சில பாடல்களும்,சில நினைவுகளும்

நாம் சில பழைய,சிறு வயதில் கேட்ட பாடல்களை தற்போது கேட்கும் போது அந்த காலத்திற்கே சென்று விடுவது உண்டு.அப்படி பழைய நினைவுகளுக்கு என்னை இட்டுசெல்லும் பல பாடல்கள் உண்டு அவற்றில் சில.......

சமீபத்தில் ஊருக்கு சென்ற போது தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் போது பஸ்சில் கேட்ட பாடல்!

''உன்னநம்பி நெத்தியிலே பொட்டு வைச்சேன் மத்தியிலே -ராசா பொட்டு வைச்சேன் மத்தியிலே... நெத்தியிலே......பொட்டு வைச்ச காரணத்த புரிஞ்சுக்க ராசா .....''


இந்த பாட்ட கேக்கும்போது எனக்கு அந்தமான் தான் நினைவுக்கு வரும்! நான் பிறந்தது நாலாவது வரை படிச்சது எல்லாம் அந்தமான்லதான். அந்தமான் போர்ட் ப்ளேயர்ல ஒரு குருத்துவாரா (சீக்கியர் கோயில்) இருக்கு! அதன் எதிர்ல தான் எங்க வீடு! கொஞ்ச தூரத்துல அபர்டீன் பஜார் அங்க என் அப்பா ஒரு நகை கடை வைச்சு இருந்தார்!ஒரு தடவ ஒரு சாயங்கால நேரம் எங்க வீட்டுல இருந்து எங்க கடைக்கு போறேன் அப்போரொம்ப தூரத்துல இந்த பாட்டு கேட்டது! அது அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு போல!
இந்த பாட்ட எப்போ கேட்டாலும் அந்த சாயங்கால நேரமும் எங்க கடைக்கு போனதும் கண்ணுக்குள்ள வந்துடும்.

அந்தமான் அப்படின்னதும் மேலும் சில நினைவுகள்!

அங்க அபர்டீன் ஸ்கூல் ல நாலாவது வரைக்கும் தான் படிச்சேன் அதுக்கு மேல அங்க ஏன் படிக்கல? ம்ம்ம்..... எல்லாம் அரசியல்தான்!


என் அப்பா அங்க திமுக வில இருந்தார். தீவிர அரசியல் வாதி! அதோட அவர் ஒரு மேடை பேச்சாளர்!

என் அப்பா ஒரு தீவிர எம்ஜியார் அபிமானி!


எம்ஜியார் திமுகவில இருந்து விலகி அதிமுக ஆரம்பிச்சப்போ என் அப்பா அந்தமான்ல தன் ஆதரவாளர்களுடன் திமுகவில இருந்து வெளியேறி அங்க அதிமுகவ துவக்கியவர்! மேலும் அந்தமான் அதிமுக அமைப்பாளராகவும் தீவிரமாக பணியாற்றியவர்!அதன் விளைவு ! கடையை சரியாக கவனிக்காமல் தொழில் நொடித்து கடனாளியாகிகடையை விற்றுவிட்டு ! நான்கு பிள்ளைகளுடன் நிராயுத பாணியாக சொந்த ஊரு திரும்பிய சிறப்புமிகு சரித்திரத்துக்கு சொந்தகாரர்! அதனால தான் அங்க நான் அஞ்சாவது படிக்கல! எங்க மதுக்கூர் லதான் அஞ்சாவது முதல் பன்னெண்டாவது வரை படிச்சேன்!

இப்போ கூட எனக்கு ஒரு ஆசை இருக்கு பிளைட்ல அந்தமான் போகணும் பெரிய ஸ்டார் ஹோட்டல் ல தங்கி அந்தமான்ல நான் டவுசர் மட்டும் போட்டுக்கிட்டு ஓடி விளையாடின இடங்கள பார்க்கணும்! அங்க என்னை ஒருவாட்டி நாய் கடிச்சுடிச்சிஅந்த தழும்பு, அங்க ஏற்பட்ட மேலும் சில தழும்புகள் என் கால்ல இருக்கு இதையெல்லாம் அங்கபோய் பார்க்கணும்! அப்போதான் என் ஆத்மா அமைதியாகும்! ;;))

----------------------------------------------------------------------------------------------

ஊருபக்கம் திருவிழா ன்னாலே சில எல்.ஆர் ஈஸ்வரி பாடல்கள ஸ்பீக்கர்ல புல் சவுண்டுல அலற விடுவாங்க! மேலும் சில பாட்டுக்கள் உண்டு கண்டிப்பா அந்த பாட்டுகள் திருவிழாவில அலறும்!!

