இந்த கதை வந்து சாமர் செட் மாம் அப்படிங்கற ஆங்கில எழுத்தாளர் எழுதினது.
அத தமிழாக்கம் செய்து ஒரு புத்தகத்துல எழுதிஇருந்தாங்க,அத நம்ம ஸ்டைல்லசொல்லுறேன் கேளுங்க!!!
சுப்புரமணிக்கு வேலை வெட்டி ஏதும் இல்ல. சும்மா ஊர சுத்திகிட்டு இருந்தான்.
அவன்கிட்ட ஒருத்தர் வந்து, பக்கத்து ஊரு கோயில்ல மணி அடிக்கிற வேலை ஒன்னு இருக்கு போறியான்னு கேட்டார்? சுப்புரமணி சரி போறேன்னு சொன்னான்.அவரும் அட்ரஸ் கொடுத்து அனுப்பிவைச்சார்.
சுப்புரமணிய வந்து கவுண்டமணி போல நெனச்சுகங்க. அவனும் கோயில்ல வேலை கிடைக்க போகுதுன்னு , சந்தோசமா கிளம்பி பக்கத்து ஊரு கோயில்ல வேலை கேக்குறான்.
கோயில்ல டெல்லி கணேஷ் போல ஒரு பூசாரி இருக்கார்.
சுப்புரமணி:-வணக்கம் சாமி, இங்க எதோ மணி அடிக்கிற வேலை காலியா
இருக்குன்னு சொன்னாங்க,அந்த வேலைய பாக்கலாம்னு
வந்தேங்கோ.
கோயில் பூசாரி :- ஆமாம்பா வேலை காலியாதான் இருக்கு,மணி அடிக்கிரதோட
கோயில் வரவு,செலவு கணக்கும் பார்க்கணும் சரியா ?
ஆமா?நீ என்ன படிச்சு இருக்கே ?
சுப்புரமணி:- சாமி நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் போனதுஇல்லிங்கோ எனக்கு சுத்தமா எழுத படிக்க வராதுங்கோ.
கோயில் பூசாரி :- எழுத படிக்க தெரிஞ்சவங்களுக்குதான் இந்த வேலைய,
கொடுக்க முடியும். நீ நல்ல பையனா இருக்கே இப்போ
என்ன பண்ணுறது?..........சரி, உனக்கு ஆறுமாசம் டைம்
தரேன் அதுக்குள்ள நல்லா எழுத படிக்க கத்துகிட்டு வா!
உனக்காக இந்த வேலைய வேற யாருக்கும் கொடுக்காம
வைச்சு இருக்கேன்.போய்ட்டுவா!
சுப்புரமணி :- ரொம்ப நன்றி!சாமி நான்போய் எப்படியாச்சும் எழுத,படிக்க
கத்துகிட்டு வரேங்க!
ஊருக்கு வந்த சுப்புரமணி படிப்பு கத்துக்க முயற்சி பண்ணுறான் எவ்ளவோ
முயற்சி பண்ணியும் அவனுக்கு படிப்பு ஏறல.ஆறுமாசம் கழிச்சு மறுபடியும்
அந்த கோயில் பூசாரிய பார்த்து படிப்பு ஏறல எப்படியாச்சும் வேலைய போட்டுகொடுங்கன்னு கேக்குறான்.அதுக்கு அந்த பூசாரி வேலை கொடுக்க முடியாதுன்னு திட்டி அனுப்பிடுறார்.
சோகமா திரும்புற சுப்புரமணி, ஒரு பீடிய எடுத்து பத்த வைச்கிட்டு மெதுவா
நடந்து வர்றான் .பீடி முடிஞ்சு போகவே இன்னும் ஒரு பீடி பத்த வைக்கலான்னு
பீடி கடைய தேடுறான் அந்த ஏரியாவில எங்கயும் பீடி கிடைக்கல.
ஒடனே அவனுக்கு ஒரு யோசனை! இங்க ஒரு பீடி கடை வைச்சா என்ன ?
சரின்னு அக்கம்பக்கம் கொஞ்சம் கடன் வாங்கி, சின்னதா ஒரு பீடி கடை வைக்கிறான் .கடை நல்லா பிக் அப் ஆயிடுது.
கொஞ்ச நாள் கழிச்சு பெரிய பணக்காரனா ஆயிடுறான்.சொந்தமா வீடு கட்டி
கோவை சரளா மாதிரி ஒரு பொண்ண பார்த்து கல்யாணமும் பண்ணிக்கிறான்.
நெறைய பணம் இருக்கவே,அவன் பொண்டாட்டி சொல்லுது! ஏனுங்க மாமா!
இவ்ளோ பணத்தையும் வீட்டுல வைச்சு இருக்கீங்க பேங்க்ல போட்டா
வட்டி வரும்ல அப்படின்னு சொல்ல, அவனும் சரி அம்மிணி ன்னு பெரிய
தொகை எடுத்துகிட்டு பேங்க்கு போறான்.
