மரணத்திற்கு பின்

வெளியில் செல்லும்போது சவ ஊர்வலத்தை கண்டால்
நினைத்துக்கொள்வேன், இந்த பயணம் நமக்கு ஒருநாள்
நிச்சயம். அதோடு, அந்த இறந்தவரின் தோற்றத்தை பார்ப்பேன்.
வயதானவராக இருந்தால் ஆறுதல் கொள்வேன்.வயது
குறைந்தவராக இருந்தால் அந்த ஊர்வலத்தில் யாராவது
அழுது கொண்டு வந்தால்,அவர் துக்கம் நீங்கி விரைவில்
இயல்பு நிலைக்கு திரும்ப மனதிற்குள் வேண்டிக்கொள்வேன்.

சரி!என் மரணம் எப்படி இருக்க வேண்டும்? (சும்மா ஒரு கற்பனை)

பிள்ளைகள்,பேரன்,பேத்திகள் சுற்றி நிற்க!போதும் இந்த
வாழ்க்கை என்று!ஒரு நிறைவுடனும்,விருப்பத்துடனும்
வெளியேற வேண்டும்.

ஓகே! செத்துப்போன பிறகு ஆன்மாவாக அலைவாங்கலாமே?
கொஞ்சம், ஆன்மாவாயிட்டா எப்படி இருப்போம் அப்படின்னு
ஆன்மாவா மாறி யோசிச்சு பார்ப்போமா? (ரொம்ப யோசிக்கிறேனோ)
ஆன்மாவா மாறியாச்சு இப்போ என்ன நினைக்கிறேன்? நம்ம
சந்ததியினரை நாம் கூடவே இருந்து கெடுதல் ஏதும் வராம
பார்த்துக்கணும்!

சில ஜோசிய காரங்க சொல்லுறாங்களே உங்க முன்னோர்களுக்கு
நீங்க செய்ய வேண்டிய கடமைகள செய்யல அதான் உங்க
குடும்பம் கஷ்டபடுது அப்படின்னு உண்மையா?

சரி நாம ஆன்மாவா இருக்கும்போது நம்ம சந்ததி
நமக்கு செய்ய வேண்டிய கடமைகள செய்யாட்டி
அவங்கள கஷ்டபடுத்துவோமோ?
ச்சே! ச்சே! அப்படியெல்லாம் பண்ண கூடாது
வேணும்னா சக ஆன்மா யாராவது இருந்தா,
பாருங்க சார்! நான் எப்போதும் என் பிள்ளைங்க
பேரன்,பேத்திகள நெனைச்சுகிட்டே இருக்கேன்
ஆனா?அவங்க யாரும் என்ன கண்டுக்கல
அப்படின்னு சொல்லி வருத்த பட்டுக்கலாம்.

சரி! நம்ம சந்ததி நம்மள மறக்காம செய்ய வேண்டிய
கடமைகள தொடர்ந்து செய்ஞ்சுகிட்டே இருந்தா?

அப்போ கண்டிப்பா ஒரு ''ஆக்டிவான'' ஆன்மாவாக
இருப்போம்னு தோணுது! சரி போதும் இதுக்கு மேல
யோசிக்க பயமா இருக்கு!

சரி! இயல்பு நிலைக்கு திரும்பிடலாம்!
சரி! இதுக்கெல்லாம் நமக்குள்ள 'பகுத்தறிவு' அப்படின்னு
இருக்குல்ல (அப்படியா) அதுகிட்ட கேட்டு பார்க்கலாம்!

அதுகிட்ட கேட்டா?

'' டவர் கிடைக்காத மொபைல் போன் போல
த ஸப்ஸ்கிரைபர் நாட் ரீச்சபிள்'' அப்படிங்குது!

என்ன பண்ணுறது? பகுத்தறிவால் விளக்க முடியாத
ஆன்மீக புதிர்கள் எவ்வளவோ இருக்கு இதும் அப்படித்தான்
அப்படின்னு நெனைச்சுக்க வேண்டியதுதான்!

இப்படி யோசிச்சா?
ஒருவேள நம்ம முன்னோர்கள்ஆன்மாவா இருந்து நம்மள
கவனிச்சுகிட்டு இருப்பாங்களோ ?

நாம அவங்கள சரியா கவனிக்கிறோமா?

மொதல்ல அத செய்யலாம்!...............
....................
>

42 comments:

குடுகுடுப்பை said...

