மார்கழி நினைவுகள்

மார்கழி அப்படின்னு சொல்லும்போதே மனசுல ஒரு ஜில்லும்,உடம்புல ஒரு குளிரும் உண்டாகுது ...! மார்கழியின் முழு அழகையும் அனுபவிக்கணும்னா அது எங்க ஊருமாதிரி ஒரு கிராமத்துலதான் முடியும்..! விநாயகனே வினை தீர்ப்பவனே இந்த பாட்டை எப்போ கேட்டாலும் மார்கழியின் அதிகாலை பொழுதுகள் நினைவுக்கு வந்துவிடும் எல்லா கோயில்களிலையும் இந்த பாட்டுடன்தான் துவங்கும் மார்கழி காலை.

மார்கழி கோலங்கள்

நான் சின்ன வயசு புள்ளயா இருந்தப்போ எங்க வீட்டுல கரண்ட் கிடையாது
அப்பக்கம் பக்கத்து வீடுகளிலையும் பெரும்பாலும் கரண்ட் இருக்காது .! தெருவில எல்லோரும் அதிகாலைல எந்திரிச்சு மண் எண்ணை விளக்கு வெளிச்சத்துல கோலம் போடுவாங்க நானும் சில சமயம் அந்த நேரத்துல எந்திரிச்சு எங்கம்மா கோலம் போடுறத வேடிக்கை பார்ப்பேன்..!

அப்புறம் கொஞ்ச வருஷம் கழிச்சு மெயின் ரோட்டுல உள்ள டீக்கடை க்கு தனியா போயி டீ வாங்கிட்டு வர்ற அளவுக்கு பெரிய பையனாயிட்டேன்.
காலைல கோலம் போடும் போது என்னைய எழுப்பி டீ வாங்கி வர சொல்லுவாங்க எந்திரிக்கவே மனசு இல்லாம எந்திரிச்சு ஒரு போர்வைய போர்த்திகிட்டு மெதுவா நடந்து போயி ஒரு சொம்புல வாங்கி வருவேன் .
வாதா மரத்து டீக்கடை அப்படின்னு ஒரு கடை இருக்கும் அதிகாலைலையே
நல்ல கூட்டம் இருக்கும் அந்த கடைல.


கோலம் போட்டு சாணியில புள்ளையார் செய்ஞ்சு கோலத்து நடுவில வைச்சு அதுமேல பரங்கி பூ வைப்பாங்க நான் சில சமயம் பரங்கி பூ பறிச்சு கொண்டுவருவேன். பரங்கி பூ காம்பு மெல்லிசா இருந்தா அந்தபூவில காய் காய்க்காது அந்த மாதிரிபூவதான் பறிக்க விடுவாங்க. சில பேரு பரங்கி பூ கூட நெறைய தும்பைபூவ பறிச்சு கொட்டி வைச்சு இருப்பாங்க தும்பை பூவ பறிக்க நெறைய பொறுமை வேணும் தும்பை செடி நல்லா பனியில நெனைஞ்சு இருக்கும் குளிரில பொறுமையா பறிக்கணும் தும்பைப்பூ அழகா வெள்ளயா இட்லி போல இருக்கும்.


மார்கழி காலை வெய்யிலுக்கு நெறைய வாடிக்கையாளர்கள் உண்டு..! குளிர் பொறுக்கமுடியாம வெய்யில் வந்தஉடன் வெய்யிலில் குளிர் காய்வது ஒரு சுகம் .மார்கழி காலை வெய்யிலுக்கு ஒரு நிறம் உண்டு மஞ்சள் கலந்த ஒரு பொன்னிறமாய் இருக்கும். பெரிய சிந்தனை வாதிபோல முகத்தை வைத்து கொண்டுவாய்திறந்து பேசகூட சோம்பல் பட்டு கொண்டு குளிர் காய்வதே ஒரு அலாதி சுகம் தான்.

