என் சினிமா பார்வை

அழைத்த குடுகுடுப்பையாருக்கு நன்றி


1.
எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நான் பிறந்தது, மூணாவது வரை படிச்சது எல்லாம் அந்தமான்ல! அங்க எனக்கு நினைவு தெரிஞ்சு பார்த்த படம் வருவான் வடிவேலன் அந்த படம் பார்க்க நாங்க ஒரு ''போட்ல'' போனோம் ஒரு நாப்பது பேர் போகலாம் அந்த போட்ல. சின்ன கப்பல் போல இருக்கும்.நாங்க போன தியேட்டர் இருக்குற இடம் பேரு பம்பு பிளாட் படம் பார்த்து நினைவு இருக்கு, என்ன உணர்ந்தேன்னு தெரியல
ஏன் அப்படின்னா வரும்போது தூங்கிட்டேன்.

அப்புறம் நம்ம ஊருக்கு வந்து, எங்க ஊரு ஐயப்பா தியேட்டர்ல பார்த்த முதல் படம் கரை கடந்த ஒருத்தி '' ஓடத்துல தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீரு''
அப்படின்னு ஒரு பாட்டு வரும் அந்த படத்துல.

உணர்ந்தது அந்தமான்ல இருந்து வந்த புதுசு! அப்பா அம்மா கூட இல்லாம சொந்தகாரங்க யாரோ கூட்டிகிட்டு போனாங்க. பொம்பளைங்க கூட்டத்துகுள்ள
உக்காந்து பார்த்து. கூடவே சின்ன புள்ளைங்க அழுகை, சின்ன புள்ளைங்க சத்தம் அதிகமானா? திட்டு விழும் பாருங்க!!''ங்கொப்புறான ங்கொப்பன்தன்னான'' அழுவுற புள்ளைய கூட்டிகிட்டு எதுக்குடி படம்பாக்க வர்றீய! ஊட்டுலயே கெடக்க வேண்டியது தானே ? அதுக்கு புள்ளைய வைச்சு இருக்குறவங்க
திருப்பி சொல்லுறத இங்க சொல்ல முடியாது ! இதல்லாம் எனக்கு அப்போ
புதுசு!



2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம் சென்னை கொளத்தூர் கங்கா தியேட்டர்ல ரொம்ப ஆர்வமா போனேன்.''சிங்கமணி''வந்து..

( எல்லோரும் ''தங்கமணின்னே'' சொல்லுறாங்க கொஞ்சம் வித்யாசமா சிங்கமணி!'' தங்கம்'' போல மனைவி இருக்குறவங்க தங்க மணின்னு சொல்லிகோங்க ''எம்பொண்டாட்டி சிங்கம் மாதிரி'' அதான் சிங்கமணி)


சிங்கமணி வந்து ஆறு வருசத்துல அஞ்சு படம்தான் ஒன்னா பார்த்து இருக்கோம்
படம் பார்க்க அதிகம் போறதுல்ல!நான் மட்டும் எப்போவாவது சிங்கமணிகிட்டசொல்லாம போவேன்.
அந்த மாதிரித்தான் தசாவதாரம் போனேன் கமல் ஏமாத்திட்டாரு!


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?


கன்னத்தில் முத்தமிட்டால் KTV ல போட்டாங்க ரொம்ப நாளைக்கு பிறகு மனசு கனத்து பார்த்த படம் .

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

சேரனின் பொற்காலம் பட்டுக்கோட்டை நீலா தியேட்டர்ல ஊருக்கு போனப்போ பாத்தது.

5.. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

'' கேப்டன் விஜயகாந்த் விருதாசலத்தில நின்னு ஜெயிச்ச அந்த தில்லு''


'' நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் மக்கள் தன் மீது வைச்சு இருக்குற
அந்த
பிரியத்த, பணமாக்கி கொள்ளுற வேதனை.''


5-. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஒன்னும் சொல்ல தோனல

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

உண்டு ,வாரமலர், வெள்ளிக்கிழமை சினிமா மலர் அவ்ளோதான்

7.தமிழ்ச்சினிமா இசை?

இளையராஜாதான்


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

உண்டு, சின்ன வயசுல அந்தமான்ல இருந்ததால ஹிந்தி நல்லா தெரியும் (அப்போ) அங்க நெறைய ஹிந்தி படம் பார்த்தது உண்டு .
நூரி அப்படின்னு ஒரு படம் பார்த்த நினைவு இருக்கு.


அப்புறம் இப்போ பிளஸ் டு முடிச்சுட்டு கோயமுத்தூர்ல நகை தொழில் கத்துக்க போய் இருந்தப்போ அங்க அர்ச்சனா வில சாஜன்,தீவானா எல்லாம் பார்த்து இருக்கேன் .


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

மருத நாயகம் படத்த, நான்தான் தயாரிக்க போறேன்னு சொன்னா

நம்பவாபோறீங்க

ஒரு தொடர்பும் கிடையாதுங்க!