நாம அவங்கள சரியா கவனிக்கிறோமா?//

நாம நம்மள கவனிக்கிறோமா? அதுவே எனக்கு சந்தேகந்தான். ஆனாலும் இப்படி கிலியா பதிவு போட்டு பயமுறுத்த கூடாது

புதியவன் said...

//சரி!என் மரணம் எப்படி இருக்க வேண்டும்? (சும்மா ஒரு கற்பனை)//

சும்மாதானே அப்ப பரவாயில்லை

//ஆன்மாவா மாறி யோசிச்சு பார்ப்போமா? (ரொம்ப யோசிக்கிறேனோ)//

ரொம்ப ரொம்ப

//'' டவர் கிடைக்காத மொபைல் போன் போல
த ஸப்ஸ்கிரைபர் நாட் ரீச்சபிள்'' அப்படிங்குது!

என்ன பண்ணுறது? பகுத்தறிவால் விளக்க முடியாத
ஆன்மீக புதிர்கள் எவ்வளவோ இருக்கு //

இது ஓகே..

//ஒருவேள நம்ம முன்னோர்கள்ஆன்மாவா இருந்து நம்மள
கவனிச்சுகிட்டு இருப்பாங்களோ ?

நாம அவங்கள சரியா கவனிக்கிறோமா?

மொதல்ல அத செய்யலாம்!//

என்ன ஜீவன் அண்ணா ஏதாவது திகில் படம் பாத்திங்களா என்ன...?

Never give up said...

En Sir, naama sethu pona apparamum namma kudambatha pathi mattumthan yosikanuma, appayaavadhu endha ulnokamum illaama unnmaiya kashta padavarangaluku udhavalaame, atleast nalladhaavaavadhu ninaikalaame
Regards
Geetha

Vidhya Chandrasekaran said...

நேற்று டீவியில்/டிவிடியில் என்ன படம் பார்த்தீங்க??

சந்தனமுல்லை said...

ஒரு மழைக்கே இவ்ளோ யோசனையா?!!

துளசி கோபால் said...

சந்ததிக்குச் செஞ்சதெல்லாம் போதும்.
அக்கடான்னு நிம்மதியா இப்பவாச்சும் இருக்கலாம். பார்க்காத இடங்கள் பல பாக்கி இருக்கு இன்னும். அங்கெல்லாம் போய்ப் பார்த்து மகிழலாம். விமான டிக்கெட் எல்லாம் வேணாமே நமக்கு.
பரக்க முடியலைன்னா..... ப்ளேன்லே ஏறி ஒரு ஓரமா நின்னுக்கிட்டால் ஆச்சு.

ஒரே ஒரு கவலைதான். பார்த்த இடங்களைப் பத்திப் பதிவு எழுத முடியாதே(-:

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்னா ஆச்சு ஜீவன்

திடீர்னு ஆன்மா அது இதுன்னு ஆரம்பிச்சுட்டீங்க.

ஏங்க இருக்கும்போது நம்ம கடமைகளை ஒழுங்கா செய்துட்டு இருப்போங்க.

உயிரோட இருக்கும்போதே ஆயிரம் கஷ்டத்த அனுபவிக்கிறோம், இதுல செத்து வேற ஆவியா இருந்து நம்ம மக்கள் அடிக்கிற கூத்த பாக்கனுமா.

ஏதோ அமாவாசைக்கு வந்தமா, அப்பளத்த தின்னமான்னு போய்க்கிட்டே இருக்கனும்.(அன்னிக்கு மட்டுமாவது நினைக்கிறாங்களே)

ஆனா, இது மேட்டர்
//'' டவர் கிடைக்காத மொபைல் போன் போல
த ஸப்ஸ்கிரைபர் நாட் ரீச்சபிள்'' அப்படிங்குது!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நாம அவங்கள சரியா கவனிக்கிறோமா?

மொதல்ல அத செய்யலாம்!//

கரீக்ட்டு, பாலோ பண்ண வேண்டியது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

துளசி கோபால் said...
சந்ததிக்குச் செஞ்சதெல்லாம் போதும்.
அக்கடான்னு நிம்மதியா இப்பவாச்சும் இருக்கலாம். பார்க்காத இடங்கள் பல பாக்கி இருக்கு இன்னும். அங்கெல்லாம் போய்ப் பார்த்து மகிழலாம். விமான டிக்கெட் எல்லாம் வேணாமே நமக்கு.
பரக்க முடியலைன்னா..... ப்ளேன்லே ஏறி ஒரு ஓரமா நின்னுக்கிட்டால் ஆச்சு.

