சுகமாய் ஒரு பிரசவம்

இரவு எட்டு மணி இருக்கும் வலி லேசா ஆரம்பிச்சது . என் அம்மாவும், மாமியாரும் இருக்காங்க, அக்கம்பக்கத்துல இருக்குற சிலரும் இருக்காங்க .

வலி அதிகமில்ல காலைல ஆஸ்பத்திரில சேத்துக்கலாம்னு ரெண்டுபேரும் சொல்லுறாங்க .
நான் வந்து என்ன சொன்னேன்னா, நடுராத்திரில வலி அதிகமானா என்ன பண்ணுறது அப்போ போய் ஆட்டோ புடிக்க முடியாது இப்போவே போய் ஆட்டோ புடிச்சுட்டு வர்றேன்னு சொன்னேன் . (ஆமாங்க வலி என் மனைவிக்கு)
இல்ல பார்த்துக்கலாம் இருடான்னு எங்கம்மா சொல்ல !

இப்போ போனா ஆஸ்பத்திரில சும்மா தான் உக்கார்ந்து இருக்கணும்னு என் மாமியார் சுவத்து பக்கம் பார்த்து சொல்ல (அவங்க என்ன நேரா பார்த்து பேச மாட்டங்க எதிர்ல நிக்கக்கூட மாட்டாங்க )

நான் கேக்காம புடிவாதமா ஆட்டோ புடிச்சுகிட்டு வந்துட்டேன் !

எங்கம்மா வந்து, ஏன்டா எங்களுக்கு தெரியாது ? என்னமோ ஏழு புள்ள பெத்தவனபோல அவசரமா ஆட்டோ புடிச்சுட்டு வர்றே ?

அப்படின்னு சொல்லிட்டு, நாங்க சொன்னா கேக்கவாபோறே ? ன்னு சொல்லி
துணி மணியெல்லாம் எடுத்துகிட்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டாங்க .

ஆஸ்பத்திரில சேத்தாச்சு !வலி கொஞ்ச கொஞ்சமா அதிகமாகுது !

மணி பதினொன்னு ஆக போகுது வலி பொறுக்காம மனைவி போடுற சத்தத்த கேட்டு எனக்கு பயம் வந்துடுச்சி
என் அம்மாவும்,மாமியாரும் என் மனைவி சத்தத்த பத்தி பெருசா எடுத்துக்காம
சாதாரணமா இருக்கவே,சரி இந்த சத்தமெல்லாம் சகஜம் போல ன்னு நான்
கொஞ்சம் தைரியமா இருந்துட்டேன் .

ஆஸ்பிட்டல்ல சிஸ்டர் வந்து, நைட் இங்க யாராவது ரெண்டுபேர்தான் தங்கலாம் அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க .

என் மனைவி அவங்கம்மா கைய புடிச்சுகிட்டு,நீ போய்டாதம்மா இரும்மா ன்னு
சொல்ல, எங்கம்மா வேற வழி இல்லாம கிளம்பிட்டாங்க !
மணி பன்னண்டுக்கு மேல ஆகுது .

ஆஸ்பத்திரில நாலஞ்சு சிஸ்டர் அப்புறம்,ரெண்டு பேர் மட்டும் இருக்காங்க !

நான் ஒரு சோபால உக்கார்ந்து இருக்கேன் !

மனைவி சத்தம் போட போட பதட்டம் தாங்கல,
என்னான்னு போய் பாருங்க ன்னு மாமியார்கிட்ட சொல்ல, அப்போகூட அவங்க
வெக்கபட்டுகிட்டு அந்தாண்ட போறாங்க என்னைய உள்ள விட மாட்டுறாங்க
அப்படின்னு கீழ குனிஞ்சுகிட்டு சொல்லுறாங்க !

அங்க இருக்குற சிஸ்டர் எல்லாம் சகஜமா அரட்டை அடிச்சுகிட்டு இருக்கவே,
என்னங்க சிஸ்டர் சத்தம் போடுறாங்க போய் பாருங்க ன்னு நான் சொன்னதும்

இதோ பாருங்க சார்!