பேங்குல நெறைய பணம் கொண்டு போனதால, இவனுக்கு நல்லா மரியாதை!
அங்கவினு சக்ரவர்த்தி போல ஒரு மேனேஜர் இருக்கார் .அக்கவுண்ட்ஆரம்பிக்க கையெழுத்து போட சொல்லுறார். ஒடனே சுப்புரமணி சொல்லுறான்
எனக்கு கையெழுத்து போட வராது மேனேஜர் கைநாட்டு தான் அப்படின்னு .
மேனேஜருக்கு ஆச்சர்யம்! ஏன்பா!எழுத படிக்க தெரியாமயே இவ்ளோ பணம்
சம்பாதிச்சு இருக்கே! நீமட்டும் படிச்சு இருந்தா இன்னும் பெரிய ஆளா ஆகி
இருப்பே போல இருக்கே ? அப்படின்னு சொல்ல அதுக்கு சுப்புரமணி சொல்லுறான்,
''எனக்கு மட்டும் எழுத, படிக்க தெரிஞ்சு இருந்தா இந்நேரம் ஒரு கோயில்ல மணி அடிச்சுகிட்டு இருந்திருப்பேன்''
------------------------------------------------------------------------------------------------
>
18 comments:
:))Nice..!!
Hi Jeevan
Nice story!!!....
RMAYA
super boss.
(நான் கோவிச்சுக்கலை. ஆனா நீங்க ஒன்னு சொல்லவேயில்லையே)
என்னோட மருமளுக்கு சொல்ல நல்ல கதை கெடச்சாச்சு...
ஹாஹா.. சூப்பர்ப்பா... முதல் பாதி மேனேஜ்மெண்ட் லெசன்.. 2வது பாதி நக்கல்.. நிஜமும் கூட..:))
இங்க நெறய பேர் இருக்கிற வாய்ப்பை பயன்படுத்திகிட்டா போதும்னு நினைக்கிறாங்க.. ஒரு Safety Zoneல இருக்கவே ஆசைபடறாங்க.. புதிய சவாலானா வாய்ப்புகளை பத்தி யோசிக்கிறதே இல்லை.. :)
நல்ல கதை.. இன்னும் எதிர்பார்க்கிறேன்.. :)
Blogger ஸ்ரீமதி said...
:))Nice..!!
October 13, 2008 12:16 AM
நன்றி தங்கச்சி!
Blogger RAMYA said...
Hi Jeevan
Nice story!!!....
RMAYA
நன்றி ரம்யா!!
Blogger AMIRDHAVARSHINI AMMA said...
super boss.
(நான் கோவிச்சுக்கலை. ஆனா நீங்க ஒன்னு சொல்லவேயில்லையே)
நன்றி! அமிர்தவர்ஷிணி அம்மா! (சொல்லியாச்சு)
Blogger சிம்பா said...
என்னோட மருமளுக்கு சொல்ல நல்ல கதை கெடச்சாச்சு...
October 13, 2008 8:48 AM
வாங்க சிம்பா ! நன்றி!
பொடியன்-|-SanJai said...
ஹாஹா.. சூப்பர்ப்பா... முதல் பாதி மேனேஜ்மெண்ட் லெசன்.. 2வது பாதி நக்கல்.. நிஜமும் கூட..:))
இங்க நெறய பேர் இருக்கிற வாய்ப்பை பயன்படுத்திகிட்டா போதும்னு நினைக்கிறாங்க.. ஒரு Safety Zoneல இருக்கவே ஆசைபடறாங்க.. புதிய சவாலானா வாய்ப்புகளை பத்தி யோசிக்கிறதே இல்லை.. :)
நல்ல கதை.. இன்னும் எதிர்பார்க்கிறேன்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பொடியன் அடிக்கடி வாங்க!
//சுப்புரமணிக்கு வேலை வெட்டி ஏதும் இல்ல. சும்மா ஊர சுத்திகிட்டு இருந்தான்.//
நம்மள மாதிரியே நிறைய பேரு ஊருக்குள்ள இருக்காங்க
அந்த கதை பல பெரிய மனிதர்கள் வாழ்வில் நடந்தது போல் இருக்கிறது.
எனக்கு கூட ஒரு முறை டோண்டு சொல்லியிருக்கிறார்
:-)
வந்ததுக்கு நன்றி! வால் பையன்!
நன்றி! அமுதா!
ரொம்ப நல்லா இருக்கு, இனி கொஞ்ச நாள் எழுதறத விட்டுட்டு படிக்க வேண்டியதுதான் இந்த மாதிரி நல்ல பதிவுகளை
Blogger குடுகுடுப்பை said...
ரொம்ப நல்லா இருக்கு, இனி கொஞ்ச நாள் எழுதறத விட்டுட்டு படிக்க வேண்டியதுதான் இந்த மாதிரி நல்ல பதிவுகளை
என்ன வைச்சு ஏதும் காமடி?
வருகைக்கு நன்றி !
அருமையான கதை.
Post a Comment