நான் புகை பழக்கத்தை நிறுத்தியது ஏன்? எப்படி ?

நான் புகை பிடிக்க ஆரம்பித்ததையும் பிறகு
அந்த பழக்கத்தை விட்டதையும் பத்தி
சொல்லுறேன் ஆங்காங்கே கொஞ்சம்
சுய புராணம் இருந்தா கொஞ்சம் பொறுத்துக்கங்க.

நான் முதன் முதலா சிகரெட் புடிக்க ஆரம்பிச்சது
கோயம்புத்தூர்ல. நம்ம நகை தொழில கத்துகிட்டு
அங்கேயே மூணு வருஷம் வேலை செய்ஞ்சுகிட்டு
இருந்தேன்.ஆரம்பத்துல ஒன்னு,ரெண்டுன்னு
சிகரெட் புடிக்க ஆரம்பிச்சு அப்புறம் நல்லா
முன்னேறி ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்
அளவுக்கு சிகரெட் புடிக்க ஆரம்பிச்சேன்.

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு சொந்த ஊர்
வந்து ஊர்ல வேலை.நான் வந்து ஒரு கிரிக்கெட்
பிளேயர்.கிரிக்கெட்ல பாஸ்ட் பவுலர். நெறைய
மேட்ச் ஆடி இருக்கேன்.இப்போ சிகரெட் புடிக்க
ஆரம்பிச்ச பிறகு பழைய வேகமும்,துல்லியமும்
இல்லாதது நல்லா தெரிஞ்சது.கண்டிப்பா அதுக்கு
சிகரெட் தான் காரணம்.அப்போ நெனைச்சுகிட்டேன்
''மொதல்ல இந்த சிகரெட்ட நிறுத்தனும்''

ஒரு ரெண்டு நாள் சிகரெட் புடிக்கல அப்புறம்
என்கூட விளையாடுற எல்லோருமே சிகரெட்
புடிச்சாங்க சிகரெட் புடிக்காம இருக்க முடியல
பழைய படி ஆரம்பிச்சுட்டேன்.

ஊர்ல வேலை அதிகமில்ல, வறுமையும்
பொருளாதார தேவையும் நம்மள சென்னைல
கொண்டுவந்து போட்டுச்சி.

சென்னைல கொஞ்சநாள் சரியா தொழில் அமையாம
இருந்தது.அப்புறம் கடவுள் கண்ண தொறக்கவே,
தனியா கடை வைச்சு நல்லா பிக் அப் ஆச்சு!
சிகரெட் ஒரு பாக்கெட் ரெண்டு பாக்கெட் ஆச்சு.

இப்போ நல்லா பெரிய கடை புடிக்கிற அளவுக்கு
முன்னேற்றம்.கடைல சிகரெட் புடிகிரதுக்காகவே
ஒருஎடம் ஆஷ்ட்ரே எல்லாம் வைச்சு செட்
பண்ணி இருந்தேன் அப்பப்போ ''தண்ணி'' வேற!

கொஞ்ச வருஷம் போச்சு வீட்டுல பொண்ணு
பாக்க ஆரம்பிச்சாங்க, கல்யாணமும் ஆச்சு!
தங்க மணி வந்து முதல்ல தங்க மணியாதான்
இருந்துச்சி அப்புறம்தான் ''சிங்க மணி'' ஆச்சு!

அதும் எவ்வளவோ சொல்லி பார்த்துச்சி நாம
யாரு? சிங்கத்துக்கே டிமிக்கி கொடுப்போம்ல!ஒருநாள் சிங்க மணி வந்து ஏங்க ''வாழ்வே மாயம்''
படம் பார்த்தீங்களா? அதுல சிகரெட் புடிச்சு கமலுக்கு
கடைசில என்னாகுது பார்தீங்களா?(திருத்துராங்கலாம்)
இப்போ கமலுக்கு என்னாச்சி? நல்லாதானே இருக்காரு
அப்படிண்ணு நான் சொன்னதும் கடுப்பாயி போச்சு!

சரியா ஒரு வருசத்துல பொண்ணு பொறந்தது!

குட்டி போட்ட பூனையாட்டம் ஆஸ்பத்திரிய
சுத்தி சுத்தி வரேன் (குட்டிபோட்ட பூனை உண்மை தானே)
எல்லாம் சொல்லுவாங்க குழந்தை நம்ம முகத்த
நல்லா பார்க்க ரெண்டு,மூணு நாள் ஆகும் அப்படின்னு
ஆனா என் பொண்ணு மறுநாளே என் முகத்த
நல்லா பார்த்து நல்லா ஒரு சிரிப்பு சிரிச்சது
பாருங்க! என் வாழ்நாள்ல கண்ட மிக சிறந்த
காட்சி அதுதான் அப்படியே சொக்கி போயிட்டேன்.

என் பொண்ணு சிரிச்ச அந்த சிரிப்புல என்னைய
அப்படியே சுத்திகரிச்துபோல ஆச்சு! என்னோட
தீவினையெல்லாம் அழிஞ்சு ஒரு சுத்தமான
மனுசனா மாறுனதுபோல ஒரு உணர்வு!

ஆஸ்பிட்டல் வாசல்ல நின்னு ஒரு தம் அடிச்சுகிட்டே
நினைச்சு பார்க்குறேன். ஒரு நிறைவு,மகிழ்ச்சி,சந்தோசம்
உற்சாகம் வேற என்ன நல்ல விஷயங்கள் இருக்கோ அது
எல்லாம் ஒன்னா சேர்ந்து எனக்கு கிடைச்ச மாதிரி இருக்கு.

சரி,இப்போ குழந்தை வளர்ந்து கிட்டு வருது. நான்
சிகரெட் புடிக்கிறதும் அதிகமாகுது.

ஒரு வருஷம் போகுது, குழந்தைக்கு முடி எறக்கணும்
எங்க ஊருலதான் முடி எறக்கணும்.எங்க ஊருக்கு
பக்கத்துல அத்திவெட்டி அப்படின்னு ஒரு ஊரு இருக்கு
அங்க ''பெரிய சாமி''கோயில் இருக்கு அங்கதான் நாங்க
பரம்பரையா முடி ஏறக்குறது எனக்கும் அங்கதான்
முடி எறக்குனது.

முடி எறக்கிட்டு எங்க ஊருல இருந்து சென்னைக்கு
கிளம்புறோம் அப்போ சில பேரு ஒரே பரபரப்பா
பேசிகிட்டு இருக்காங்க.

என்னன்னா? யாரோ செத்து போய்ட்டாங்களாம்
பக்கத்து ஊருல சத்துணவு அமைப்பாளரா வேல செய்தவராம்.

ரெண்டு பேரு பேசிக்கிட்டு போறாங்க!

பாருப்பா அவனுக்கு முப்பதிரெண்டு வயசுதான் ஆகுது
திடீர்னு போய்ட்டான் ! ''ஹார்ட் அட்டாக்காம்''ஓவரா

தண்ணி அடிப்பானாம் சிகரெட்டா ஊதி தள்ளுவானாம்
கல்யாணமாகி ரெண்டு வருசம்தான் ஆகுது,எட்டு மாசத்துல
புள்ள ஒன்னு இருக்கு இப்படி அநியாயமா உட்டுட்டு
போய்ட்டானே பாவிப்பய !

