யார் .அந்த பெண் பதிவர்...?




பக்கத்து மாநிலத்துல இருக்கும் பெண் பதிவர் அவர்..! கவிதையா எழுதிதள்ளுவாங்க..! ஒரு தடவை அவங்க ஊர்ல ஒரு மலை கோவில் ரொம்ப விஷேசம் ன்னு சொல்லி அவங்க ஊருக்கு சக பதிவர்கள் சில பேர அழைக்கவே பதிவர்கள் சிலரும் தங்கள் குடும்பத்துடன் அவங்க ஊருக்கு போனாங்க. அந்தபெண் பதிவரின் கணவர் குழந்தைகள் எல்லாம் சந்தோசமா வரவேற்ப்பு கொடுத்துநல்ல உபசரிப்பு . கொஞ்ச நேரத்துல எல்லோரும் கூட்டமா அங்க இருக்குற மலைகோயிலுக்கு கிளம்பி போனாங்க.

அது கொஞ்சம் திகிலான காட்டு பாதை மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி..!


எல்லா பதிவர்களின் குடும்பத்தினரும் நல்ல அன்யோன்யமா பழகி கல கல ன்னு கோயிலுக்கு போயிட்டு திரும்பிகிட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு நாலைஞ்சு பேரு முக மூடி போட்டுக்கிட்டு கைல துப்பாக்கியோட அவங்கள சுத்தி வலைசுட்டாங்க..! ம்ம்ம் போட்டு இருக்குற நகைகள் எல்லாம் கழட்டுங்க னு சொல்லவே..!




ஆளாளுக்கு பயத்துல சத்தம்போட..! அந்த பெண் பதிவர் மட்டும் அசரவே இல்ல..! அந்த மூகமுடி காரங்கள நோக்கி மெல்ல முன்னேற ஆரம்பிக்க அவங்க எல்லோரும் கொஞ்சமா பின்னாடி போறாங்க தன் கூட வந்தவங்கள பார்த்து கொஞ்சம் எட்டி போக சொல்லுறாங்க அந்த பெண் பதிவர் . இங்க சக பதிவர்களுக்கு குழப்பம் என்ன இவங்க மட்டும் தனியா போறாங்க பயமே இல்லாம ஒருவேள விஜய சாந்தி கணக்கா சண்டை ஏதும் போடுவாங்களோ அப்படின்னு யோசிச்சுகிட்டே அந்த பெண்பதிவரின் கணவர் ,குழந்தைகள பார்த்தா அவங்க கொஞ்சம் கூட சலனம் இல்லாம தெம்பா நிக்குறாங்க..!


அங்க பார்த்தா அந்த பெண்பதிவர் வானத்த பார்த்து பூமிய பார்த்து மரம் ,மலை எல்லாத்தையும் பார்த்து ஆவேசமா என்னமோ சொல்ல ....!

அவ்வளவுதான் அந்த மூகமுடி காரங்கள பார்க்கணும் எதோ காக்கா கூட்டதுல கல்லெறிஞ்மாதிரி சிதறி அடிச்சு பின்னங்கால் பிடரியில அடிக்க ஓடுரானுங்க ...ஓடுரானுங்க ...ஓடியே போய்ட்டானுங்க ...!

அத பார்த்த சக பதிவர்களுக்கு ஏதோ கொஞ்சம் புரிய.... பதிவர் மனைவியருக்கு குழப்பம்.



ஒரு பதிவர் மனைவி அவர் கணவரிடம்



ஏங்க என்ன சொல்லி இருப்பாங்க கொள்ளை காரனுங்க இப்படி ஓடுராங்க...!



அனேகமா கவிதை எதும் சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.!



கவிதையா ..? அதுக்கா இப்படி..? நீங்க அவங்க கவிதை எல்லாம் படிச்சு இருக்கீங்கதானே...?



