ராஜ ராஜ சோழன் கல்லறை -ஒரு ரிப்போர்ட் (படங்களுடன்)

ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் நாள் ஊருக்கு செல்வேன் இந்த தடவை ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருக்கும் போது நண்பன் ஒருவனின் தொலைபேசி அழைப்பு.அதாவது கும்பகோணத்திற்கு அருகில் ஒரு கிராமத்தில் ராஜராஜ சோழன் கல்லறை இருப்பதாகவும் அதை ஒரு பெரியவர் பராமரித்து வருவதாகவும் அதை அவசியம் பார்க்கவேண்டும் என்று சொல்ல அப்போதே ஆர்வம் தொற்றி கொண்டது...!

எனக்கு அதுபுதிய தகவல்..!
சரி..! இந்த தடவை ஊருக்கு போகும்போது அவசியம் போய் பார்த்து அதை பதிவெழுத முடிவு செய்தாகிவிட்டது . எங்கள் ருக்கு கும்பகோணம் வழியேதான் செல்ல வேண்டும் ஊருக்கு போய்விட்டு திரும்ப கும்பகோணம் வரவேண்டுமெனில் அறுபது கிலோ மீட்டர் வரவேண்டும். எனக்கு அதுவரை பொறுமை இல்லை காலையில் கும்பகோணத்தில் றங்கியவுடன் குளிக்க கூட இல்லாமல் ஒரு ஆட்டோ பிடித்து அந்த இடம் நோக்கி புறப்பட்டுவிட்டேன் ஒரு நல்ல விவரமான ஆட்டோக்காரர் கிடைத்தார்.


உடையாளூர்இந்த உடையாளூர் என்ற ஊரில்தான் அந்த நினைவிடம் இருக்கிறது .
கும்பகோணம் மகாமக குளம் தண்டி ஆட்டோ செல்கிறது. இதுபோன்ற ஒரு இடத்திற்கு நான் தனியே சென்றதில்லை மனதில் ஒரு இனம்புரியாத உணர்வு.பொன்னியின் செல்வன் படித்ததிலிருந்து முன் பிறவியில் ஒரு சோழமன்னர் என்ற நினைப்பு வேறு எனக்கு..! குறைந்த பட்சம் ஒரு சோழ படைவீரனாக இருந்திருப்பேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை..!
உடையாளூர் நெருங்க நெருங்க ஒரு அவசரம் ,ஆர்வம் எல்லாம் தொற்றிகொள்கிறது அந்த இடத்தை பற்றிய ஒருமாதிரியான கற்பனையுடன் செல்கிறேன்.
தனது கட்டிட கலையால் உலகையே திரும்பிபார்க்கவைத்த ஒரு மாமன்னனின் கல்லறையாக சொல்லப்படும் இடம் இதுதான்.!

மிகவும் சாதாரணமாக ஒரு சிறிய ஓலை கொட்டகையில் இருக்கிறது இந்த நினைவிடம் ...!இந்த நினைவிடத்தை பராமரித்து வரும் பெரியவர்பக்கிரி சாமி என்ற இந்த பெரியவர்தான் இந்த நினைவிடத்திற்கு பூஜை செய்து பராமரித்து வருகிறார் இந்த பெரியவர் சொன்ன சில முக்கிய தகவல்கள் ...!இந்த இடம்தான் ராஜராஜனின் நினைவிடம் என்று ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டு உள்ளது ..!

இந்த இடத்தில் முன்னர் ஒரு கோவில் இருந்ததாகவும் 1960 ஆம் வருடம் ஏற்பட்ட மிக பெரிய வெள்ளபெருக்கில் கோயில் புதையுண்டதாக சொன்னார்..!

இந்த இடத்தை பற்றி முதலில் கேள்விப்பட்டு வந்த அதிகாரிகள் ஒரு அமைச்சர் ,மாவட்ட கலெக்டர் ஆகியோர் முன்னிலையில் ஒரு போக் லைன் எந்திரத்தின் மூலம் சுமார் ஒரு பதினைந்து அடி ஆழம் தோண்டி பார்த்தார்களாம் உள்ளே ஒரு கட்டிடம் போன்று இருந்து இருக்கிறது . இந்த இடத்தை தோண்டிய அதேவேளையில் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் திருவாரூரில் வெட்டி கொலை செய்ய படுகிறார் உடனே இந்த இடத்தை தோண்டிய அதிகாரிகள் அப சகுனமாக கருதி அந்த இடத்தை மூடி சென்று விட்டதாக அந்த பெரியவர் சொன்னார் . தஞ்சை பெரிய கோயிலுக்குள் ஆட்சியில் இருபவர்கள் சென்றால் ஆட்சி பறிபோய்விடும் என்ற ஒரு தகவல் உள்ளது சில சம்பவங்கள் அப்படி நடந்தும் உள்ளது இந்த காரணத்தால் இந்த இடத்தை தோண்டியவர்கள் கொலை சம்பவத்தை அப சகுனமாக நினைத்திருக்கலாம்..!

பல முக்கியஸ்தர்கள் இந்த இடத்திற்கு வந்து சென்று உள்ளனர் சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் சீமான் வந்து போனாராம்..!

இங்கே ஒரு குறிப்பேடு வைத்து உள்ளனர் இங்கே வந்த பலர் தங்கள் கருத்துகளை இதில் எழுதி வைத்து உள்ளனர் ...!