சென்னைக்கு வந்துட்டோம்!
ரெண்டு நாள் போயிருக்கும் ஒரு கனவு

அடுத்த வரிகள எழுதும் போது ஒரு வலியோடுதான்
எழுதுறேன்!
அந்த கனவு ......

நல்ல வெயில் அடிக்குது அந்த வெயில்ல
என் மனைவி வேர்க்க விருவிருக்க நடந்து
போகுது.கிட்ட போய் பார்க்குறேன் கழுத்துல
தாலி இல்ல போட்டு பூ ஏதும் இல்லாம விதவை
கோலத்துல என் அன்பு மனைவி!இடுப்புல
என் செல்வ மகள் பசித்த முகம் கன்னமெல்லாம்
வத்திபோய் ஏக்கமான பார்வையோடு....

ஐயோ! திடுக்குன்னு முழிச்சு பார்க்குறேன் ரெண்டு பேரும்
நல்லா தூங்குறாங்க.

மனசு முழுக்க பயம்! பயம்! பயம்!

தூக்கமே வரல எப்போ தூங்கினேனோ தெரியல!

காலைல யார் கிட்டயும் ஒன்னும் சொல்லல!

''சிகரெட் புடிக்கிறத நிறுத்தனும்''

(ஒரு விஷயம் சிகரெட் புடிக்கிறத நிறுத்துரதால
நான் நூறு வருஷம் வாழ்ந்து விடுவேன்னு சொல்லல!
சாவு எப்படி வேணும்னாலும் வரலாம் ஆனா, சிகரெட்
புடிக்கிரதால நாமே சாவ நோக்கி போறதா நினைச்சேன்
அதோட சிகரெட் புடிக்கிரதால திடீர் மரணம் ஏற்படலாம்
அப்படின்னு பயந்தேன் )

கடைல வந்து உக்காந்து யோசிக்கிறேன் கிட்ட தட்ட
பத்து வருசமா சிகரெட் புடிக்கிறேன் எப்படி நிறுத்த!

என்கிட்ட எனக்கு புடிச்ச விஷயம் ஒன்னு இருக்கு!

நான் வந்து பால குமாரனோட தீவிர பக்தன் அப்படின்னு
சொல்லலாம் .நெறைய விசயங்கள அவர் சொன்ன படி
கடை பிடிக்கிறேன் .

அதுல ஒன்னு ''உன்னை நீயே விலகி நின்று வேடிக்கை பார்''

எனக்கு கடைல அதிக வேலை இருந்தா இத எப்படி
செய்றேன் பார் அப்படின்னு எனக்குள்ளேயே ஒரு
சவால் விட்டுக்குவேன் என் உள்ளேயே ஒருவன்
அத வேடிக்கை பார்க்குரதுபோல நினைச்சுக்குவேன்.

அந்த வேலைல நான் ஜெயிச்சுட்டா உள்ள இருக்குற
அவன் வந்து பாராட்டிட்டு போவான்!

உள்ள இருக்குற அந்த அவனுக்கு நான் வைச்ச பேருதான்
''ஜீவன்''

இப்போ அவன் உதவி தேவை படுது
சிகரெட் புடிக்கணும்
அப்படின்னு என்னத்த தூண்டுற ''சைத்தான்'' எனக்குள்ள
புகுந்து இருக்குது. அந்த சைத்தான தோக்கடிக்கனும் .

நான் ஜெயிக்கிறேனா இல்லையா அப்படிங்கிறத
எனக்குள்ள அவன் கவனமா கவனிக்கிறான்.''சிகரெட் புடிக்கணும் அப்படிங்கிற எண்ணத்த தூண்டுற
அந்த சைத்தான ஒவ்வொரு வினாடியும் சவாலுடன்
சந்திப்பது அப்படின்னு முடிவு பண்ணிட்டேன்

இதுக்கு எனக்குள்ள இருக்குற ''அவன்தான்''
நடுவர்.

முதல் நாள் ஒன்னும் முடியல ரொம்ப கஷ்ட்டப்பட்டு
இருந்துட்டேன்.ரெண்டு நாள் மூணு நாள் போச்சு
சிகரெட் புடிக்கல!சமயத்துல அந்த சைத்தான் பெரும்
பலத்தோட வருவது போல இருக்கும் என் மனைவி
குழந்தைய நினைச்சுக்குவேன், அந்த சைத்தான்
இருந்த இடம் தெரியாம போய்டுவான்.உள்ள
இருக்குற அவன் கைதட்டி பாராட்டுறான்.

இப்போ எனக்கு இருக்குற அடுத்த பிரச்சனை
என் நண்பர்கள்! அவங்க எல்லோரும் சிகரெட்
புடிக்கிறவங்க . நான் நினைக்கிறேன் அவர்களை
பார்ப்பதை தவிர்த்து விடலாம்னு,ஆனா உள்ள
இருக்குற அவன் சொல்லுறான் சிகரெட் புடிக்கிறவங்க
கூடவே இருக்கணும் ஆனா சிகரெட் புடிக்காம வரணும்
அப்படின்னு!

நண்பர்கள் இருக்குற எடத்துக்கு போறேன் வழக்கம்
போல சிகரெட் எடுத்து கொடுக்குறாங்க வேணாம்
விட்டுட்டேன் அப்படின்னு சொல்லுறேன்!கிண்டலா
ஒரு பார்வை நம்ம செட்டுலையே அதிகம் தம்
அடிக்கிறது நீதான் உன்னால எல்லாம் விட முடியாது
மிஞ்சி மிஞ்சி போனா ஒரு பத்துநாள் அடிக்காம இருப்பே
அப்புறம் முடியாது எத்தன பேர பார்த்து இருப்போம்.

ச்சே! நம்மள பத்தி எவ்ளோ சீப்பா எடை போட்டு
இருக்காங்க! அதுகூட நமக்கு உதவியாத்தான்
இருக்கு.

ஆச்சு!வாரங்கள்போச்சு! மாதங்கள்போச்சு!

அந்த சைத்தான சாகடிச்சு சமாதி வைச்சு நாலு
வருஷம் ஆச்சு என் வாழ்க்கைல நான் செய்ஞ்ச
சாதனையா நினைக்கிறேன்.
இனிமே இந்த ஜென்மத்துல நான் சிகரெட் புடிக்க போறது இல்ல
அது நிச்சயம்!

(குறிப்பு :என்னைவிட அதிகமா சிகரெட் புடிச்சவங்கள
நான் பார்த்து இல்ல என்னாலேயே சிகரெட்ட விட
முடியும்னா விடணும்னு நினைக்கிற எல்லோராலையும்
கண்டிப்பா முடியும் )
>

64 comments:

தாரணி பிரியா said...

நல்லதொரு பதிவு ஜீவன். சிகரெட் பிடிக்கற எல்லாருக்குமே அதை நிறுத்தணும் அப்படின்ற ஆசை இருக்குமாம். ஆனா அதுக்கான வழிதான் தெரியலைன்னு சொல்லுவாங்க. உங்க‌ வ‌ழியை இனிமேல‌ எல்லாரையும் பின்ப‌ற்ற‌ சொல்லலாம்.

