காந்திஜி ஏன் பட்டினி கிடந்து சாகவில்லை ..?

வரலாறுகளை படிக்கும்போது ஒரே மாதிரிதான் படிக்கின்றோம் ..! ஆனால் சில விசயங்களும் ஒரு சில தலைவர்களும் மட்டுமே மனதில் நிலைக்கிறார்கள்.எனக்கு ஆரம்பத்தில் என் சிறுவயதில் காந்தி ஒரு மஹாத்மாவாகத்தான் தெரிந்தார். ஆனால் ..? கடந்த கால வரலாறுகள் முழுமையாக தெரியவரும்போது காந்தியை மகாத்மாவாக, தேசபிதாவாக ஏற்று கொள்வதில் நிறைய தடைகள் உள்ளன ..!

காந்தியை பற்றிய விஷயங்கள் நம்மீது வலுக்கட்டாயமாக திணிக்க பட்டு உள்ளது.அவரை அளவுக்கு அதிகமாக உயர்த்தி வைத்து உள்ளது இந்திய அரசு. இந்திய அரசு என்றால் யார்..? சுதந்திரத்திற்கு பின்னர் பெரும்பான்மை காலங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தான் இந்திய அரசு ..! காந்தி ஒரு காங்கிரஸ் காரர் அதனால் அவரை உயர்த்தி வைத்து மக்களிடம் திணித்து இருக்கிறார்கள் இந்த காங்கிரஸ்காரர்கள் . காந்தியை போல அல்லது காந்தியைவிட அதிக அளவு தியாகம் செய்த, தேசத்திற்காக உயிர் நீத்த எத்தனையோ தலைவர்கள் உண்டு அவர்களுக்கு கொடுக்காத ஒரு முக்கியத்துவத்தை காந்திக்கு மட்டுமே கொடுத்து இருக்கிறார்கள்.

காந்தியை எனக்கு பிடிக்காமல் போனதற்கு பல காரணங்கள் உள்ளன .
அவர் ஒரு அஹிம்சாவாதியாய் இருந்தார் என்பதைவிட தன்னை ஒரு அஹிம்சாவாதியாய் காட்டிக்கொள்ளவே முனைந்து இருக்கிறார்.

அஹிம்சாவாதி வேடத்தில் சில விசயங்களில் சர்வதியாகவே செயல் பட்டு இருக்கிறார் ..!

கோட்சே

கோட்சேவை ஒரு கொடுமையான கொலைகாரன் என்று சித்தரிக்க படும்போது
அதே கோட்சேவை ஒரு நாயகனை போல ஒரு கூட்டம் கொண்டாடுகிறது அப்படி கோட்சேவின் பக்கம் என்ன நியாயம் இருக்கிறது ? காந்தியின் கொலை பற்றிய கோட்சேவின் வாக்கு மூலத்தை படிக்கும்போது கோட்சே மனதில் உயர்ந்து நிற்பதை தவிர்க்க முடியவில்லை..!

கோட்சே வாக்கு மூலத்தில் இருந்து ...!


///நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.


சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்து விட்டார் . ///

காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்து விட்டார்
இது காந்தியின் அதிஷ்டம் மட்டும் அல்ல நேதாஜியின் மறைவு ஒட்டு மொத்த இந்தியாவின் துரதிஷ்ட்டம்..!

அப்படி நேதாஜி திரும்பி இருந்தால் இந்தியா எப்போதோ வல்லரசாகி இருக்கும் .

இதோ.. காந்தி ...அஹிம்சை ... சமாதானம் .. என்றெல்லாம் சொல்லி கொண்டு
அறுபது வருங்களாக மாவு அரைத்து கொண்டு இருக்கிறது காங்கிரஸ்.
நம்மை போல் இருந்த சீனா எங்கேயோ போய்விட்டது ஆனால் நாம் ..?

தமிழ் நாட்டில் ஏழை மக்கள் உடை இல்லாமல் அரை ஆடை மட்டுமே அணிந்து இருந்ததை பார்த்த காந்தி என் மக்களுக்கு உடை இல்லை அதனால் நானும் அரை ஆடைதான் அணிவேன் என அரை ஆடை உடுத்தினாராம் ..!

நாம் எவ்வளவுதான் வறுமையில் இருந்தாலும் வெளியில் செல்லும்போது இருப்பதில் நல்ல உடையைத்தான் அணிந்து செல்வோம் அது ஒரு தன்மானம் , சுய கவுரவம் .