பூ வாசம் வீசும் மார்கழி மாசம்

பொதுவாக கிராமப்புறங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு வாசனையை உணர முடியும். சித்திரை மாதத்தில் ஒரு வரட்சியுடன் கூடிய மாம்பூ,மற்றும் பனம்பூ வாசனை வீசும்.மழைகால மாதங்களில் சேற்று வாசனையுடன் கூடிய தவளைசத்தம் கேட்கும். மார்கழியில் ...... மழை பெய்யும்போது மண்வாசனை வருவதுபோல பனி பொழிவிலும் ஒருவகை மண்மணம் தோன்றும்..! அதுமட்டுமல்ல மார்கழியில் எல்லாவகை பூக்களுமே பூத்து குலுங்கும் . பெயர் தெரியாத பல காட்டுப்பூக்களும் பூத்து வாசனை வீசியபடி இருக்கும் .பனியில் நனைந்த புற்களும் ஒரு வாசனையை வெளிப்படுத்தும் இப்படி பனியில் நனைந்த மண்மணம்,ஒட்டுமொத்த பூக்களின் ஒரு கதம்ப மணம் ஈரமான புற்கள் வாசனை என மார்கழி முழுவதும் ஒரு ரம்மிய மணம்
வீசியபடி இருக்கும்.


நான் +2 படிக்கும் போது கடந்து போன மார்கழிய மறக்கவே முடியாது காலைல 5.30 க்கு டியூசன் னுக்கு போவேன் அது ஒரு பொற்காலம். மத்த நாள்களில் லேட்டா போனாலும் போவேன் ஆனா இந் மார்கழில மட்டும் சரியா அஞ்சு மணிக்கு எழுந்துடுவேன். காலைல அஞ்சு மணிக்கு எழுந்து குளிக்காம கொள்ளாம பல்லு வெளக்கி முகம் கழுவி பேர் அண்ட் லவ்லி போட்டுக்கிட்டு கிளம்பிடுவேன்.

பேர் அண்ட் லவ்லி யூஸ் பண்ண ஆரம்பிச்சது +1,+2 படிக்கும்போதுதான்
அப்போதான் முதன்முறையா பொம்பள புள்ளைங்களோடு சேர்ந்து படிச்சது .
ஆளு தேவாங்கு மாதிரி இருந்தாலும் மனசுக்குள் ஒரு ஹீரோன்னு நெனைப்பு அப்போ.

சரி விசயத்துக்கு வரேன் ..! மார்கழி காலைல தவறாம சீக்கிரம் எழுந்து போக காரணம் என்னன்னா ? நமக்கு வேண்டப்பட்ட புள்ளைங்க கோலம் போடுறத பார்க்கத்தான்...! லேட்டா போனா மிஸ் ஆயிடும்...! ஒரு பழைய சைக்கிள் வைச்சு இருந்தேன் நம்ம புள்ளைங்க போடுற கோலத்துல மட்டும் சைக்கிள் விடாம கொஞ்சம் ஒதுங்கி போனா அதுங்க நம்மள ஒரு தேங்க்ஸ் பார்வை பார்க்கும் பாருங்க அடடா ...! அதும் அந்த புள்ளைங்க நம்மள பார்க்கணும்னா நாம அந்த புள்ளைங்கள பார்க்க கூடாது ..! அந்த புள்ளைங்க போட்ட கோலத்த அட சூப்பரா இருக்கே ..! அப்ப்டிங்குரமாதிரி ஒரு லுக்கு உடனும் மறுநாள்ல இருந்து புள்ளைங்க நம்மள எதிர்பார்க் ஆரம்பிச்சுடும் ..!



டியுசனுக்கு நாங்கதான் குளிக்காம லுங்கி கட்டிக்கிட்டு போவோம் ஆனா பொம்பள புள்ளைங்க அப்படி இல்ல நல்லா குளிச்சுட்டு அதிகாலைலையே
ப்ரெஷ் ஆ ஜில்லுன்னு வருவாங்க அதுக்காகவே டியுசன மிஸ் பண்ண மாட்டோம்...!

ம்ம்ம் எல்லாம் போச்சு இப்போ கலண்டர பார்த்துதான் மார்கழி மாசம்னே தெரியுது ...!



.

>

22 comments:

டவுசர் பாண்டி... said...

நான் கூட ப்ளஸ் 2 படிக்கும் போது காலையில அஞ்சு மணிக்கு ட்யூசன் போனேன்....இதுக்காகவே

சைக்கிள் கதைகள்னு நெறயவே எழுதலாம்...ஹி...ஹி....

அ.மு.செய்யது said...

ரசனையான பதிவு ஜீவன்..!!

அதுவும் கரெக்ட்டா மார்கழி மாதத்தில பட்சிகள் கோலம் போட்டுட்ருக்கும் போது,
இன்னொரு புறம் கிறிஸ்மஸூக்கு சர்வீஸ்க்க்கு ஒரு குருப்பு போயிட்டுருக்கும்..