என் அண்ணாவும் தின‌மும் குறைஞ்ச‌து ரெண்டு பேக்கெட் சிக‌ரெட் பிடிப்பார். அண்ணி திருத்த‌ பார்த்து முடியாம‌ல் விட்டுவிட்டார். அவர் குழந்தை (4 வயது) ஒரு நாள் சிகரெட் பிடிச்சுட்டு என்னை கொஞ்சாதேப்பா என்று முகம் சுளித்து சென்றாள். அன்றைக்கே நிறுத்திவிட்டார்.

வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஏ க்ளாஸ் பதிவு ஜீவன்.

உங்களின் பெயர் காரணமறிந்து மிகவும் பூரித்துப்போனேன்.

நீங்களும் பாலகுமாரன் ரசிகர் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி.

அதுல ஒன்னு ''உன்னை நீயே விலகி நின்று வேடிக்கை பார்''
ம். நானும் இதை கடைப்பிடிக்கிறேன்.

நான் ஜெயிக்கிறேனா இல்லையா அப்படிங்கிறத
எனக்குள்ள அவன் கவனமா கவனிக்கிறான்.
நீங்கள் வாழ்வில் முன்னேறி பெரிய கடை வைத்ததற்கு காரணம் இதுதான் என்பது என் கருத்து.

இனிமே இந்த ஜென்மத்துல நான் சிகரெட் புடிக்க போறது இல்ல
அது நிச்சயம்!
எல்லாம் சரி
தண்ணிய விட்டாச்சா. பதில் கட்டாயம் எதிர்பார்ப்பேன்.

அட்சய நந்தினியையும், அமிர்தவர்ஷினியையும் கேட்டதாக சொல்லவும்.

அமுதா said...

நல்ல பதிவு ஜீவன். சிகரெட் பிடிக்கும் ஒவ்வொருவரும் இது போல் விட்டால் நன்றாக இருக்கும்.

''உன்னை நீயே விலகி நின்று வேடிக்கை பார்''

இது போன்ற சுய அலசல் நிச்சயம் உங்களை மேன்மேலும் உயர்த்தும்.

/*சிகரெட் புடிக்கிறவங்க
கூடவே இருக்கணும் ஆனா சிகரெட் புடிக்காம வரணும்
அப்படின்னு!*/
இது மிகப்பெரிய சவால். ஜெயித்ததற்கு வாழ்த்துக்கள்.

அமித்து அம்மாவின் கேள்வியை நானும் ரிப்பீட் செய்கிறேன்.

குடுகுடுப்பை said...

சூப்பரப்பு,நீங்க ஒரு கதாசிரியரா வரலாம். அப்புறம் நாங்களும் விட்டுட்டோம்ல. ஆறு வருசம் ஆச்சு.

'உன்னை நீயே விலகி நின்று வேடிக்கை பார்''

இத எல்லாரும் செஞ்சா சாமி தேவையே இல்லங்க.

புதியவன் said...

//சிகரெட் புடிக்கிறவங்க
கூடவே இருக்கணும் ஆனா சிகரெட் புடிக்காம வரணும்
அப்படின்னு!//

//(ஒரு விஷயம் சிகரெட் புடிக்கிறத நிறுத்துரதால
நான் நூறு வருஷம் வாழ்ந்து விடுவேன்னு சொல்லல!
சாவு எப்படி வேணும்னாலும் வரலாம் ஆனா, சிகரெட்
புடிக்கிரதால நாமே சாவ நோக்கி போறதா நினைச்சேன்
அதோட சிகரெட் புடிக்கிரதால திடீர் மரணம் ஏற்படலாம்
அப்படின்னு பயந்தேன் )//

//(குறிப்பு :என்னைவிட அதிகமா சிகரெட் புடிச்சவங்கள
நான் பார்த்து இல்ல என்னாலேயே சிகரெட்ட விட
முடியும்னா விடணும்னு நினைக்கிற எல்லோராலையும் கண்டிப்பா முடியும் )//

எல்லாருக்கும் தேவையான ஒரு பதிவு. வாழ்த்த்க்கள் ஜீவன் புகை பிடிப்பதை விட்டதற்கும் இந்த பதிவிற்கும்.

வால்பையன் said...

வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

முதலில் பிடியுங்கள் பாராட்டுக்களை!
புகையை நிறுத்தியதற்கும் நிறுத்திய கதையை வெளிப்படையாகச் சொன்னதற்கும். இக்கதை புகைப் பழக்கம் உள்ள பலரையும் கண்டிப்பாக யோசிக்க வைக்கும்.

இதே போல சொன்ன ஒருவரைப் பற்றி பலரும் அறிந்து கொள்ள எனது http://tamilamudam.blogspot.com/2008/10/blog-post_20.html
'புகை'ச்சல் பதிவில் மதுமிதா அவர்கள் பின்னூட்டத்தில் ஒரு லிங்க் கொடுத்திருந்தார். அதை இப்போது நான் உங்களுக்குத் தருகிறேன், இப்பதிவுக்கு வரும் மற்றவர்களும் சென்று பார்த்திட வசதியாக:
http://www.keetru.com/literature/essays/jayabashkaran_6.php

அதைப் பார்த்த பின் மதுமிதாவுக்கு பதிலாக பின்னூட்டத்தில்
//ஜெயபாஸ்கரன் அவர்களின் "கடைசி சிகரெட்டின் கல்லறை" 'இப்பழக்கத்தை விடுவது சாத்தியமா' என மனம் தடுமாறும் ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டும்.//
இவ்வாறு கூறியிருந்தேன். அது உங்களது இந்தப் பதிவுக்கும் பொருந்தும்.

வாழ்த்துக்கள் ஜீவன்.

ஜீவன் said...

தாரணி பிரியா said...
நல்லதொரு பதிவு ஜீவன். சிகரெட் பிடிக்கற எல்லாருக்குமே அதை நிறுத்தணும் அப்படின்ற ஆசை இருக்குமாம். ஆனா அதுக்கான வழிதான் தெரியலைன்னு சொல்லுவாங்க. உங்க‌ வ‌ழியை இனிமேல‌ எல்லாரையும் பின்ப‌ற்ற‌ சொல்லலாம்.

என் அண்ணாவும் தின‌மும் குறைஞ்ச‌து ரெண்டு பேக்கெட் சிக‌ரெட் பிடிப்பார். அண்ணி திருத்த‌ பார்த்து முடியாம‌ல் விட்டுவிட்டார். அவர் குழந்தை (4 வயது) ஒரு நாள் சிகரெட் பிடிச்சுட்டு என்னை கொஞ்சாதேப்பா என்று முகம் சுளித்து சென்றாள். அன்றைக்கே நிறுத்திவிட்டார்.

வாழ்த்துக்கள்நன்றி தாரணி ப்ரியா! எந்த ஒரு
ஆணுக்கும் தன் தாயைவிட,தன் மனைவியைவிட
தன் மகள் தான் உசத்தி! எனக்கும் அப்படித்தான்!
உங்க அண்ணனுக்கும் அப்படிதான் இருக்கும்!

