எங்க ஊர் கோயில்

சித்திரை ஒண்ணாம் தேதி எப்போதும் எங் ஊருக்கு போய்டுவோம். எங்க பூர்வீக கிராமத்துல ஒரு பெருமாள் கோயில் இருக்கு அந்த கோயில் சித்திரை ஒன்னு அன்னிக்கு எங்க குடும்பத்து மண்டகப்படி. இப்போ என் பொண்ணுக்கு சித்திரை க்கு முன்னாடியே லீவ் விட்டது வசதியா போச்சு!
அந்த ஊர் மற்றும் கோயில் பத்தி கொஞ்சம்....

காரப்பங்காடு

முன் காலத்தில் அதிக மக்கள் வசித்த கிராமம் . கோயில் வாசலில் அக்ரகாரம். நகை தொழில் செய்பவர்கள் வசிக்கும் ஒரு தெரு, மற்றும் விவசாய மக்கள் நெறைய பேர் இருந்தாங்களாம். இப்போ சுமார் ஆயிரம் பேருக்கும் குறைவான மக்களே அங்க வசிக்குறாங்க! ஒரு நாளைக்கு ரெண்டு தடவ ஒரு பஸ் வந்துட்டு போகுது!

அபீஷ்ட வரத ராஜ பெருமாள் திருகோயில்


மக்கள் தொகை குறைவா இருந்தாலும் சுத்தி வயல் வெளியால் சூழப்பட்ட அந்த கிராமத்தில் கம்பீரமா இருக்குது இந்த கோயில் மட்டும் தான் . நல்ல பராமரிப்புடன் நேர்த்தியா வைச்சு இருக்காங்க!
108 வைணவ திருதலங்கள்ள இதுவும் ஒன்னு!

ஸ்தல விருட்சம்

இந்த கோயிலின் ஸ்தல விருட்சம் பாதிரிபூ மரம். சிவப்பு பாதிரிபூமரம்,வெள்ளை பாதிரி பூமரம் அப்படின்னு ரெண்டு மரமும் அங்க இருக்கு !



பாதிரி பூமரம் ஸ்தல விருட்சமா இருக்குறது இந்த கோயில் ல மட்டும்தானாம் இந்த தகவல அங்க அர்ச்சகரா வேலை பார்குற ஐயர் சொன்னாரு !

ரொம்ப சின்ன கிராமத்துல இருந்தாலும் நகரத்துல இருக்குதுபோல இந்த கோயில நல்லா பராமரிசுக்கிட்டு வராங்க!




கோயில் இருப்பிடம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்து மதுக்கூர் இருந்து காரப்பங்காடு சரியா எட்டு கிலோ மீட்டர். ராஜ மன்னார்குடி இருந்து மதுக்கூர் வழியா முப்பது கிலோ மீட்டர்.

கீழ் கண்ட சுட்டிகளில் இந்த கோயில் பத்தின சில விஷயங்கள்......


http://www.hindu.com/fr/2004/02/27/stories/2004022701720400.htm

http://www.hindu.com/thehindu/nic/vishnu/index.htm

http://www.youtube.com/watch?v=ஸ்கஃஹ்த௬வ்க்


----------------------------------------------------------------------------------

>

18 comments:

மங்கை said...

அருமையான இருக்கு படங்கள்...

அமுதா said...

நல்ல தகவல் & நல்ல படங்கள்

அப்பாவி தமிழன் said...

ஒட்டு போட்டாச்சு , உக்கார்ந்து பணம் சம்பாதிக்கறது எப்படின்னு ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க http://technotamil.blogspot.com/2009/05/blog-post_06.html

இராகவன் நைஜிரியா said...

தகவல்களுக்கு நன்றி ஜீவன் அண்ணா...

கோயிலும் மிக அழகாக பேணப் பட்டு வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்னங்காணம் என்ன ஆச்சு உமக்கு

ஒரே ஷேத்ராடனத்தகவலா கொடுத்திருக்கீரு
................. :)))))))))))) ச்சும்ம்மா

படஙக்ளோட நல்லா தொகுத்தளிச்சிருக்கீங்க

Unknown said...

அருமையா இருக்குது உங்க ஊரும் , கோவிலும் , அதன் விளக்கங்களும் .... மேலும் உங்க டெம்ப்ளேட் ரொம்ப அருமையா இருக்குது.....!!!!!

கடைக்குட்டி said...

இந்த மாதிரி பொறுமையா எழுத வராது பல பேருக்கு...