மேலும் இந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்ட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாக சொன்னார் இந்த பெரியவர்..!


பிற் சேர்க்கை;- இந்த பதிவுக்கு கருத்து தெரிவித்த நண்பர்கள் ஆதாரம் ஏதும் இல்லாமல் இருப்பதாகவும் ஆதாரத்துடன் பதித்து இருக்கலாம் என சொல்லி இருந்தனர் . இந்தபதிவை பொறுத்தவரை என் பயண அனுபவத்தையும், தேடலையுமே பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான். மேலும் தகவலுக்காக வலையில் தேடியபோது ஒரு நண்பரின் பதிவு சிக்கியது அதில் ராஜராஜ சோழன் கல்லறை பற்றிய சில ஆதார தகவல்கள் உள்ளன. அந்த நண்பருக்கு நன்றி ..!

http://heilderfuhrer.blogspot.com/2008/11/blog-post.htmlமீள் பதிவு
.

>

16 comments:

நட்புடன் ஜமால் said...

அண்ணா வந்தாச்சா ...

sakthi said...

பொன்னியின் செல்வன் படித்ததிலிருந்து முன் பிறவியில் ஒரு சோழமன்னர் என்ற நினைப்பு வேறு எனக்கு..! குறைந்த பட்சம் ஒரு சோழ படைவீரனாக இருந்திருப்பேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை..!


எனக்கு கூட அப்படி ஒரு நினைப்பு தான் ஆனால் நிஜம் என்னவோ யாருக்கு தெரியும்

sakthi said...

ராஜராஜ சோழன் கல்லறை பற்றி பகிர்விற்கு நன்றி

புவனேஸ்வரி ராமநாதன் said...

தகவலுக்கு மிக்க நன்றி. வாய்ப்பு அமையும்போது சென்று பார்க்க வேண்டும்.

ராஜ நடராஜன் said...

முன் பதிவில் கேள்வி எழுப்பியவர்களில் நானும் ஒருவன்.நீங்கள் கொடுத்த தொடுப்பு இடுகை கண்டும்....

I am not convinced.

Sriakila said...

படங்களைப் பார்த்தவுடன் ஆச்சரியமாக இருந்தது.

பகிர்வுக்கு நன்றி!

டுபாக்கூர் பதிவர் said...

சரியான சமயத்தில்...சரியான மீள்பதிவு!

ஹேமா said...

ஜீவன்...அமுதன் பதிவு காலத்தை வென்றபின்னும் வாழவைக்கிறது.அந்தப் பெரியவருக்கும் உங்களுக்கும் காலத்தின் பாராட்டுக்கள்.

துளசி கோபால் said...

இது எனக்குப் புதுத் தகவல்.

ரொம்ப நன்றிங்க.

நல்லமுறையில் ஆட்சி செய்யறவங்களுக்கு ஆபத்து இல்லைங்க.

நேர்மை இல்லாத ஆட்சியாளர்களுக்குத்தான் இப்படி ஒரு 'செக்' வச்சுட்டார் ராஜராஜன்.

ஆனந்தி.. said...

//தஞ்சை பெரிய கோயிலுக்குள் ஆட்சியில் இருபவர்கள் சென்றால் ஆட்சி பறிபோய்விடும் என்ற ஒரு தகவல் உள்ளது சில சம்பவங்கள் அப்படி நடந்தும் உள்ளது இந்த காரணத்தால் இந்த இடத்தை தோண்டியவர்கள் கொலை சம்பவத்தை அப சகுனமாக நினைத்திருக்கலாம்..!//
(இது கூட நல்லா இருக்கே..நம்ம ஊரு அரசியல் முக்கிய பிரமுகர்களை கடத்தி தேர்தல் சமயத்தில் பெரிய கோயிலுக்குள் அடச்சு வட்சுட்டால் என்ன??:-) )
ம்ம்..இப்படி மூட நம்பிக்கை காரணம் காட்டி ஆராய்ச்சியை கைவிடுறதும் நல்லதில்லை அமுதன்..அரசே இப்படி பண்ணகூடாது..அவங்க தொடர்ந்து ஆராய்ச்சி பண்ணினால் இன்னும் சுவாரசியமான செய்திகள் கிடைக்கலாம்..

தமிழன் said...

தகவலுக்கு மிக்க நன்றி. தகவல் பலகையை கவனித்தீர்களா? ஆட்சி வருடம் (985-1014) கீழே, இறப்பு 1012. ஏன் நம்மவர்கள் இது போன்ற மிக முக்கிய மன்னனின் வாழ்கை வரலாற்றை கூட ஒழுங்காக பதிவு செய்ய தவறுகிறார்கள் என தெரிய வில்லை.

SUFFIX said...

தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி.

அமுதா said...

nalla pahirvu

Ramesh said...

http://velicham007.blogspot.com/

ஸ்ரீ said...

பத்திரிக்கை ஒன்றில் படித்தேன். நல்ல தகவல்.

தமிழ் நாடன் said...

வணக்கம் தமிழ் அமுதன்,

நேற்று கூட முதல்வர் ””சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது;ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து-தென்னகத்தையே கட்டி ஆண்ட மாமன்னன் இராஜராஜசோழன் மறைந்தவிதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கான நினைவுத்தூண் அமைந்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது” அப்படீன்னு சொல்லியிருக்காரே? அவருக்கு இந்த செயதி தெரியாமல் இருக்குமோ(மா)?