ஜீவன் said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
ஏ க்ளாஸ் பதிவு ஜீவன்.

.............நன்றி அமிர்த வர்ஷினி அம்மா

உங்களின் பெயர் காரணமறிந்து மிகவும் பூரித்துப்போனேன்.

..............மிக்க சந்தோசம்
நீங்களும் பாலகுமாரன் ரசிகர் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி.

............. ஆமா நானும் உங்கள போலதான்

அதுல ஒன்னு ''உன்னை நீயே விலகி நின்று வேடிக்கை பார்''
ம். நானும் இதை கடைப்பிடிக்கிறேன்.

.................... நல்லது இந்த செயல் நம் தவறுகளை களைகிறது

நான் ஜெயிக்கிறேனா இல்லையா அப்படிங்கிறத
எனக்குள்ள அவன் கவனமா கவனிக்கிறான்.
நீங்கள் வாழ்வில் முன்னேறி பெரிய கடை வைத்ததற்கு காரணம் இதுதான் என்பது என் கருத்து.

.................................நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்

இனிமே இந்த ஜென்மத்துல நான் சிகரெட் புடிக்க போறது இல்ல
அது நிச்சயம்!
எல்லாம் சரி
தண்ணிய விட்டாச்சா. பதில் கட்டாயம் எதிர்பார்ப்பேன்.

...................... சிகரெட் தான் உடம்புக்கு கேடா?
தண்ணி இல்லையா? அப்படிங்கிறீங்க? உடம்பு கெடுரதுபோல
குடிக்கிறது இல்ல! வாரம் ஆனா சனி,ஞாயிறு மட்டும் தான்
கொஞ்ச நாள் போகட்டும் விட்டுடலாம்.
அட்சய நந்தினியையும், அமிர்தவர்ஷினியையும் கேட்டதாக சொல்லவும்

................................கேட்டாச்சு வர்ற 21-11-2008 அன்னிக்கு ''அச்சு'' வுக்கு (அட்சய நந்தினி) முதல் பிறந்த நாள்.

ஜீவன் said...

அமுதா said...
நல்ல பதிவு ஜீவன். சிகரெட் பிடிக்கும் ஒவ்வொருவரும் இது போல் விட்டால் நன்றாக இருக்கும்.

''உன்னை நீயே விலகி நின்று வேடிக்கை பார்''

இது போன்ற சுய அலசல் நிச்சயம் உங்களை மேன்மேலும் உயர்த்தும்.

/*சிகரெட் புடிக்கிறவங்க
கூடவே இருக்கணும் ஆனா சிகரெட் புடிக்காம வரணும்
அப்படின்னு!*/
இது மிகப்பெரிய சவால். ஜெயித்ததற்கு வாழ்த்துக்கள்.

அமித்து அம்மாவின் கேள்வியை நானும் ரிப்பீட் செய்கிறேன்

..............................மிக்க நன்றிங்க!

உங்க பதிவுகளும் சரி, உங்க கருத்துகளும் சரி

கண்டிப்பாக கவனிக்க படவேண்டியவை!
அமித்து அம்மா கேள்விக்கு பதில் சொல்லியாச்சு !

ஜீவன் said...

குடுகுடுப்பை said...
சூப்பரப்பு,நீங்க ஒரு கதாசிரியரா வரலாம். அப்புறம் நாங்களும் விட்டுட்டோம்ல. ஆறு வருசம் ஆச்சு.

'உன்னை நீயே விலகி நின்று வேடிக்கை பார்''

இத எல்லாரும் செஞ்சா சாமி தேவையே இல்லங்க.

November 11, 2008 8:

வாங்க! குடுகுடுப்பையாரே! கதாசிரியரா? ஆகா!
ஆறுவருசமா? அப்போநீங்க சீனியர்!

நம்மள நாமே வெளில நின்னு பார்த்தா கண்டிப்பா சாமி
தேவை இல்லைதான் நல்லா சொன்னிங்க !

ஜீவன் said...

Blogger புதியவன் said...

//சிகரெட் புடிக்கிறவங்க
கூடவே இருக்கணும் ஆனா சிகரெட் புடிக்காம வரணும்
அப்படின்னு!//

//(ஒரு விஷயம் சிகரெட் புடிக்கிறத நிறுத்துரதால
நான் நூறு வருஷம் வாழ்ந்து விடுவேன்னு சொல்லல!
சாவு எப்படி வேணும்னாலும் வரலாம் ஆனா, சிகரெட்
புடிக்கிரதால நாமே சாவ நோக்கி போறதா நினைச்சேன்
அதோட சிகரெட் புடிக்கிரதால திடீர் மரணம் ஏற்படலாம்
அப்படின்னு பயந்தேன் )//

//(குறிப்பு :என்னைவிட அதிகமா சிகரெட் புடிச்சவங்கள
நான் பார்த்து இல்ல என்னாலேயே சிகரெட்ட விட
முடியும்னா விடணும்னு நினைக்கிற எல்லோராலையும் கண்டிப்பா முடியும் )//

எல்லாருக்கும் தேவையான ஒரு பதிவு. வாழ்த்த்க்கள் ஜீவன் புகை பிடிப்பதை விட்டதற்கும் இந்த பதிவிற்கும்

வாங்க புதியவன்! மிக்க நன்றி! உங்க பின்னுட்டம் என் பதிவின் சுருக்கம் போல
இருக்கு நன்றி !

ஜீவன் said...

வால்பையன் said...

வாழ்த்துக்கள்

நன்றி! அருண்!

ஜீவன் said...

Delete
Blogger ராமலக்ஷ்மி said...

முதலில் பிடியுங்கள் பாராட்டுக்களை!
புகையை நிறுத்தியதற்கும் நிறுத்திய கதையை வெளிப்படையாகச் சொன்னதற்கும். இக்கதை புகைப் பழக்கம் உள்ள பலரையும் கண்டிப்பாக யோசிக்க வைக்கும்.

இதே போல சொன்ன ஒருவரைப் பற்றி பலரும் அறிந்து கொள்ள எனது http://tamilamudam.blogspot.com/2008/10/blog-post_20.html
'புகை'ச்சல் பதிவில் மதுமிதா அவர்கள் பின்னூட்டத்தில் ஒரு லிங்க் கொடுத்திருந்தார். அதை இப்போது நான் உங்களுக்குத் தருகிறேன், இப்பதிவுக்கு வரும்
மற்றவர்களும் சென்று பார்த்திட வசதியாக:
http://www.keetru.com/literature/essays/jayabashkaran_6.ப்ப்

அதைப் பார்த்த பின் மதுமிதாவுக்கு பதிலாக பின்னூட்டத்தில்
//ஜெயபாஸ்கரன் அவர்களின் "கடைசி சிகரெட்டின் கல்லறை" 'இப்பழக்கத்தை விடுவது சாத்தியமா' என மனம் தடுமாறும் ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டும்.//
இவ்வாறு கூறியிருந்தேன். அது உங்களது இந்தப் பதிவுக்கும் பொருந்தும்.

வாழ்த்துக்கள் ஜீவன்.

அம்மாவின் வருகை நல் வரவாக அமையட்டும்!

தங்கள் புகைச்சல் பதிவும் மிக அருமை!

