பொறாமைப் படுங்க....ப்ளீஸ்!

போட்டி மனப்பான்மையின் நிழலான பக்கம் தான் பொறாமை.ஆனால்..!இதனை ஒரு தீய குணமாகவே அறிந்து பழகிவிட்டோம்..! இந்த பொறாமை என்னும் குணத்தை நன்கு அலசி ஆய்ந்து பார்க்கவேண்டும் இது ஒரு அனிச்சை செயல். நான் பொறாமை படுவதில்லை என்று சொல்கின்றவர்கள் ஒரு போதும் போராளிகளாகவோ உழைப்பாளிகளாகவோ ஆகிவிட முடியாது.. பொறாமைக்கு ஆண்,பெண் பேதமில்லை ஆனால் பெண்களேஅதிக பொறாமை குணம் கொண்டவர்கள் என்று ஆண்கள் தம்மை ஏமாற்றி கொள்கின்றனர்.


பொறாமை ஒரு மெல்லிய குணம் .. அதனை வெளிப்படுத்தும் விதத்தில் தான் அது நல்ல குணமாகவோ அல்லது தீய குணமாகவோ தெரிகின்றது.
ஒருவருக்கு ஓரிடத்தில் வெற்றியும்,புகழும் கிடைக்கின்றது அது நம்மை பொறாமை கொள்ள செய்கின்றது.உடனே நாமும் அந்த வெற்றிக்கு முயல்வது
ஒரு ஆரோக்கிய நிலை இதனால் நம் பொறாமை நம்மை வெற்றிக்கு தூண்டுகின்றது. அதே சமயம் ஒருவரின் வெற்றி நம்மை கோபபடுத்துகின்றது உடனே நாம் அவரைபற்றி புறங்கூற ஆரம்பித்து விடுகின்றோம். ஏன் புறங்கூறவேண்டும்..? அவருடன் மோதி வெற்றி பெற நமக்கு திறமை இல்லாதபோதே நாம் இயலாமை /முயலாமை காரணமாக புறங்கூற செய்கின்றோம். வல்லமை பெற்ற ஒருவன் தனக்கு ஏற்படும் பொறாமையை வெற்றியாக மாற்றிக்கொள்வான்.

உங்களை பார்த்து எவரேனும் பொறாமை பட்டால் அவரை குறை சொல்லாதீர்கள். உங்கள் மீதுள்ள பொறாமைதான் உங்கள் வெற்றிக்கு கிடைக்கும் சான்றிதழ். உங்களை பார்த்து ஒருவர் பொறாமைப்பட்டால் அவரைவிட நீங்கள் சில படிகள் உயர்ந்து விடுகின்றீர்கள்.அதே சமயம் நீங்கள் யாரைப்பார்த்து பொறாமை படுகின்றீர்களோ அவரைவிட தாழ்ந்து விடுகின்றீர்கள்.

சரி பொறாமையை தவிர்க்க முடியவில்லை அது தானாகவே வந்து தொல்லை செய்கிறது என்ன செய்ய..?

பொறாமை ஏற்படும்போது சற்று நம்மை ஆழமாய் உள்நோக்கி பார்ப்போம். அந்த சமயத்தில் நமது மனம் குறுகி விடுகின்றது பொறாமை ஏற்படுத்தும் நபரே அந்த குறுகிய இடத்தில் நிற்கின்றார் நம்மை கூட நாம் இழந்து விடுகின்றோம்.அந்த நபரே நம்மை ஆட்கொண்டு இன்னல் படுத்துகின்றார் .! நமது நிலையை இழக்க செய்து,நிம்மதியை இழக்கசெய்து அவஸ்த்தைபடுத்தும் அந்த பொறாமை தேவைதானா?

சரி எப்படித்தான் இந்த பொறாமையில் இருந்து விடுபட்டு தொலைப்பது..?