ம்ம்ம்.. ப்லாக் ல படிக்கும் போது ஒரு மாதிரிதான் இருக்கும் ஆனா நேர்ல பார்க்கும் போது எனக்கே கொஞ்சம் பயமாதான் வருது...!



என்னங்க இப்படி மாட்டி உட்டுடீங்க ...! நம்மகிட்ட கவிதை எதும் சொல்லிட போறாங்க குழந்தைகள் எல்லாம் பயந்துறபோராங்க என்ன பண்ணுறது ..!



ம்ம்ம் பயப்படாத கொஞ்சம் அட்ஜெஸ் பண்ணிக்கோ நைட்டுகுள்ள எப்படியும் கிளம்பிடலாம்..!



ஒரு வெற்றி புன்னகையுடன் பெண்பதிவர் திரும்பி வருகிறார் எல்லோரும் புறப்பட தயாராக... பெண் பதிவரின் கணவரை காணோம். தேடி பார்த்தா பக்கத்துல இருக்குர ஒரு கொடுக்காபுளி மரத்துல கைய வைச்சுகிட்டு வானத்த பார்த்த படி நிக்குறார். கண்ணெல்லாம் சிவந்து உணர்ச்சி வசபட்ட நிலையில இருக்கார். பதிவர் எல்லாம் அவர கூட்டி வராங்க .



கொஞ்சதூரம் யாரும் எதுவும் பேசல ஒரு பதிவர் மட்டும் அந்த பெண்பதிவரின் கணவரிடம் மெல்ல பேச்சு கொடுக்கிரார்.



வீட்டுல எல்லாம் எப்படிண்ணே கவிதை எதும் சொல்லிட்டே இருப்பாங்களா..?



ஆமா.. சொல்லுவாங்க...!



அவங்க கவிதை உங்களுக்கு புடிக்குமா..?



அதுக்கு அவர் கோவமா ஒரு பார்வை மட்டும் பார்க்குறார்..!



இல்ல.... எப்படி சமாளிக்கிறீங்க அதான் கேட்டேன்..!



வீடு நெருங்கவே பெண்பதிவர், பதிவர் மனைவியர் எல்லாம் வீட்டிற்க்கு செல்ல..!



பெண்பதிவரின் கணவர் பதிவர்களை ஒரு கோயில் மண்டபத்திற்கு கூட்டி செல்கிறார்.அங்கே எல்லோரையும் அமர சொல்கிறார்..! கொஞ்சம் கனைத்த படி பேச ஆரம்பிக்கிறார்..!



கவிதைங்கிற பேர்ல அவங்க வீட்டுல எப்ப்டியெல்லம் சித்ரவதை பண்ணுறாங்க தெரியுமா..! என் மனசுல உள்ள பாரத்த சொல்லுறேன்...!



அவர் பட்ட அவஸ்த்தையை,அந்த ரத்த சரித்திரத்தை சிவப்பு கலர்ல சொல்லுரார் கேளுங்க...!



காலைல டிபன் சாப்பிடுறத்துக்கு முன்னாடி எனக்கு ரெண்டு..! ,பசங்களுக்கு ரெண்டு..!



என்ன .. ரெண்டு..?



என்னவா? கவிதைதான் அதும் அந்த கவிதைக்கு கருத்து சொல்லிட்டுதான் சாப்பிடவே ஆரம்பிக்கனும் இல்லாட்டி சாப்பாடு கிடைக்காது .!



இதுக்காகவே மதிய சாப்பாட்டுக்கு நான் வீட்டுக்கு போறது இல்ல..! ஆனா அப்படியும் விட மாட்டாங்க சாப்பாடு கொடுத்து அனுப்பும்போது கவிதையும் எழுதி கொடுத்து விடுவாங்க அதுக்கு போன் பண்ணி கருத்து சொல்லனும்..! சாப்பாடு நான் மீதம் வைச்சுட்டா.. ஏன் மாமா சாப்பாடு சரியா சாப்பிடல கவிதை புடிக்கலையான்னு கேள்வி வேற..!



