மரங்களை ரசிப்போம் வாருங்கள்!!!

இயற்கையின் படைப்புகளில் அனைத்துமே ரசிக்க கூடியதுதான்! மலைகள்,வானம்,மேகம்,அருவிகள்,றுகள்,நிலவு நட்சத்திரங்கள்,சூரியன்,கடல், மழை,பனி,காலை,மாலை,இரவு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்! இயற்கையின் டைப்புகளில் நம்மை மிகவும் வியக்க வைப்பது மரங்களும் கூடத்தான்! எத்தனை விதமான மரங்கள்? பூப்பூக்கும் மரங்கள்! காய் கொடுக்கும் மரங்கள்!கனி கொடுக்கும் மரங்கள்! நிழல் கொடுக்கும் மரங்கள்! அதிகமா நாம் மரங்களை பார்த்து ழகி விட்டதால் தை கவனிக்காமல் அதன் அழகினை ரசிக்காமல் விட்டு விடுகின்றோமோ தோன்றுகிறது!

நடமாடும் உயிரினங்களில் அவலட்சணமான! தொந்தி தொப்பையுடன்! கூடிய அருவெருக்க கூடிய சில வகை உயிரினங்களை காணலாம்! ஆனால் மரங்களை பாருங்கள் மிக நேர்த்தியான வகையில் செய்து வைத்தாற்போல அதன் அமைப்பும் வளர்ச்சியும் இருக்கும்!

மரங்களை வைத்து பதிவெழுத வேண்டும் வித விதமான மரங்களை படமெடுக்க வேண்டும் என நினைத்த பிறகு ,போன வாரம் ஊருக்கு சென்ற போது தஞ்சை -பட்டுக்கோட்டை இடையே பஸ்சில் சென்ற போது மரங்களை கவனித்தால் அடடா! எத்தனை எத்தனை விதமான மரவகைகள்
பஸ்சில் போனதால் எதையும் படமெடுக்க முடியவில்லை!

அடுத்த முறை ஊருக்கு போகும் போது நிறை மரங்களை பிடித்து வர வேண்டும்!

இப்போது வலையில் சுட்ட சில படங்களுடன் எங்க ஊரில் எடுத்த சில மரங்கள்!

மா மரம்

(வலைப்படம்)
மாமரம் என்றால் நினைவுக்கு வருவது!!! எங்க ஊரில் சித்திரை மாதம் துவங்க இருக்கும் நேரங்களில் இந்த ''மாம்பூ''வாசனை எங்கும் வீசும் சித்திரை மாதம் மாம்பூ வாசனை என்றால் ஊர் திருவிழா நினைவுக்கு வரும்! அப்புறம் பழைய சோற்றுக்கு துவர்ப்புடன் கூடிய உப்பில் போட்ட மாவடு!!
வேப்ப மரம்


(வலைப்படம் )
வீட்டில் யாருக்காவது அம்மை போட்டு இருந்தால் வாசலில் வேப்பிலை தொங்கும்! எனக்கு வேப்பமரம் என்றால் சின்ன வயதில் வேப்பங்கொட்டை பொறுக்கி விற்றதுதான் நினைவுக்கு வரும் அப்போ கிலோ ஒரு ரூபாய்!
புளிய மரம்

புளிய மரங்களை பார்க்கும்போது வயதான பெரிய மனிதர்களை பார்க்கும் ஒரு உணர்வு உண்டாகிறது! இப்போது இருக்கும் புளிய மரங்கள் எல்லாம் மிக வயதான மரங்களாக தோன்றுகிறது! புதிதாக யாரும் புளிய மரங்களை நடுவதாக தெரியவில்லை! இப்போது உள்ள ரங்களின் ஆயுள் முடிந்து விட்டால் அடுத்தடுத்த தலை முறையினருக்கு புளி கிடைக்குமா ??

பலா மரம்


பலா மரம் மிக உறுதியானது எளிதில் வளராது,பலா
பிஞ்சை எங்கூரு பக்கம்
பலா மூஸ் அப்படின்னு சொல்லுவாங்க!
அத புளி குழம்பு,கறி குழம்புல போட்டு சமைப்பாங்க நல்லா இருக்கும்!!

தென்னை மரம்



தென்னை மரத்த பத்தி என்ன சொல்ல! நெறை சொல்லலாம்! தென்னைய பெத்தா இளநீரு +கள்ளு, புள்ளைய பெத்தா கண்ணீரு! இப்போதைக்கு இதான்!

ஈச்சை மரம்

இந்த ஈச்சை மரத்தின் பழங்கள் நல்ல சுவையுடன்தான் இருக்கும். ஆனால் சதை பற்று இருக்காது! ஆனால் அதன் கொட்டை மட்டும் பேரீச்சம் பழ கொட்டை போல இருக்கும்!