இப்போ டாக்டர் வருவாங்க ! ரெண்டு,மூணு மணிபோல தான் டெலிவரி ஆகும் . டென்சன் ஆகாம போய் உக்காருங்க . அப்படின்னு சொல்லுறாங்க .
ஒரு மணி இருக்கும், என் மனைவி போடுற சத்தம் அவ குரல் போலவே இல்ல !
என்னால உக்கார முடியல !
ஒன்ற மணி போல என் மாமியார் கொஞ்சம் தள்ளி ஓரமா நின்னுகிட்டு இருந்தாங்க !
என்னான்னு பார்த்தா ! தேம்பி !தேம்பி அழுதுகிட்டு இருக்காங்க !
அய்யய்யோ என்னமோ ஆச்சு போலன்னு நான் அலறி அடிச்சுகிட்டு என்ன ஆச்சு
சொல்லுங்கன்னு கத்துறேன், அப்போ ஒரு சிஸ்டர் வந்து என்னங்க அழுதுகிட்டு இருக்கீங்க ?டாக்டர் வந்துட்டாங்க சீக்கிரம் போய் துணியெல்லாம் ரெடி பண்ணுங்கன்னு சொல்ல ,
ஒடனே போய் ஒரு வேட்டி துணிய எடுத்துகிட்டு வர்றாங்க !

மணி ரெண்டர ஆகுது சிஸ்டர் துணியெல்லாம் வாங்கிகிட்டு உள்ள போய்ட்டாங்க !
ஒரு சத்தமும் கேக்கல கதவ சாத்திக்கிட்டங்க அன்னிக்குத்தான் தெரிஞ்சது எனக்கு நான் எவ்வளவு பலவீனம் ஆனவன்னு !

திக் திக்ன்னு இருக்கு !

கதவு பக்கத்துல மாமியார் நிக்குறாங்க, நான் கொஞ்சம் தள்ளி நிக்குறேன் !

ஒரு சிஸ்டர் வெளில வர ! என்னாச்சுன்னு கேட்டா ?

கொஞ்சநேரம் ஆகும் வழில நிக்காதிங்க ஓரமா நில்லுங்கன்னு வெரட்டுது

இது நடந்தது அஞ்சு வருஷம் முன்னாடி அப்போ என்கிட்டே செல்போனும் இல்ல

ஒரு துணையும் இல்லாம ! என்ன செய்றதுன்னு தெரியாம !நான் நின்ன நெலமை எனக்குத்தான் தெரியும் .

கொஞ்ச நேரத்துல ஒரு சிஸ்டர் வந்து என் மனைவி பேர சொல்லி அவங்க ஹஸ்பெண்ட் யாருங்க ?

நாந்தான்னு சொல்ல, டாக்டர் உங்கள இங்கேயே இருக்க சொன்னாங்க எங்கயும் போயிடாதிங்க ன்னு சொல்லிட்டு உள்ள போய்ட்டாங்க !

அவ்வளவுதான், எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் போய்டுச்சு !

லேசா நடுக்கம் வந்துடுச்சு எனக்கு ! கைய கட்டிக்கிட்டு அப்படியே சுவத்துல சாஞ்சி நின்னுகிட்டேன் !

மனசுக்குள்ள முதன் முதலா சாமிய வேண்டுனது அப்போதான் !

நாலர மணி வரை அப்படியே நிக்குறேன், அஞ்சு மணிக்கு என் அம்மா வந்துட்டாங்க !

சும்மா சும்மா என் அம்மாவ பார்த்து எரிஞ்சு விழுற எனக்கு,அப்போ என் அம்மாவ பார்த்து எனக்கு வந்த ஒரு தைரியம் சொல்லி விளக்க முடியாது !

என்ன ஆச்சு ன்னு அம்மா கேக்க !

நான் வாயத்திறந்து ஏதும் சொல்லும் போது என் குரல் உடைந்து விடும்னு

பயத்துல ஒன்னும் இல்ல ன்னு தலைய மட்டும் அசைக்கிறேன் .

என் அம்மா வந்து மாமியார்கிட்ட போய் என்ன ஆச்சுன்னு கேட்டு அவங்க கிட்ட
போய் பேசிகிட்டு இருக்காங்க !


சரியா மணி அஞ்சு நாப்பத்தி ஒன்னு !

எல்லோரும் சந்தோசமா கேளுங்க !

