என் ஓட்டும்,தங்கமணி ஓட்டும்..!

யாரை கேட்டாலும் அதிமுக வுக்குத்தான் ஓட்டு போட்டதா சொல்லுறாங்க ..! மலேசியாவில் இருக்கும் ஒரு நண்பன் போன்ல சொல்லுறான் அவன் கம்பெனில வேலை பார்க்குற எல்லோருமே ஊருக்கு போன்பண்ணி அதிமுகவுக்குத்தான் ஓட்டு போட சொன்னாங்களாம் . நண்பனோட எட்டாம் வகுப்பு படிக்கும் தங்கச்சி பையன் அவங்க அம்மாகிட்ட ரெட்டலைக்கு ஓட்டுபோட சொல்லி கெஞ்சி கேட்டானாம் . என்ன இது எல்லாம் மாயையா இல்ல அதிமுக அலை ஏதும் வீசிடுச்சா ...?

தங்க மணி கூட ஜெயலலிதா மேல அவ்ளோ ஈர்ப்பா இருக்கு ..!

ஓட்டு போட வண்டில போகும்போது கூட தங்கமணிகிட்ட யாருக்கு ஒட்டுபோடனும்னு சொல்ல .. ஆனா தங்கமணி என்னை விடுறதா இல்ல .

வண்டில போகும்போது நடந்த உரையாடல்..!

ஏங்க யாருக்கு ஓட்டு போட போறீங்க

பிஜேபிக்கு போடலாம்னு நினச்சேன் ஆனா கொளத்துர்ல பிஜேபி நிக்கல அதனால திமுகவுக்குத்தான் போட போறேன் .

என்னது திமுகவுக்கா ..?

ஆமா ..

ஏங்க ரெட்டலைக்கு போடுங்க ..!

இல்ல திமுகவுக்குத்தான் ..!


அப்படியென்ன ஒனக்கு அதிமுக மேல பற்று ..?

பாவங்க அது (ஜெயலலிதா) தனியா கெடந்து கத்திகிட்டு கெடக்கு இவங்களுக்கு (திமுக) பாருங்க எவ்ளோ பேரு வாராங்க . ரெட்டலைக்கு போடுங்க .

இல்ல முடியாது நான் வைகோ ஆளு .! என்னால ரெட்டலைக்கு போட முடியாது .
அதே சமயம் திமுக வுக்கு போட முழு விருப்பமும் இல்ல. பிஜேபி யும் நிக்கல அதனால திமுகவுக்குத்தான் என் ஓட்டு ..!

நான் தங்கமணியை ரெட்டலைக்கு வேணாம்னு வற்புறுத்தவில்லை நியாயமாக அதிமுகவுக்கு கிடைக்கும் ஒரு ஓட்டை தடுக்க மனம் வரவில்லை . அதே சமயம் இன்னாருக்குத்தான் ஓட்டு போடணும்னு பொண்டாட்டிய கட்டாய படுத்தும் அளவுக்கு ஆணாதிக்க வாதி இல்லன்னு வெளில பீத்திக்கலாம் அபப்டி ஒரு நினைப்பு .


வாக்கு சாவடி கிட்ட போனதும் தங்கமணி சைகை ரெட்டலைக்கு ஓட்டு போட சொல்லி சைகை பண்ணிட்டு போக!

உள்ளே ..! சைதை துரைசாமி என்ற ஒரு சிறப்பான வேட்பாளர் இருந்தும் மதிமுக காரனான எனக்கு அதிமுகவில் இருந்து மதிமுகவை வெளியேற்றிய கோபமே அதிகம் இருந்ததால் உதய சூரியனுக்கே என் வாக்கை பதிவு செய்தேன் ..! அதோடு பொண்டாட்டி பேச்சை கேட்டு ஓட்டு போட்டவன் அப்படின்னு ஊர் உலகம் நம்மை தூற்றுமே என்ற பயம் வேறு .

வாக்கு சாவடிக்கு வெளியே ..! தங்கமணி ரொம்ப ஆரவத்துடன்

ஏங்க யாருக்கு ஓட்டு போட்டிங்க

அதான் சொன்னேன்ல திமுகவுக்குத்தான் ..!

மூஞ்சிய பாரு ....!!! (செம கடுப்புடன்)
>

6 comments:

கக்கு - மாணிக்கம் said...

எலக்ஷன் எல்லாம் முடிஞ்சு வருஷம் ஆனாமேரிக்கு இருக்கு இப்ப போயி இதெல்லாம் சொல்லிக்கிட்டு?

இன்னா ராஜா ரொம்ப நேரம் தூங்கிட்டீங்களா செல்லம்?

ராஜேஷ், திருச்சி said...

//யாரை கேட்டாலும் அதிமுக வுக்குத்தான் ஓட்டு போட்டதா சொல்லுறாங்க ..! //\

இப்படியே நெனைச்சுகிட்டே இருங்க மே 13 வரை.. ஐயோ ஐயோ

நட்புடன் ஜமால் said...

தேர்தல் முடிவுக்கு பிறகு இருக்கு பாருங்க ஒரு புது ஆட்டம் ...

Anonymous said...

வீட்ல போய் பூசை நடந்துச்சா. இல்லைன்னா, தங்கமணிகளுக்கே இழுக்காமே? ஹிஹி.

சி.பி.செந்தில்குமார் said...

ஓட்டு போட்டு கலகத்தை .....

ஸ்ரீ said...

:-)))))))