ஐயோ...!



அவங்களுக்கு எப்போ கவிதை வரும்னே தெரியாது..!

சில சமயம் நான் பாத்ரூம் ல குளிச்சுகிட்டு இருக்கும் போது வெளில நின்னு கவிதை சொல்லுவாங்க ..! அதும் அந்த கவிதையை கேட்டு பாத்ரூம் ல இருந்தபடியே கைதட்ட சொல்லுவாங்க..என்ன பண்ணுறது நானும் உள்ள இருந்தபடி கைதட்டுவேன்...!



நைட்டு ரெண்டு மணிக்கு எழுப்பி மாமா கவிதை கேளுங்கன்னு சொல்லி இருக்காங்க தெரியுமா?


அட கொடுமையே..?



ஒரு தடவை அவங்க பாட்டி செத்துத்டாங்க...! இவங்களுக்கு அந்த பாட்டின்னா உயிரு அங்க சாவுல ரொம்ப அழுது ஆர்பாட்டம் பண்ணிடாங்க.. எனக்கே அப்போ ரொம்ப பாவமா போச்சு அழுதுகிட்டே என்னை கூப்பிட்டாங்க அழுதுகிட்டுதானே கூப்பிடுறாங்கன்னு நம்பி போனேன் என்னை தனியா கூட்டிகிட்டு போய் அழுதுகிட்டே முழுசா மூணு கவிதை சொல்லிட்டு அழுதுகிட்டே போய்ட்டாங்க...!



என்னால எவ்வளவுதான் தாங்க முடியும் சொல்லுங்க..? நானும் மனுசன் தானே .. என்னை என்ன இரும்புலையா செஞ்சு இருக்காங்க..?




ஒரு கட்டத்துமேல என்னால முடியல நேரா அவங்க அம்மா,அப்பா கிட்ட சொல்லி வந்து புத்திமதி சொல்லிட்டு போங்கன்னு சொல்லி கூப்பிட்டேன். அதுக்கு அவங்க அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா...? அவ கவிதை தாங்க முடியாமதான் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைச்சோம் அங்க வந்தும் ஆரம்பிச்சுட்டாளா..? அப்படின்னு சொல்ல என்னை எப்படி மாட்ட வைச்சு இருக்காங்கன்னு அப்போதான் புரிஞ்சது..!




ஒரு ரெண்டு நாள் கழிச்சு அவங்க அம்மாவும்,அப்பாவும் வந்தாங்க, வரும் போது கூட ஒருத்தர கூட்டி வந்தாங்க அவருக்கு ஒரு எண்பது வயசு இருக்கும் நாட்டாம தாத்தா னு சொல்லுவாங்களாம். அவர் பேச்சுக்கு அவங்க ஊரே கட்டுப்படுமாம் அப்படி ஒரு மரியாதை அவருக்கு..! பாவம் நடக்க முடியாம நடந்து வந்தார்..! எல்லோரும் இவங்ககிட்ட எடுத்து சொல்லி நெறைய புத்தி மதி சொல்லிகிட்டு இருந்தாங்க, அப்போ, திடீர்னு ’’இறையே எனக்கு ஏன் இச்சோதனைனு’’ சொல்லி சத்தமா ஒரு கவிதை ஆரம்பிச்சாங்க பாருங்க .



..அவ்ளோதான் நடக்க முடியாம வந்த அந்த நாட்டம தாத்தா எந்திரிச்சு ஓடீருக்காரு பாருங்க ஓட்டம் அவர் ஓடி போன அந்த காட்சி இன்னமும் என் கண்ணுக்குள்ளயே நிக்குது..! ஓடி போன அந்த தாத்தா ஒரு ஷேர் ஆட்டோ புடிச்சு தப்பிச்சு போயிட்டார்.