பனை மரம்

அண்ணன் தம்பி போல இருக்குல்ல? பனை மரம்னா பனங்கள்ளு,நண்டு ,தோசை,கார சட்னி இதான் நினைவு வருது!

நாவல் பழ மரம்


ஊர் பக்கம் இருக்கும் நாவல் பழங்களுக்கு தனி சுவை உண்டு ! இப்போ நாவல் பழ சீசன் மரத்தடியில சின்ன பசங்க பழம் பொறுக்கிக்கிட்டு இருந்தாங்க!!


அரச மரம்

இது சின்ன சைஸ் மரம்! ''அரசன நம்பி புருசன கைவிடாதே'' அப்படின்னு ஒரு பழ மொழி இருக்குல்ல அத இப்படியும் சொல்லுறாங்க ''''அரசை நம்பி புருசன கைவிடாதே'' அப்படின்னு! அரச மரத்து காற்றை சுவாசிக்கும் போது பெண்களின் கர்ப்பப்பை வலிமை அதிகரிக்குமாம் அதனால் குழந்தை தங்காதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்! அதான் அரசை நம்பி புருசன கைவிடாதே!!
ஒதிய மரம்

இந்த மரம் எவ்ளோ பெருசா போனாலும் உறுதியா இருக்காது! அதான் ஒதியன் பெருத்தாலும் உத்திரத்துக்கு ஆகாதுன்னு சொல்லுறாங்க!!


கருவேல மரம்

இந்த கருவேல மரம் மருத்துவ குணம் வாய்ந்தது இதன் பட்டையில் இருந்து பல் பொடி தயார் பண்ணுறாங்க!

ரோட்டோரம் ஆலமரம்

பெரிய ஆல மரம் ஏதும் கண்ணுல மாட்டல!இங்க ஊருக்கு இங்க இருந்து ரெண்டு கிலோ மீட்டர்!!

ஆத்தங்கரை தேக்கு மரம்

இது எங்க ஊரு ஆறு இன்னும் தண்ணி வரல தண்ணி வந்து கொஞ்ச நாள்ல பாக்கணும் ! கரையில உள்ள தேக்கு மரம் எல்லாம் பச்ச பசேல்னு அடர்த்தியா ஆயிடும்! ரெண்டு பக்கமும் உள்ள தேக்கு மரங்கள் ஆத்தையே மூடினது போல இருக்கும் அப்போ மழை பெஞ்சா கூட ஆறு நனையாது!!

கூந்தல் பனை மரம்

இந்த கூந்தல் பனை மிக பிரம்மாண்டமா வளரும் இந்த படத்தில உள்ளது அந்த மரத்தின் கன்றுதான் இதுவே ஒரு பனை மரம் உயரம் இருக்கும்! இது எவ்ளோ உயரம் வளரும்னு கீழ உள்ள படத்த பாருங்க!


நடுவுல உயரமா நிக்குறது பட்டுப்போன கூந்தல் பனை மரம். முன்னாடி இந்த மரம் கம்பீரமா நின்னது பார்க்க பிரம்மாண்டமா இருக்கும்! பட்டுப்போன இந்த மரத்த சுத்தி அரசமரம் ஒன்னு நிக்குது பாருங்க அப்போ இதன் உயரம் எப்படி இருக்கும் ?
மூங்கிலும் நாங்களும்

கிண்டி பூங்காவில் எடுத்த படம்






>

28 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா! அருமை அண்ணா


அந்த புளிய மரம் ரோடு

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

excellent collection jeevan

புளிய மரங்களை பார்க்கும்போது வயதான பெரிய மனிதர்களை பார்க்கும் ஒரு உணர்வு உண்டாகிறது! //
வித்யாசமான உணர்வுங்க

இப்போது இருக்கும் புளிய மரங்கள் எல்லாம் மிக வயதான மரங்களாக தோன்றுகிறது! புதிதாக யாரும் புளிய மரங்களை நடுவதாக தெரியவில்லை! இப்போது உள்ள மரங்களின் ஆயுள் முடிந்து விட்டால் அடுத்தடுத்த தலை முறையினருக்கு புளி கிடைக்குமா ?? //

:(

தென்னை மரத்த பத்தி என்ன சொல்ல! நெறைய சொல்லலாம்! தென்னைய பெத்தா இளநீரு +கள்ளு, புள்ளைய பெத்தா கண்ணீரு! இப்போதைக்கு இதான்! //

இப்போதைக்கு மட்டுமல்ல எப்போதைக்கும் பொருந்தும் பழமொழி இது. சரிதானே ஜீவன் ஜி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

முருங்கை மரத்தை விட்டுடீங்க பாருங்க. எங்க வீட்டுல இருக்கற மரங்க அது. மூணு மரம் இருக்கு.
தயவு செய்து அத பத்தியும் போடுங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அப்போ மழை பெஞ்சா கூட ஆறு நனையாது!! //

கற்பனை செய்து பார்க்கும்போது ஆச்சரியமா இருக்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கடைசி போட்டோ கலக்கல்

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

அருமை.......நம் கிராமத்தைப் பார்த்துப் போல் உள்ளது நன்றி.