மேலும் நீங்கள் கொடுத்த அந்த சுட்டியில் இருக்கின்ற

அந்த பதிவும் மிகுந்த பயனளிக்க கூடியது!

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அம்மா!

அமிர்தவர்ஷினி அம்மா said...

அப்படியா

வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினிக்கு 24/11/2008 முதல் பிறந்தநாள்.

ஜீவன் said...

அமிர்தவர்ஷினி அம்மா said...

அப்படியா

வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினிக்கு 24/11/2008 முதல் பிறந்தநாள்.

சந்தோசம் வாழ்த்துக்கள்!

என் பதிவுகள்/En Pathivugal said...

வாழ்த்துக்கள்..
உங்க பதிவ படிச்சிட்டு ஒருவர் திருந்தினால் கூட போதும்..
அருமையனப் பதிவு..
பெயர்க் காரணம் சூப்பர்..

ஜீவன் said...

என் பதிவுகள்/En Pathivugal said...

வாழ்த்துக்கள்..
உங்க பதிவ படிச்சிட்டு ஒருவர் திருந்தினால் கூட போதும்..
அருமையனப் பதிவு..
பெயர்க் காரணம் சூப்பர்..

கண்டிப்பாக!
நன்றி !
வருகைக்கும்,கருத்துக்கும்

குடுகுடுப்பை said...

வ.மு ல பட்டுக்கோட்டை பத்தி மொக்கையா ஒரு பதிவு போடுங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உடம்பு கெடுரதுபோல
குடிக்கிறது இல்ல! வாரம் ஆனா சனி,ஞாயிறு மட்டும் தான்
கொஞ்ச நாள் போகட்டும் விட்டுடலாம். //

குடிப்பதே உடம்புக்கும் மனதுக்கும் ஏன் குடும்பத்துக்குமே கெடுதலான செயல்தான். அதிலேன்ன
உடம்பு கெடுரதுபோல
குடிக்கிறது இல்ல! //

கொஞ்ச நாள் போகட்டும் விட்டுடலாம். //
இந்த சைத்தான எப்போ சாகடீப்பீங்க.

Anonymous said...

அருமை சகோதாரா..பெருமையாக உள்ளது...பாராட்டுக்கள்...வாழ்த்துகள்..

உங்கள் பெண் நிச்சயம் ஒரு தேவதை தான்..

ஜீவன் said...

Blogger குடுகுடுப்பை said...

வ.மு ல பட்டுக்கோட்டை பத்தி மொக்கையா ஒரு பதிவு போடுங்க.

பட்டுகோட்டைய பத்தி எப்படின்னே
மொக்கையா போடுறது
ஒன்னும் புரியல வேற ஒன்னு
யோசிச்சு இருக்கேன்!
விரைவில் போடுறேன்

ஜீவன் said...

அமிர்தவர்ஷினி அம்மா said...

உடம்பு கெடுரதுபோல
குடிக்கிறது இல்ல! வாரம் ஆனா சனி,ஞாயிறு மட்டும் தான்
கொஞ்ச நாள் போகட்டும் விட்டுடலாம். //

குடிப்பதே உடம்புக்கும் மனதுக்கும் ஏன் குடும்பத்துக்குமே கெடுதலான செயல்தான். அதிலேன்ன
உடம்பு கெடுரதுபோல
குடிக்கிறது இல்ல! //

கொஞ்ச நாள் போகட்டும் விட்டுடலாம். //
இந்த சைத்தான எப்போ சாகடீப்பீங்க.விட மாட்டிங்க போல! டாக்டரே ஒருநாளைக்கு
கொஞ்சமா குடிச்சா தப்பில்ல அப்படிங்குறாங்க!

சனி,ஞாயிறுல சிங்க மணிகிட்ட திட்டு வாங்காட்டி
ஒரு ''இதாவே'' இருக்காது

ஜீவன் said...

Blogger Thooya said...

அருமை சகோதாரா..பெருமையாக உள்ளது...பாராட்டுக்கள்...வாழ்த்துகள்..

உங்கள் பெண் நிச்சயம் ஒரு தேவதை தான்..

வாங்க தூயா நன்றி! ஆமா என் பொண்ணு தேவதைதான்
மிக்க மகிழ்ச்சி

RAMYA said...

"நல்ல வெயில் அடிக்குது அந்த வெயில்ல என் மனைவி வேர்க்க விருவிருக்க நடந்து போகுது.கிட்ட போய் பார்க்குறேன் கழுத்துல
தாலி இல்ல போட்டு பூ ஏதும் இல்லாம விதவை கோலத்துல என் அன்பு மனைவி!இடுப்புல
என் செல்வ மகள் பசித்த முகம் கன்னமெல்லாம் வத்திபோய் ஏக்கமான பார்வையோடு...."

மனசு மட்டும் இல்லை நெஞ்சே வெடிச்சிடும் போல் உள்ளது ஜீவன். மிகவும் தாமதமாக உங்கள் பதிவை படிக்கிறேன் மன்னிக்கவும். எவ்வளவு பெரிய புரட்சி செய்து இருக்கிறீர்கள்? பாராட்டுகிறேன் உங்களை.

சமுதாயம் என்ற ஒன்றிற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு நீங்கள்.

யாரெங்கே ஒரு ஆயிரம் பொற்காசுகள் முடிப்பை இந்த ஜீவா என்ற ஒரு நல்ல மனிதருக்கு அளிக்க வேண்டும் என்று கட்டளை இடுகிறேன் ஒரு ராணியாக.

''உன்னை நீயே விலகி நின்று வேடிக்கை பார்''

ஆமா ஜீவன் அப்போது தெரியும் நாம் யார் என்று.

இந்த ஆன்ம விசாரணை நான் அடிக்கடி செய்வது உண்டு ஜீவன்

இதனால் என் நண்பர்கள் மத்தியில் ஒரு மாதிரி ஆனதும் உண்டு.

பி. கு. எனக்கும் பாலகுமாரன் மிகவும் பிடிக்கும். நேரில் சந்தித்தும் இருக்கிறேன்.

மனதை மாற்றிய தேவதைகளை நான் மிகவும் கேட்டதாக சொல்லவும்

அட்சய நந்தினியையும்,
அமிர்தவர்ஷினியையும்
தாங்கமணியும் தான்

புதுகை.அப்துல்லா said...

நாங்களும் விட்டுட்டோம்ல..... கடந்த இரமலான் நோன்பில் இருந்து :)

சிம்பா said...

வணக்கம் ஜீவன்.. வழக்கமா நீங்க பதிவு எழுதினா ஒரு நாள் இல்ல ரெண்டு நாள்ல படிச்சு பின்னூட்டம் போடுவேன்.. இந்த வாட்டி பதிவ ஒரு பத்து முறையாவது படிச்சிருப்பேன்..

காரணம் தான் உங்களுக்கே தெரியுமே.. கண்டிப்பா இத விடனும்ன்னு எவளவோ முயற்சி.. உங்களுக்கு இருந்த அதே நண்பர்கள் பிரச்சனை... ஆனா ஒன்னு இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடும் போது கடைசீக்கு கொறசிடனும்ன்னு முடிவு செஞ்சு இன்னையோட ஒரு வாரம் ஆச்சு.. சுத்தமா விட்டுட்டேன்னு சொல்ல முடியல.. ஆனா கண்டிப்பா கம்மி பண்ணிட்டேன்...