ஒரே ஒரு கவலைதான். பார்த்த இடங்களைப் பத்திப் பதிவு எழுத முடியாதே(-:

மேடம், அக்கா பதிவுல தான் அசத்தறீங்கன்னு பாத்தா, பின்னூட்டத்திலயும் பின்றீங்களே.

தாரணி பிரியா said...

//அவர் துக்கம் நீங்கி விரைவில்
இயல்பு நிலைக்கு திரும்ப மனதிற்குள் வேண்டிக்கொள்வேன்.//

ம் இது நல்ல விஷயம். பாலோ பண்ணிட வேண்டியதுதான்.

//பிள்ளைகள்,பேரன்,பேத்திகள் சுற்றி நிற்க!போதும் இந்த
வாழ்க்கை என்று!ஒரு நிறைவுடனும்,விருப்பத்துடனும்
வெளியேற வேண்டும்//

இய‌ல்பான‌ விருப்ப‌ம்தான்

//(ரொம்ப யோசிக்கிறேனோ)//

ரொம்பவே

//சில ஜோசிய காரங்க சொல்லுறாங்களே உங்க முன்னோர்களுக்கு
நீங்க செய்ய வேண்டிய கடமைகள செய்யல அதான் உங்க
குடும்பம் கஷ்டபடுது அப்படின்னு உண்மையா?//

பரிகாரம் அப்படின்ற பேர்லகடமையை செய்யலையன்னா ஜோசியர் கஷ்டப்படுவார். ஒரு அளவுக்கு மேல ஜோசியத்தை நம்பாதீங்க ஜீவன்.

//இப்படி யோசிச்சா?
ஒருவேள நம்ம முன்னோர்கள்ஆன்மாவா இருந்து நம்மள
கவனிச்சுகிட்டு இருப்பாங்களோ ?

நாம அவங்கள சரியா கவனிக்கிறோமா?//

ஆன்மா ஆனப்பிறகு கவனிக்கறதை விட ஆசாமியா இருக்கும்போது கவனிச்சா போதுமே

வடுவூர் குமார் said...

இதனை படிக்கும் போது சமீபத்தில் படித்த மஹாபாரத புஸ்தகத்தில் மறுபிறவி பற்றி சோ ஒரு அருமையான கருத்தை சொல்லியிருப்பார் - அது தான் ஞாபகம் வந்தது.

ராமலக்ஷ்மி said...

//நாம அவங்கள சரியா கவனிக்கிறோமா?

மொதல்ல அத செய்யலாம்!...............//

இதைக் கட்டாயம் செய்யலாம். ஆனால் இந்த சிந்தனையில் வந்து முடிய அவ்ளோஓஓஓ.... சிந்திக்கணுமா:(? வேண்டாமே ஜீவன்:)!

ராமலக்ஷ்மி said...

தாரணிப் பிரியா said..
//ஆன்மா ஆனப்பிறகு கவனிக்கறதை விட ஆசாமியா இருக்கும்போது கவனிச்சா போதுமே//

பாயின்ட் பாயின்ட்!

நட்புடன் ஜமால் said...

\\இந்த பயணம் நமக்கு ஒருநாள்
நிச்சயம்.\\

இது சர்வ நிச்சயம்.
நல்ல தெளிவு நிலை.

\\அதோடு, அந்த இறந்தவரின் தோற்றத்தை பார்ப்பேன்.
வயதானவராக இருந்தால் ஆறுதல் கொள்வேன்.வயது
குறைந்தவராக இருந்தால் அந்த ஊர்வலத்தில் யாராவது
அழுது கொண்டு வந்தால்,அவர் துக்கம் நீங்கி விரைவில்
இயல்பு நிலைக்கு திரும்ப மனதிற்குள் வேண்டிக்கொள்வேன்.\\

உண்மையிலேயே நீங்க ரொம்ப நல்லவங்க ஜீவன் அண்ணா

நட்புடன் ஜமால் said...

\\நாம அவங்கள சரியா கவனிக்கிறோமா?\\

இதுதான் இன்றைய காலக்கட்டத்துக்கு ரொம்ப முக்கியமான விஷயம்.

உயிரோடு இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதே முதல் கடமை.

RAMYA said...

