எப்படி நேசிப்பேன் என் இந்தியாவை...!

இந்தியன் என்ற உணர்வும்,தாய்நாட்டு பற்றும் எனக்கு சற்று அதிகம்தான்.சாராசரியை விட கூடுதல் தேசப்பற்று எனக்கு.ஆனால் கடந்த சில வருடங்களாக இரண்டும்கெட்டான் நிலையில் குழம்பி வருகிறேன். காரணங்களை சொல்லுகிறேன். தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் அரசு தமிழனுக்கும் தமிழ் இனத்திற்கும் பாரபட்சம் காட்டி தீங்கு இழைத்து வருவதாக ஆழமாக நம்புகிறேன்.இந்தியன் என்ற உணர்வு நீர்த்து போய் தமிழன் என்ற நிலைக்கு கொஞ்ச கொஞ்சமாக தள்ளபடுவதாக உணர்கிறேன்.

காரணங்கள்..!

நதிநீர் பிரச்சனைகள்

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தும் தமிழகத்துக்கு வழங்கபடாத நியாயங்கள். நதிநீர் பிரச்னை பற்றி தமிழகத்தை வஞ்சிக்கிறதா மத்திய அரசு என்ற ஒரு பதிவு எழுதி இருக்கிறேன் அதில் கூடுதல் விவரங்கள் உள்ளன.

கச்சதீவு

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சதீவு. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் பிடித்து சென்று செய்யும் சித்ரவதைகள் இதனை பெரிதாக கண்டுகொள்ளாத டெல்லி அரசு. இந்தியா என்னவோ துக்கடா நாடு போலவும் இலங்கை ஒரு பெரிய சர்வாதிகார நாடு போலவும் தமிழக மீனவர் பிரச்னையில் தோன்றுகிறது. தமிழன் என்ற ஒரு காரணத்தாலேயே தமிழக மீனவர்கள் புறக்கணிக்க படுவதாகவும் நினைக்க தோன்றுகிறது .

இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்தியா


இந்திய அமைதி படையினர் இலங்கையில் தமிழ் மக்களின் மீது நடத்திய அத்து மீறல்கள்தான் நான் இந்தியனா..? தமிழனா..? என்ற குழப்ப விதையை என்னுள் விதைத்திருக்க கூடும் .

என்
தாய் நாட்டு ராணுவத்தினர் என் இன பெண்களை மானபங்க படுத்தினர் .
--------
இப்படி சொன்னால் அது அருவெறுப்பு.

என் தாய் நாட்டு ராணுவம் இலங்கையில் உள்ள பெண்களை மான பங்க படுத்தினர்.

-----
இப்படி சொன்னால் ..? என் மொழி பேசும் மக்களை மூன்றாம் மனிதர்கள் போல சொல்ல முடியாது.

வேறு எப்படி சொல்லுவது..?

இந்திய ராணுவத்தினர் என் தமிழ் பெண்களை மானபங்க படுத்தினர்.

---
இப்படித்தான் சொல்ல முடிகிறது

இப்படி சொல்லும்போதே நான் இந்தியாவில் இருந்து விலகுகிறேன்.ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற புத்தகத்தில் இருந்து கீழ்க்கண்ட வரிகள்

ஷாப்பிங் போன சமயம் தி நகரில் சுபாவின் கண்ணில் ஒரு சர்தார்ஜி பட்டார் .அதுவரை சகஜமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று முகம் மாறினார் .அவரது உடம்பு உதற தொடங்கியது . நளினியின் கையை பிடித்து கொண்டிருந்தவர் , மேலும் அழுத்தமாக பற்றிகொண்டார் . வியர்த்துவிட்டது.

நளினிக்கு ஒன்றும் புரியவில்லை .என்ன.. என்ன . என்று பதற எனக்குஅவனை ஓங்கி அறைய வேண்டும் போலிருக்கிறது சர்தார்ஜியைபார்த்தாலே வயிறு எரிகிறது .என்று சுபா சொன்னார்.

இலங்கை சென்ற இந்திய அமைதி படையில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள் என்பதை தணு விளக்கினார்.