குடந்தை அன்புமணி said...

எல்லா மரங்களைப் பற்றியும் புகைப்படத்துடன் இடுகை. நாளைய வரலாறு இதைப் பார்த்து இதுதான் இந்த மரம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடைசி படம்...

வாழையடி வாழையோ...

Thamiz Priyan said...

Superappu! Punga maram enga? Athukku keeze padutha sema thookkam varum.... ;-))

இராகவன் நைஜிரியா said...

மரங்களைப் பற்றிய இடுகை.

அருமை அய்யா அருமை. கிராமங்களின் அழகே அதன் மரங்களித்தான் இருக்கின்றது.

பலா முசு... தஞ்சை பக்கத்தில் சொல்லப் படுகின்றவார்த்தை.

VASAVAN said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

VASAVAN said...

கிராமத்து மண் வாசனை வீசுகின்றது. சூப்பர். :-)

ப்ரியமுடன் வசந்த் said...

அருமையான மரக்கலை ரசனை ஜீவன்

sakthi said...

நல்ல பதிவு ஜீவன் அண்ணா

புகைப்படங்கள் அழகாய் உள்ளது

venkat said...

மரங்கள் ரசிப்பதற்கு மட்டுமல்ல அவற்றை நேசிக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும்.
மரங்கள் தான் நம்மை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது.

venkat said...

மரங்கள் ரசிப்பதற்கு மட்டுமல்ல அவற்றை நேசிக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும்.
மரங்கள் தான் நம்மை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது.

Unknown said...

// மா மரம் //

தலிவரே.... யூ மீன்... மாங்கா பிளானட்.....? வ்வ்வாவ்......!!!







// எனக்கு வேப்பமரம் என்றால் சின்ன வயதில் வேப்பங்கொட்டை பொறுக்கி விற்றதுதான் நினைவுக்கு வரும் அப்போ கிலோ ஒரு ரூபாய்! //


வேப்பம் ப்ரூட் ச்சோ ச்சுவீட்.....!!!







// புளிய மரம் /////


ஆ... அய்யய்யோ...... டெவில் ட்ரீ..... !!






// அடுத்தடுத்த தலை முறையினருக்கு புளி கிடைக்குமா ?? //

CH2+OOF -> ER^2+cO2 + NH47 = புளி கிரேவி .... வருங்கலத்துல புளி இப்புடித்தான் கெடைக்கும்....!!!







// பலா மரம் மிக உறுதியானது எளிதில் வளராது //



ஏனுங்கோ தலைவரே.... அவிக மம்மி காம்ப்ளான் குடுக்குலியா....???









// தென்னை மரம் //


வ்வாவ்..... வாட் எ பியூட்டிபுல் ட்ரீ.......!!!!








// ஆனால் அதன் கொட்டை மட்டும் பேரீச்சம் பழ கொட்டை போல இருக்கும்! //


நடிகர் கம்பவுண்டர்.குஜய் மாதிரி எல்லாத்துலையும் டப்பிங் பன்னீட்டாங்களோ.....??









// பனை மரம் //

வாவ்வ்..... பாம் ஜூஸ் ட்ரீ......








// மூங்கிலும் நாங்களும் //


குட்டீஸ் சோ ஸ்வீட்...!!!

வாழ்த்துக்கள்....!!!

PAISAPOWER said...

நமக்கு மரம்னா.....”செம கட்டை”...இந்த வார்த்தைதான் நியாபபத்துக்கு வருது...

ஒரு வேளை வயசுக்கோளாறா இருக்கும்னு நினைக்கிறேன்.

harveena said...

annaaa,, ellathayum vida,, kadasilla irukura kuty cheddi than ammsama iruku,,,, unga pasangala sonne :-)

அப்துல்மாலிக் said...

என்னை பதிவு மூலம் ஊருக்கு கூட்டிக்கினு போய்ட்டு வந்துட்டீங்க‌

அ.மு.செய்யது said...

ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சி கட்டுரையே எழுதிட்டீங்க ஜீவன்.

எத்தனை மரங்கள்....எவ்வளவு விளக்கங்கள்.