ஆனா இவங்க கவிதை ய நிறுத்தல அவங்க அப்பா இருக்க்க்கி காதை பொத்திகிட்டார். அவங்க அம்மா தலைலயே அடிச்சுகிறாங்க. நான் மட்டும் ங்ஙே னு உக்காந்து இருக்கேன் வேற என்ன செய்ய..?




அப்படியே ஒரு வாரம் போச்சு இவங்க என் கிட்ட வந்து மாமா நான் இனிமே கவிதை சொல்ல மாட்டேன் அப்படின்னு சொல்ல எனக்கு ஆச்சர்யம், சந்தோசம் தாங்கல..! ஏன் இப்படி ஒரு முடிவுன்னு கேட்டா... அதெல்லாம் கேக்காதீங்க நான் இனி கவிதை சொல்லல அதுக்கு தினமும் எனக்கு இருநூரு ரூவா வேணும் னு சொல்ல ஏன் எதுக்குன்னு கேக்காம நானும் சரின்னுட்டேன்..!




ஒரு அஞ்சு நாள் நல்லா நிம்மதியா போச்சு ஆறாவது நாள் ஒரு பெரியவர் நான் வேலை செய்யுற இடத்துக்கு வந்தார் அந்த பெரியவர் மனைவி தினமும் ஆஹா..!அருமை..!பிரமாதம்..! அப்படினு புலம்புறாங்களாம் என்ன காரணம் னு என் கிட்ட கேக்குறார் அவர் யாருன்னே எனக்கு தெரியல நான் என்ன சொல்ல.? அதோட உங்க வீட்டுல என் மனைவி வேலைக்கு சேர்ந்த பிறகுதான் இப்படி புலம்புது அப்படி சொல்ல ..! இவர் ஏதோ அட்ரஸ் மாறி வந்துட்டார்னு நினைசேன் ஆனா விலாசம் என் மனைவி பேரு எல்லாம் சரியா சொல்லுரார் என்ன அப்படின்னு விசாரிச்சா..? என்ன நடந்தது தெரியுமா? இவங்க என்ன காரியம் செய்ஞ்சு இருக்காங்க பாருங்க..




பக்கத்துல ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி ல வேலை பார்க்குற ஒரு அம்மாவ கூப்பிட்டு அங்க கொடுக்குறத விட சம்பளம் அதிகமா தரேன்னு சொல்லி வீட்டுல உக்கார வைச்சு ஹார்லிக்ஸ்,பூஸ்ட் எல்லாம் போட்டு கொடுத்து சம்பளம் கொடுத்து கவிதை சொல்லி இருகாங்கப்பா எங்கயாச்சும் நடக்குமா? இவங்க சொல்லுற கவிதைக்கு எல்லாம் ஆஹா..!அருமை..!!பிரமாதம்...!!!அப்படின்னு மட்டும் சொல்லனுமாம் அந்த அம்மா.. இதான் ஒப்பந்தம் .




அதயே வீட்டுலயும் போய் புலம்பி இருக்கு அந்த அம்மா..!

எதும் சிக்கல் வர போகுதுன்னு அதயும் நிறுத்திட்டேன்..!



இப்போ கொஞ்ச நாள் முன்னாடி நாங்க எல்லோரும் காளஹஸ்தி கோயிலுக்கு போனோம் சாமி கும்பிட்டு திரும்பும்போது இவங்கள காணோம் தேடி பார்த்தா ஒரு கோபுரம் முன்னாடி நின்னுகிட்டு ஏ...கோபுரமே..... அப்படின்னு கவிதை சொல்லிட்டு இருக்காங்க..! கூட்டிட்டு வந்துட்டோம் மறுநாள் பார்த்தா அந்த கோபுரமே இடிஞ்சு விழுந்துட்டு..!



பயமால்ல இருக்கு..!



இப்போ எனக்கு என்ன பயம்னா இவங்க தாஜ்மஹால் பார்க்கணும்னு கூட்டி போக சொல்லி அடம் பண்னுராங்க என்ன செய்ரதுன்னு புரியல ...!