இந்திய ராணுவத்தினரால் இலங்கையில் தமிழ் பெண்கள் எந்த அளவுக்கு பாதிப்பு அடைந்து இருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட வரிகள் விளக்கும். இப்படி அயோக்கியத்தனம் செய்த ஒரு சீக்கிய நாயை எப்படி என் இந்தியன் என சொல்ல முடியும்...?தாய் மொழியா...? தாய் நாடா ..?

இந்த கேள்விக்கே இடமில்லை தாய்மொழியே முதலிடம் வகிக்கிறது. நான் இந்தியன் என சொல்லிக்கொண்டு ஒரு மலையாளியையோ, ஒரு கன்னடனையோ, ஒரு மராட்டியனையோ , நேசிப்பதை விட உலகில் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நாட்டு குடிமகனாக இருந்தாலும் அவன் தமிழை தாய்மொழியாக கொண்டவனெனில் அவனைத்தான் முதலில் நேசிப்பேன் .இதுதான் இயற்கை.

நம்பிக்கை இழக்க வைத்த சில தமிழக அரசியல் வாதிகள்


ராமதாஸ் -திருமா ஒரு கால கட்டத்தில் இவர்களில் யாரேனும் கைது செய்யபட்டுவிட்டாலே போதும் விழுப்புரத்தை தாண்டி பஸ் ,ரயில் ஏதும் ஓடாது..! மரம் வெட்டப்படும் பஸ் கொளுத்தப்படும். ஆனால் இலங்கை தமிழர் பிரச்னையில் இவர்கள் சில விளம்பர போராட்டங்கள் மட்டுமே நடத்தினர்.மரம்வெட்டும் இவர்கள் இந்த விசயத்தில் ஒரு செடியை கூட புடுங்கவில்லை.

கலைஞர் உண்ணாவிரதம் இருக்கிறார். உடனே போர்நிறுத்த அறிவிப்பு வந்ததாக அவர்கள் தொலைகாட்சியில் செய்தி ..! உண்ணாவிரதம் முடிகிறது.அதன் பின்னர் . பூவும் பிஞ்சுமாக ஆயிர கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்ய படுகிறார்கள் .

நம்பி நொந்து ஏமாந்ததுதான் மிச்சம் .இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திய நிலைப்பாடும்,அதன் நடவடிக்கைகளுமே என்னை மிகவும் காயப்படுத்தி இந்திய உணர்வை நீர்த்துபோக செய்தது.


இலங்கையில் இருந்து அகதிகளாக வெளியேறிய பலர் பல நாடுகளில் அந்த நாட்டு குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர் ஆனால் தொப்புள் கொடி உறவு என சொல்ல படும் இந்திய நாட்டில் மட்டும் இலங்கை தமிழ் மக்கள் இன்னும் அகதி முகாமில் வசிக்கின்றனர் இதை கேட்க நாதியில்லை..!

நடந்து முடிந்த போரில் இந்திய ராணுவ ஆயுதங்கள் இலங்கை தமிழ் மக்களை மட்டும் கொல்ல வில்லை இந்தியாவில் இருக்கும் தமிழர்களில் இந்திய உணர்வையும் கொலை செய்து விட்டது.


இப்போது சொல்லுங்கள் எப்படி நேசிப்பேன் நான் இந்தியாவை..?

>

30 comments:

நட்புடன் ஜமால் said...

தமிழ் நாடு தான் என் நாடு என்று எண்ண துவங்கிய நாட்கள் நினைவில் இல்லை 15 வருடத்திற்கு மேலாவது இருக்கும் ...

வாய்ப்பாடி குமார் said...

உண்மைதான் ,, ஆனால் யாரும் வெளியே சொல்லமாட்டார்கள். சொன்னாலும் பதிவு செய்ய மாட்டார்கள்.

தமிழன் அவ்வளவுதான்.

ஹேமா said...

அமுதன்....உங்கள் கொதிப்பு, அடிமனதிலிருந்த வந்த வார்த்தைகள் சிலருக்கு வலி தந்தாலும் உண்மையான இன உணர்வின் வெளிப்பாடு.