'' ஒரு சிஸ்டர் வெளிய வந்து பெண் குழந்தை பிறந்துருக்கு ''

அம்மாவும் பொண்ணும் நல்லா இருக்காங்க ''


அப்பாடா !!

ரெண்டுஅப்போ எனக்கு வந்த சந்தோசம்,நிம்மதி, இதைஎல்லாம் என்னால சொல்லவே முடியாது .

கொஞ்ச நேரத்துல என் பொண்ணை ஒரு சிஸ்டர் வெளில கொண்டுவந்து காட்டுறாங்க .


''என் குழந்தைய பார்த்து ரெக்கைகட்டி பறக்காத குறைதான் ''


இப்போ எனக்கு என் மனைவிய உடனே பார்த்தாகனும் !


உள்ள போகலாமா ன்னு கேட்டா வெயிட் பண்ண சொல்லுறாங்க !

கொஞ்ச நேரம் கழிச்சு உள்ள போய் மனைவிய பார்க்குறேன் !

''சினிமால வர்றதுபோல நெகிழ்ச்சியோட கண் கலங்கல ''

'' குழந்தைய பார்த்திங்களான்னு அவ கேக்கல ''

லேசா சின்ன வெக்கத்தோட ஒரு சிரிப்பு சிரிச்சா அவ்ளோதான்


அது போதும் எனக்கு !!!
>

35 comments:

சிம்பா said...

பட படன்னு எழுதி படபடக்க வச்சுடீங்க. நல்ல இருக்குங்க.

ஜீவன் எனக்கு கண்ணுல பட்டத சொல்றேன். line alignment கொஞ்சம் பார்க்கணும். comma போடும் போது இடைவெளி விடாதீங்க.

இப்போ என் மனசுக்கு பட்டது, இதே கட்டுரைய மனைவியின் கண்ணோட்டத்துல இருந்து பார்த்தா எப்படி இருக்கும்.

நல்லா இருந்தா அடுத்த பதிவுல போடுங்க. கண்டிப்பா வருவேன்.

தமிழ் அமுதன் said...

நன்றி சிம்பா, வருகைக்கும்,கருத்துக்கும்,ஆலோசனைக்கும்,
மிக்க நன்றி !

ஆயில்யன் said...

//பட படன்னு எழுதி படபடக்க வச்சுடீங்க. நல்ல இருக்குங்க.//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

/இப்போ என் மனசுக்கு பட்டது, இதே கட்டுரைய மனைவியின் கண்ணோட்டத்துல இருந்து பார்த்தா எப்படி இருக்கும்.//

அட ஐடியா டக்காரக்கீதுப்பா!

அண்ணாச்சி இப்படியும் டிரைப்பண்ணி போடுங்க அடுத்த பதிவுல மீட் பண்றேன்

அப்புறம் குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள் :)))

குடுகுடுப்பை said...

நல்லா எழுதி இருக்கீங்க, தொடர்ந்து வரோம் தொடர்ந்து எழுதுங்கள்

குடுகுடுப்பை said...

அப்புறம் தஞ்சாவூர்ல நீங்க எந்த நாடு?

தமிழ் அமுதன் said...

/பட படன்னு எழுதி படபடக்க வச்சுடீங்க. நல்ல இருக்குங்க.//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

/இப்போ என் மனசுக்கு பட்டது, இதே கட்டுரைய மனைவியின் கண்ணோட்டத்துல இருந்து பார்த்தா எப்படி இருக்கும்.//

அட ஐடியா டக்காரக்கீதுப்பா!

அண்ணாச்சி இப்படியும் டிரைப்பண்ணி போடுங்க அடுத்த பதிவுல மீட் பண்றேன்

அப்புறம் குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள் :)))



ரொம்ப நன்றி ! ஆயில்யன் , வந்து ,வாழ்த்தி, ஆலோசனை சொன்னதுக்கு !

அடிக்கடி வாங்க !

தமிழ் அமுதன் said...

நல்லா எழுதி இருக்கீங்க, தொடர்ந்து வரோம் தொடர்ந்து எழுதுங்கள்


உற்சாக படுத்தியதற்கு
நன்றி ! குடுகுடுப்பைகாரரே!
தஞ்சை நாட்டில
பட்டுக்கோட்டை பக்கமுங்க
நம்ம ஊரு !(இப்போ சென்னை)

Anonymous said...