ஆனால்..? காந்தி அரை ஆடை உடுத்திய செய்கையால் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் இந்தியர்கள் முழு உடை கூட அணிய வக்கில்லாத பஞ்ச பரதேசிகள் என்ற செய்தியை தான் பரப்பினார் . அதே சமயம் அவருக்கு உத்தமர் என்ற பெயர்.
ஒரு தேச தலைவனுக்கு இது அழகா ..? மக்கள் உடை உடுத்த வழியின்றி வறுமையில் இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் தானே ஒரு தலைவன் இருக்க வேண்டும் ஆனால் இவர் அதிலும் அனுதாபம் தேடிகொண்டார்.

சரி ..! மக்களுக்கு உடை இல்லை அதனால் தானும் அணியவில்லை இந்த காலத்திலேயே பட்டினி சாவுகள் நடந்து கொண்டுதான் உள்ளன ..! அவர் காலத்தில் இன்னும் எவ்வளவோ பட்டினி சாவுகள் நடைபெற்றன ..! என் மக்கள் பட்டினியால் சாகிறார்கள் அதனால் நானும் சாகிறேன் என்று காந்தி ஏன் பட்டினி கிடந்து சாகவில்லை ...???

>

26 comments:

Robin said...

தவறான கருத்து!

THOPPITHOPPI said...

அருமையான பதிவு

THOPPITHOPPI said...

சுபாஷ் சந்திரபோஸ் பற்றி இன்னும் பல இந்தியர்கள் தெரியாமல் இருப்பதுதான் கொடுமை.

THOPPITHOPPI said...

//// @ Robin said...

தவறான கருத்து!
/////

உங்களால் காரணம் சொல்ல முடியுமா?

தமிழரசி said...

புலப்படாத உண்மைகள் தெரியாமல் இருக்கும் வரை இப்படி கொண்டாடுவதில் ஆச்சிரியமில்லை.மஹாத்மாவும் மனிதன் தானே என எண்ண முடிகிறது..மக்களுக்கு பிடித்த தலைவர்களில் காந்தி முதலிடம் பிடித்ததை போல் பிடிக்காத தலைவர்களிலும் அவரே முதலிடம் பிடித்திருக்கிறார் என்பது ஒரு கருத்து கணிப்பு...

தமிழரசி said...

வரலாற்றில் புதையுண்டு போன பல உண்மைகளில் அறிந்தும் அறியாமல் இருக்கும் பலவற்றில் இத்தகவலும் ஒன்று... சிறந்த பதிவு தமிழ்

கக்கு - மாணிக்கம் said...

இது உண்மையும் கூட. காந்தி சமாதான பிரியர் என்றால் நேதாஜியை இப்படி வெறுத்து ஒதுக்கபட வேண்டியதில்லை. நேதாஜியும் அப்படி என்ன வெள்ளையர்களை கொன்றா குவித்தார்? இது ஒரு மாறு பட்ட கண்ணோட்டமும் கூட. கோட்சேயின் வாக்கு மூலத்தில் காந்தி - நேதாஜியை பற்றி குறிப்பிடும் கருத்துக்கள்
ஆழ்ந்து சிந்திக்கதூண்டும்.கோட்சேயை வெறும் "மத வெறியன் " காந்தியை கொன்று போட்டான் " என்றுதான் புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ளன.நாம் படிக்கும் வரலாறுகள் எதுவும் முற்றிலும் உண்மை இல்லை. உண்மையை சொல்லுபவர்களும் யாரும் இல்லை.
--

கக்கு - மாணிக்கம் said...

நேதாஜி பற்றிய செய்திகள் நிகழ்வுகள் அணைத்தும் திட்டமிட்டே இந்த காங்கிரஸ் கபோதிகளால் மறைக்கப்பட்டடுள்ளன. அவைகளை யாராவது இங்கு எழுதினால் நல்ல ஆரம்பமாக இருக்கும்.

polurdhayanithi said...

parattugal vazhthugal
polurdhayanithi

INDIA 2121 said...

நல்ல பதிவு!
சுபாஸ் சந்திர போஸ் ஓரு ரியல் ஹீரோ.வரலாற்றில் இருந்து மறைக்கபட்டிருக்கிறார்.

INDIA 2121 said...

துணிவான கருத்து!
பாரட்டுக்கள்.

டுபாக்கூர் பதிவர் said...

காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை என்கிற கருத்தில் உடன்படுகிறேன். இது சுபாஷ் சந்திரபோஸ் க்கும் பொருந்தும்.

நேதாஜி மாற்றுக் கருத்தாளராய் இருந்த அளவுக்கு, மாற்றுக் கருத்தாளர்களின் தலைவராய் இல்லை என்பதுதான் அவரின் பலவீனம்....

காந்தி பிரிட்டீஷ்காரர்களின் அடிவருடியாய் இருந்தார் என குற்றம் சாட்டினால், எதிர் தரப்பிலிருந்து நேதாஜி ஜெர்மனி,ஜப்பானின் கைக் கூலியாய் இருந்தார் என எதிர்வாதம் வரும்.

விமர்சனங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் தங்களது பாணியில் இருவருமே மகத்தான தலைவர்கள்தான்...அதனால் ஒருவரை உயர்த்திட இன்னொருவரை இது மாதிரி குறை சொல்வதை தவிர்க்கலாம்.

கக்கு - மாணிக்கம் said...

இங்கு நோக்கம் காந்தியை குறை மட்டும் சொல்வதல்ல என்று நினைக்கிறன்.
60 வருடங்கள் ஆகியும் ஒரு நாட்டு பற்று உள்ள தேசிய தலைவர்கள் நம்மிடையே இல்லை.
50 வருடங்களுக்கு மேல் இந்த நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியும் வெறும் ஆர்பாட்ட ,ஊழல் கூடாரமாக போய்விட்டது.
வேறு வழி இன்றி தகுதிகள் துளியும் அற்ற நபர்களை கொண்டு பரம்பரை ஆட்சி செய்ய மட்டுமே முனைகிறார்கள் அன்றி வேறு என்ன கண்டுவிட்டோம்? ஒபாமா விற்கு அளித்த விருந்தில் என்ன காரணம் கொண்டு அந்த ராகுல் பையனும் கலந்துகொள்ள நேர்ந்தது? அவன் ஒரு எம்.பி. என்றால் நாடு முழுவதும் எம்.பிக்கள் இல்லையா?

ஒரு வேலை நேதாஜி இங்கேயே இருந்து அவரின் தலைமையில் ஒரு அரசியல் கட்சி இருந்திருந்தால்
நிச்சயம் அவர்கள் இந்த காங்கிரசுக்கு மாற்றாகவே இருந்திருப்பார்கள் அன்றி அவர்களும் பி.ஜே.பி. போன்று வீணாய் போயிருக்க மாட்டார்கள் என்ற ஒரு ஆதங்கம் தான். மனத்திண்மையும், துணிவும் .நாட்டு பற்றும் அற்ற இந்த கூட்டங்கள் இந்தியாவை சுரண்டி இங்கு " இரண்டு " இந்துஸ்தான் உண்டாகி விட்டு இப்போது அடுத்து ஆளவும் ஆல் பிடிகிறார்கள்.
இதுவா காந்தி கண்ட வழி?

மனோ சாமிநாதன் said...

தனி மனித பலவீனாங்கள், குறைகள் மனிதனாய்ப்பிறந்த எல்லோரிடமும் இருப்பது மாதிரி மஹாத்மா காந்தியிடம் இருந்தன. அதை அவரே ஒப்புக்கொன்டு வெளிப்படுத்தியும் இருப்பதால்தான் அவர் மகாத்மா ஆகியிருக்கிறார்.
தவிரவும், கோட்ஸேவைப்போல இன்னும் எத்தனையோ பேருக்கு அவரைப்பற்றிய எதிர் மறையான கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் ஒரு வயதானவரை திட்டமிட்டு கொலை செய்தல் மட்டும் ஒரு நியாயமான தீர்வாகுமா? ஒரு மனிதரை துடிக்கத் துடிக்கக் கொன்றவரின் கருத்துக்கள் எந்த நியாங்களுக்கும் உடன்பட்டதல்ல!

கும்மி said...

நல்ல கட்டுரை. ஆனால், கோட்சேயின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, சில விஷயங்களைக் கூறியுள்ளதால் (அவை உண்மை என்ற போதிலும்) , கட்டுரையின் கருத்தினை ஏற்பதில் பலருக்கு தயக்கம் இருக்கக்கூடும்.