நாங்களும் எங்கள் நாட்டை நேசிக்கவில்லை ஜீவன்.
இனத்தின் வேதனைகள்
மட்டுமே மிஞ்சி நிற்கிறது.

அப்படியானால்.....
தமிழனுக்குண்டான தேசம் எது ? !

அத்திரி said...

ம்ஹும்....ஒன்னும் சொல்லவும் முடியாது........செய்யவும் முடியாது................

RAMYA said...

//
என் தாய் நாட்டு ராணுவம் இலங்கையில் உள்ள பெண்களை மான பங்க படுத்தினர்.

----- இப்படி சொன்னால் ..? என் மொழி பேசும் மக்களை மூன்றாம் மனிதர்கள் போல சொல்ல முடியாது.
//
கண்டிப்பாக முடியாது, உங்களின் எண்ணங்களுக்கு எனது எண்ண ஓட்டங்களும் உடன் படுகின்றது.

RAMYA said...

//
என் தாய் நாட்டு ராணுவத்தினர் என் இன பெண்களை மானபங்க படுத்தினர் .
-------- இப்படி சொன்னால் அது அருவெறுப்பு.
//

உணமையான உணர்வுகளுடன் கூடிய மனதில் தோன்றிய விடைதான் இந்த அருவெறுப்புக்குக் காரணம்.

RAMYA said...

//
இந்திய அமைதி படையினர் இலங்கையில் தமிழ் மக்களின் மீது நடத்திய அத்து மீறல்கள்தான் நான் இந்தியனா..? தமிழனா..? என்ற குழப்ப விதையை என்னுள் விதைத்திருக்க கூடும்
//

கண்டிப்பா தமிழ் அமுதன் இந்த குழப்ப விதை எல்லார் மனதிலும் முளைக்க ஆரம்பித்திருக்கும்!

RAMYA said...

//
வேறு எப்படி சொல்லுவது..?
இந்திய ராணுவத்தினர் என் தமிழ் பெண்களை மானபங்க படுத்தினர்.
--- இப்படித்தான் சொல்ல முடிகிறது
இப்படி சொல்லும்போதே நான் இந்தியாவில் இருந்து விலகுகிறேன்.
//

இன்றைக்கு இருக்கும் சூழ்நிலைகள் ஒவ்வொரு இந்தியனையும் இந்த முடிவிற்குத்தான் வரவழைத்திருக்கின்றது. உங்களின் இந்திய மண்ணின் மீது இருக்கும் தீராதாகம் உங்கள் எழுத்தில் அப்பட்டமாக ஒலித்திருக்கிறது. இன்றைய சூழல் அந்த எண்ணத்தையும், மாற்றிய அவல நிலையையும் உங்கள் எழுத்து பட்டவர்த்தனமாக போட்டு உடைத்துள்ளது.

ஒவ்வரு இந்தியனும் யோசிக்க வேண்டிய ஒன்று. இந்தியனாக இருக்கு நான் பெருமை அடைகின்றேன் என்று இது வரை நினைத்திருந்தேன். உங்களின் எழுத்தால் மாறுபட்ட கருத்து எனது மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த கருத்து உங்களின் கருத்துக்கு ஒத்துப் போக கூடிய ஒன்றுதான்.
ஆதங்கத்துடன் கூடிய உங்களின் இந்த பதிவு மனதை மிகவும் பாத்தித்து விட்டது தமிழ் அமுதன்.

RAMYA said...

//
என் தாய் நாட்டு ராணுவம் இலங்கையில் உள்ள பெண்களை மான பங்க படுத்தினர்.

----- இப்படி சொன்னால் ..? என் மொழி பேசும் மக்களை மூன்றாம் மனிதர்கள் போல சொல்ல முடியாது.
//
கண்டிப்பாக முடியாது, உங்களின் எண்ணங்களுக்கு எனது எண்ண ஓட்டங்களும் உடன் படுகின்றது.

Anonymous said...