உங்க எழுத்துல ஒரு ஜீவன் இருக்கு.

நான் படிச்ச இந்தப் பதிவுலயும் ஒரு புதிய ஜீவன் இருக்கு.

இரண்டுக்கும் வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள். சிம்பாவின் கருத்துக்களையும் கவனியுங்கள்.

Thamiz Priyan said...

நல்லா எழுதி இருக்கீங்க... உண்மையில் நாம் அனுபவித்த ஃபீலிங்சை கொண்டு வருவது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்... அதை சிறப்பா செய்து இருக்கீங்க... வாழ்த்துக்கள்!

தமிழ் அமுதன் said...

உங்க எழுத்துல ஒரு ஜீவன் இருக்கு.

நான் படிச்ச இந்தப் பதிவுலயும் ஒரு புதிய ஜீவன் இருக்கு.

இரண்டுக்கும் வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள். சிம்பாவின் கருத்துக்களையும் கவனியுங்கள்.


நன்றி ! திரு, வடகரை வேலன் உங்களது கருத்துக்கள் என்னை
தைரிய படுத்துகிறது ! நன்றி ! நன்றி !! நன்றி !!!

தமிழ் அமுதன் said...

நல்லா எழுதி இருக்கீங்க... உண்மையில் நாம் அனுபவித்த ஃபீலிங்சை கொண்டு வருவது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்... அதை சிறப்பா செய்து இருக்கீங்க... வாழ்த்துக்கள்!


வருகைக்கும் , வாழ்த்துக்கும் , நன்றி !
தமிழ் பிரியன்

Unknown said...

நல்லா இருக்கு அண்ணா..!! :))

தமிழ் அமுதன் said...

நல்லா இருக்கு அண்ணா..!!


வாங்க ஸ்ரீமதி ! என் பொண்ணுங்களுக்கு, இன்னொரு அத்தை !

Cable சங்கர் said...

//வாங்க ஸ்ரீமதி ! என் பொண்ணுங்களுக்கு, இன்னொரு அத்தை !//

பொண்ணுங்களா? அப்போ அடுத்த அனுபவத்தை பத்தி எப்ப எழுத் போறீங்க.. நன்றாக இருந்தது உங்க பதிவு.. அனுபவிச்சவனுக்கு மட்டுமே புரியும்.. வாழ்க..

Anonymous said...

//லேசா சின்ன வெக்கத்தோட ஒரு சிரிப்பு சிரிச்சா அவ்ளோதான்//

அழகு :)

தமிழ் அமுதன் said...

Blogger cable sankar said...

//வாங்க ஸ்ரீமதி ! என் பொண்ணுங்களுக்கு, இன்னொரு அத்தை !//

பொண்ணுங்களா? அப்போ அடுத்த அனுபவத்தை பத்தி எப்ப எழுத் போறீங்க.. நன்றாக இருந்தது உங்க பதிவு.. அனுபவிச்சவனுக்கு மட்டுமே புரியும்.. வாழ்க..


வாங்க சங்கர் சார், முதல் பொண்ணு பொறக்கும் போது தான் நடுராத்திரியில
தொணைக்கு யாரும் இல்லாம ஒன்னும் புரியாம செத்து பொழைச்சது ,
ரெண்டாவது பொண்ணு பொறக்கும் போது மதியம் ரெண்டுமணி ,
முதல்ல அனுபவம் இருந்ததால பயம் ஒன்னும் இல்ல .

அடுத்து எதாவது சொல்லுரதுபோல இருந்தா சொல்லுறேன் !!!
வருகைக்கு நன்றி !!

தமிழ் அமுதன் said...

Blogger Thooya said...

//லேசா சின்ன வெக்கத்தோட ஒரு சிரிப்பு சிரிச்சா அவ்ளோதான்//

அழகு :)

நன்றி ! தூயா நன்றி !

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்க அன்னிக்கு பட்ட டென்ஷனை அப்ப்டியே எழுத்து மூலமாய் எங்களையும் பட வைத்து விட்டீர்கள்.

அருமையாய் எழுதுகிறீர்கள்.

