வாடகை வீடும், ரோஜாச்செடியும்..!


ஒரு நாலைஞ்சு நாளா என் பெரிய பொண்ணு ஒரே தொல்லை..! ரோஜாச்செடி வேணுமாம்..! வீட்டு பின் பக்கம் கொஞ்சம் இடம் இருக்கு அங்க செடி வளர்க்கனுமாம்...! நானும் எவ்வளவோ தவிர்த்து பார்த்தேன் முடியல..!
கடந்த ஏழு வருசத்துல மூணு வீடு மாறியாச்சு..! செடிய வாங்கி வைச்சு அது நல்லா வளர்ந்து பூ பூக்குற நேரத்துல வேற வீடு மாறுறது போல ஆச்சுன்னா
என்ன பண்ணுறது ? குழந்தை மனசு கஷ்டப்படுமே .? ஏற்கனவே இந்த மாதிரி அனுபவம் எனக்கும் இருக்குறதால செடி வேணாம்னு சொன்னேன் பொண்ணு விடுரதுபோல இல்ல ..!




மாசமாசம் வாடகை கொடுக்கும்போது கூட வலிக்கல..! சொந்த வீடு இல்லையேன்னு ..! ஆனா...? இப்போதான் ஒருமாதிரி பீல் ஆகுது..! குழந்தை ரோஜா செடி வளர்க்கணும்னு நினைக்கிறது ஒரு அழகான ஆசை அத நிறைவேத்தி வைக்ககூட எவ்ளோ யோசிக்க வேண்டி இருக்கு..! சொந்த வீடு வாங்கனும்னு மனசுக்குள்ள ஒரு வேகம் விஸ்வ ரூபம் எடுக்குது.
அதும் என் பொண்ணுக்கு ரோஜா செடி வளர்க்கும் சை அப்பவும் இருக்கணும் .

நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தேன்..!

கீழ பாருங்க....!
v
v
v
v
v
v
v

v
v
v
v
v
v
v
v
v
v




உடனடியா வீடு வாங்குறது இப்போ ஆகறதில்ல.! அதான் இப்படி தொட்டில இருக்குற செடி வாங்கி கொடுத்துட்டேன் வேற வீடு போனாலும் அப்படியே தொட்டியோட எடுத்துகிட்டு போய்டலாம்.!



.
>

19 comments:

மணிஜி said...

பெண்ணை வளர்ப்பதும், ரோஜா செடியை வளர்ப்பதும் ஒன்றுதான் ஜீவன்!

டக்கால்டி said...

Ha ha ha...
Yatharthaamana yosanai...
Good One boss.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களுக்கு மிளகாய்ச்செடி, பொண்ணுக்கு ரோஜாச்செடியா ஜீவன்

:(((

சொந்த வீடுக்கும் வாடகை வீட்டுக்கும் ரொம்பப் பெரிய வித்தியாசம் ஒன்னுமில்ல ஜீவன் :(
எதை வளர்க்கவும், மனுசங்களோட மனசுல இடமிருக்கிறதா என்பதுதான் கேள்வி.

கண்ணகி said...

சொந்த வீடு வாங்கனும்னு மனசுக்குள்ள ஒரு வேகம் விஸ்வ ரூபம் எடுக்குது.
அதும் என் பொண்ணுக்கு ரோஜா செடி வளர்க்கும் ஆசை அப்பவும் இருக்கணும் .
ஒன்று கிடைக்கும்போது மனம் மற்றதுக்குத் தாவிவிடும்..

சாந்தி மாரியப்பன் said...

அருமையான,யதார்த்தமான யோசனை..

அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கிறவங்க தோட்டம் போடற ஆசைய இப்படித்தானே நிறைவேத்திக்கிறோம்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இதைவிடப் பெரிய தொட்டியில் ரோசாவை வளர்க்கலாம் ஜீவன். வீடுள்ளவர்களே இப்போ இப்படித்தான் செய்கிறார்கள்.மரத்தைப் பராமரிப்பதும் இலகு.

Rajeswari said...

:-))

எம்.எம்.அப்துல்லா said...

//உங்களுக்கு மிளகாய்ச்செடி, பொண்ணுக்கு ரோஜாச்செடியா ஜீவன் //

பலத்த ரிப்பீட்டு.

டவுசர் பாண்டி... said...

சொந்த வீட்டுக்கான விதையை விதைச்சாச்சு . . .

சீக்கிரம் அறுவடை பண்ணீடலாம்....

வாழ்த்துகள். . . .

அமுதா said...

/*உங்களுக்கு மிளகாய்ச்செடி, பொண்ணுக்கு ரோஜாச்செடியா ஜீவன்

:(((

சொந்த வீடுக்கும் வாடகை வீட்டுக்கும் ரொம்பப் பெரிய வித்தியாசம் ஒன்னுமில்ல ஜீவன் :(
எதை வளர்க்கவும், மனுசங்களோட மனசுல இடமிருக்கிறதா என்பதுதான் கேள்வி.

*/
அப்படியே அமித்து அம்மா சொன்ன வார்த்தைகள் தான் என் மனசிலேயும் ஓடுச்சு ஜீவன்... இந்த பதிவைப் படிக்கும் பொழுது

ஹேமா said...

உங்க பொண்ணு ஆசை அப்படியே இருக்கட்டும்.அப்பத்தான் வீடு வாங்கும் வேகம் உங்க மனசில வளந்திட்டே இருக்கும்

Anonymous said...

ஐய்யோ ஐய்யோ அறிவு ஜீவி....இந்த ஐடியா வர இத்தனை நாளா மண்டு மண்டு.....குழந்தையை இத்தனை நாள் ஏங்க வச்ச குற்றத்துக்கு இந்த திட்டுக்கள் தான் தண்டனை....

குடந்தை அன்புமணி said...

எதிர்கால கனவுகள் உங்களுக்கு... நிகழ்கால எதிர்பார்ப்புகள் உங்கள் மகளுக்கு... மகளின் எதிர்பார்ப்பு உடனடியாக நிறைவேறிவிட்டது. உங்கள் கனவுகளும் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்.

Henry J said...

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

அன்புடன் நான் said...

நேர்மையான உணர்வு.....
தற்காலிக தீர்வு... நல்லாயிருக்கு.

SUFFIX said...

// குடந்தை அன்புமணி said...
எதிர்கால கனவுகள் உங்களுக்கு... நிகழ்கால எதிர்பார்ப்புகள் உங்கள் மகளுக்கு... மகளின் எதிர்பார்ப்பு உடனடியாக நிறைவேறிவிட்டது. உங்கள் கனவுகளும் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்//

அழகாக சொன்னார் அன்புமணி!! எனது வாழ்த்துக்களும் நண்பா.

நட்புடன் ஜமால் said...

வருத்தமாத்தான் இருக்கு நிலையை நினைத்தால்

ஆனாலும் ஒரு எளிமையான வழி கிடைச்ச வரைக்கும் நல்லது ...

அம்பிகா said...

\\ஹேமா said...
உங்க பொண்ணு ஆசை அப்படியே இருக்கட்டும்.அப்பத்தான் வீடு வாங்கும் வேகம் உங்க மனசில வளந்திட்டே இருக்கும்\\

\\தண்டோரா ...... said...
பெண்ணை வளர்ப்பதும், ரோஜா செடியை வளர்ப்பதும் ஒன்றுதான் ஜீவன்!\\

அழகா சொல்லியிருக்கிறார்

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

வாழ்க! குழந்தையோட ஆசைய நிறைவு பண்ணுகிற பொறுப்பான அப்பா வாழ்க! வளர்க ஜீவன்