''மாற்றாந்தாய்''

நமது உறவு முறைகளில் மிகவும் மதிக்க பட
வேண்டிய,உயர்வாக போற்றப்பட வேண்டிய
உறவு முறை எது என கேட்டால் மாற்றாந்தாய்
அதாவது தந்தையின் இரண்டாவது மனைவி
என்று தான் சொல்லுவேன்.

சரி! எந்த சூழ்நிலையில் ஒரு பெண் இரண்டாம்
தாரமாக வாழ்க்கைபடுகிறாள்.சிற்சில இடங்களை
தவிர பெரும்பாலும் வறுமையும், ஏழ்மையும்
தான் அவ்வாறு வாழ்க்கைப்பட வைக்கிறது.


ஒருவனை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து
ஒரு இளம் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்?
அவளும் எல்லா பெண்களை போல கனவு கண்டுதானே
வளர்ந்திருப்பாள்? ஆனால் தன் பெற்றோரின் வறுமைக்காக
ஒரு ''செகண்ட் ஹேன்ட்'' கணவனை அடையும் போது
அவள் எந்த அளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பாள்?

தனது ஆசைகளையும்,கனவுகளையும் தியாகம் செய்துவிட்டு
ஏற்கனவே திருமணமாகி எல்லா இன்பங்களையும் அடைந்து
அனுபவித்த ஒருவனை திருமணம் செய்ய எந்த அளவு தன்
மனதை தயார் செய்ய வேண்டும் ?

ஒரு ஆண் ஒரு விதவையையோ, விவாகரத்து,ஆனவரையோ
திருமணம் செய்தால் அவன் மிக உயர்வாக மதிக்க படுகிறான்.

ஆனால்?
இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு வருகின்ற பெண்?
வரும்போதே ஒரு வில்லியைப்போல பார்க்க படுகிறாள்.

அதுவும் முதல் தாரத்தின் பிள்ளைகளை கவனிக்கும்
போது சுற்றுபுறம் அவளை மிகவும் கொடுமைபடுத்துகிறது!


'''ஆயிரம்தான் இருந்தாலும் பெற்றதாய் போல வருமா?'''

இது போன்ற கேள்விகள் அவளை மிகவும் பாதிப்படைய
செய்கிறது!

முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்! இப்படி
இரண்டாம் தாரமாக வருபவள் ஏற்கனவே மிகுந்த
மன உளைச்சலோடும்,நிறைய ஏமாற்றங்களோடும்
இருப்பாள்.அதனால் அவளின் கோபங்களையும்,
வெறுப்புகளையும் மற்றவர்கள்தான் பொறுத்து
கொள்ள வேண்டும்.(இந்த வாழ்க்கையில் அவள் நிலை
பெரும் வரை)

எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி தனது கணவரின்
முதல் மனைவியின் பிள்ளைக்கு ஒரு ''கிட்னியையே''
தானமாக கொடுத்து இருக்கின்றார்.

கிட்னியை பெற்றுக்கொண்ட அந்த நபருக்கு
இரண்டு உடன் பிறந்த சகோதரிகள் அவர்கள்
கிட்னி கொடுக்க தயாராக இல்லை.

ஆனால் ஒரு மாற்றாந்தாய் கிட்னி வழங்கி இருக்கிறார்.
அவரும் திருமணமான புதிதில் கணவர் வீட்டாரால்
கடும் இன்னலுக்கு ஆளாக்க பட்டவர்தான்.

இது போன்ற மாற்றாந்தாய் பெண்களை அவரின்
சுற்றுபுறம் போற்றவேண்டும்,அவளுக்கு அமைதியை
கொடுக்காவிட்டாலும்,அவள் நிம்மதியை கெடுக்காமல்
இருக்கவேண்டும்.

''பெற்ற தாயை போலவே மாற்றாந்தாய்மார்களும்
போற்றப்பட வேண்டும்''


..............

>

17 comments:

வால்பையன் said...

உங்கள் கருத்துகளோடு உடன்படுகிறேன்,
அவர்களும் தாயாகவே மதிக்க படவேண்டியவர்கள் தான்

சந்தனமுல்லை said...

உண்மைதான்..ஆனால் கதைகளும் சினிமாக்களும் அவர்களை ஒரு சூனியக்காரி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்திருக்கின்றன. :(

PoornimaSaran said...

Achacho 1st one missing a?

:(((
பதிவ படிச்சிட்டு திரும்ப பின்னூட்டம் வாரேன்..

குடுகுடுப்பை said...

வால்பையன் said...

உங்கள் கருத்துகளோடு உடன்படுகிறேன்,
அவர்களும் தாயாகவே மதிக்க படவேண்டியவர்கள் தான்
//

வால்பையனோடு உடன்படுகிறேன்.

தாரணி பிரியா said...