அடுத்த வாட்டி சென்னை வரும் போது சிகரெட் புடிக்காத ஆளா நான் மாறி வருவேன்னு நம்பிக்கை இருக்கு...

வைகரைதென்றல் said...

நல்லதொரு பதிவு ஜீவன். சிகரெட் பிடிக்கற எல்லாருக்குமே அதை நிறுத்தணும் அப்படின்ற ஆசை இருக்கு ஆனா அதுக்கான வழிதான் தெரியலைன்னு சொல்லுவாங்க. உங்க‌ வ‌ழியை இனிமேல‌ எல்லாரையும் பின்ப‌ற்ற‌ சொல்லலாம்.
என் நன்பர் ஒருதர் மிகவும் கஷ்டபடுறார் முதலில் உங்க பதிவ கான்பிக்கனும் கண்டிப்ப திருந்துவார்
எல்லாருக்கும் தேவையான ஒரு பதிவு. வாழ்த்துக்கள் ஜீவன்
புகை பிடிப்பதை விட்டதற்கும், இந்த பதிவிற்கும்,தங்கள் திருந்துவதற்கு காரணமான் குட்டி தேவதைக்கும் வாழ்த்துக்கள்
குட்டி தேவதைகளை கேட்டதாக கூறவும்.
அன்புடன்
முருகன் கலாதேவி
சென்னை

அதிரை ஜமால் said...

அழகான பதிவு ஜீவன்,

சிகரெட் பிடிப்பவர்களுக்கெல்லாம் ஒரு வழி சொல்லியது போல் உள்ளது.

குறைந்த பட்சம் இதை படித்த ஆறாம் விரல் காரர்களுக்கு, ”நாமும்” விட முடுயுமோ என்ற தன்னம்பிக்கை பிறக்கும்.

பாலகுமாரன் பிரியர்களுக்கு - தம்மை அறிமுகப்படித்திகொள்வதில் ஓர் அலாதி பிரியம் தான்.

நான் மிகவும் இரசித்தது “பயனிகள் கவனிக்கவும்”.

ஸ்ரீமதி said...

வாவ் நல்ல பதிவு அண்ணா.. இத இப்படி கூட சொல்லலாம் நீங்க என் மனசுல இன்னும் இன்னும் பெரியவரா உயர்ந்துட்டே போறீங்க.. :)))))

ஜீவன் said...

November 14, 2008 5:45 AM
Delete
Blogger RAMYA said...

"நல்ல வெயில் அடிக்குது அந்த வெயில்ல என் மனைவி வேர்க்க விருவிருக்க நடந்து போகுது.கிட்ட போய் பார்க்குறேன் கழுத்துல
தாலி இல்ல போட்டு பூ ஏதும் இல்லாம விதவை கோலத்துல என் அன்பு மனைவி!இடுப்புல
என் செல்வ மகள் பசித்த முகம் கன்னமெல்லாம் வத்திபோய் ஏக்கமான பார்வையோடு...."

மனசு மட்டும் இல்லை நெஞ்சே வெடிச்சிடும் போல் உள்ளது ஜீவன். மிகவும் தாமதமாக உங்கள் பதிவை படிக்கிறேன் மன்னிக்கவும். எவ்வளவு பெரிய புரட்சி செய்து இருக்கிறீர்கள்? பாராட்டுகிறேன் உங்களை.

சமுதாயம் என்ற ஒன்றிற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு நீங்கள்.

யாரெங்கே ஒரு ஆயிரம் பொற்காசுகள் முடிப்பை இந்த ஜீவா என்ற ஒரு நல்ல மனிதருக்கு அளிக்க வேண்டும் என்று கட்டளை இடுகிறேன் ஒரு ராணியாக.

''உன்னை நீயே விலகி நின்று வேடிக்கை பார்''

ஆமா ஜீவன் அப்போது தெரியும் நாம் யார் என்று.

இந்த ஆன்ம விசாரணை நான் அடிக்கடி செய்வது உண்டு ஜீவன்

இதனால் என் நண்பர்கள் மத்தியில் ஒரு மாதிரி ஆனதும் உண்டு.

பி. கு. எனக்கும் பாலகுமாரன் மிகவும் பிடிக்கும். நேரில் சந்தித்தும் இருக்கிறேன்.

மனதை மாற்றிய தேவதைகளை நான் மிகவும் கேட்டதாக சொல்லவும்

அட்சய நந்தினியையும்,
அமிர்தவர்ஷினியையும்
தாங்கமணியும் தான்

வாங்க ரம்யா! கருத்துக்கு நன்றி!
பாலகுமாரனை சந்தித்து இருக்கீங்களா?
நல்லது என்ன பேசினீர்கள்?

அப்புறம் இன்னும் எனக்கு அந்த
ஆயிரம் பொற்காசுகள் வந்து சேரவில்லை!
என்னாச்சுன்னு பாருங்க!

ஜீவன் said...

Blogger புதுகை.அப்துல்லா said...

நாங்களும் விட்டுட்டோம்ல..... கடந்த இரமலான் நோன்பில் இருந்து :)

November 14, 2008 9:58 பம்

நல்லது! வருகைக்கு நன்றி அப்பு!

ஜீவன் said...

Blogger சிம்பா said...

வணக்கம் ஜீவன்.. வழக்கமா நீங்க பதிவு எழுதினா ஒரு நாள் இல்ல ரெண்டு நாள்ல படிச்சு பின்னூட்டம் போடுவேன்.. இந்த வாட்டி பதிவ ஒரு பத்து முறையாவது படிச்சிருப்பேன்..

காரணம் தான் உங்களுக்கே தெரியுமே.. கண்டிப்பா இத விடனும்ன்னு எவளவோ முயற்சி.. உங்களுக்கு இருந்த அதே நண்பர்கள் பிரச்சனை... ஆனா ஒன்னு இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடும் போது கடைசீக்கு கொறசிடனும்ன்னு முடிவு செஞ்சு இன்னையோட ஒரு வாரம் ஆச்சு.. சுத்தமா விட்டுட்டேன்னு சொல்ல முடியல.. ஆனா கண்டிப்பா கம்மி பண்ணிட்டேன்...

அடுத்த வாட்டி சென்னை வரும் போது சிகரெட் புடிக்காத ஆளா நான் மாறி வருவேன்னு நம்பிக்கை இருக்கு...
கண்டிப்பா உங்களால முடியும் சிம்பா!
ஏன்னா! நான் புகை பிடிச்ச அளவிற்கு
நீங்க புகை புடிக்க மாட்டிங்க ன்னு
நினைக்கிறேன்!

என்னாலேயே முடியும்போது
''திருப்பூர் சிங்கம்'' உங்களால
முடியாதா ??

ஜீவன் said...

வைகரைதென்றல் said...