நான் இந்தியன் என சொல்லிக்கொண்டு ஒரு மலையாளியையோ, ஒரு கன்னடனையோ, ஒரு மராட்டியனையோ , நேசிப்பதை விட உலகில் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நாட்டு குடிமகனாக இருந்தாலும் அவன் தமிழை தாய்மொழியாக கொண்டவனெனில் அவனைத்தான் முதலில் நேசிப்பேன் .இதுதான் இயற்கை.

Anonymous said...

நான் இந்தியன் என சொல்லிக்கொண்டு ஒரு மலையாளியையோ, ஒரு கன்னடனையோ, ஒரு மராட்டியனையோ , நேசிப்பதை விட உலகில் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நாட்டு குடிமகனாக இருந்தாலும் அவன் தமிழை தாய்மொழியாக கொண்டவனெனில் அவனைத்தான் முதலில் நேசிப்பேன் .இதுதான் இயற்கை.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்லெண்ணத்துக்கு நன்றி!

கெட்டவன் said...

1947 க்கு முன் இந்தியா என்ற நாடு உலக வரைபடத்தில் இல்லை..ஒத்துகொள்கிறீர்களா? ஆனால் நம் தமிழ் இனம் அப்படியல்ல..எகிப்திய பிரமீடுகளில் நம் தமிழ் எழுத்துக்கள் உள்ளன.அபோதிருந்திருந்து...சிந்துசம்வெளிநாகரீகத்தை உருவாக்கி வாழ்ந்து..ஆரியர்களின்(தற்போதைய வட இந்தியர்கள்) படையெடுப்பால் தெற்கு நோக்கி வந்தவர்கள் தான் தமிழ்ர்கள்....என்னுள் தமிழ் உணர்வுதான் மேலோங்கியிருக்கிறது..பள்ளியில் கற்பித்த இந்தியம்...இல்லை...தமிழ் இனம் தான் என் இனம் .தமிழர்கள் வாழும் நாடு என் நாடு...இந்தியா என் அண்டை....என் எதிரிநாடு....தமிழகதிலிருந்து...கெட்டவன்( தமிழ் இன எதிரிகளுக்கு)

டவுசர் பாண்டி... said...

இந்திரா காலத்தில் முடிந்திருக்க வேண்டியது, எம்.ஜி.ஆர் முனைந்திருந்தால் ராஜீவ் மூலம் நடத்தியிருக்க வேண்டியது....!

அதன் பின்னர் தமிழக தலைவர்கள் எவரும் முனையவில்லை என்பதுதான் உண்மை. நம்மிடம் ஒற்றுமை இல்லை, அல்லது அதை உருவாக்கிட தகுந்த தலைமை இல்லை.

ஊருக்கு நாற்பது பேர் கிளர்ந்தெழுந்து கூட்டம் போட்டு குமுறிவிட்டு போவதில் என்ன விளைந்து விட முடியும்.

இந்திய தலைமை நினைத்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்கிற நிதர்சனம் தெரிந்திருந்தும் ஐரோப்பிய நாடுகளில் ஆயுதம் வாங்க வசூல் பண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருந்திருக்காது.

ஜெயவர்த்தனே என்கிற ராஜ தந்திரிக்குப் பின்னர் ராஜபக்‌ஷே என்கிற குள்ள நரி வரும் வரையில் புலிகளின் பருப்பு வெந்து கொண்டுதானிருந்தது.

சரியான தொலை நோக்கு இன்மை அல்லது, தங்களின் வலு மீதான அதீத நம்பிக்கை இதெல்லாம்தான் இன்றைய அவல நிலைக்கு காரணமாய் இருக்க முடியும்.

ராஜீவ் காந்தியின் மரணத்தை தமிழக தமிழர்கள் தங்கள் குடும்ப சோகமாய் கருதினார்கள்....அதை மறுக்கவோ, அல்லது தங்கள் நிலைப்பாட்டினை புரிய வைக்க புலிகள் எவ்வித முயற்சியும் செய்யவில்லை என்பதை மறுக்க முடியாது.