வழக்கம் போலவே வித்தியாசமான நல்லதொரு பதிவு ஜீவன்

நிஜத்தில் நிறைய (பெரும்பாலும் )சித்திகள் அம்மாக்களாகதான் இருக்கறாங்க. ஆனாலும் அவங்களை யாருமே புரிஞ்சுகிறதில்லையே.

ராமலக்ஷ்மி said...

//உயர்வாக போற்றப்பட வேண்டிய
உறவு முறை எது என கேட்டால் மாற்றாந்தாய்//

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஜீவன். ஒரு சில இடங்களில் ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். அவற்றையும் நீங்கள் சொல்லியிருக்கிற மாதிரி சுற்றி இருக்கிறவர்கள் அப்பெண்ணின் மனதைப் புரிந்து நடந்தால் சரியாகக் கூடியதே. மாற்றாந்தாய்மைக்குப் பின்னிருக்கும் தியாகம் போற்றப் பட வேண்டியது. நல்ல பதிவு.

புதியவன் said...

//தன் பெற்றோரின் வறுமைக்காக
ஒரு ''செகண்ட் ஹேன்ட்'' கணவனை அடையும் போது
அவள் எந்த அளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பாள்?//

//''பெற்ற தாயை போலவே மாற்றாந்தாய்மார்களும்
போற்றப்பட வேண்டும்''//

மறுக்க முடியாத உண்மை.
அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான பதிவு. இதனை அறியத்தந்தமைக்கு நன்றி.

அதிரை ஜமால் said...

\\ஒரு ''செகண்ட் ஹேன்ட்'' கணவனை அடையும் போது
அவள் எந்த அளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பாள்?\\

நிதர்சனமான் உண்மை

\\ஒரு ஆண் ஒரு விதவையையோ, விவாகரத்து,ஆனவரையோ
திருமணம் செய்தால் அவன் மிக உயர்வாக மதிக்க படுகிறான்.

ஆனால்?
இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு வருகின்ற பெண்?
வரும்போதே ஒரு வில்லியைப்போல பார்க்க படுகிறாள்.\\

சந்தனமுல்லை கூறியது போல் ஊடகங்கள் அவர்களை வில்லியாகத்தானே காட்டுகிறது

\\''ஆயிரம்தான் இருந்தாலும் பெற்றதாய் போல வருமா?''\\

இதுவும் உண்மைதாங்க. ஆனாலும் வளர்ப்பு தாயும் - தாயின் அந்தஸ்த்தை பெறகூடியவரே

\\எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி தனது கணவரின்
முதல் மனைவியின் பிள்ளைக்கு ஒரு ''கிட்னியையே''
தானமாக கொடுத்து இருக்கின்றார்.\\

hats-off. தாய்மை என்று சொல்லவது இதைத்தானோ

அமிர்தவர்ஷினி அம்மா said...

வித்யாசமான ஆனால் அவசியமான கருத்து.

ம். உண்மைதான்
அனேகர் மன உளைச்சலுக்குத்தான் ஆளாக்கப்படுகிறார்கள்.

எனது இரு நெருங்கிய தோழிகள் இரண்டாம் தாரம்தான்,
ஒருவர் விரும்பி ஏற்றுக்கொண்டார், அவளுக்கு முதல் ப்ரசவம் ஏற்படும்போது உடனிருந்தவர் அவளின் அவரின் முதல் மனைவி (ஆயிரம் கருத்து வேறுபாடுகளிருந்தாலும்)

இன்னொருவர் சூழ்நிலைக் காரணமாக இரண்டாம் தாரமானவர்,

//அதுவும் முதல் தாரத்தின் பிள்ளைகளை கவனிக்கும்
போது சுற்றுபுறம் அவளை மிகவும் கொடுமைபடுத்துகிறது//
இது அவளுக்கு நேர்ந்து, இப்போது அந்த முதல் தாரத்தின் பெண் தன் பெரியம்மா வீட்டில் தங்கி படிக்கிறார்.
இருவருக்கும் இடையே முதலில் நல்ல புரிதலிருந்தது, நாளடைவில் “சுற்றுப்புறத்தாரின்” செயல்கள் இருவருக்குமிடையே விரிசலை உண்டு பண்ணியது.

உணர்வுகளை மதித்த நல்லதொரு பதிவு ஜீவன்.

RAMYA said...

ஜீவன் நான் மிகவும் தாமதமாக வந்ததிற்கு வருந்துகிறேன்.