(என் கணவரும் இதுபோல் எழுதினால் எப்படி இருக்கும் என்று யோசித்து கொண்டிருக்கிறேன். )

தமிழ் அமுதன் said...

Blogger AMIRDHAVARSHINI AMMA said...

நீங்க அன்னிக்கு பட்ட டென்ஷனை அப்ப்டியே எழுத்து மூலமாய் எங்களையும் பட வைத்து விட்டீர்கள்.

அருமையாய் எழுதுகிறீர்கள்.

(என் கணவரும் இதுபோல் எழுதினால் எப்படி இருக்கும் என்று யோசித்து கொண்டிருக்கிறேன்.


வாங்க அமிர்தவர்ஷிணி அம்மா, சார் கிட்ட கேளுங்க அவரையும் எழுத சொல்லுங்க !

Anonymous said...

உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் மிக அற்புதமான எழுத்துநடை, வாழ்த்துக்கள்!!!

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லாருக்குங்க ஜீவன் உங்க பதிவு! நீங்க எங்களையும் கொசுவத்தி சுத்த வச்சீட்டீங்க!! :-). ஒரே முச்சில படிக்க வச்சீட்டீங்க!!

தமிழ் அமுதன் said...

Anonymous திவ்யா said...

உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் மிக அற்புதமான எழுத்துநடை, வாழ்த்துக்கள்!!!

நன்றி திவ்யா! நீங்க சொல்லுறத கேக்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு !

தமிழ் அமுதன் said...

Blogger சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லாருக்குங்க ஜீவன் உங்க பதிவு! நீங்க எங்களையும் கொசுவத்தி சுத்த வச்சீட்டீங்க!! :-). ஒரே முச்சில படிக்க வச்சீட்டீங்க!!

வாங்க! சந்தன முல்லை! மிக்க மகிழ்ச்சி எனக்கு! நன்றி உங்களுக்கு !

RAMYA said...

அன்பு ஜீவன்,

வாழ்த்துக்கள் உங்கள் குட்டி தேவதைக்கு, எழுத்து நடை அருமை. மனைவி பிரசவத்தில் வரும் பட படப்பை தத்ருபமாக விளக்கி விட்டேர்கள். ஜீவனுள்ள வலை பதிவு. பாராட்டுக்கள்

ரம்யா

RAMYA said...

அன்பு ஜீவன்,

வாழ்த்துக்கள் உங்கள் குட்டி தேவதைக்கு, எழுத்து நடை அருமை. மனைவி பிரசவத்தில் வரும் பட படப்பை தத்ருபமாக விளக்கி விட்டேர்கள். ஜீவனுள்ள வலை பதிவு. பாராட்டுக்கள்

ரம்யா

தமிழ் அமுதன் said...

வாருங்கள் ,,ரம்யா தங்கள் வருகையும், வாழ்த்தும்
என்னை உற்சாக படுத்துகிறது ...நன்றி !

Aruna said...

ஒவ்வொரு வார்த்தையிலும் பாசமும் அன்பும் ஒளிர்ந்தது......கடைசியில் கண்ணில் நீர் துளிர்த்தது...
அன்புடன் அருணா

தமிழ் அமுதன் said...

Aruna said...

ஒவ்வொரு வார்த்தையிலும் பாசமும் அன்பும் ஒளிர்ந்தது......கடைசியில் கண்ணில் நீர் துளிர்த்தது...
அன்புடன் அருணா


நன்றி! அருணா !

ஆகாய நதி said...

ஆஹா ரொம்ப அனுபவிச்சு தத்ரூபமா அப்படியே உங்க அனுபவத்தை எங்களுக்கும் குடுத்துட்டீங்க....

அருமையா எழுதிருக்கீங்க...

என்னுடய பிரசவ வலிய எண்ணிப்பார்க்க வெச்சுட்டீங்க....

தமிழ் அமுதன் said...

ஆகாய நதி said...

ஆஹா ரொம்ப அனுபவிச்சு தத்ரூபமா அப்படியே உங்க அனுபவத்தை எங்களுக்கும் குடுத்துட்டீங்க....

அருமையா எழுதிருக்கீங்க...

என்னுடய பிரசவ வலிய எண்ணிப்பார்க்க வெச்சுட்டீங்க..