ஃபோட்டோவெல்லாம் போட்டு..

நல்லா இருக்குங்க..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அத்திவெட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தான்.
உங்க சொந்த ஊர் காரப்பங்காடா ஜீவன்?
நான் உங்கள் ஊருக்கு அடிக்கடி வந்திருக்கேன்.
எங்க வயலுக்கு அப்படியே தான் போவோம்.
பெருமாள் கோவில் தெப்பத் திருவிழா தெரியும்.

பதிவு நன்று!

அ.மு.செய்யது said...

அழகான பதிவு !!! படங்களோடு..


பகிர்வுக்கு நன்றி ஜீவன் !!!

தமிழ் அமுதன் said...

நன்றி மங்கை மேடம்!
நன்றி அமுதா மேடம்!
நன்றி உக்காந்து சம்பாதிக்கும் அப்பாவி தமிழன்!
நன்றி ராகவன் அண்ணே !
நன்றி வித்யா!
நன்றி அமித்து அம்மா ;;))
நன்றி லவ் டேல் மேடி!
நன்றி கடைக்குட்டி!

நன்றி அத்திவேட்டியாரே!
காரப்பங்காடுதான் நம்ம சொந்த ஊரு அதுமட்டும் இல்ல
எங்க பாட்டன் காலத்துல இருந்து நாங்க முதல் முடி எடுக்குறது உங்க அத்தி வெட்டி
பெரிய சாமி கோயில் ல தான் பத்து நாள் முன்னாடி என் சின்ன பொண்ணுக்கு பெரிய சாமி கோயில் ல தான் கெடா வெட்டி முடி எடுத்து வந்தோம். அடுத்த பதிவு அது பத்திதான்!!

நன்றி செய்யது!

யட்சன்... said...

//இந்த தகவல அங்க அர்ச்சகரா வேலை பார்குற ஐயர் சொன்னாரு//

பெருமாள் கோவில்ல ஐயங்கார்ல இருப்பார்...டெக்னிகல் மிஸ்டேக்...ஹி..ஹி..

நல்ல பதிவு...

வெத்து வேட்டு said...

do they have "caste" probelm in your village?
do they allow "all" people in this temple?

Rajeswari said...

நல்ல பகிர்வு அண்ணா.

RAMYA said...

நல்ல அருமையான பதிவு ஜீவன்.

உங்களின் பகிர்தலும் மிகவும் யதார்த்தமா இருந்தது.

இது புகழ்ச்சி இல்லை. உண்மையா சொல்லறேன் ஜீவன்.

கோவிலின் உள்ளே எவ்வளவு அருமையா பாதுகாக்கிறாங்க.

கிராமத்தில் தான் இந்த அருபுதாமான பராமரிப்பை காண முடியும் என நினைக்கின்றேன்.

உங்கள் படங்கள் அனைத்தும் மிக அருமையா பளிச்சுன்னு வந்திருக்கு.

சுத்தமா இருக்கிறது சுத்தாமாதானே தெரியும்.

கண்டிப்பா இந்த தலத்துக்கு நாங்க ஒரு முறை செல்வோம்.

அப்போ உங்க கிட்டே வழி கேட்டுகறேன்.

இது நம்ம ஆளு said...

அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

தமிழ் அமுதன் said...

வாங்க! சார் வாங்க!

///பெருமாள் கோவில்ல ஐயங்கார்ல இருப்பார்...டெக்னிகல் மிஸ்டேக்...ஹி..ஹி.//

ஒஹ் அப்படி ஒன்னு இருக்கோ!;;)

வாங்க வெத்து வேட்டு !

do they have "caste" probelm in your village?
do they allow "all" people in this temple?

அங்க தீண்டாமை பிரச்னை ஏதும் இருக்குறதா தெரியல
அது ஒரு சின்ன கிராமம் ''யாரையும்'' புறகணித்து விட்டு ''யாரும்''
''வாழ்ந்து'' விட முடியாது !

நன்றி டீச்சர் !!

நன்றி ரம்யா!;;)

வாங்க நம்ம ஆளு! உங்க ப்ளோக்ல கமென்ட் போட முடியல என்னனு பாருங்க!!

முக்கோணம் said...

ஆர்வத்தோட படிச்சேன்...இன்னும் எதிர் பார்க்கிறேன்..நன்றி..

புவனேஸ்வரி ராமநாதன் said...

படங்கள் மிக அருமை. தகவலுக்கு நன்றி.