ஆமாம் ஜீவன்

ஒரு புறம் இரண்டாவது மனைவியாக வருபவர்கள், முத்தவளின் பிள்ளைகளை ஒரு விரோதி போல் பார்ப்பவர்கள் தான் அதிகம். ஆனால் நீங்கள் கூறி இருப்பவர்கள் போல் இருப்பது மிகவும் சில பேர்கள் தான். ஏன்னெனில் எனக்கு மிகவும் வேண்டியவரின் மனைவி இறந்துவிட்டார்கள். 2 1/2 வயது மகனை வளப்பதிற்காக உறவினர்கள் சேர்ந்து திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் வந்த மகராசி, அனைத்து உறவுகளையும் துண்டித்து விட்டு தான் மட்டும் மகாராணியாக, வாழ்ந்து வந்தாள். அந்த மகன் நிலை என்னவென்றால் வீட்டு வேலை செய்யும் ஒரு வேலைக்காரனாக வளர்ந்தான். படிப்பதற்கு கூட எந்த உதவியும் இல்லை. வீட்டு வேலைகளை எல்லாம் செய்து விட்டு பிறகு தான் படிக்கவேண்டும் தவறை கண்டித்து கேட்டால், நான் உயிரை விட்டு விடுவேன் என்று மிரட்டல் வேறு. அந்த மனிதர் என்ன செய்வார். மகனின் பாசத்தை இழந்தார்.
கடைசியில் ஒருவருமே இல்லாமல் Cancer வந்து இறந்த போனார். அந்த பையன் தனியாக போய் ஒரு வேலை தேடிக்கொண்டு தானே திருமணம் செய்து இன்று நன்றாக இருக்கிறான்.

நீங்கள் கூறிய உணர்வுடன் பெண் இது போல் ஆண்களுக்கு கிடைத்தால் அது ஆண்டவனால் கிடைக்க பெற்ற வரப்பிரசாதம். அவர்களின் தியாக மனப்பான்மைக்கு நான் தலை வணங்குகிறேன். இதை படிப்பவர்கள், இது போல் சூழ்நிலை வந்தாள் இந்த உயர்ந்த பெண்ணை போல் இருக்க விழைகிறேன்.

நான் கூறியவர்கள் திருந்தவேண்டும்

ஆனால் நீங்கள் கூறி இருக்கும் தாயை தெய்வம் போல் பாதுகாக்க வேண்டும் ஜீவன்.

வித்யா said...

சிந்திக்க வைக்கும் பதிவு. எல்லோரும் சொல்ற மாதிரி ஊடகங்கள் அவர்களை வில்லிகளாக மட்டுமே சித்தரிக்கிரது.

அமுதா said...

/*"''பெற்ற தாயை போலவே மாற்றாந்தாய்மார்களும்
போற்றப்பட வேண்டும்''*/

உண்மைதான். உண்மையில் பெற்ற தாய்க்கு இரத்த பாசம் இருக்கும். ஆனால் மாற்றாந்தாயாக வந்து அன்பு செலுத்துபவர்கள் இன்னும் போற்றப்பட வேண்டியவர்கள்

PoornimaSaran said...

நல்ல பதிவு ஜீவன் அண்ணா..

// சந்தனமுல்லை said...
உண்மைதான்..ஆனால் கதைகளும் சினிமாக்களும் அவர்களை ஒரு சூனியக்காரி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்திருக்கின்றன. :(

//

இதைப் பார்த்து தான் பலபேர் கொடுமைக்காரர்களாய் மாறிவிடுகிறார்கள்..

சிம்பா said...

சித்திக்கு புது வடிவம் கொடுத்து அந்த உறவை புனிதப்படுத்திய அண்ணன் ஜீவன் வாழ்க...

ஜீவன் said...

வருகை தந்து கருத்து தெரிவித்த,

வால்பையன்

பப்பு அம்மா சந்தனமுல்லை

PoornimaSaran

குடுகுடுப்பை

தாரணி பிரியா

ராமலக்ஷ்மி அம்மா

புதியவன்

அதிரை ஜமால்

அமிர்தவர்ஷினி அம்மா

RAMYA

வித்யா

அமுதா

சிம்பா


ஆகிய

அனைவருக்கும் நன்றி!

புதுகை.அப்துல்லா said...

ஒரு ஆண் ஒரு விதவையையோ, விவாகரத்து,ஆனவரையோ
திருமணம் செய்தால் அவன் மிக உயர்வாக மதிக்க படுகிறான்.

ஆனால்?
இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு வருகின்ற பெண்?
வரும்போதே ஒரு வில்லியைப்போல பார்க்க படுகிறாள்.
//

அருமை ஜீவன்

ஜீவன் said...

/// புதுகை.அப்துல்லா said...

ஒரு ஆண் ஒரு விதவையையோ, விவாகரத்து,ஆனவரையோ
திருமணம் செய்தால் அவன் மிக உயர்வாக மதிக்க படுகிறான்.

ஆனால்?
இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு வருகின்ற பெண்?
வரும்போதே ஒரு வில்லியைப்போல பார்க்க படுகிறாள்.
//

அருமை ஜீவன்///


நன்றி அப்ப்பு!