமிர்தவர்ஷினி அம்மா said...

தங்க மணிக்கிட்ட கேக்கவே கொஞ்சம் வெக்கமா இருக்கு சும்மாவே நம்மள வைச்சு காமடி பண்ணும் தங்கமணிக்கு சொல்லவே வேணாம்! //

:)-

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப எதார்த்தமான விஷயம் அதைவிட ரொம்ப எதார்த்தமா சொல்லி இருக்கீங்க.

வண்டில போகும்போது யோசிச்சுகிட்டே போறேன் குழந்தைகள் சண்டை வந்து ரொம்ப.... ரொம்ப.....சாதாரண விஷயம்தான் அடிச்சுகிறதும் சேர்ந்துகிறதும்,சகஜமான விஷயம்! ஆனா? குழந்தைகளை பொறுத்தவரை அவங்களுக்கு அது பெரிய விஷயம் தானே?

ரொம்ப சரியா யோசிச்சி இருக்கீங்க. ஒரு விஷயம் நல்லா புரியுதுண்ணே. குழந்தைங்க மேல உங்களுக்கு உள்ள ஈடுபாடு, சிறு விஷயத்திலும் நீங்கள் செலுத்தும் கவனம், உங்க பசங்களுக்கு நீங்க நல்லா அப்பான்னு காமிக்குது. தந்தையர் தின வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

அடடா இதுவல்லாவா ஒரு தந்தையின் மனநிம்மதியை தரும்!

நட்புடன் ஜமால் said...

தந்தையர் தின நல் வாழ்த்துகள்.

நெகிழ்வாய் ஒரு பதிவு.

தாங்கள் சொல்லியிருப்பது போல் குழந்தைகள் சண்டை சிறிய விடயமென்றாலும், அவர்களின் சோக முகம் நம்மை இயல்பாய் இருக்க விடாது,

நட்புடன் ஜமால் said...

தங்க மணிக்கிட்ட கேக்கவே கொஞ்சம் வெக்கமா இருக்கு சும்மாவே நம்மள வைச்சு காமடி பண்ணும் தங்கமணிக்கு சொல்லவே வேணாம்!\\

அண்ணேன் நெம்ப நல்லவரு!

அமுதா said...

/*மனதில் இருந்த ஒரு சின்ன பாரம் நீங்கி உற்சாகம் பிறந்தது!
*/
:-)
m..குழந்தைகள் உலகம்.. சில வேளைகளில் நாம் உள் நுழையாது அவர்களைக் கவனிக்க வேண்டும். அவர்கள் அழுதாலும்... ஆனால் அவர்களுக்கு வாழ்க்கையைக் கற்றுத் தரும் தருணங்கள் இது போன்ற சின்ன சின்ன சண்டைகளும் மீண்டும் கூடி விளையாடுவதும். என்றாலும் "உம்" என்ற முகத்தைக் கண்டு மனம் அடித்துக் கொள்ளும். அழகாக உங்கள் உணர்வுகளை பதிவு செய்திருக்கிறீகள் ஜீவன். வாழ்த்துகள்

சந்தனமுல்லை said...

:-)

//ஆமாம்பா! நீ தூங்கிகிட்டு இருந்தில்ல அப்போவே நாங்க பழம் விட்டுடோம்னு அம்மு உற்சாகமாய் சொல்ல!//

சோ ஸ்வீட்!

RAMYA said...

இப்போதைக்கு ஓட்டும் உள்ளேன் ஐயாவும்.

நைட் கமெண்ட் போடறேன்.

ராமலக்ஷ்மி said...

குழந்தைகள் சண்டைதானே என லேசாக ஒதுக்கிடாமல் மகளுக்காகக் கவலைப்படும் அப்பா. வாழ்த்துக்கள் ஜீவன்.

Rajeswari said...

குழந்தைகள் உலகமே தனிதான்.வன்மம் அற்ற அன்பு பொதிந்திருக்கும் பருவம்..

யட்சன்... said...

ச்சின்ன பசங்களோட நெறய சகவாசம் வச்சிருக்கீங்க போல...

ஹி..ஹி...ம்ம்ம்ம்

இதுதான் சுகமான வாழ்க்கை...

மங்கை said...