//
அதோடு, அந்த இறந்தவரின் தோற்றத்தை பார்ப்பேன்.
வயதானவராக இருந்தால் ஆறுதல் கொள்வேன்.வயது
குறைந்தவராக இருந்தால் அந்த ஊர்வலத்தில் யாராவது
அழுது கொண்டு வந்தால்,அவர் துக்கம் நீங்கி விரைவில்
இயல்பு நிலைக்கு திரும்ப மனதிற்குள் வேண்டிக்கொள்வேன்.\\

அநியாயத்துக்கு நல்லவரா இருக்கிறீங்களே ஜீவன். வாழ்க வளமுடன்.

RAMYA said...

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் அவர்கள் அப்பா பாலையாவிற்கு கதை சொன்னது போல் ஒரே திகிலாக இருந்தது. வேர்த்து விறு விருத்து போனேன் ஜீவன்.

அவரா நீங்க? சொல்லவே இல்லை?

அமுதா said...

மரணத்திற்குப் பின்???? விடை தெரியாத கேள்வி... மரணத்தைக் காண காண மனதைத் துளைக்கும் கேள்விகள்.. என்றாலும்... இருக்கிற நாட்களில் முடிந்தவரை பயனுள்ளதாக்குவோம்.

தமிழ் அமுதன் said...

/// குடுகுடுப்பை said...

நாம அவங்கள சரியா கவனிக்கிறோமா?//

நாம நம்மள கவனிக்கிறோமா? அதுவே எனக்கு சந்தேகந்தான். ஆனாலும் இப்படி கிலியா பதிவு போட்டு பயமுறுத்த கூடாது///

வாங்க குடுகுடுப்பை சார்! இந்த மாதிரி எழுதும் போது

எனக்கே கொஞ்சம் பயமாத்தான் இருந்தது!

வருகைக்கு நன்றி!

தமிழ் அமுதன் said...

/// புதியவன் said...

என்ன ஜீவன் அண்ணா ஏதாவது திகில் படம் பாத்திங்களா என்ன...?///

வாங்க புதியவன்!

உங்களுக்கு திகிலாவா இருந்துச்சி?

கருத்துக்கு நன்றி!

தமிழ் அமுதன் said...

Blogger Never give up said...

En Sir, naama sethu pona apparamum namma kudambatha pathi mattumthan yosikanuma, appayaavadhu endha ulnokamum illaama unnmaiya kashta padavarangaluku udhavalaame, atleast nalladhaavaavadhu ninaikalaame
Regards
கீதா

வாங்க கீதா! ''அப்போ'' நீங்க சொல்லுற மாதிரி

நடந்துக்கிறேன். மிக்க நன்றி!

தமிழ் அமுதன் said...

/// வித்யா said...

நேற்று டீவியில்/டிவிடியில் என்ன படம் பார்த்தீங்க??///

வாங்க வித்யா! மும்பை பிரச்சனைதான்

பார்த்தேன் அதான் இப்படியோ?

நன்றி வித்யா !

தமிழ் அமுதன் said...

/// சந்தனமுல்லை said...

ஒரு மழைக்கே இவ்ளோ யோசனையா?!!///

வாங்க பப்பு அம்மா!
மழை கூட காரணமா
இருக்கலாம்.

நன்றி!

தமிழ் அமுதன் said...

///துளசி கோபால் said...

சந்ததிக்குச் செஞ்சதெல்லாம் போதும்.
அக்கடான்னு நிம்மதியா இப்பவாச்சும் இருக்கலாம். பார்க்காத இடங்கள் பல பாக்கி இருக்கு இன்னும். அங்கெல்லாம் போய்ப் பார்த்து மகிழலாம். விமான டிக்கெட் எல்லாம் வேணாமே நமக்கு.
பரக்க முடியலைன்னா..... ப்ளேன்லே ஏறி ஒரு ஓரமா நின்னுக்கிட்டால் ஆச்சு.

ஒரே ஒரு கவலைதான். பார்த்த இடங்களைப் பத்திப் பதிவு எழுத முடியாதே(-:///

வாங்க மேடம் வாங்க!

விமான டிக்கெட் இல்லாம ப்ரீயா

போகலாம் ஆஹா!

நினைக்கவே அருமையா இருக்கே!

ரெக்கைல கூட உக்காந்து காத்து

வாங்கிகிட்டே போகலாம்.

மிக்க நன்றி வந்ததுக்கு

தமிழ் அமுதன் said...

///அமிர்தவர்ஷினி அம்மா said...