1939 ல் நேதாஜி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோது, பட்டாபி சீதாராமையா காந்தியின் ஆதரவோடு போட்டியிட்டார். ஆனால், நேதாஜியே வெற்றி பெற்றார். காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்களுக்கு நெருக்கடி கொடுத்து, நேதாஜியை ராஜினாமா செய்ய வைத்தார் காந்தி. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஒருவரையே, தனக்கு பிடிக்காதவர் என்பதால், ராஜினாமா செய்ய வைத்ததால், காங்கிரசில் இருந்த பலரும் காந்தியை அஹிம்சை வழியில் ஒரு சர்வாதிகாரி என்று கூறினர்.

--
தலித்துகளுக்கு தனி வாக்குரிமை வேண்டும் என அம்பேத்கர் வட்ட மேஜை மாநாட்டில் வாதிட்டு, பிரிட்டிஷாரை ஒத்துக்கொள்ள வைத்திருந்தார். ஆனால், தலித்துகளுக்கு தனி வாக்குரிமை கூடாது என்று உண்ணாவிரதம் தொடங்கினார் காந்தி. அவர் கிட்டத்தட்ட சாகும் நிலைக்கு சென்றபொழுது, வேறு வழியில்லாமல், அம்பேத்கர் தலித்களுக்கு தனி வாக்குரிமை கோரிக்கையை கைவிட்டார்.

உண்ணாவிரதம் என்னும் ஆயுதத்தை கையிலெடுத்து, அம்பேத்கரை பணிய வைத்தார்.
---

காந்தி தன்னுடைய வாழ்நாளில் அதிகமாக வெறுத்த நான்கு நபர்கள்: நேதாஜி, அம்பேத்கர், ஜின்னா, ஹரிலால்.

----
வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல விஷயங்களில் இவை சில.

.

பின்னோக்கி said...

வித்தியாசமான மேலும் வாசிப்பிற்கு தூண்டும் கருத்து.

கக்கு - மாணிக்கம் said...

// காந்தி தன்னுடைய வாழ்நாளில் அதிகமாக வெறுத்த நான்கு நபர்கள்: நேதாஜி, அம்பேத்கர், ஜின்னா, ஹரிலால்.//
-------------------------கும்மி.

நீங்கள் தான் ஆல் இன் ஆல் அழகு ராஜாவென்று எனக்குத்தெரியுமே.
இது விளையாட்டோ , வேடிக்கையோ அல்ல. உண்மையிலேயே கேட்கிறேன். மேற்கண்ட விபரங்களை, செய்திகளை உங்கள் தளத்தில் எழுதுங்களேன். என்னைபோன்ற அதிகம் தெரியாதவர்களுக்கு பெரிய உதவியாய் இருக்கும். படிக்கலாம்தான் ஆனால் நேரமில்லை. வீணான.தேவையற்ற விவாதங்கள் தவிர்த்து சற்று நம் முன்னோரின் உண்மைகளை தெரிந்து கொள்வது நலம். வீணாக "கும்மி" அடிக்க வேறு தளங்கள் இருக்கின்றன. நானும் அதில் ஒருவன்தான். ஆனால் இது போன்ற வரலாறுகளை நாம் சற்று அக்கறையுடன் பகிர்ந்து கொள்ள தெரிந்து கொள்ள ஆவல்.

கும்மி said...

//மேற்கண்ட விபரங்களை, செய்திகளை உங்கள் தளத்தில் எழுதுங்களேன்//

மூடநம்பிக்கைகளுக்கு எதிரானதாகவே நாங்கள் எங்கள் ஆல் இன் ஆல் தளத்தை பயன்படுத்துகின்றோம். சமூக சீர்கேடுகளுக்கு எதிரான கட்டுரைகளை இடுவதுதான் அந்தத் தளத்தின் நோக்கம்.

வரலாற்றுத் தகவல்களை, கட்டுரைகளை அங்கு வெளியிடலாமா என்பதை மற்றவர்களோடு கலந்துதான் முடிவு செய்ய வேண்டும்.

இது போன்ற தகவல்களை வேறு யாரேனும் வெளியிட விரும்பினால், அவற்றை தொகுத்துத் தருகின்றேன்.

bandhu said...