மனதை கொஞ்சம் விசால படுத்துங்கள். உங்களை பொறாமைகொள்ள செய்பவரின் நற்குணங்களை கவனியுங்கள். அவரின் செய்கையை,அவரின் வெற்றியை மனதார பாராட்டிப்பாருங்கள் உங்கள் பொறாமை கொஞ்சம் குலையும். வஞ்சனையில்லாமல், போலித்தனமும் இல்லாமல் பாராட்டுங்கள். கண்டிப்பாக நீங்கள் அவரிடத்தில் உயர்ந்து விடுவீர்கள். அவரும் உங்களிடத்தில்
வசப்பட்டுவிடுவார். இதில் நாம் ஒன்றும் குறைந்து போய்விட மாட்டோம். மாறாக ஒரு வெற்றி பெற்ற மனநிலையும் கிடைக்கும். பொறாமை படுத்துபவரையோ, அல்லது எதிரியையோ பாராட்டி புகழ்ந்து வெல்வது அல்லது அவரை வசப்படுத்துவது அயோக்கியத்தனம் அல்ல..! முழுமனதோடு பாராட்டி உயரும் ஒரு மனிதத்தனம். என் பள்ளி பருவ காலங்களில் பொறாமை தீயில் எரிந்து இருக்கின்றேன்..முழுநேர பொறாமைக்காரனாக புறங்கூறிதிரிந்து அவஸ்தப்பட்டு கெட்ட பெயர் எடுத்து இருக்கின்றேன்
நான் யாரை பார்த்து பொறாமை பட்டேனோ அவர்கள் சில விஷயங்களில் என்னை பாராட்டிய போது முகத்தில் அறை பட்டதுபோல அவமான பட்டு அட இது நமக்கு தோனாம போச்சேன்னு நினைத்து என்னை மாற்றி கொள்ள துவங்கினேன். என் ஆசான் பாலகுமாரன் என்னை வழி நடத்த பொறாமை குணத்தை வெல்ல துவங்கி மன அமைதி கிடைக்க பெற்றேன்.

இப்போதும் கூட என்னை பலர் பொறாமை படுத்துகின்றார்கள்...! அவர்களை நான் மனதார பாராட்டிவிடுகின்றேன்..!

அதுனால பொறாமைப் படுங்க ப்ளீஸ்..!
அது உங்களை முன்னேற்றும். ..!


>

5 comments:

நட்புடன் ஜமால் said...

நம் நிலையை/தகுதியை நாம் அறிந்தால் பொறாமையிலிருந்து தப்பிக்கலாம், நம்மைவிட நலிந்தோரையும் கவணித்தல் பொறாமையிலிருந்து விடுபட உதவும்,

இதெல்லாம் சொல்லுதுல் ரொம்ப எளிது,

நல்ல விடயங்கள் அப்படித்தான், எளிதாகத்தெரிவதில்லை முயற்சியே அதன்பால் நம்மை இட்டுச்செல்லும்

முயலுவோம் ...


நல்லதொரு இடுக்கை அண்ணா!

மு.சரவணக்குமார் said...

ஒரு பெரிய உளவியல் விஷயத்தை எளிமையா உறைக்கிற மாதிரி சொல்லீட்டீங்க.

நைஸ்!

அரபுத்தமிழன் said...

அண்ணே, அவனுக்குக் கெடச்சுது எனக்கும் கெடைக்கணுமே
என்று நினைத்தால் நாம் முன்னேற முடியும், மாறாக‌
எனக்குக் கெடைக்காதது அவனுக்கு மட்டும் எப்படிக்
கெடைச்சுது/கெடைக்கலாம்னு நெனைக்கிறது நம்மை
படிப்படியாக அழித்து விடும்.

தமிழரசி said...

சரவணகுமார் அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்..இதை எடுத்து சொல்வதே கடினமான விஷயம்.அழகா இலகுவா சொல்லி வழியும் சொல்லியிருக்கீங்க..

//பொறாமை ஒரு மெல்லிய குணம் .. //

கவிதையா இருக்கு இந்த வரி.

எல்லா கருத்தும் ஆமோதிக்கவல்லதே..ஆனால் பின்பற்றுவோமா என்பது தான் சந்தேகம்..அடுத்தவங்க முன்னேற்றத்தில் பொறாமை படும் மனசு அவங்க உழைப்பையும் திறமையையும் கணக்கில் கொள்வதில்லை

உதாரணமாய் உங்க இளமைகால நிலையை சொன்னதும் பாராட்டக்குரியது

தமிழ் இப்படி எழுத நான் முயற்சி பண்ணலைன்னு எனக்கு பொறாமையா இருக்கு..மன்னிக்கவும் நிசமாவே பொறாமை..இப்படி எத்தனை பெரிய விஷயத்தையும் இப்படி சுருக்கமா சொல்லும் வித்தை எனக்கு தெரியலையேன்னும் பொறாமை தான் தமிழ்..

Shanthi said...

அண்ணா, உங்களுடயை சொல்லாளும் திறனை பார்த்து பொறாமை படுகிறேன். நானும், வெற்றி அடைவேனா ??