எனக்கும் பல தடவை இது மாதிரி தோனி இருக்கு...

ஹ்ம்ம் இதே மாதிரி கபடம் இல்லாத மனசு பெரியவங்களுக்கு இருந்தா எவ்வ்ளோ நல்லா இருக்கும்

RAMYA said...

நிராகரிப்புகள் நமக்கே தாங்க மாட்டேங்குதே. இதில் குழந்தைகள் அவர்களுக்குள் ஏற்படும் நிராகரிப்புகள் சோகம்தான். அந்த மெல்லிய இழையோடிய உணர்வுகளை நீங்க துல்லியமா புரிந்து கொண்டு ஒரு பொறுப்பான தந்தையாய் உங்களின் முயற்சி எனக்கு மிகவும் பெருமையைத் தருகின்றது ஜீவன்.

அந்த பாசத்துடன் கூடிய தவிப்பு, குழந்தைகள் இன்னும் சேரவில்லையே என்ற பரிதவிப்பு, இப்போ செர்ந்திருப்பார்களோ என்று உங்கள் உள்ளே ஏற்படும் எதிர்பார்ப்பு. அருமை அருமை.

நீங்கள் தந்தை மட்டுமில்லை ஜீவன். தாயுமானவர் என்றுதான் சொல்ல வேண்டும். (இது புகழ்ச்சிக்காக சொல்லவில்லை.) அந்த பிஞ்சு குழந்தைகளின் சிறிய மனஸ்தாபத்தால் ஏற்பட்ட உங்களின் மன உளைச்சலும், நீங்கள் அவர்கள் இருவரும் சேர்வதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகளும் என்னை மிகவும் யோசிக்க வைத்தன. ஒரு தந்தைக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கின்றது என்று.

அதே போல் இவர்கள் சிறு குழந்தைகள்தானே! சண்டைகளும் சின்ன சின்ன மனஸ்தாபங்களும் சகஜம் என்று சாதரணமாக எடுத்துக் கொள்ளாமல், மிகவும் துல்லியமாக குழந்தையின் முகபாவத்தை வைத்துக் நிலவரம் இன்னும் கலவரமாகத்தான் இருக்கிறது என்று புரிந்து கொண்டு பரிசுகள் வாங்கிக் கொடுத்து படிக்கவே மனம் இனிக்கின்றது ஜீவன்.

உங்களைத் தந்தையாகப் பெற அம்மு மிகவும் கொடுத்து வைத்தவள்தான்.

RAMYA said...

//
தங்க மணிக்கிட்ட கேக்கவே கொஞ்சம் வெக்கமா இருக்கு சும்மாவே நம்மள வைச்சு காமடி பண்ணும் தங்கமணிக்கு சொல்லவே வேணாம்!
//

இந்த கூச்சம்தான் உங்களின் இந்த இடுகைக்கு சிகரம் வைத்தது போல் இருக்கின்றது ஜீவன் :)

அ.மு.செய்யது said...

ஒரு சிறுகதைய படிச்ச மாதிரி இருந்துதுங்க..

அ.மு.செய்யது said...

ஒரு சிறுகதைய படிச்ச மாதிரி இருந்துதுங்க..

நாமக்கல் சிபி said...

வந்துட்டம்ல!

மணிநரேன் said...

//ஆமாம்பா! நீ தூங்கிகிட்டு இருந்தில்ல அப்போவே நாங்க பழம் விட்டுடோம்னு அம்மு உற்சாகமாய் சொல்ல!//

அருமை.:)

துபாய் ராஜா said...

//ஆமாம்பா! நீ தூங்கிகிட்டு இருந்தில்ல அப்போவே நாங்க பழம் விட்டுடோம்னு அம்மு உற்சாகமாய் சொல்ல!

மனதில் இருந்த ஒரு சின்ன பாரம் நீங்கி உற்சாகம் பிறந்தது!

அதோடு ஞாயிறு இரவை உற்சாகமாய் கழிக்க ஆயத்தமானேன்!!//

அம்முவை விட ரொம்ப பாதிக்கப்பட்டது நீங்கதான் :))

harveena said...

superr annna,,, avanga epdi samathanm anaga nu konjam ketu solunga pls,,,