இன்றைக்கும் கூட பெரும்பாலான தமிழக தமிழனுக்கு ஈழத்தமிழன் மீது இரக்கமிருக்கிற அளவுக்கு, தோள் கொடுத்து துனை நிற்கும் ஆவேசம் இல்லை என்பதுதான் உண்மை. இதற்கு அகதிகள் முகாமின் அவலங்களே சாட்சி.

வெறுமனே இந்தியாவை குறை சொல்வதில் அர்த்தமில்லை என்றே நினைக்கிறேன்...நம் முதுகின் அழுக்குகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

harveena said...

ராமதாஸ் -திருமா ஒரு கால கட்டத்தில் இவர்களில் யாரேனும் கைது செய்யபட்டுவிட்டாலே போதும் விழுப்புரத்தை தாண்டி பஸ் ,ரயில் ஏதும் ஓடாது..! மரம் வெட்டப்படும் பஸ் கொளுத்தப்படும். ஆனால் இலங்கை தமிழர் பிரச்னையில் இவர்கள் சில விளம்பர போராட்டங்கள் மட்டுமே நடத்தினர்.மரம்வெட்டும் இவர்கள் இந்த விசயத்தில் ஒரு செடியை கூட புடுங்கவில்லை,,,,

anna,,

செடியை மட்டுமில்ல எதையும் புடுங்கல..

தோழி said...

எல்லாம் நடந்து முடிந்த பின்னர் இப்படி கருத்து சொல்லவும் விமர்சனம் பண்ணவும் நிறைய பேரு வருவாங்க.. ஆனால் அந்த வலி நிறைந்த கணத்தில் எங்களுக்கு தோள் கொடுக்கவும், நல்ல ஆலோசனை சொல்லவும் உங்களில் யாரும் வரவில்லை... :(

sarath said...

first indian nxt than tamilan boss ,

வெட்டிபையன் said...

Agree with you.. 100 %

வெறும்பய said...

நான் எழுதிய ஒரு பதிவுக்கு ஒரு இலங்கை சகோதரர் பின்னூட்டம் எழுதியிருந்தார்..(http://verumpaye.blogspot.com/2010/05/blog-post_04.html) அது என்னையும் யோசிக்க வைத்தது ..ஆகையால்
நானும் உங்கள் பக்கம் தான் தான்,...
இந்தியனா தமிழனா என்ற குழப்பத்துடன்..

Sathiyanarayanan said...

/* இந்தியா என் அண்டை....என் எதிரிநாடு....தமிழகதிலிருந்து...கெட்டவன்( தமிழ் இன எதிரிகளுக்கு) */
இந்தியா என் அண்டை நாடோ அல்ல எதிரி நாடோ அல்ல அது எம் இனத்தின் துரோகி நாடு.
புரட்சி என்பது ஒரே நாளில் வெடிப்பதில்லை அதற்கு வெகு காலம் தேவைப்படும்.

/* இந்தியன் என்ற உணர்வும்,தாய்நாட்டு பற்றும் எனக்கு சற்று அதிகம்தான்.சாராசரியை விட கூடுதல் தேசப்பற்று எனக்கு */
நீங்கள் மட்டும் அல்ல ஒருவரும் தமிழனுக்கும் இந்த உணர்வு தான், இந்த நிலையில் இருந்து வெளி வர வெகு காலம் தேவைப்படும். அதை நாம் தான் முன்னெடுக்க வேண்டும், தமிழர்கள் எல்லோரிடமும் நாம் எப்போதும் இவற்றை பற்றி பேச வேண்டும். நாம் அடுத்த தலைமுறைக்கு இவற்றை கொண்டுச் செல்ல வேண்டும், நம் பிள்ளைகளிடம் ஈழம் பற்றியச் செய்திகளை எடுத்து சொல்ல வேண்டும், ஈழத்தின் குடிமக்கள் யார், ஏன் யாரை எதிர்த்து போராட்டம், போராட்டத்தின் மாற்றங்கள் என்ன, தமிர்களுக்கு இந்தியா செய்த துரோகம் என்ன, தமிழர் என்றால் ஏன் இந்தியர்களுக்கு பிடிப்பதில்லை, ராசீவ்காந்தி ஈழ தமிழர்களுக்கு செய்த கொடுமை என்ன, தமிழின துரோகிகள் யார் யார் என்பதைப் பற்றி பேச வேண்டும். இது நாமக்கான தனி நாடை உறுவாக்க உதவிச் செய்யும், இதற்கு பல காலங்கள்,போரட்டங்கள், தியாகங்கள் தேவைப்படும்.

