வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் ......தொடர் பதிவு

அழைப்பு விடுத்த அமிர்தவர்ஷிணி அம்மாவுக்கு
நன்றி!


சில நல்ல தமிழ் சொற்கள் வழக்கிலிருந்து ஒழிந்து
விட்டதால் தமிழின் இனிமை குறைந்து விட்டது என்பது
உண்மைதான்! ஆனால், சில தமிழ் சொற்கள் வழக்கிலிருந்து
ஒழிந்து விட்டதால் தமிழ் கொஞ்சம் தெளிந்து இருக்கிறது.

ஆமாம்! நான் சொல்லவிருப்பது சென்னை தமிழ். ஆனால்!
இவையெல்லாம் தமிழ் சொற்கள்தானா என கேட்க கூடாது.


பேமானி ; இந்த வார்த்தை ஒரு திட்டு மொழி அடுத்தவரை
திட்ட உதவும்.

சோமாறி; இதுவும் மேற்சொன்ன மாதிரிதான்

கஸ்மாலம்; இதுக்கு அர்த்தம் தெரிஞ்சா சொல்லுங்க

பேஜாரு; கொஞ்ச காலம் முன்னர் வரை நெறைய பேரால்
சொல்லப்பட்ட வார்த்தை
தொல்லை,ஹிம்சை,குழப்பம்
ஆகியவற்றிற்கு மாற்று சொல்.

இஸ்துகினு; இழுத்துக்கொண்டு என்பதற்கு மாற்றுசொல்.
இப்போது அதிகம் இந்த வார்த்தையை கேட்க
முடியவில்லை.

மேற்கண்ட சொற்கள் முற்றிலுமாக ஒழியவில்லை
ஆனால் குறைந்து இருக்கிறது.

மேலும் சில சொற்கள் வழக்கிலிருந்து ஒழிந்து விட்டால்
''மெல்ல தெளியும் இனி சென்னை தமிழ்''



>

25 comments:

நட்புடன் ஜமால் said...

அண்ணேன் வந்தாச்சா ...

நட்புடன் ஜமால் said...

ஒரே பேஜாராக்கீது ba

அமுதா said...

//ஒரே பேஜாராக்கீது ba
ரிப்பீட்டு.

அமுதா said...

//மேலும் சில சொற்கள் வழக்கிலிருந்து ஒழிந்து விட்டால்
''மெல்ல தெளியும் இனி சென்னை தமிழ்''

அப்ப இந்த இடுகைக்கு தலைப்பு "வழக்கொழிந்தால் தமிழ்ச்சொற்கள்" :-)

ராமலக்ஷ்மி said...

:))!

//மேலும் சில சொற்கள் வழக்கிலிருந்து ஒழிந்து விட்டால்
''மெல்ல தெளியும் இனி சென்னை தமிழ்''//

அழகுத் தமிழில் வழி மொழிகிறேன்:)!

தாரணி பிரியா said...

வாங்க ஜீவன். இதுதான் நீங்க. நாங்க யோசிக்கிற விசயத்தையே வேற ஒரு கோணத்தில நீங்க பார்க்கற இந்த அழகுதான் எனக்கு உங்ககிட்ட பிடிச்ச விஷயம், வழக்கம் போலவே நல்லதொரு பதிவு.


அடிக்கடி கடைக்கு லீவு விடாம எழுதுங்க அண்ணா

புதியவன் said...

//சில தமிழ் சொற்கள் வழக்கிலிருந்து
ஒழிந்து விட்டதால் தமிழ் கொஞ்சம் தெளிந்து இருக்கிறது//

ஜீவன் அண்ணா உங்க கருத்தில் நான் உடன் படுகிறேன்...

புதியவன் said...

//தமிழ் சொற்கள்தானா என கேட்க கூடாது.//

இவை தமிழ் சொற்கள் இல்லை மொழிக் கலப்புகள்...பெரும்பாலான சொற்கள் ஹிந்தி மொழியிலிருந்து வந்தவை...

"பேமானி" என்றால் இந்தியில் "மானமில்லாதவன்".

”சொல் மாறி" என்பது மருவி "சோமாறி" என்று ஆனதாக என் கல்லூரி ஆசிரியர் கூறக் கேட்டிருக்கிறேன்...

மற்ற சொற்களும் இந்த வழியில் வந்ததாகத் தான் இருக்க வேண்டும் என்பது என் கருத்து...

புதியவன் said...

