மர மொழிகள்

தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு !

பனை மரத்துக்கு கீழ நின்னு பால குடிச்சாலும் அது கள்ளா தான் தெரியும்!

ஒதியன் பெருத்தா உத்திரத்துக்கு ஆகாது !

அடிச்சு வளர்க்காத பிள்ளையும் ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது !

ஆலும் ,வேலும் பல்லுக்குறுதி

ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை !

புடிச்சாலும் புடிச்சான் புளியன்கொம்பபோல!

இலவு காத்த கிளிய போல !

வாழையடி வாழையாக !

எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

போகும்போது புளியமரத்தடியில் போ
வரும்போது வேப்பமரத்தடியல் வா!

மரத்த வைச்சவன் தண்ணி ஊத்துவான்!!

ஆல்போல் தழைத்து அருகு போல்வேரோடி
மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்!

வேற ஏதும் தெரிஞ்சா சொல்லுங்க!

.........................................................................

>

43 comments:

குடுகுடுப்பை said...

அவ திமிசுகட்டை மாதிரி இருக்கான்னு சொல்றது மர மொழியா தலைவரே?

குடுகுடுப்பை said...

தேக்கு மரத்தில் வார்த்து எடுத்த தேகம்.
வாழைத்தண்டுகளை காலாப்படைச்சி.
காற்று வந்தால் தலை சாயும் நாணல்
காதல் வந்தால் தலை சாயும் நாண(ன)ல்

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. அற்புதம்..

நீங்க இவ்வளவு போட்டு இருக்கீங்க... இதுக்கு மேலே நாங்க என்னத்த சொல்றது.

வால்பையன் said...

எனக்கு தெரிஞ்ச ஒரே கட்டை நாட்டுகட்டை!

அதுவும் எப்படினா?
ஒரு ஜோக் படிச்சு

ஜோக் கீழே!

***
நமீதா தண்ணியில தூக்கி போட்டா மிதப்பாங்க

எப்படி?

அவுங்க தான் நாட்டு கட்டையாச்சே!
***

இப்படி தான்!

அ.மு.செய்யது said...

உக்காந்து யோசிப்பீங்களோ !!!! எப்படி இப்படி ??

நட்புடன் ஜமால் said...

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டும்

காக்கை உட்கார பனம்பழம் விழந்துச்சாம்

இன்னும் இருக்கு தான் இப்போ ஞாபகம் வரலை.

Anonymous said...

சோழியன் குடுமி சும்மா ஆடாது!!

இப்போதைக்கு இதான் நினைவுக்கு வந்தது...மத்தது அப்பறம் சொல்றேனே....

ப்ரியமுடன் வசந்த் said...

கலக்கல் ஜீவன்

சந்தனமுல்லை said...

மரம் மாதிரி நிக்காதே-ன்னு சொல்றது?!! :-)

குடந்தை அன்புமணி said...

நல்லாருக்கு தலைவா...

ஆனா- ‘இலவு காத்த கிளிய போல !’
இது மரத்தை சேராதே...
‘இலவு’ என்றால் இங்கு ‘பிணம்’ காத்த என்று பொருள் வரும். சரியாத்தானே சொல்லியிருக்கேன் என்று நினைக்கிறேன்.

தகவல் புலிகளே சரிதானா சொல்லுங்கோ...

தமிழ். சரவணன் said...

அறுக்கத்தெரியாதவன் கைக்கு அம்பத்தியேட்டு கருக்கருவாளாம்...
உப்பில்ல பண்ணடம் குப்பயைிலே
சோழியன் குடுமி சும்மா ஆடாது
வாயும் வயிறும் ஒன்னுன்னாலும் அத்தாலூம் மகளும்ட வேறவேற தான்
நீர்அடிச்சி நீர்விழகாது
குடிக்குறது கூலு கொப்பளிக்கிறது பண்ணிரு
ஊர்வாய முடினாலும் உலைவாய முடி முடியாது
ஊர் ரெண்டு கெட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்
வாழத்தெரியாத -----க்கு ஆயிரம் புருஷனாம்

இன்னம் இருக்கு ஆனா இத்தோட நிறுத்திக்கிறேன்....

அமுதா said...

"தனிமரம் தோப்பாகாது"

மரத்தைக் காப்போம்

அமுதா said...

சாரி... மரவளம் காப்போம் இன்னும் பொருத்தமோ?

ஹேமா said...

அட இப்படியும் பதிவுகள் போடலாமே!

பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.

கடுகு போன இடம் ஆராய்வார்.
பூசனிக்காய் போன இடம் தெரியாது.

ராமலக்ஷ்மி said...

எல்லாம் கேட்டவைதான் எனினும் ஒருசேர வாசிக்கையில் அருமை. நல்ல பதிவு ஜீவன்!