நல்லதொரு பதிவு ஜீவன். சிகரெட் பிடிக்கற எல்லாருக்குமே அதை நிறுத்தணும் அப்படின்ற ஆசை இருக்கு ஆனா அதுக்கான வழிதான் தெரியலைன்னு சொல்லுவாங்க. உங்க‌ வ‌ழியை இனிமேல‌ எல்லாரையும் பின்ப‌ற்ற‌ சொல்லலாம்.
என் நன்பர் ஒருதர் மிகவும் கஷ்டபடுறார் முதலில் உங்க பதிவ கான்பிக்கனும் கண்டிப்ப திருந்துவார்
எல்லாருக்கும் தேவையான ஒரு பதிவு. வாழ்த்துக்கள் ஜீவன்
புகை பிடிப்பதை விட்டதற்கும், இந்த பதிவிற்கும்,தங்கள் திருந்துவதற்கு காரணமான் குட்டி தேவதைக்கும் வாழ்த்துக்கள்
குட்டி தேவதைகளை கேட்டதாக கூறவும்.
அன்புடன்
முருகன் கலாதேவி
சென்னை

வாங்க முருகன் கலாதேவி!
உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!

ஜீவன் said...

Blogger அதிரை ஜமால் said...

அழகான பதிவு ஜீவன்,

சிகரெட் பிடிப்பவர்களுக்கெல்லாம் ஒரு வழி சொல்லியது போல் உள்ளது.

குறைந்த பட்சம் இதை படித்த ஆறாம் விரல் காரர்களுக்கு, ”நாமும்” விட முடுயுமோ என்ற தன்னம்பிக்கை பிறக்கும்.

பாலகுமாரன் பிரியர்களுக்கு - தம்மை அறிமுகப்படித்திகொள்வதில் ஓர் அலாதி பிரியம் தான்.

நான் மிகவும் இரசித்தது “பயனிகள் கவனிக்கவும்”.

வாங்க! அதிராம்பட்டினம் ஜமால்!
நீங்களும் பாலகுமாரன் பிரியரா
மிக்க மகிழ்ச்சி! நன்றி!

ஜீவன் said...

Blogger ஸ்ரீமதி said...

வாவ் நல்ல பதிவு அண்ணா.. இத இப்படி கூட சொல்லலாம் நீங்க என் மனசுல இன்னும் இன்னும் பெரியவரா உயர்ந்துட்டே போறீங்க.. :)))))

வாங்க தங்கச்சி! வந்ததுக்கு நன்றி!
ரொம்ப உயரத்துக்கு கொண்டு போய்டாதே
அப்புறம் கீழ விழுந்துட போறேன்.;))))))

cable sankar said...

மிக நல்ல தேவையான பதிவு..

சந்தனமுல்லை said...

வாவ்..நல்ல பதிவு! நல்லா சுவாரசியமா எழுதறீங்க! வாழ்த்துக்கள், உங்களின் முடிவுக்கு!

ஜீவன் said...

//cable sankar

மிக நல்ல தேவையான பதிவு.///

நன்றி சங்கர் சார்!

ஜீவன் said...

// சந்தனமுல்லை

வாவ்..நல்ல பதிவு! நல்லா சுவாரசியமா எழுதறீங்க! வாழ்த்துக்கள், உங்களின் முடிவுக்கு!///

நன்றி! பப்பு அம்மா!

அமர பாரதி said...

வாழ்த்துக்கள். நானும் விட்டுட்டேன்னுதான் நினைக்கிறேன்.

ஜீவன் said...

Blogger அமர பாரதி said...

வாழ்த்துக்கள். நானும் விட்டுட்டேன்னுதான் நினைக்கிறேன்.

வாங்க அமர பாரதி! நான்கூட நீங்க

விட்டுருப்பிங்கன்னுதான் நினைக்கிறேன்!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

வாழ்த்துக்கள் !
நானும் 19-02-2004 அன்று முதல் புகை பிடிப்பதை விட்டு விட்டேன் .

raja said...

எனக்கும் ஆசை தன் ஆனால் அதற்கான வழிகள் தெரியல நிறைய முறை யோசித்த பிறகு இது தன் நிஜம் விரைவில் விட்டு விடுவேன் நன்றி ஜீவன் !!!!

Sharepoint the Great said...

தொடர்புடைய மற்றுமொரு பதிவு:

அவசியம் பார்க்கவும்:

http://tamizh2000.blogspot.com/2008/06/blog-post_7355.html

Chuttiarun said...

நண்பர்களே நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

ஆட்காட்டி said...

முயற்சிக்கிறேன்.

முனைவர் சே.கல்பனா said...

வணக்கம் ஜீவன்
நான் உங்க ஊர் பக்கம் தான்.உரத்தநாடு அருகேயுள்ள ஒக்கூர்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணிய ராகப் பெறின் என்னும் குறளுக்கு இலக்கயமாக உள்ளிர்கள்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மகிழ்ச்சி வாழ்த்துக்கள்..
குடும்பத்தார் குடுத்துவைத்தவர்கள்.

Joe said...

வாழ்த்துக்கள்!
நல்லதொரு பதிவு ஜீவன்.

நானும் சிகரெட்டை நிறுத்தி ஆறு வருஷமாச்சு.
பெங்களூரில் நாலு வருஷம் இருந்த போது சைனஸ் தொல்லை இருந்ததால் மருத்துவர் சிகரெட்டை நிறுத்துமாறு அறிவுரை செய்தார். அப்புறமும் சில மாதங்கள் அடித்து விட்டு கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்னாலே நிறுத்திட்டேன்.
புத்தாண்டு கொண்டாட்டம் தான் கடைசி, அதுக்கப்புறம் குடிக்க மாட்டேன்-நு எடுத்துக்கிற உறுதிமொழியெல்லாம் அடுத்த நாளே காத்தில பறந்திரும். அதுனாலே ஒரு வாரம் முன்னாடியே உறுதி எடுத்துக்கிட்டு அத்தோடே நிறுத்திட்டேன்!

ராஜ நடராஜன் said...

நான் சிகரெட் புகைப்பதில்லை.புகைப் பழக்கத்தை நிறுத்திய உங்கள் மனபலத்துக்கு பாராட்டுக்கள்.

ஜீவன் said...

//அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

வாழ்த்துக்கள் !
நானும் 19-02-2004 அன்று முதல் புகை பிடிப்பதை விட்டு விட்டேன்//

நல்லது நன்றி! வருகைக்கும் வாழ்த்துக்கும்!

ஜீவன் said...

// raja said...

எனக்கும் ஆசை தன் ஆனால் அதற்கான வழிகள் தெரியல நிறைய முறை யோசித்த பிறகு இது தன் நிஜம் விரைவில் விட்டு விடுவேன் நன்றி ஜீவன் !!!!//

முயற்சி செய்யுங்கள் ராஜா கண்டிப்பாய் முடியும்
நன்றி வருகைக்கு!

ஜீவன் said...

/// Sharepoint the Great said...

தொடர்புடைய மற்றுமொரு பதிவு:

அவசியம் பார்க்கவும்:

http://tamizh2000.blogspot.com/2008/06/blog-post_௭௩௫௫.///

பயனுள்ள சுட்டி நன்றி வருகைக்கு!

ஜீவன் said...

Blogger ஆட்காட்டி said...

முயற்சிக்கிறேன்.