//மேலும் சில சொற்கள் வழக்கிலிருந்து ஒழிந்து விட்டால்
''மெல்ல தெளியும் இனி சென்னை தமிழ்'' //

இது முற்றிலும் உண்மை...

தமிழ் said...

அருமை நண்பரே

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப =short and sweetaa முடிச்சிட்டிங்க.

மேலும் சில சொற்கள் வழக்கிலிருந்து ஒழிந்து விட்டால்
''மெல்ல தெளியும் இனி சென்னை தமிழ்''

கரீக்ட்டு தலீவா

இராகவன் நைஜிரியா said...

வணக்கம் ஜீவன்...

நானும் வந்துட்டேன்..

எப்படி இருக்கீங்க..

வரும் நாட்களில் இந்த மாதிரி வார்த்தைகள் மறைந்து போகக்கூடும்... இதற்கு பதிலாக வேறு வார்த்தைகள் வரக்கூடும் அவ்வளவுதான்..

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

சூப்பருங்கணா
''மெல்ல தெளியும் தெளியட்டும் இனி சென்னை தமிழ்''
வாழ்க தமிழ் :)

RAMYA said...

ஜீவன் நீங்களா இது இவ்வளவு சென்னைத் தமிழ் உங்களுக்குள்ளே புதைந்து இருக்கா?

எதைச் சொன்னாலும் ஒரு பஞ்ச் வச்சி
சொல்லறீங்களே ஆனதுதான் ரொம்ப அழகு

இவ்வளவு வார்த்தைகளும் wow

RAMYA said...

//
மெல்ல தெளியும் இனி சென்னை தமிழ்//


என்ன வார்த்தை ஜாலம் உள்ளே
ஒழிந்து கொண்டு ஒளி கொடுக்குது!!

RAMYA said...

//
மெல்ல தெளியும் இனி சென்னை தமிழ்//

என்ன வார்த்தை ஜாலம் உள்ளே
ஒழிந்து கொண்டு ஒளி கொடுக்குது

RAMYA said...

மறந்து போன சென்னைத் தமிழை
மறுபடியும் நினைவு கூர்ந்ததிற்கு
மிக்க நன்றி !!

வேலை பழு அதிகமானதால்
உங்கள் பதிவை உடனே
படிக்க முடியவில்லை
தாமதமாக வந்ததிற்கு
வருந்துகிறேன் நண்பா
தொடராக உங்கள் தமிழ் பணி

சந்தனமுல்லை said...

//ரொம்ப =short and sweetaa முடிச்சிட்டிங்க.

மேலும் சில சொற்கள் வழக்கிலிருந்து ஒழிந்து விட்டால்
''மெல்ல தெளியும் இனி சென்னை தமிழ்''

கரீக்ட்டு தலீவா//

ரிப்பிட்டூபா!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மெல்லத் தமிழினிதாகும்.

மங்கை said...

ஆஹா..இதுவும் நல்லா இருக்கே... இந்த வார்த்தைகள் எல்லாம் இப்ப இல்லையா...

harveena said...

annna,,bemani yendral bemani;-) kasamalam endral kasamalam ;-) but nega engaiyo poitenga nna,, ungal sevai natuku thevai,, :-) romba nalla eruku,, enum konjam deep aa varthaigala segarichi adoda utkaruthinai post panna nalla erukum,, valga tamizh amudan, valarge tamil,, mukiyama chennai tamzih valarga valarga :-)

harveena said...

annna,,bemani yendral bemani;-) kasamalam endral kasamalam ;-) but nega engaiyo poitenga nna,, ungal sevai natuku thevai,, :-) romba nalla eruku,, enum konjam deep aa varthaigala segarichi adoda utkaruthinai post panna nalla erukum,, valga tamizh amudan, valarge tamil,, mukiyama chennai tamzih valarga valarga :-)

எம்.எம்.அப்துல்லா said...

படா ஷோக்காகீதுபா ஒங்கூட.... ஒலகம் இருக்கக் கண்டி மெட்றாஸ் பாஷை இருக்கும் நைனா :))

Unknown said...

kasmalam, bejar words are still there only bemani,somari are gone new words are included instead like lollu, appetu, attu

'தும்பி' said...

சோமாறி என்றால் பிச்சைக்காரன் என்று பொருள். அதாவது சோறு மாறி. பிச்சைக்காரன் பல வீடுகளில் பிச்சை எடுப்பதால், ஒவ்வொரு நேரமும் சோறு மாறும்(வெவ்வேறு விதமான அரிசி).இதுதான் அகராதியில் உள்ள பொருள். தூய தமிழ் சொல்தான்.