Sathiyanarayanan said...

/* "எப்படி நேசிப்பேன் என் இந்தியாவை...!" */

/* எப்படி நேசிப்பேன் நான் இந்தியாவை */

எப்படி நேசிப்பேன் இந்த இந்தியாவை

தாமிரபரணி said...

இந்தே கேள்வி என்னுள் எழுந்தது உண்டு, இந்தியா என்றாலே இந்திதான் என்பது அவர்களின் உதிரத்தில் கலந்துவிட்ட ஒன்று, எதை எடுத்தாலும் இந்திமைய்யம், அன்றாடம் புழங்கும் ரூபாய் தாளில்(என் தமிழ் நண்பர்களிடம் கேட்டேன், அதற்கு அவர்கள் அது எப்படிங்க தமிழ்ல எழுத முடியும் இந்தியாவுல எத்தன மொழியிருக்கு என்றார்கள், நான் கேட்டேன் அப்ப அத்தன மொழியிருக்கும் போது இந்தியும், ஆங்கிலமும் மட்டும் எப்படி சாத்தியமாகிறது, வெறும் எண்கள் மட்டும் இருக்கட்டுமே, இல்லையென்றால் அந்த அந்த மாநிலங்களில் புழங்கும் ரூபாய்தாளில் அந்த அந்த மொழி இருப்பதே சிறந்தது, என்னை பிரிவினை தூண்ட முயலுகிறேன் என்றார்கள் சக தமிழனிடம் என்னால் என் தமிழ் உணர்வை பகிர்ந்து கொள்ள முடியவில்லை,அந்த அளவுக்கு அவர்கள் தன் இனம், தன் மொழி என தன் நிலை தெரியாமல் இந்தியா என்னும் மாயையில் கலந்து விட்டார்கள்), இரெயில் பயணச்சிட்டில், கடைசி நிமிடம் ஒட்டபடும் பயணிகள் அட்டவணை தமிழில் இருப்பதில்லை ஆங்கிலத்திலும் இந்திலும் இருக்கின்றன இத்தனைக்கும் இரெயில் பயணிக்கவிருப்பது சென்னையில் இருந்து இதர தமிழ் மாவட்டங்களுக்கு(இதை நான் இரெயில்வே அதிகாரிடம் கேட்டேன் அவர் கையை விரித்துவிட்டார்,எத்தனை தாய்மார்கள்/பெரியாவர்கள்(தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள்) படிக்க முடியாமல் தவிக்கிறார்கள், தம்பி இத படிச்சி சொல்லுப்பா அப்படினு சொல்லும் போது ஒரு பக்கம் அழுகை வருகிறது மறுபுறம் இந்த ஈன பய இந்திய அரசு மிது கோபம் தலைக்கு ஏறுகிறது) கடவு சீட்டில், pan cardல், தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தமிழுக்கு இடமில்லை, வங்கி A.T.Mல், L.I.C காப்பிட்டுகள் ஒன்று கூட தமிழில் இருப்பதில்லை அவர்கள் தரும் பாரம் ஆங்கிலத்திலும் இந்தியிலுமே உள்ளது, அனைத்து தேசிய வங்கிகளிலும் இதே நிலைதான், அனைத்து நடுவன அரசு தேர்வுகளும் ஆங்கிலம், இந்தி மொழிகளிலேயே நடைபெருகின்றன(தமிழக அரசாங்கமோ, மக்களோ தமிழில் நடத்த கோரிக்கை வைத்தால், தமிழுக்கு வைத்தால் அனைத்துமொழிக்கும் வைக்கவேண்டும் என்கின்ற அர்த்தமற்ற வாதங்கள் வைத்து தமிழை புறக்கணிக்கிறது, அப்படி எல்லா மொழி மக்களும் கேட்கிறார்கள் என்றால் அதை செய்ய வேண்டியது அரசின் கடைமை.