அப்படி ஒருபாட்டு ! கன்னி பருவத்திலே படத்துல வந்தது!

நடைய மாத்து! ஒன் நடைய மாத்து! அக்கா நீ என்ன பாத்து ஆடுருறியே கூத்து அசையுது ஒன்ன போல நாத்து .... அசையுது ஒன்ன போல நாத்து நடைய மாத்து!

நடைய மாத்து நீ .......நடைய மாத்து அத்தான் நீ என்ன பாத்து ஆடுறியே கூத்து அசையுது ஒன்ன போல காத்து அசையுது ஒன்ன போல காத்து
நடைய மாத்து !


பொள்ளாச்சி ரோட்டுமேல பொழுது சாயும் நேரத்துல புல்லாக்கும் பொன் தோடு மா போற புள்ளநீ.... தொண வேணுமா போடு தினாக்கு!!

பொல்லாத பொண்ணு என் பொல்லாப்ப வாங்கவரும் கில்லாடி எவனுமில்ல என் மச்சானே! இல்லாட்டி கொறவே இல்ல போடு தின்னாக்கு

தினாக்கு! தினாக்கு! தினாக்கு! போடு!! தினாக்கு! தினாக்கு! தினாக்கு!

ஏய்! நடைய மாத்து!!!

குத்து பாட்டுன்னா.. குத்து பாட்டு ... அப்படி ஒரு குத்து பாட்டு இந்த பாட்டு ...

இந்த பாட்டு வந்த புதுசுல எல்லா திருவிழா விலையும் செம குத்து குத்தும்
இந்த பாட்டு ...


இந்த பாட்ட கேக்கும் போது எனக்கு எங்க ஊரு பெரமையா கோயில் திரு விழாதான் வந்து நிக்குது!

கரகாட்டம் ,குறவன் குறத்தி டான்ஸ் (யப்பா) சர்பத் கடை, அப்புறம் நமக்கு வேண்டப்பட்ட புள்ளைங்க எல்லாம் என்ன புது டிரஸ் போட்டு இருக்குன்னு தேடுறது அந்த கற்பூர வாசனை எல்லாம் மனசுல ஜில்லுன்னு வந்தது நிக்குது!

அப்புறம் அதுல முக்கியமா சிதறு தேங்கா பொறுக்குறது ! ஒருவாட்டி நெறைய செதறு தேங்கா பொறுக்கி வைச்சு இருந்தேன் நமக்கு வேண்ட பட்ட புள்ள ஒன்னு பார்த்துடிச்சி ஆஹா! பொறுக்குறது செதறு தேங்காயா இருந்தாலும் கவுரதய உட முடியுமா? அந்த புள்ள என் கிட்ட க்க வருது நான் அப்படியே பொறுக்குன தேங்காய பின்னாடி மறைச்சுகிட்டு அந்தாண்ட போயிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா என் கூட தேங்கா பொறுக்குன இன்னொரு பையன் கிட்ட தேங்கா வாங்கி தின்னுகிட்டு நிக்குது அந்த புள்ள. ச்சே மிஸ் பண்ணிட்டேன்.