நன்றிங்க! உங்க முதல்
வருகைக்கு மிக்க நன்றி!

Anonymous said...

வணக்கம் ஜீவன் சார்,
என் பெயர் ப்ரியா.நான் இந்த வலையுலகத்திற்கு புதிது.உங்களின் இந்த வலைப்பக்கத்திற்கு சிம்பாவின் வலைப்பக்கத்தில் இருந்து வந்தேன்.எனக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கு.இந்த பதிப்பை நானும் என் வீட்டுக்காரரும் சேர்ந்து தான் படித்தோம்.அவர் படித்துட்டு ஜீவன் சொல்லிட்டார் நான் சொல்லலை,அப்டின்னார்.என் பொண்ணு பிறக்கும் போது எனக்கு எனக்கு என் வலி மட்டும் தான் தெரிந்தது.அவரோட மனநிலைமை எப்படி இருந்திருக்கும்னு நான் இப்பொ தான் உணர்கிறேன் ஜீவன் சார்.மெய் சிலிர்க்க வைத்து கண்ணீர் வர வைத்து விட்டீர்கள் ஜீவன் சார்.எங்களின் அன்னியோன்யம் அதிகரித்திருக்கிறது...ரொம்ப நன்றி சார்.

தமிழ் அமுதன் said...

ப்ரியா said...

//// வணக்கம் ஜீவன் சார்,
என் பெயர் ப்ரியா.நான் இந்த வலையுலகத்திற்கு புதிது.உங்களின் இந்த வலைப்பக்கத்திற்கு சிம்பாவின் வலைப்பக்கத்தில் இருந்து வந்தேன்.எனக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கு.இந்த பதிப்பை நானும் என் வீட்டுக்காரரும் சேர்ந்து தான் படித்தோம்.அவர் படித்துட்டு ஜீவன் சொல்லிட்டார் நான் சொல்லலை,அப்டின்னார்.என் பொண்ணு பிறக்கும் போது எனக்கு எனக்கு என் வலி மட்டும் தான் தெரிந்தது.அவரோட மனநிலைமை எப்படி இருந்திருக்கும்னு நான் இப்பொ தான் உணர்கிறேன் ஜீவன் சார்.மெய் சிலிர்க்க வைத்து கண்ணீர் வர வைத்து விட்டீர்கள் ஜீவன் சார்.எங்களின் அன்னியோன்யம் அதிகரித்திருக்கிறது...ரொம்ப நன்றி சார்.////


வாங்க பிரியா! உங்க பின்னுட்டம் எனக்கு மிக்க மகிழ்ச்சியை
அளிக்கிறது! ஒரு வேடிக்கை என்னவென்றால்? என் மனைவி
இந்த பதிவுகள் எதையும் பார்த்ததோ படித்ததோ கிடையாது!
என் கடையில் கணினி உள்ளது வீட்டில் கிடையாது! உங்கள்
இந்த கருத்தை கண்டவுடன் என் மனைவியை கடைக்கு
அழைத்துவந்து இந்த பதிவினை படிக்க சொல்ல தோன்றுகிறது!
(நாங்களும் அன்னியோன்யம் ஆகணுமில்ல) மிக்க நன்றி
உங்களுக்கும் உங்க கணவருக்கும்!

Priya said...

முதல்ல அத செய்ங்க ஜீவன் சார்.கண்டிப்பா கடைக்கு கூட்டிட்டு வந்து காமிங்க.ஆனா வேற பதிவுகளை பார்த்து எதிர்விளைவு ஆனா நான் பொருப்பில்லை ;)

தமிழ் அமுதன் said...

///priya said...

முதல்ல அத செய்ங்க ஜீவன் சார்.கண்டிப்பா கடைக்கு கூட்டிட்டு வந்து காமிங்க.ஆனா வேற பதிவுகளை பார்த்து எதிர்விளைவு ஆனா நான் பொருப்பில்லை ;)///


அப்படி ஒன்னு இருக்கோ?

மங்கை said...

அருமை அமுதன்...இந்த உணர்வுகளுக்கு ஈட் இனையே இல்லை.. ம்ம்ம்ம்... ஆண்கள் இதை பகிர்ந்து கொள்ளும் போதும் இன்னும் அழகு அதிகமாகிறது