குடித்ததில் பிடித்தது..!

குடி குடியை கெடுக்கும்! குடி பழக்கம் எல்லாவற்றிற்கும் தீங்கானது!!
எனக்கு ஒரு சின்ன ஆசை அதாவது மெரீனா பீச் ல நல்லா மழை அடிச்சுகிட்டு ஊத்தணும் யாருமே அங்க இருக்க கூடாது மணல் வெளி ஓரமா கார நிப்பாட்டி காருக்குள்ள உக்காந்து தண்ணி அடிக்கணும்.ஒருநாள் அப்படி கிளம்பியாச்சு அப்போ மழைக்காலம் தான் ! இங்க பெரம்பூர்ல நச நச ன்னு தூறல் போட்டுக்கிட்டு இருக்கு கிழக்கு பக்கமா வானத்த பார்த்தா நல்லா மழை அடிச்சிகிட்டு பெய்யும் போல இருந்தது! மதிய நேரம் அது!! சரக்கு மற்றும் சைடு டிஷ், பிரியாணி எல்லாம் வாங்கிகிட்டு கார எடுத்துகிட்டு கிளம்பியாச்சு சீரணி அரங்கம் இருந்ததே அதுக்கு பின்னாடி கார் கொஞ்சதூரம் கடல் வரை போகும் அங்க போய் கார நிறுத்துறதா திட்டம்.
ஆனா ? யாரு கண்ணு வைச்சாங்களோ தெரியல பீச் நெருங்க ,நெருங்க மழை குறைந்து லேசா வெயில் அடிக்க ஆரம்பிச்சது! பீச் போனதும் பார்த்தா நல்லா சுள்ளுன்னு வெய்யில்! என்ன இது வீணாப்போன வானிலை?

வெறுப்பா போச்சு அப்புறம் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் வண்டிய நிப்பாட்டி தண்ணி அடிச்சுட்டு வந்தோம்! அப்புறம் அதுபோல தண்ணி அடிக்க முயற்சி பண்ணல.


போன வருஷம் கொடைக்கானல் போனோம் அப்போ தண்ணி அடிச்ச சம்பவத்த
மறக்கவே முடியாது! வேன் எடுத்துகிட்டு போய் இருந்தோம் முணு ,நாலு குடும்பங்களா போய் இருந்தோம். ஒரு நாள் காலைல கிளம்பி வெளில சுத்தி பார்த்துட்டு மதிய சாப்பாட்டுக்கு தங்கி இருந்த எடத்துக்கு வந்துட்டோம் அங்க சமையல் பண்ண ஏற்பாடு பண்ணி இருந்தோம்.எல்லாரையும் எறக்கி விட்டுட்டு தண்ணி அடிக்கிற பழக்கம் உள்ள நல்ல புள்ளைங்க ஒரு அஞ்சு பேரு வேன்ல கிளம்பிட்டோம்!
சரக்கு வாங்கிகிட்டு வேன ஒரு ஓரமா நிறுத்தினோம்!ப்போ
அடிச்சுது பாருங்க மழை!!! மழைனா ..மழை அப்படி ரு அடை மழை! சுத்தி உயர உயரமா மரங்கள்! மழைல தொப்பலா நனைஞ்சு நிக்குது ! ஒரு வேனுக்குள்ள இருந்துகிட்டு பெய்யென பெய்ஞ்சுகிட்டு இருக்குற அடை மழையை ரசிக்கிறதே
ஒரு போதைதான் கூடவே சரக்கும் இருந்தா அடடா சொல்லவே வேணாம்!
அப்போ எனக்கு பள்ளி கூடத்துல படிச்ச நெடுநல் வாடையில் நக்கீரர் கூறும் மழைக்கால வர்ணனையை எழுது அப்படிங்குற கொஸ்டீன் தான் நெனைப்பு
வந்தது! சமீபத்துல ஒரு பதிவர் இதை பத்தி எழுதி இருந்தாங்க!

அதுல!
மழையில் நனைந்த கமுக மரங்கள் காற்றின் வேகத்தில் அசைந்து உருண்டு ,திரண்டு அழகாக காட்சி அளித்தன, நீரின் வேகத்தை எதிர்த்து மீன்கள் நீந்திவர அதெற்கென காத்திருந்த கொக்குகள் அந்த மீன்களை பிடித்து உன்னலாயின, சிறு மழைக்கு அஞ்சாத கள்ளுண்ட மாந்தர்கள் சத்தமாக இரைந்த படி சென்றனர் இப்படியாக போகும் அந்த வர்ணனை !

மழை நிக்கவே இல்ல வேணும்கிற அளவுக்கு பெய்ஞ்சது! நல்ல நிதானமாபொறுமையா மழைய ரசிச்சுகிட்டே போதை தரும் திரவம்
வயிற்றில்
இறங்க அருமையாய் கழித்தோம் அந்த மாமழை தினத்தை.


.......................................................................................................
>

8 comments:

Ramani said...

அருமை அருமை
எங்கோ ஆரம்பிப்பது போல தெரிந்தாலும்
சரியாக நிறுத்தவேண்டிய இடத்தில் மிகச் சரியாக
நிறுத்தியிருக்கிறீர்கள்
சொல்லிச் செல்லும் விதம் அருமை
பாடல் வரிகளைப் போட்டிருந்தால் இன்னும்
சிறப்பாக இருந்திருக்குமோ?
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Niroo said...

ஹிஹிஹி

மழை+ குவாட்டர் = குடித்ததில் பிடித்தது

இரவு வானம் said...

ஹி ஹி குடித்ததில் பிடித்தது சிக்னேச்சர்

THOPPITHOPPI said...

//மழை நிக்கவே இல்ல வேணும்கிற அளவுக்கு பெய்ஞ்சது! நல்ல நிதானமாபொறுமையா மழைய ரசிச்சுகிட்டே போதை தரும் திரவம்
வயிற்றில் இறங்க அருமையாய் கழித்தோம் அந்த மாமழை தினத்தை//

ஹஹஹா................... nice

ஹேமா said...

மழை பெய்யேக்க போதை தாற திரவம் சூப்பரா இருக்குமோ.நானும் ஒருக்கா ட்ரை பண்ணிப் பாக்கவேணும் ஜீவன் !

சத்ரியன் said...

//மழை பெய்யேக்க போதை தாற திரவம் சூப்பரா இருக்குமோ.நானும் ஒருக்கா ட்ரை பண்ணிப் பாக்கவேணும் ஜீவன் !//

முயற்சி திருவினையாக்கும் ஹேமா.

சத்ரியன் said...

குடித்ததில் பிடித்ததில்... படித்ததில் பிடித்ததைப் புகுத்தி ... மப்பு கொள்ள வச்சிட்டீங்க ஜீவன்.

harveena said...

yengayoo poitengaa annnaaa :P