ஐயோ எப்படியாச்சும் தாஜ்மஹால காப்பாத்துங்கண்ணே..!



----தொடரும்





டிஸ்கி;-

(நக்கல் பண்ணி பதிவு போட்டா மட்டும் எவ்ளோ பெரிய பதிவா வருது ...! அடுத்த பாகம் இன்னும் நெறய சம்பவங்களுடன் எப்போவாச்சும் வரும்)



சரி அந்த பதிவர் யார்னு கண்டு பிடிச்சீங்களா .?? ;;))






.


>

30 comments:

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

முதல் பெரிய பதிவு அண்ணே

----------------

அந்த கவிஞரை யாவருக்கும் தெரியுமே :P

நட்புடன் ஜமால் said...

நிறைய ஓசை கேட்கும் பதிவர்

ஏழு தோசை ...

Anonymous said...

எல்லாத்தையும் சொல்லியாச்சி இன்னும் என்ன யார் அந்த பெண் பதிவர் அப்பு ரொம்ப நாள் பகைய என்ற மேல?

Anonymous said...

என்னது தொடருமா? என்னைய வச்சி காமெடி கீமிடி பண்ணலையே?

Anonymous said...

நீங்க அந்த பக்கம் வாங்க சொல்றேன் உங்களுக்கும் கவிதை.....

கண்ணகி said...

அடடா...தமிழ்மேல உங்களுக்கு என்ன கோபம்,,

Anonymous said...

ஹ்ம்ம் ரொம்ப நாள் திட்டமிட்ட சதி மாதிரி இருக்கு...நடக்கட்டும் சரிங்க கெளம்பறேன் கவிதை எழுதணும் நாழியச்சி......

மங்கை said...

அதானே நக்கல் பதிவு மட்டும் நீலமா வருது... அதுவும் ரெண்டாம் பாகம் வேறயா...

Vidhya Chandrasekaran said...

புனைவா?? ரைட்டு:))

a said...

:))

Anonymous said...

இவ்ளோ பில்டப்புக்கு வொர்த்தா அந்த பெண் பதிவர் :)))))

கவி அழகன் said...

பாவம் ?
யாரு ?
யாரோ

நல்ல படைப்பு

வாழ்த்துக்கள்

டுபாக்கூர் பதிவர் said...

தமிழை கேலி பண்ணி ஒரு பதிவா?

ம்ம்ம்ம்....நடக்கட்டும், நடக்கட்டும்!

கல்யாண்குமார் said...

தமிழரசி கவிதைகளுக்கு இவ்வளவு பின்னணிக் கதை இருக்கா? அவர வச்சு இவ்ளோ பெரிய காமடிய கீமடியாச் சொன்னது ரசிக்கும்படி இருந்தது. ஆனாலும் காளஹஸ்தியின் சோகத்தோடு அவரது கவிதைகளை இணைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. தாஜ்மஹால் பக்கம் அவர் போகாமலிருக்க அனைவரும் பிரார்தனை செய்வோமாக.

ஊர்சுற்றி said...

தமிழரிசி அக்கா,
இதுக்கு டெரரா ஒரு எதிர்ப்பு கவிதை இதே அளவுக்கு போடுங்களேன்!!

வானவன் யோகி said...

பிரபலப்படுத்துவதற்கு...!!இப்படியும் ஒரு வழி இருக்குன்னு தெரியாம போச்சே...??!!!

ஒரு வேளை கூட்டம் கூடி யோசிக்கிறீங்களோ....!!!!

ஆனா...ஒண்ணு...பொம்பளைப் புள்ளைகளையெல்லாம் இப்படியெல்லாங்.....கால வாரக் கூடாது.(ஒருவேளை நீங்க காலில் விழுந்தது மாதிரியும் தெரியுது....!!!!)