இந்த பதிவுக்கு பின்னாடி உங்களோட ஹாட்வொர்க் நல்லா தெரியுது.

பாராட்டுகள் !!!

Ezhilan said...

மரங்களின் படங்களும், அவற்றிற்கான விளக்கங்களும் நன்றாக இருந்தன.

S.A. நவாஸுதீன் said...

கலக்கலான பதிவு தல. பட்டுகோட்டையில் இருந்து தஞ்சாவூர் பைக்ல போனால் வெயில் தெரியாமலே போய் சேரலாம். ஊரு பக்கம் அப்படியே என்னை கொண்டு போயிட்டீங்க. ஒவ்வொரு மரத்தோட போட்டோவும் போட்டு அருமையா கமெண்ட்ஸும் போட்டு அசத்தலா ஒரு பதிவு. அதிரை-மதுக்கூர் ரோட்ல நிறைய புளியமரம் இருந்தது. இப்ப இருக்கான்னு தெரியல

அமுதா said...

/*அதிகமாக நாம் மரங்களை பார்த்து பழகி விட்டதால்...*/
???? அப்படீங்கறீங்க???

நல்ல பதிவு.
/*புளிய மரங்களை பார்க்கும்போது வயதான பெரிய மனிதர்களை பார்க்கும் ஒரு உணர்வு உண்டாகிறது*/
நீங்க சொன்ன பிறகு எனக்கு கூட அப்படி தான் தோன்றுகிறது.

நிறைய மரங்களை நினவிற்கு கொன்ண்டு வந்ததற்கு நன்றி

தாரணி பிரியா said...

எங்க ஊர் ஒரு காலத்துல இப்படித்தான் இருந்தது :(

kankaatchi.blogspot.com said...

பார்க்க பார்க்க குளுமையாய்
கொடிகள் படர கொழுகொம்பாய்
மனிதர்களுக்கும்,கால்நடைகளுக்கும் கடும் கோடையில் நிழலாய்
பலவிதமான பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் உறைவிடமாய்
அனைத்திற்கும் மேலாய்நீங்கள் வெளியேற்றும் கரிமில வாயுவை
உண்டு நீங்கள் உயிர் வாழ பிராண வாயுவை அளித்து
எங்களுக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் எங்களையே தியாகம் செய்த எங்களுக்கு
நன்றி கெட்ட நீங்கள் எங்களுக்கு செய்த வெகுமதி என்ன தெரியுமா?
அடுத்த வலைப்பூவில் பாருங்கள் .


சென்ற வலைப்பூவில் பசும் சோலையாக காட்சி தந்த
நாங்கள்தாம் இப்போது இந்த நிலைமைக்கு
வந்துவிட்டோம்
எந்த கொடுமையை செய்தது யார் தெரியுமா?
வேறு யாருமில்லை நீங்கள்தான்
உங்களை போன்ற நன்றி கெட்ட மனிதர்கள்தான்.
எங்களை அழித்துவிட்டு நீங்கள் மட்டும்
சுகமாக வாழமுடியும் என்று நினைக்கிறீர்களா?
நிச்சயம் முடியாது.

RAMYA said...

மரங்களின் படங்கள் அனைத்தும் அருமை ஜீவன்.

விளக்கமும் அருமை.

ஆனால் இந்த மரங்களின் அழகை எல்லாம் கிராமத்தில்தான் உணர முடியும்.

அப்புறம், அந்த கடைசி போட்டோ கலக்கல்ஸ் :))

பின்னோக்கி said...

//அப்போ மழை பெஞ்சா கூட ஆறு நனையாது!!

மிகவும் அருமையான வரிகளை, மிகவும் எளிதாக சொல்லிவிட்டீர்கள்.

நீங்கள் குறிப்பிட்ட ஒரிரண்டு மரங்களைத்தவிர அனைத்தையும் பார்த்திருக்கிறேன்.

புளிய மரத்தை பார்க்கும் போது எனக்கு சோம்பேறித்தனமாக இருக்கும். அதை நீங்கள் வயதானவர்களுக்கு ஒப்பிட்டது அருமை.

rajendran said...

படத்தில் கூந்தல் பனை என்று குறிப்பிட்டுள்ள மரத்தின் சரியான பெயர் தாலிப்பனை. பழங்காலத்தில் இந்த ஓலையில் எழுதுவது பெருமையாக கருதியுள்ளனர். இந்த ஓலையில் கணவன் மனைவி பெயரை எழுதி கழுத்தில் அணிந்துள்ளனர். அதுவே தாலி என்று தற்காலத்தில் தங்கத்தில் அணிகிறார்கள். தங்கள் பதிவிற்கு நன்றிகள்.