பழவேற்காடும் மீன் வாங்கிய அனுபவமும் (படங்கள்)


விடுமுறை நாட்களில மீன் வாங்க போறதுன்னா மெரீனா பீச் லைட் ஹவுஸ் பக்கம் எப்போவாச்சும் போவோம்..! நல்லா பிரெஷா வாங்கலாம்...! இப்போ பழவேற்காடு போய் மீன் வாங்கலாமுன்னு நண்பர்கள் சொன்னவுடன் உற்சாகமா கிளம்பிட்டேன் ..! இதுவர அங்க போனதில்ல..! அது சுற்றுலா தலமாகவும் இருக்குறதால கூடுதல் உற்சாகம்..! காலைல அஞ்சர மணிக்கு கிளம்பிட்டோம் பெரம்பூர் -செங்குன்றம் -சோழவரம் -பொன்னேரி -பழவேற்காடு இதான் ரூட் நாற்பது கிலோமீட்டருக்கு மேல இருக்கும்...! எங்க ஊர்பக்கம் போனதுபோல இருந்தது அழகான வயல்வெளி கிராமங்கள் ...!


காருக்குள்ளிருந்து காலை கதிரவன்




நான் ஒருமாதிரி கற்பனை பண்ணி போனேன் கடற்கரை ஓரமா போட்ல புடிச்சு வர்ற மீன வாங்கலாம்னு....! மெரீனா பீச்ல அப்படித்தான் வாங்குவோம் ஆனா இங்க அப்படி இல்ல புடிச்சு வர்ற மீனுங்கள மார்கெட்க்கு கொண்டுவந்துடுறாங்க அங்கதான் விற்பனை ..!





இந்த வகை மீனும் இறாலும் வாங்கினேன் இந்த திவ எழுதும்போது நான் வாங்கின மீனு வீட்டுல கொழம்புல கொதிச்சுட்டு இருக்கும் ;;)





இங்க நல்ல இறால் கிடைக்குது சைசுக்கு தகுந்த மாதிரி கிலோ எழுபது ரூபாய்ல இருந்து முன்னுறு ரூபாய் வரை..!




சம்பா நண்டு கிடைக்குது இது உயிரோட தான் இருக்கும் கொடுக்குகளை கயிறு போட்டு கட்டி வைச்சு இருக்காங்க ஒரு நண்டு விலை நூத்தி இருபது ரூபாயாம்.!




பழவேற்காடு சுற்றுலா செல்ல....!

இங்க நெறைய தீவுகள் இருக்கு அங்க அழகான மணல்வெளி இருக்காம் படகுல அழைச்சுகிட்டு போய் படகுகாரங்க நம்ம கூடவே இருந்து கூட்டிகிட்டு வராங்களாம் தீவுக்குள்ள ஒன்னும் கிடைக்காதாம் எல்லாத்தையும் வாங்கிகிட்டு போய்டணும் .


கலங்கரை விளக்கம்


தூரத்தில் தெரியும் தீவுகள்




>

19 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

படங்கள் எல்லாம் தெளிவா இருக்கு.. அங்க வீட்டுக்குள்ள வைக்கிற மீன் குழம்புக்கு இங்க எனக்குப் பசிக்குது நைனா.. இன்னைக்கு ஏதோ விரதம்னு காரணம்சொல்லி நம்ம வீட்டுல அம்மா காயப் போட்டுட்டாங்க.. அவ்வ்வ்வ்..:-))))

Anonymous said...

வெகுதொலைவிலிருந்து மீன்கள் வாங்கி வீடு கொண்டு வருவதற்குள் மீன்கள் கெட்டுவிடும். அல்லது, fresh ஆக இருக்கா.

மெரீனா கடற்கரையில் வாங்கி போரடித்தால்,

காசிமேடு சென்று வாங்கி வருதல் நல்லது.

சந்தனமுல்லை said...

ஆகா...மீன் வேட்டையா!! :-)

S.A. நவாஸுதீன் said...

இன்னும் ரெண்டோ மூனோ நாள் தான் தல. அப்புறம் நாமளும் ஃப்ரெஷ்சா சாப்பிடுவோம்ல.

SUFFIX said...

வீககன்ட் பர்ச்சேஸா? தூள் தூள்...குறித்து வச்சுக்கிறோம் தல, அடுத்த விடுமுறைல ஒரு எட்டு போய் பாத்துடுவோம்.

நட்புடன் ஜமால் said...

அண்ணே + நவாஸ் + நான் - மல்லிப்பட்டினம் போய் வாங்கியாறுவோம் விறைவில் ...

துபாய் ராஜா said...

அழகான படங்கள். அருமையான பகிர்வு.

Anonymous said...

ம்ம்ம்ம்ம் நீங்க மட்டும் சாப்பிட்டீங்களா?

இராகவன் நைஜிரியா said...

அடுத்த தடவை இந்தியா வரும் போது பழவேற்காடு போக வேண்டும் என்ற ஆசையை உங்கள் படங்கள் உண்டாக்கிவிட்டது.

அங்கு தங்குவதற்கு வசதிகள் இருக்கின்றதா என விசாரித்து எழுதுங்களேன்.

ஜெட்லி... said...

என் நண்பன் அடிக்கடி போய்
ஆட்டம் போட்டு விட்டு வருவான்...
நான் இது வரை போனதில்லை... :(

Thekkikattan|தெகா said...

:-)) ஏங்க வீட்டில மீன் குழம்பு உலகமெல்லாம் வாசமடிக்குதே ;-) கலக்கல் போங்க. எஞ்சாய் த மீன் குழம்பு. நண்டு ஒண்ணு அம்பூட்டு விலையா :=0 ?

Rajeswari said...

nice pictures!!

Menaga Sathia said...

படங்கள் சூப்பர்ர்!!ம்ம் நீங்க மட்டும் ப்ரெஷ்ஷா மீன் குழம்பு சாப்பிட்டீங்களா?????

சிம்பா said...

இப்படி கொழம்பு கொத்திக்குதுன்னு பதிவை மட்டும் போட்டு பசி எடுக்க வச்சுடீங்க.. ஒழுங்கா கொஞ்சம் கொழம்பு பார்சல் அனுப்புங்க எனக்கு... இல்ல வயத்தை வலிக்கும் உங்களுக்கு ;)

ஹேமா said...

இறால் நண்டு விலை பாத்து தலை சுத்துது.நான் ஊர்ல இருந்த காலத்தைவிட எத்தனை மடங்கு கூடியிருக்கு !கிட்டத்தட்ட எங்க ஊர்லயும் இப்பிடித்தானே இருக்கும்.எப்பவும் ஜீவனின் பதிவு ஏதோ ஒரு விதத்தில் என்னை ஊருக்குக் கொண்டு போகுது.
நன்றி ஜீவன்.

புலவன் புலிகேசி said...

ஒரு ஞாயிறில் போயிற வேண்டியதுதான்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

மீனும் வாங்கின மாதிரி ஆச்சு, சுற்றுலா போன மாதிரியும் ஆச்சு :)

அமுதா said...

அட!!! பழவேற்காடு ஒரு நாள் போக வேண்டியது தான். மீன் பொறிச்சு தர்ற கடை எல்லாம் இல்லையா?

குடுகுடுப்பை said...

ஏன்யா இப்படி வயித்தெரிச்சல கெளப்புற