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இன்னும் நிறைய அரசியல்வாதிகளை உருவாக்கும்


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நான் ஒன்னும் பெருசா கவலை படமாட்டேன். ஆனா, எல்லா தொலை காட்சியும் மக்கள் தொலைக்காட்சியுடன் போட்டிபோடும்

நீங்களும் சொல்லுங்க

யட்சன்
புழுதிக்காடு
ரம்யா



>

11 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா எழுதியிருக்கீங்க.

சிங்கமணி. ஐய் சூப்பரு

அவங்க சிங்கம்ன்னா நீங்க.

சிம்பா said...

ஜீவன் பட்டைய கிளப்பிடீங்க.. அதுவும்

//உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

'' கேப்டன் விஜயகாந்த் விருதாசலத்தில நின்னு ஜெயிச்ச அந்த தில்லு''


'' நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் மக்கள் தன் மீது வைச்சு இருக்குற
அந்த பிரியத்த, பணமாக்கி கொள்ளுற வேதனை.''//

சூப்பர்.... ஆமா இதுல என்னைய இழுத்து ஞாயாமா.... இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா..

Unknown said...

:)))நல்லாருக்கு...!!!

புதுகை.அப்துல்லா said...

நல்லா இருக்குண்ணே :))

குடுகுடுப்பை said...

//நல்லா எழுதியிருக்கீங்க.

சிங்கமணி. ஐய் சூப்பரு

அவங்க சிங்கம்ன்னா நீங்க//



சிங்கி :)

ரொம்ப நல்லா எழுது இருக்கீங்க, ஊர்க்காரர்னு சொல்லல நெஜமாவேங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சிங்கி

இல்ல

பாயும் புலி (ளி)

தமிழ் அமுதன் said...

Blogger AMIRDHAVARSHINI AMMA said...

நல்லா எழுதியிருக்கீங்க.

சிங்கமணி. ஐய் சூப்பரு

அவங்க சிங்கம்ன்னா நீங்க.

Blogger AMIRDHAVARSHINI AMMA said...

சிங்கி

இல்ல

பாயும் புலி (ளி)


அமிர்த வர்ஷினி அம்மா! ஒன்னு சொல்லவா!
ஒரு விஷயம் சொன்னா! அனுபவிக்கனும்.
கேள்வி கேக்க கூடாது.என் பொண்டாட்டி
சிங்கம்!சரி ! பெரிய மனசு பண்ணி நீங்க
விட்டுருக்கலாம்.அப்போ நீங்க ?
இங்க தான் மாட்டிகிட்டேன் நானும்
ரெண்டு நாளா யோசிக்கிறேன்!
சரி! நான் ஆம்பள சிங்கம் அப்படின்னு
சொல்லலாம்னா? ஆம்பள சிங்கம்
வேட்டைக்கு போகாது பொம்பள
சிங்கம் தான் வேட்டைக்கு போகுமாமே
அப்படின்னு கேப்பிங்க!என் சிங்கமணி!
(ஐயோஏன் தான் சொன்னேனோ? )
வீட்டு பொம்பள சிங்கம் சரியா ?

சின்கி

இல்ல

பாயும் புலி (ளி)
என்ன மோ கிண்டல் பண்ணுறீங்க
ம்ம் பண்ணிட்டுபோங்க!

தமிழ் அமுதன் said...

Blogger சிம்பா said...

ஜீவன் பட்டைய கிளப்பிடீங்க.. அதுவும்

//உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

'' கேப்டன் விஜயகாந்த் விருதாசலத்தில நின்னு ஜெயிச்ச அந்த தில்லு''


'' நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் மக்கள் தன் மீது வைச்சு இருக்குற
அந்த பிரியத்த, பணமாக்கி கொள்ளுற வேதனை.''//

சூப்பர்.... ஆமா இதுல என்னைய இழுத்து ஞாயாமா.... இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா.


வாங்க சிம்பா! வந்து ஒரு கலக்கு கலக்குங்க!

தமிழ் அமுதன் said...

Blogger ஸ்ரீமதி said...

:)))நல்லாருக்கு...!!!

October 15, 2008 5:35 AM

வாங்க தங்கச்சி!

தமிழ் அமுதன் said...

Blogger புதுகை.அப்துல்லா said...

நல்லா இருக்குண்ணே :))

October 15, 2008 10:29 AM

வாங்க ''அப்பு'' துல்லா மொதவாட்டி வந்துருக்கீங்க! நன்றி! அப்பு

தமிழ் அமுதன் said...

குடுகுடுப்பை said...

//நல்லா எழுதியிருக்கீங்க.

சிங்கமணி. ஐய் சூப்பரு

அவங்க சிங்கம்ன்னா நீங்க//



சிங்கி :)

ரொம்ப நல்லா எழுது இருக்கீங்க, ஊர்க்காரர்னு சொல்லல நெஜமாவேங்க.



நம்ம ஊரு தாங்க, முன்னாடியே சொல்லி இருக்கேங்க நீங்க கவனிக்கல போல!
நன்றி !