ஏதோ அமாவாசைக்கு வந்தமா, அப்பளத்த தின்னமான்னு போய்க்கிட்டே இருக்கனும்.///

........................இதுவும் சரிதான்

//நாம அவங்கள சரியா கவனிக்கிறோமா?

மொதல்ல அத செய்யலாம்!//

கரீக்ட்டு, பாலோ பண்ண வேண்டியது.///

;;;)))

///மேடம், அக்கா பதிவுல தான் அசத்தறீங்கன்னு பாத்தா, பின்னூட்டத்திலயும் பின்றீங்களே.///

மேடம் அக்காதான் கலக்குவாங்களே!

அப்புறம் இன்னொன்னு!

வந்ததுக்கு நன்றி!

.................................

தமிழ் அமுதன் said...

தாரணி பிரியா said...

///ஆன்மா ஆனப்பிறகு கவனிக்கறதை விட ஆசாமியா இருக்கும்போது கவனிச்சா போதுமே///

நிஜமா இதுதான் நல்ல கருத்து!

மிக்க நன்றி!

தமிழ் அமுதன் said...

// வடுவூர் குமார் said...

இதனை படிக்கும் போது சமீபத்தில் படித்த மஹாபாரத புஸ்தகத்தில் மறுபிறவி பற்றி சோ ஒரு அருமையான கருத்தை சொல்லியிருப்பார் - அது தான் ஞாபகம் வந்தது.///

வாங்க குமார் சார் வருகைக்கும் கருத்துக்கும்

மிக்க நன்றி!

வடுவூர்... மன்னார்குடிக்கும் , தஞ்சாவூருக்கும்

இடையில் இருக்கே அதுவா ?

தமிழ் அமுதன் said...

/// ராமலக்ஷ்மி said...

//நாம அவங்கள சரியா கவனிக்கிறோமா?

மொதல்ல அத செய்யலாம்!...............//

இதைக் கட்டாயம் செய்யலாம். ஆனால் இந்த சிந்தனையில் வந்து முடிய அவ்ளோஓஓஓ.... சிந்திக்கணுமா:(? வேண்டாமே ஜீவன்:)!//

வாங்க அம்மா! நான் ஒன்னும் திட்டம்போட்டு யோசிக்கலம்மா

தானா வருது என்னம்மா செய்றது!

வந்ததுக்கு மிக்க நன்றி!

தமிழ் அமுதன் said...

///ராமலக்ஷ்மி said...

தாரணிப் பிரியா said..
//ஆன்மா ஆனப்பிறகு கவனிக்கறதை விட ஆசாமியா இருக்கும்போது கவனிச்சா போதுமே//

பாயின்ட் பாயின்ட்!///

எஸ்! எஸ்!

தமிழ் அமுதன் said...

/// அதிரை ஜமால் said..

உண்மையிலேயே நீங்க ரொம்ப நல்லவங்க ஜீவன் அண்ணா.///

எப்புடி வடிவேல் போலவா?

//உயிரோடு இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதே முதல் கடமை.///

நிச்சயமா!

மிக்க நன்றி ஜமால் வந்ததுக்கு!

தமிழ் அமுதன் said...

////RAMYA said...

அநியாயத்துக்கு நல்லவரா இருக்கிறீங்களே ஜீவன். வாழ்க வளமுடன்.

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் அவர்கள் அப்பா பாலையாவிற்கு கதை சொன்னது போல் ஒரே திகிலாக இருந்தது. வேர்த்து விறு விருத்து போனேன் ஜீவன்.///

வடிவேல் மாதிரி நல்லவன்னு சொல்லி

நாகேஷ் போல காமடியனா ஆக்கிடிங்க

ரொம்ம்ம்ம்ம்ப நன்றி!

தமிழ் அமுதன் said...

அமுதா said...

மரணத்திற்குப் பின்???? விடை தெரியாத கேள்வி... மரணத்தைக் காண காண மனதைத் துளைக்கும் கேள்விகள்.. என்றாலும்... இருக்கிற நாட்களில் முடிந்தவரை பயனுள்ளதாக்குவோம்.///

நன்றி அமுதா மேடம் !

வருகைக்கும்!

கருத்துக்கும்!

சிம்பா said...

இதுக்கு தான் மல்லாக்க படுத்து யோசனை பண்ண கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க.. உண்மைய சொல்லனும்னா என்னோட கொள்ளுத்தாத்தா பேரு கூட மறந்து போச்சு எனக்கு.. அப்போ நான் நெனச்சுக்குவேன் என்னிக்காவது நமக்கும் ஒரு நாள் இப்படி இருக்குன்னு..