இனிமேலும் கவிதை எழுதி உங்களைக் கொல்லாமல்”கசக்கிப் பிழியுமாறு” ”புண்ணாக்குப்புலவன்”புலிகேசியின் கட்டளையைக் கூறிக் கொள்கிறேன்

(அது எப்படி அவ்வளவு சீக்கிரத்திலெல்லாம் உங்களை விடமுடியாது.ஒருவாரம்.... பத்துநாள் வைச்சு கும்முவோம்...!!!!!)

தோழி said...

பொறாமை மற்றும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு இந்த பதிவு, வன்மையாக கண்டிக்கிறேன்...

ஹேமா said...

ஜீவன்...அமுதன்...நீங்களுமா.?

தமிழ்.... இதுக்கு கண்டிப்பா ஒரு எதிர்ப்பதிவு போடுங்க.
சும்மா விடாதீங்க !

சத்ரியன் said...

அடேயப்பா...! அண்ணன் ஹிஸ்ட்டிரியிலயே பெரிய்ய்ய்ய்ய்ய பதிவா இல்ல வந்திருக்கு...!

தமிழ்... எதிர் இடுகையை எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன் நான் said...

இவங்கள கூட்டிக்கிட்டு போயி... பாகிஸ்தான் எல்லையில நிக்க வைச்சி அவுங்க மொழியில கவிதை பாடசொல்லுங்க... அமுதன்.
(அந்த பக்கமா பாத்து)

அப்துல்மாலிக் said...

என்ன கொடும ஜீவாண்ணேது..

கவிதைக்கு வாழ்வு கொடுக்கும் அந்த பிரபல பெண்பதிவர் வாழ்க வாழ்க

எம்.எம்.அப்துல்லா said...

தலைப்பு உபயம் அப்துல்லான்னு போடாத உங்கள் சின்ன புத்தியைக் கண்டிக்கிறேன் :)))))

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//கண்ணகி said...
அடடா...தமிழ்மேல உங்களுக்கு என்ன கோபம்,,//

Repeat.

க.பாலாசி said...

//தமிழரசி said...
எல்லாத்தையும் சொல்லியாச்சி இன்னும் என்ன யார் அந்த பெண் பதிவர் அப்பு ரொம்ப நாள் பகைய என்ற மேல?//

இதுதான் எங்கப்பா குதிருக்குள்ள இல்லங்கறதா?

செம கலக்கல் போஸ்ட்டுங்க...சிரிச்சி முடியல....

RAMYA said...

ஐயோ! ஒரே சிரிப்பா எழுதி இருக்கீங்க:)

இந்த மாதிரி எழுதினதுக்கே தமிழ் கிட்டே சொல்லி ஒரு கவிதை எழுதச் சொல்லணும். எவ்வவ்வவ்வவ்வவ்வளவு நீளமான கதை.

ஆனாலும் வரிக்கு வரி நட்பின் கலாயித்தல்தான் அலங்கராமாக இருக்கு அமுதன்.

மறுபடியும் தமிழைப் பத்தி எழுதப் போறீங்களா?

விதி யாரை விட்டுச்சு எழுதுங்க எழுதுங்க ஆனா அதுலே பாருங்க, உங்க வீட்டுக்கு தினமும் ஒரு போஸ்ட் வரும் பரவா இல்லையா? :)

வால்பையன் said...

//சில சமயம் நான் பாத்ரூம் ல குளிச்சுகிட்டு இருக்கும் போது வெளில நின்னு கவிதை சொல்லுவாங்க//


ஹாஹாஹாஹா!

என்ன கொடும சார் இது!

Thamira said...

என்ன கூத்து இது அமுதன்? :-))

Unknown said...

”தமிழ்படம்” பார்த்தமாதிரி இருக்கு. ஒண்ணும் இல்ல ஆனா நல்லாவும் இருக்கு.

raj said...

Nice Story..
vathukkal madam..
thainka kavethai anppavam ennaku..

S.A. நவாஸுதீன் said...

Ivlo mukkiyamaana Pathiva epdi miss panninen.

Sema Kalakkal Thala. Haa haa haa.