-------------------------------------------------------------------------------------------------

ஒரு புது படம் ரிலீஸ் ஆனா எங்க ஊருக்கு வர குறைஞ்சது மூனு நாலு மாசம் ஆகும் நான் ப்தினுன்னு, பன்னெண்டாவது படிக்கிறப்போ புது படம் பார்க்க பட்டுகோட்டைக்கு பசங்களோட சேந்து போவேன் நைட் ஷோ போவோம் எல்லோரும் ஷேர் பண்ணி கார் எடுத்துகிட்டு போவோம்! ஒருவாட்டி அப்படி போயிட்டு திரும்புறோம் பசங்க எல்லாம் உச்சா போக வண்டிய நிறுத்த சொல்லுறாங்க! நல்ல மை இருட்டு ! கடும் நிசப்தம் அப்போ கார்ல டிரைவர் ஒரு பாட்டு போட்டார் பாருங்க! கனத்த இசை! தேவலோக தேவதை போல எஸ் . ஜானகி பாடின பாடல்

அரண்மனை கிளி படத்துல ...........

வான்மதியே....... ........வான்மதியே ......தூது செல்லு ... வான்மதியே
மாளிகை பொன்மாடம்... மல்லிகை பூ மஞ்சம்...யாவுமே இநேரம் ....
ஏற்குமோ என் நெஞ்சம்....காதலன் வாசல் வரவேண்டும் ..நீயும் என் சேதி சொல்ல வேண்டும் .................

அந்த பாட்டு! அந்த இடம்! அந்த கார் ஸ்டீரியோ! எல்லாம் மனசுல!
அப்போ நினைச்சுகிட்டேன்! சொந்தமா ஒரு கார் வாங்கனும்! இதே பாட்டை
இதேபோல நேரத்துல இந்த இடத்துல காரை நிப்பாட்டி கேக்கணும்!

>

20 comments:

தமிழ் பிரியன் said...

நல்ல நினைவு! முதன் முதலில் கொடைக்கானல் போய்விட்டு திரும்பிக் கொண்டு இருந்த போது இறக்கத்தில் வேகமாக வந்து கொண்டு இருக்க நில்! நில்! நில்! பதில் சொல்! சொல்! என்ற பாடல் வேனின் ரிதத்திற்கு தகுந்தாற் போல் ஒலித்தது.. மீண்டும் அதே போல் கேட்க ஆசை வந்து விட்டது.

harveena said...

இதையெல்லாம் அங்கபோய் பார்க்கணும்! அப்போதான் என் ஆத்மா அமைதியாகும்! """"''

something wrong annnnaaa ;-))


ellathaiyum sonega,, aannnna,,,
"va vathiyare ottanda nee varakatena odamatten, zambazzar kokku, nan saidapetta maggu " pattu mattum yen vitutenga ,,,???//

மங்கை said...

உன்னநம்பி நெத்தியிலே பொட்டு
எனக்கும் பிடிச்ச பாட்டு...அந்த சமயத்துல இருந்த குடியிருப்பு பகுதி எனக்கு நினைவில் வரும்.. நல்ல கலெக்ஷன் அமுதன்

வித்யா said...

நல்லா கொசுவத்தி சுத்திருக்கீங்க:)

அ.மு.செய்யது said...

//கரகாட்டம் ,குறவன் குறத்தி டான்ஸ் (யப்பா) சர்பத் கடை, அப்புறம் நமக்கு வேண்டப்பட்ட புள்ளைங்க எல்லாம் என்ன புது டிரஸ் போட்டு இருக்குன்னு தேடுறது அந்த கற்பூர வாசனை எல்லாம் மனசுல ஜில்லுன்னு வந்தது நிக்குது.//

வாழ்வின் பல உயரங்களை நாம் அடைந்தாலும் இது போன்ற பழைய நினைவுகள், பாடல்கள் மீண்டும் நம் கண்முன்னே இழந்த சின்ன சின்ன சந்தோஷங்களை மீட்டெடுக்கின்றன.

சில நேரங்களில் வலிகளை கூட ஏற்படுத்த வல்லவை.

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... ஜீவன் அண்ணே... அருமையான நினைவுகள்...

சூப்பர்

புதியவன் said...

நல்ல மலரும் நினைவுகள்...சில வரிகளை மிகவும் ரசித்துப் படித்தேன்

//கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா என் கூட தேங்கா பொறுக்குன இன்னொரு பையன் கிட்ட தேங்கா வாங்கி தின்னுகிட்டு நிக்குது அந்த புள்ள. ச்சே மிஸ் பண்ணிட்டேன்.//

ஹா...மிக அழகு...