ஆனா ஒன்னுங்க போகும் போது கண்டிப்பா ட்ராபிக் ஸ்தம்பிச்சு நிக்கிறமாதிரி கூட்டம் வரணும். இது தான் என்னோட பேராசை..

புதுகை.அப்துல்லா said...

ஏம்ப்ப்பு என்னாச்சு???

:))))

தமிழ் அமுதன் said...

/// சிம்பா said...

இதுக்கு தான் மல்லாக்க படுத்து யோசனை பண்ண கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க.. உண்மைய சொல்லனும்னா என்னோட கொள்ளுத்தாத்தா பேரு கூட மறந்து போச்சு எனக்கு.. அப்போ நான் நெனச்சுக்குவேன் என்னிக்காவது நமக்கும் ஒரு நாள் இப்படி இருக்குன்னு..

ஆனா ஒன்னுங்க போகும் போது கண்டிப்பா ட்ராபிக் ஸ்தம்பிச்சு நிக்கிறமாதிரி கூட்டம் வரணும். இது தான் என்னோட பேராசை.///

குப்பற படுத்தா தூக்கம் வர்றது இல்ல மல்லாக்க படுத்தா இப்படித்தான் வருது

உங்களுக்கு இப்படி ஒரு ஆசை இருக்கா? ஓகே அதுக்கு என்ன வாழ்த்தா
சொல்ல முடியும்

நூறாண்டு வாழ்க!

தமிழ் அமுதன் said...

///புதுகை.அப்துல்லா said...

ஏம்ப்ப்பு என்னாச்சு???

:))))///

தெரியல அப்பு இப்படியெல்லாம் தோணுது?

நசரேயன் said...

/*பகுத்தறிவால் விளக்க முடியாத
ஆன்மீக புதிர்கள் எவ்வளவோ இருக்கு இதும் அப்படித்தான்
அப்படின்னு நெனைச்சுக்க வேண்டியதுதான்
*/
உண்மைதான், சில கேள்விகளுக்கு விடை தெரியாம இருப்பதும் நன்மைக்கே, அப்படி இல்லன்னா இப்படி எல்லாம் பதிவு போட முடியாதுல்லா ?

ஒரே திகில் படம் பார்த்த பாதிப்பு

வால்பையன் said...

சாவு என்பது மீள முடியாத தூக்கம் மட்டுமே!
அதன் பிறகு ஒன்றுமில்லை!
இறந்தவர்களை கொண்டாட வேண்டிய அவசியமுமில்லை. அப்படி கொண்ட்டாட ஆரம்பித்தால் அவர்களே பின்னாளில் கடவுளாக ஆக்கபடுவார்கள்.

வாழும் வரை கொண்ட்டாட்டமாக இருங்கள்.

தமிழ் அமுதன் said...

/// வால்பையன் said...

சாவு என்பது மீள முடியாத தூக்கம் மட்டுமே!
அதன் பிறகு ஒன்றுமில்லை!
இறந்தவர்களை கொண்டாட வேண்டிய அவசியமுமில்லை. அப்படி கொண்ட்டாட ஆரம்பித்தால் அவர்களே பின்னாளில் கடவுளாக ஆக்கபடுவார்கள்.

வாழும் வரை கொண்ட்டாட்டமாக இருங்கள்.///

வாங்க வால்பையன்! ரொம்ப பிஸி போல ?

ஓகே வாழும் வரை கொண்டாடிடுவோம்

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

நல்ல கற்பனை ஜீவன்

தமிழ் அமுதன் said...

///நசரேயன் said...

/*பகுத்தறிவால் விளக்க முடியாத
ஆன்மீக புதிர்கள் எவ்வளவோ இருக்கு இதும் அப்படித்தான்
அப்படின்னு நெனைச்சுக்க வேண்டியதுதான்
*/
உண்மைதான், சில கேள்விகளுக்கு விடை தெரியாம இருப்பதும் நன்மைக்கே, அப்படி இல்லன்னா இப்படி எல்லாம் பதிவு போட முடியாதுல்லா ?

ஒரே திகில் படம் பார்த்த பாதிப்பு///

வாங்க நசரேயன் வருகைக்கு நன்றி!

தமிழ் அமுதன் said...

// முனைவர் சே.கல்பனா said...

நல்ல கற்பனை ஜீவன்///

மிக்க நன்றி வருகைக்கு!