கவிதை !!!! பொங்கல்,கிறிஸ்துமஸ்,நீயு இயர்ன்னு பார்க்காம கலர் கலரா
எல்லா பண்டிகைகளுக்கும் கோலம் போடுறது ஹைலைட்.!!!

விஜய் said...

முதல்ல நமீதா

இப்ப மலரும் டியூஷன் நினைவுகளா

வர வர போக்கே சரியில்லையே

விஜய்

ப்ரியமுடன் வசந்த் said...

ரம்மியமான மாதம் மார்கழி இந்த மாதத்துக்காகவே 11 மாதங்கள் எப்போ கழியும்ன்னு இருக்கும் ஜீவன் அந்த காலைப்பனி ,அத்தோடு சூடா அம்மாவோட காபி , பக்கத்துவீட்டு அக்கா ரசனையா கலர் கலரா போடும் கோலம்,பெருமாள் கோவில் பிள்ளையார் எல்லாமே ரச்னையா இருக்கும்...

நீங்களும் ரொம்பவே ரசனையானவர்ன்னு நினைக்கிறேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

ரம்மியமான மாதம் மார்கழி இந்த மாதத்துக்காகவே 11 மாதங்கள் எப்போ கழியும்ன்னு இருக்கும் ஜீவன் அந்த காலைப்பனி ,அத்தோடு சூடா அம்மாவோட காபி , பக்கத்துவீட்டு அக்கா ரசனையா கலர் கலரா போடும் கோலம்,பெருமாள் கோவில் பிள்ளையார் எல்லாமே ரச்னையா இருக்கும்...

நீங்களும் ரொம்பவே ரசனையானவர்ன்னு நினைக்கிறேன்...

இராகவன் நைஜிரியா said...

அண்ணே சூப்பர்...

நானெல்லாம் ட்யூஷன் போனதில்லை. உங்க அனுபவம் சூப்பர்.

Rajeswari said...

நல்ல நினைவு பகிர்வு..

மார்கழி மாதத்து கதை எனக்கும் நிறைய இருக்கிறது..

இந்த பதிவை பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்துவிட்டன..

Rajeswari said...

நல்ல நினைவு பகிர்வு..

மார்கழி மாதத்து கதை எனக்கும் நிறைய இருக்கிறது..

இந்த பதிவை பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்துவிட்டன..

அமிர்தவர்ஷினி அம்மா said...

படிப்பவர்கள் அனைவருமே தத்தம் நினைவுகளை மீட்டெடுக்கச்செய்யும் பதிவு இது, ரொம்பவும் அழகா, மென்மையா பகிர்ந்திருக்கீங்க ஜீவன்.

படிக்க ரம்மியமா இருக்கு, மார்கழி மாச காலைப்பொழுதினைப்போலவே.

S.A. நவாஸுதீன் said...

செம குளிர்ச்சியான இடுகை தல. பழைய நினைவுகளை கிளரி விட்டுட்டீங்க போங்க. படிக்கும்போதே கண்முன்னாடி காட்சியை கொண்டுவந்துட்டீங்க.

எங்க பழைய வீட்டுக்கு முன்னாடி ஒரு பூவரசு மரம் இருக்கும். பனிபெய்யும் அதிகாலையில் செக்கச்செவேலென பூத்துக்குலுங்கும் அதை பார்க்கும்போதே மனதிற்கு அத்தனை சுகமாயிருக்கும்.

S.A. நவாஸுதீன் said...

/// நம்ம புள்ளைங்க போடுற கோலத்துல மட்டும் சைக்கிள் விடாம கொஞ்சம் ஒதுங்கி போனா அதுங்க நம்மள ஒரு தேங்க்ஸ் பார்வை பார்க்கும் பாருங்க அடடா ...! அதும் அந்த புள்ளைங்க நம்மள பார்க்கணும்னா நாம அந்த புள்ளைங்கள பார்க்க கூடாது ..! அந்த புள்ளைங்க போட்ட கோலத்த அட சூப்பரா இருக்கே ..! அப்ப்டிங்குரமாதிரி ஒரு லுக்கு உடனும் மறுநாள்ல இருந்து புள்ளைங்க நம்மள எதிர்பார்க்க ஆரம்பிச்சுடும் ..!///

ரொம்ப டாப்பு இது.

அமுதா said...

/* Rajeswari said...
நல்ல நினைவு பகிர்வு..

மார்கழி மாதத்து கதை எனக்கும் நிறைய இருக்கிறது..

இந்த பதிவை பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்துவிட்டன..