//வான்மதியே.......ஒ ........வான்மதியே ......தூது செல்லு ... வான்மதியே//

இந்தப் பாடல் எனக்கும் ரொம்ப பிடிக்கும்...

//அந்த பாட்டு! அந்த இடம்! அந்த கார் ஸ்டீரியோ! எல்லாம் மனசுல!
அப்போ நினைச்சுகிட்டேன்! சொந்தமா ஒரு கார் வாங்கனும்! இதே பாட்டை
இதேபோல நேரத்துல இந்த இடத்துல காரை நிப்பாட்டி கேக்கணும்!//

உங்க ஆசை நிச்சயம் நிறைவேறும் வாழ்த்துக்கள் ஜீவன் அண்ணா...

Rajeswari said...

வந்துட்டீங்களா ஜீவன் அண்ணா..எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்??

Rajeswari said...

அனைவருக்கும் பழைய நினைவுகளை அசைபோடும் சந்தர்ப்பம் பிடித்தமான ஒன்று.தங்களது பழைய ஞாபகங்களும் அருமை..

இதில் ”வான்மதியே” பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஏன்னா எனக்கும் ஃப்ளாஷ் பேக் இருக்குல..

Rajeswari said...

அண்ணா..தமிழிஷ்ல சப்மிட் பண்ணலியா?

அபுஅஃப்ஸர் said...

நல்ல பதிவு ஜீவா

பழைய நினைவுகள் என்றென்றும் மறவா, அதுவும் ஏதோ ஒன்று தோணும்போது அந்த நினைவுகளையும் அசைபோட்டு ச்சே என்னா லைஃப்டா இது அப்படினு கேக்கதோணும்,...

அபுஅஃப்ஸர் said...

//பிளைட்ல அந்தமான் போகணும் பெரிய ஸ்டார் ஹோட்டல் ல தங்கி அந்தமான்ல நான் டவுசர் மட்டும் போட்டுக்கிட்டு ஓடி விளையாடின இடங்கள பார்க்கணும்! அங்க என்னை ஒருவாட்டி நாய் கடிச்சுடிச்சிஅந்த தழும்பு, அங்க ஏற்பட்ட மேலும் சில தழும்புகள் என் கால்ல இருக்கு இதையெல்லாம் அங்கபோய் பார்க்கணும்! அப்போதான் என் ஆத்மா அமைதியாகும்! ;;))
//

அதற்கான முயற்சித்தால் நிச்சயம் நிறைவேற்றலாம்... வாழ்த்துக்கள்

அமுதா said...

நல்ல கொசுவத்தி. கூடிய சீக்கிரமே அந்தமான்ல ஸ்டார் ஓட்டல்ல தங்கி கொசுவர்த்தி சுற்ற வாழ்த்துகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ம், எனக்கும் இது போல பாடல்களும் அதற்குத் தகுந்த நினைவுகளும் ஓடும்.

உங்களின் நினைவுகளும் அதனையொத்த உங்களின் ஆசைகளும் சீக்கிரமே நிறைவேற வாழ்த்துக்கள்

முனைவர் சே.கல்பனா said...

நினைவலைகள் பகிர்வு நன்று.

வால்பையன் said...

முதல் பாட்டும் கடைசி பாட்டும் எனக்கும் பிடிக்கும்!

இரண்டாவது எனக்கு தெரியாது!

கடைக்குட்டி said...

அந்தமான் நினைவா??

அந்த--மான் நினைவா???

SK said...

ஜீவன் நல்ல நினைவுகள்.

அந்தமான் சென்றுவர வாழ்த்துக்கள். :)

லவ்டேல் மேடி said...

ஆம்மங்கோ....!! இருந்தாளுமும் .... ட்ரேவல்ல எந்த பாட்டு கேட்டாளுமும் சொர்கம்தான் ( தூங்கீட்டமின்னா ....) இனிமையாத்தான் இருக்கும்.....!! பழைய பாட்டுன்னா சொல்லவே வேண்டாமுங்கோ....!! நெம்ப அருமையா இருக்கும்......!!!

KADUVETTI said...

:))))