மேலும் சில இந்திய விசமிகள் தமிழ் நாட்டு அரசு அதிகாரிகள் இதை பற்றி எங்களிடம் சரியாக எடுத்து சொல்லவில்லை என மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பகையை உண்டாக்கி வடுகின்றன, ஏன் உன் இந்தி மக்கள் மட்டும் ஆங்கிலத்தில் எழுத சிரம்ம படுவார்கள் என்று நம்பும் நீ அதே வலிதானே தமிழ் மக்களுக்கும், இதை உனக்கு ஒரு ஆள்வந்து சொல்லவேண்டுமா),எந்த ஒரு வணிக வளாகம் போனாலும் ஆங்கிலம் யாரோ ஒரு சிலபேரை திருப்திபடுத்த அனைத்து தமிழ் மக்களின் மேல் ஆங்கிலம் திணிக்கபடுகின்றன,இந்தி திணிப்பை(இந்தியாவின் ஒற்றுமையை காக்கும், ஒரு நாடு ஒரு மொழி, பொருளாதாரத்தில் நாம் மிக விரைவாக முன்னேறலாம் போன்ற பசப்பு வார்தையால் இந்தியை விளம்பரம் செய்தது) அரங்கேற்றியது நடுவன அரசு, அதை எதிர்த்தது தமிழ்நாடு. இந்தி திணிப்புடன் இலவசமாக வன்முறையும் கட்டவிழ்த்தது
அதில் எண்ணற்ற மக்கள் மாண்டார்கள்(இந்த வட நாட்டவர்கள் வெள்ளையர்களைவிட கொடியவர்கள் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை) ஆக சதிச் செயல்(இந்தி திணிப்பு) செய்தவன் புத்திசாலி - அதை ஏதிர்த்தவன் குற்றவாளி.
ஒரு இனத்திற்கு தண்ணிர், சாப்பாடு ஆகியவற்றைவிட விடுதாலை/சுதந்திரம் என்பது மிக இன்றியமையானது, நம் இலங்கை மக்கள் இதை என்றோ உண்ர்ந்து அதற்றாக போராடி கொண்டிருக்கிறான், அவர்களிடம் நம்பிக்கை உள்ளது நம்மிடம் இல்லை ஐய்ய்யோ தமிழ்நாடு தனி நாடாயிட்டா நம்மலால முன்னேற முடியுமா போன்ற தேவையில்லாத ஐயம் தேவையில்லை.
இந்தியாவே ஆங்கிலேயேனிடம் விடுதலை வாங்க 200 வருடங்களுக்கு மேல் ஆனது தமிழ் மக்களுக்கு வடகத்தனிடம் இருந்து விடுதலை வாங்க குறைந்தது 100 வருடங்களாவது ஆகாதா என்ன, இப்போதைக்கு நாம் விடுதலை தினம் , குடியரசு தினம், தேசிய கீதம், தேசிய பாடல் போன்றவற்றை புறக்கணிப்போம்
என் பதிவில் எங்கெனும்
தமிழ் பிழை இருந்தால் மன்னிக்கவும் மறக்காமல் தெரிவிக்கவும்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்