முயற்சியுங்கள் முடியும்

நன்றி வருகைக்கு!

ஜீவன் said...

/// முனைவர் சே.கல்பனா said...

வணக்கம் ஜீவன்
நான் உங்க ஊர் பக்கம் தான்.உரத்தநாடு அருகேயுள்ள ஒக்கூர்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணிய ராகப் பெறின் என்னும் குறளுக்கு இலக்கயமாக உள்ளிர்கள்.///

வாங்க!முனைவர் சே . கல்பனா அவர்களே.....

நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

நீங்க எங்க ஊர் பக்கம் என்பதில் மிக்க மகிழ்ச்சி

அடிக்கடி வாங்க!

ஜீவன் said...

/// முத்துலெட்சுமி-கயல்விழி said...

மகிழ்ச்சி வாழ்த்துக்கள்..
குடும்பத்தார் குடுத்துவைத்தவர்கள்.///

வாங்க... முத்துலெட்சுமி-கயல்விழி மிக்க
மகிழ்ச்சி நீங்க வந்ததுக்கு
வாழ்த்துக்கு நன்றி!

ஜீவன் said...

///Joe said...

வாழ்த்துக்கள்!
நல்லதொரு பதிவு ஜீவன்.

நானும் சிகரெட்டை நிறுத்தி ஆறு வருஷமாச்சு.
பெங்களூரில் நாலு வருஷம் இருந்த போது சைனஸ் தொல்லை இருந்ததால் மருத்துவர் சிகரெட்டை நிறுத்துமாறு அறிவுரை செய்தார். அப்புறமும் சில மாதங்கள் அடித்து விட்டு கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்னாலே நிறுத்திட்டேன்.
புத்தாண்டு கொண்டாட்டம் தான் கடைசி, அதுக்கப்புறம் குடிக்க மாட்டேன்-நு எடுத்துக்கிற உறுதிமொழியெல்லாம் அடுத்த நாளே காத்தில பறந்திரும். அதுனாலே ஒரு வாரம் முன்னாடியே உறுதி எடுத்துக்கிட்டு அத்தோடே நிறுத்திட்டேன்!///

வாங்க JEO நீங்க சிகரெட்ட விட்டதுக்கும் வாழ்த்துக்கள்!

வருகைக்கு நன்றி!

ஜீவன் said...

// ராஜ நடராஜன் said...

நான் சிகரெட் புகைப்பதில்லை.புகைப் பழக்கத்தை நிறுத்திய உங்கள் மனபலத்துக்கு பாராட்டுக்கள்.//

வாங்க ராஜ நடராஜன், மிக்க நன்றி
உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்!

ஜீவா said...

தோழமை ஜீவன் அவர்களுக்கு

உங்க மேல எனக்கு கொஞ்சம் கோபம் இருந்ததது , அந்த ஜீவன் எனும் பெயர் என்னுடையது என் கனவுகளுக்க நான் வைத்த பெயர் .நான் பிளாக் ஆரம்பித்தது அந்த பெயரில்தான் .கொஞ்சம் நான் கழித்துதான் அந்த பெயரில் இன்னொருவர் இருக்கிறார் என்று தெரிந்தவுடன் சின்னஞ்சிறுவனாய் கோபப்பட்டேன். அப்புறம் என்னுடைய பெயரையும் மாற்றிவிட்டேன், இப்பொழுதுதான் வலைச்சரம் வாயிலாக இந்தப்பதிவை படித்தேன்.ஜீவன் எனும் பெயருக்கு தகுந்தவரிடம் தான் அந்தபெயர் உள்ளது என்று சந்தோசப்பட்டேன்.மிக அழகான ,ஆழமான பதிவுக்கு வாழ்த்துக்கள்

நானும் கூட சிகரெட் பிடித்தவன்தான் (ஒரு நாளைக்கு இரவு படுக்கப்போதும் மட்டூம் ஒரு சிகரெட்)
இப்பொழுது அதை விடுவது என்று முடிவெடுத்துவிட்டேன், நம்பிக்கையுள்ளது , விட்டுவிடுவேன் என்று.

என் தேவதையை ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன்.நிச்சயம் சிகரெட் பிடிக்கமாட்டேன்.

ஜீவன் எனும் பெயரை நீங்களே வைத்துக்கொள்ளலாம் :)

ஜீவன் said...

நண்பர் ஜீவன் அவர்களே! உங்கள் பின்னுட்டம் உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும்
ஏற்படுத்துகிறது ! நான் வலைத்தளம் ஆரம்பித்தபோது ஜீவன் என்ற பெயரில்
ஒரு பதிவர் இருப்பது தெரியாது! அப்படி தெரிந்து இருந்தால் ஜீவன் என்ற பெயரை
சற்று மாற்றி இருப்பேன்.மேலும், தங்கள் இப்போது விரும்பினாலும் நான் என் பெயரை
தமிழ் ஜீவன் என்றோ, ஜீவன் அமுதன் என்றோ மாற்றி கொள்கிறேன்!

எனக்காக உங்கள் பெயரை மாற்றி கொண்டீர்கள் உங்களுக்காக நானும் தயாராய் இருக்கிறேன் நண்பரே! மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!!

ஜீவா said...

ப்பேன்.மேலும், தங்கள் இப்போது விரும்பினாலும் நான் என் பெயரை
தமிழ் ஜீவன் என்றோ, ஜீவன் அமுதன் என்றோ மாற்றி கொள்கிறேன்!///

உங்களின் நல்ல மனது எவ்வளவு அழகாக புரிகிறது , தோழமைக்கு நன்றிகள், ஒன்னு தெரியுமா நீங்கதான் சரியாக எனது பிளாக்கின் 25வது follow up :)

MSA said...

ஜீவன் நண்பா,
மிகவும் உணர்ச்சிகரமான பதிவு. அனுபவத்தின் வெளிப்பாடு. கண்டிப்பாக பல பேருக்கு உங்கள் பதிவு ஒரு எச்சரிக்கை, பாடம், மற்றும் வழிகாட்டியாக இருக்கும்.

S.A. நவாஸுதீன் said...

என்னை ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க தல. இதுநாள் வரை என்னோடு நான் தோற்றுக் கொண்டே தான் இருக்கிறேன். பல வருடப் பழக்கம். ஒரு முறை நிறுத்தினேன். ஒரு வருடம் முற்றிலுமாக நிறுத்தி இருந்த வேலையில் அம்மாவுக்கு ரொம்ப சீரியஸா இருக்குன்னு ஊருக்கு வந்தபோது மீண்டும் தொடங்கியது, அவர்கள் இறந்த பிறகு அது அதிகமாயிடுச்சு. இதுவரை நிறுத்தவில்லை. என் மனைவியிடம் கூட நிறுத்தி விட்டதாக பொய் சொல்லி (விடுமுறையில் வரும்போது அவருக்கு தெரியாமல் தினம் ஒன்று அல்லது இரண்டோடு சரி) வருகிறேன். அவரும் என்னை நம்பிக் கொண்டிருக்கிறார். எனக்கே என்னைப்பற்றி நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. நிச்சயம் முயன்று பார்க்கிறேன். வெற்றியும் பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.