//சரி ..! மக்களுக்கு உடை இல்லை அதனால் தானும் அணியவில்லை இந்த காலத்திலேயே பட்டினி சாவுகள் நடந்து கொண்டுதான் உள்ளன ..! அவர் காலத்தில் இன்னும் எவ்வளவோ பட்டினி சாவுகள் நடைபெற்றன ..! என் மக்கள் பட்டினியால் சாகிறார்கள் அதனால் நானும் சாகிறேன் என்று காந்தி ஏன் பட்டினி கிடந்து சாகவில்லை ...???//
விதண்டா வாதத்திற்கு ஒரு நல்ல உதாரணம்.
குறிக்கோளை அடையாமல் உயிர் விட்ட எத்தனை தியாகிகளை நமக்கு தெரியும்? அரை உடை உடுத்தி பிரிட்டிஷாரின் மானத்தை தான் வாங்கினார். உயிர் விட்டிருந்தால் அது ப்ரிடிஷாருக்குத்தான் நல்லதாகியிருக்கும்.

ஹேமா said...

ஜீவன்...யோசிச்சுப் பாத்தா நீங்க சொன்னதெல்லாம் சரிதான்.ஆனாலும் கவனம்.யாராச்சும் உதைக்கப்போறாங்க.காந்தித் தாத்தாவைக் குறை சொல்லலாமோ!

கெட்டவன் said...

ஹிட்லர் ராணுவ உடை அணிந்த சர்வதிகாரி
காந்தி.. பரதேசி உடை அணிந்த சர்வதிகாரி

பட்டாபட்டி.. said...

அருமை..

வரலாறு திருத்தப்பட்டதை , வருங்கால சந்ததிக்கு உணர்த்துவது நம் கடமை.

பகத்சிங்கை தூக்கில் போடுங்கள். ஆனால் நாங்கள் நடத்தும் போராட்டம் முடிந்தபின் போடுங்கள் என கூறியவர்தானே இந்த அகிம்சை திலகம்...

கக்கு - மாணிக்கம் said...

// இது போன்ற தகவல்களை வேறு யாரேனும் வெளியிட விரும்பினால், அவற்றை தொகுத்துத் தருகின்றேன்.//
-------கும்மி

அன்பு நண்பர் தமிழ் அவர்களே உங்களுடைய "கண்ணாடி " தளத்தில் நண்பர் கும்மி அவர்கள் தொகுத்து தரும் இது போன்ற உண்மை வரலாற்று நிகழ்வுகளை,ஆக்கங்களை வெளியடலாம் தானே? ! இருவரும் ஆவண செய்யுங்கள்.

Premkumar Masilamani said...

பகத்சிங் தூக்கு + காந்தி ...
நேதாஜி + காந்தி ...

நெறைய நான் கேள்வி படாத விஷயங்கள்... நெறைய எழுதுங்க... ஆனா எழுதுரப்ப, references குடுங்க... இல்லேன்னா இது உங்க சொந்த கருத்தா திரிக்க படலாம்...

தகவலுக்கு நன்றி...

மங்கை said...

oru page alavukku comment paottu... enga paochu eppidi poachunu theriyalai...:((((((((

again type adikka neram illai...varean marupadiyum

ennodathu maatru karuthu saami... athu mattum sollidarean...:)))

Jayadeva said...

"காந்தி பகட்டான உடைகளைத் துறந்த மாதிரி உணவையும் துறந்திருக்கணும்" -அடப் பாவிங்களா உயிரை விட்டுவிட்டா அப்புறம் யார் போராடுவது? காந்தி என்ன மனைவி, இணைவி, துனைவின்னு மற்றும் அவர்களுக்கு பிறந்த [பன்னிக்] குட்டிகளுக்காக நாட்டையே கூறு போட்டு கொடுத்தாரா? தானோ தன்னுடுடைய பெண்டு பிள்ளைகளுக்காகவோ பதவி பணம் என அனுபவித்தாரா? அல்லது இரண்டு லட்சம் கோடி அரசுக்கு வரவேண்டிய வருவாயை அடித்து தன்னுடைய கணக்கில் போட்டு தேசத் துரோகம் செய்தாரா? இதையெல்லாம் செய்பவனை கேட்க திராணி இல்லாமல் செத்துப் போன ஒரு தலைவரின் சின்ன சின்னத் தவறுகளை ஊதி பெரிசாக்கி பூதக் கண்ணாடி போட்டு பார்க்கிறீர்களே? உங்களுக்கு ஒரு ரூபாய் புழுத்த அரிசிதான், எலிக்கறிதான், அரசு ஆஸ்பத்திரி தான் [அங்கே வயிற்றில் கத்தியை மறந்து வைத்து உள்ளே தைப்பதுதான்]. விடிவே கிடையாது.