bala said...

ரொம்ப நியாயமான கோபம் அமுதன் .....நானும் இப்ப உங்களோட நிலையில தான் இருக்கேன் ....

விஜய் said...

சாட்டையடி பதிவு நண்பா

வாழ்த்துக்கள்

விஜய்

தமிழன் said...

///இப்போது சொல்லுங்கள் எப்படி நேசிப்பேன் நான் இந்தியாவை..!///
எம்மனதில் இருந்ததை நீங்கள் இங்கு பதிவு செய்திருப்பதை கண்டு மகிழ்கிறேன் .

Gokul said...

கருணாநிதியின் துரோகம் -> ஈழத்தமிழரை அம்போவென கைவிட்டபின் செந்தமிழ் மாநாட்டை நடத்துவது
ப.சிதம்பரத்தின் துரோகம் -> மத்திய அமைச்சரவையில் பெரும் பதவி பெற்றும் வாய் மூடி மெளனமாக இருந்தது
திருமா, ராமதாஸ் போன்றோரின் மாய்மாலங்கள்

இவற்றை எல்லாம் பார்க்கும்போது, எனக்கு தமிழ்நாட்டில் இருப்பதற்குதான் வெறுப்பாக இருக்கிறது, வெளி மாநிலத்தில் இருந்தால் இந்த வயத்தெரிச்சல் இல்லை ....

இங்கே ஹிந்தி / ஆங்கிலம் பற்றி சிலர் எழுதுகின்றனர் .. வியப்பாக இருக்கிறது .... சுமார் 14 மொழிகளை தனது ரூபாய் தாளில் பொறித்து வைத்துள்ளது, இப்படி இருக்கும்போது , எல்லாவற்றிற்கும் மேலாக ஹிந்தி படிக்க மாட்டோம் என்ற சொன்ன மாநிலத்தில் 1965-க்கு பிறகு எந்த வித கட்டாயமும் செய்யவில்லை , இப்போதும் ஹிந்தி தெரியாத வெகு சில மாநிலங்களில் தமிழ்நாடும ஒன்று !
மேலும், இலங்கை பிரச்சினையில், இந்திய உதவி செய்ததாக யாரும் பெருமை பட்டுக்கொல்லவோ சிறுமை பட்டுக்கொள்ளவோ முடியாது, அது சீனாவிற்கு எதிரான செய்யப்பட ஒரு செயல், இந்தியா இல்லாவிட்டாலும் சீனாவால் இலங்கை வென்றே இருக்கும்

நான் இப்போது பெங்களூர் வந்து இருக்கிறேன், இங்கே பிரச்சனை என்னவென்றால் , இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்து இருக்கின்றனர் , சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் , ஆந்திராவை சேர்ந்த ஒருவரும், வங்காளியும், கர்நாடகாவை சேர்ந்தவரும் இங்கே ஹிந்தியில் பேசிக்கொள்கின்றனர் , இவர்கள் அனைவருக்கும் ஹிந்தி தாய் மொழி அல்ல, இவர்களுக்கு நடுவே நான் தமிழனாக பிறந்த ஒரே காரணத்திற்காக ஊமையாக இருக்கிறேன்.
இதற்கு இங்கு இருக்கும் அறிஞர் பெருமக்கள் ஒரு பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

ப்ரியமுடன்...வசந்த் said...

//நான் இந்தியன் என சொல்லிக்கொண்டு ஒரு மலையாளியையோ, ஒரு கன்னடனையோ, ஒரு மராட்டியனையோ , நேசிப்பதை விட உலகில் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நாட்டு குடிமகனாக இருந்தாலும் அவன் தமிழை தாய்மொழியாக கொண்டவனெனில் அவனைத்தான் முதலில் நேசிப்பேன் .இதுதான் இயற்கை.//

அருமை நானும் அப்படியே நேசிப்பேன்...

Anonymous said...

இந்தியன் என்ற உணர்வும்,தாய்நாட்டு பற்றும் எனக்கு சற்று அதிகம்தான்.சாராசரியை விட கூடுதல் தேசப்பற்று எனக்கு.ஆனால் கடந்த சில வருடங்களாக இரண்டும்கெட்டான் நிலையில் குழம்பி வருகிறேன். காரணங்களை சொல்லுகிறேன். தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் அரசு தமிழனுக்கும் தமிழ் இனத்திற்கும் பாரபட்சம் காட்டி தீங்கு இழைத்து வருவதாக ஆழமாக நம்புகிறேன்.இந்தியன் என்ற உணர்வு நீர்த்து போய் தமிழன் என்ற நிலைக்கு கொஞ்ச கொஞ்சமாக தள்ளபடுவதாக உணர்கிறேன்.

Suresh Kumar said...

உங்களோடு என் கோபத்தையும் என் ஆதங்கத்தையும் பதிவு செய்கிறேன்

தேவன் said...

அருமை. அருமை.