அதிமுக மைனஸ் மதிமுக = அம்மா கோயிங் டு கொடநாடு..? வாக்கு சதவீதம் ஒரு அலசல்...!

என்னதான் ஊழல் குற்றசாட்டு அல்லது சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டாலும் அந்தந்த கட்சிகளுக்கென ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உள்ளது .இதுவரை அந்த கட்சிக்குரிய வாக்குகள் சிதறியது இல்லை இது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்ட வரலாறு.!

திமுக -அதிமுக கூட்டணி கட்சிகளின் தோராய வாக்கு சதவீதம்

திமுக கூட்டணி

திமுக 30%--32%

காங்கிரஸ் 7%--10%

பாமக 4%--5%

விடுதலை சிறுத்தை 1.5%--2%

மற்றவர்

கொமுக

முஸ்லீம் லீக்

வாண்டையார் கட்சி

பெமக அனைத்தும் சேர்த்து 3%-4%

ஆக திமுக கூட்டணி மொத்த வாக்கு சதவீதம் 45.5%--53%

அதிமுக கூட்டணி

அதிமுக 30%--32%

தேமுதிக 8%--10%

இ.கம் 1%---2%

மா.கம் 1%--2%

மற்றவர்

மமக

சமக

புத

மூமுக

பார்வர்டு பிளாக்

குடியரசு கட்சி அனைத்தும் சேர்த்து 5%--6%

ஆக அதிமுக கூட்டணி மொத்த வாக்கு சதவீதம் 45%--52%

இரு கூட்டணிகளும் கிட்ட தட்ட சம பலத்துடன் இருக்க

மதிமுக ஓட்டுகள் தான் இங்கே ஆட்சியை நிர்ணயிக்கும்

மதிமுக ஓட்டு சதவீதம் 3.54.5%

அதிமுக மேல் வெறுப்பில் இருக்கும் மதிமுக வாக்காளர்கள் திமுக விற்க்கு வாக்களிக்கும் பட்சத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பல இடங்களில் திமுக வெல்லும்.

மதிமுக வை புறக்கணித்ததால் வாய்ப்பை இழக்கிறார் அம்மா...???>

5 comments:

மு.சரவணக்குமார் said...

மதிமுக விஷயத்தில் அதிமுக தவறிழைத்து விட்டது.தேர்தலுக்குப் பின் வருந்துவார்கள்.

ராஜேஷ், திருச்சி said...

எப்போதும் கடைசி நேரத்தில் முடிவெடுத்து வாக்களிக்கும் அந்த 5- 6 % வாக்குகள் தான் முடிவை நிர்ணயிக்கும்..

உங்கள் வாக்கு சதவிதத்தில் காங்கிரசுக்கு 10௦ % அதிகம்.. அதே போல அ தி மு க விற்கு தி மு க வை எப்போதும் விட 2 - 4 % அதிகம்..

கக்கு - மாணிக்கம் said...

ஆளை காணோமே என்று இருந்தால் .....அமைதியாக இருந்து அனைத்தையும் கவனிக்கிறீங்க!
உங்கள் எண்ணம் போலவே நடக்கும் .:))))

Sriakila said...

என்ன நடக்குன்னு பொறுத்திருந்து பார்ப்போம்..

tommoy said...

check here -

http://my-poonga.blogspot.com/2011/05/blog-post_11.html