December 14, 2009 10:07 AM
*/
எனக்கும்.

/*பொதுவாக கிராமப்புறங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு வாசனையை உணர முடியும். */
ம்... வாசமான நினைவுகள்...

SUFFIX said...

ஆகா அருமையான இடுகை, அதிரையில் எங்க தெருவுக்கே கொண்டு போய் விட்டுட்டிங்களே, போட்டி போட்டு விதவிதமான டிசைன்களில் கோலம் போடுவாங்க. அதன் மேல் நடப்பதற்கே தோண்றாது!!

டவுசர் பாண்டி... said...

//அதும் அந்த புள்ளைங்க நம்மள பார்க்கணும்னா நாம அந்த புள்ளைங்கள பார்க்க கூடாது ..!அந்த புள்ளைங்க போட்ட கோலத்த அட சூப்பரா இருக்கே ..! அப்ப்டிங்குரமாதிரி ஒரு லுக்கு உடனும் மறுநாள்ல இருந்து புள்ளைங்க நம்மள எதிர்பார்க்க ஆரம்பிச்சுடும் ..!//



இதை நிச்சயமா தஞ்சாவுர் கல்வெட்டுல பொறிச்சு வைக்கனும்...எதிர்கால சந்ததிக்கு நம்மால முடிஞ்ச ஒரு டிப்பு :)

RAMYA said...

//
பேர் அண்ட் லவ்லி யூஸ் பண்ண ஆரம்பிச்சது +1,+2 படிக்கும்போதுதான்
//


அட இதெல்லாம் வேறேயா :)


//
அப்போதான் முதன்முறையா பொம்பள புள்ளைங்களோடு சேர்ந்து படிச்சது .
ஆளு தேவாங்கு மாதிரி இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு ஹீரோன்னு நெனைப்பு அப்போ.
//

இருக்க வேண்டியதுதானே:) அது சரி :) ம்ம்ம்... தங்கமணிக்கு இந்த இடுகை ஒரு பார்சல்..........


//
அதும் அந்த புள்ளைங்க நம்மள பார்க்கணும்னா நாம அந்த புள்ளைங்கள பார்க்க கூடாது ..!அந்த புள்ளைங்க போட்ட கோலத்த அட சூப்பரா இருக்கே ..! அப்ப்டிங்குரமாதிரி ஒரு லுக்கு உடனும் மறுநாள்ல இருந்து புள்ளைங்க நம்மள எதிர்பார்க்க ஆரம்பிச்சுடும் ..!
//

ம்ம்ம்.. நல்லா அன்பவம்தான். இந்த பதிவு நமீதா பதிவையே தூக்கி சாப்பிட்டு விட்டது ஜீவன்:))

RAMYA said...

மார்கழி மாதம் என்றால் அருமையான அனுபவங்கள்... காலையில் எழுந்து கோலம் போட்டு, சுப்பரபாதம் பாடி, கோவில்லே போய் பொங்கல் வாங்கி சாப்பிட்ட நினைவெல்லாம் வருது:(

அந்த அனுபவங்கள் அருமையான சுகமான அனுபவங்கள். இந்த நகரங்களில் கண்டிப்பாக அந்த அனுபவம் கிடைக்காது. நாங்க ஒரு மாதிரி அனுபவிச்சிருக்கோம்ன்னா நீங்க ஒருமாதிரி ... ம்ம்ம்..

நல்லா இருங்க:)

Anonymous said...

சூப்பர்.

நட்புடன் ஜமால் said...

பேர் அண்ட் லவ்லி யூஸ் பண்ண ஆரம்பிச்சது +1,+2 படிக்கும்போதுதான்]]


அப்போதான் முதன்முறையா பொம்பள புள்ளைங்களோடு சேர்ந்து படிச்சது .]]

உங்க நேர்மை - அண்ணே ... தூள்

நட்புடன் ஜமால் said...

நிறைய பேரை கொசு வத்தி சுத்த வச்சிட்டீங்க

(அப்பவெல்லாம் ரொம்ப நல்லவனாகவே வளர்ந்துட்டனேன்னு இப்ப வருத்தப்படறேன் ...)

அன்புடன் நான் said...

என்னமோ பண்ணுதுங்க... உங்க மார்கழி நினைவுகள்.

thiyaa said...

நினைவுகள் அருமை

மதுரை சரவணன் said...

markali manasa nanachchutathu !
pompala pillai manasa parich chuttathu! kolam pol unkal ennem vannam !