மரமொழி யாவும் நீங்கள் சொல்லி விட்டீர்கள்.

ஒரு புல் மொழி:

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.

அப்துல்மாலிக் said...

ஆஹா நல்லாயோசிக்கிறீங்க தல‌

மரமண்டையானு சொல்லுவாங்களே இதுவும் பொருந்துமோ

தமிழ் அமுதன் said...

/// குடுகுடுப்பை said...

அவ திமிசுகட்டை மாதிரி இருக்கான்னு சொல்றது மர மொழியா தலைவரே?///

அப்படியே வைச்சுக்குவோம்!! யாரு வேண்டாம்னு சொல்ல போறாங்க?;;))

//தேக்கு மரத்தில் வார்த்து எடுத்த தேகம்.
வாழைத்தண்டுகளை காலாப்படைச்சி.
காற்று வந்தால் தலை சாயும் நாணல்
காதல் வந்தால் தலை சாயும் நாண(ன)ல்//

இதுவும் நல்லாத்தான் இருக்கு!!

தமிழ் அமுதன் said...

/// இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. அற்புதம்..

நீங்க இவ்வளவு போட்டு இருக்கீங்க... இதுக்கு மேலே நாங்க என்னத்த சொல்றது.///

நன்றிண்ணே!!

தமிழ் அமுதன் said...

// வால்பையன் said...

எனக்கு தெரிஞ்ச ஒரே கட்டை நாட்டுகட்டை!

அதுவும் எப்படினா?
ஒரு ஜோக் படிச்சு

ஜோக் கீழே!

***
நமீதா தண்ணியில தூக்கி போட்டா மிதப்பாங்க

எப்படி?

அவுங்க தான் நாட்டு கட்டையாச்சே!
***

இப்படி தான்!///

ஹா... ஹா .... வாலுன்னா! வாலுதான்!!

தமிழ் அமுதன் said...

/// அ.மு.செய்யது said...

உக்காந்து யோசிப்பீங்களோ !!!! எப்படி இப்படி ??//

;;))

தமிழ் அமுதன் said...

/// நட்புடன் ஜமால் said...

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டும்

காக்கை உட்கார பனம்பழம் விழந்துச்சாம்

இன்னும் இருக்கு தான் இப்போ ஞாபகம் வரலை.///

சூப்பர் ஜமால்!!

தமிழ் அமுதன் said...

/// தமிழரசி said...

சோழியன் குடுமி சும்மா ஆடாது!!

இப்போதைக்கு இதான் நினைவுக்கு வந்தது...மத்தது அப்பறம் சொல்றேனே....///

ஏங்க சோழியன் குடுமின்னு மரம் ஏதும் இருக்கா ????;;)))

தமிழ் அமுதன் said...

/// பிரியமுடன்.........வசந்த் said...

கலக்கல் ஜீவன்///

நன்றி வசந்த்!!

தமிழ் அமுதன் said...

/// சந்தனமுல்லை said...

மரம் மாதிரி நிக்காதே-ன்னு சொல்றது?!! :-)//

ஆமால்ல! அதையும் போட்டு இருக்கலாம்!!

தமிழ் அமுதன் said...

/// குடந்தை அன்புமணி said...

நல்லாருக்கு தலைவா...

ஆனா- ‘இலவு காத்த கிளிய போல !’
இது மரத்தை சேராதே...
‘இலவு’ என்றால் இங்கு ‘பிணம்’ காத்த என்று பொருள் வரும். சரியாத்தானே சொல்லியிருக்கேன் என்று நினைக்கிறேன்.

தகவல் புலிகளே சரிதானா சொல்லுங்கோ...///

இலவு அப்படிங்குறது இலவன்பஞ்சு மரத்த குறிக்கும் அன்புமணி!

அதுக்கு ஒரு கதை சொல்லுவாங்க !!

தமிழ் அமுதன் said...

/// தமிழ். சரவணன் said...

அறுக்கத்தெரியாதவன் கைக்கு அம்பத்தியேட்டு கருக்கருவாளாம்...
உப்பில்ல பண்ணடம் குப்பயைிலே
சோழியன் குடுமி சும்மா ஆடாது
வாயும் வயிறும் ஒன்னுன்னாலும் அத்தாலூம் மகளும்ட வேறவேற தான்
நீர்அடிச்சி நீர்விழகாது
குடிக்குறது கூலு கொப்பளிக்கிறது பண்ணிரு
ஊர்வாய முடினாலும் உலைவாய முடி முடியாது
ஊர் ரெண்டு கெட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்
வாழத்தெரியாத -----க்கு ஆயிரம் புருஷனாம்

இன்னம் இருக்கு ஆனா இத்தோட நிறுத்திக்கிறேன்....///

வாங்க சரவணன் சும்மா அடிச்சி விட்டு இருக்கீங்க!;;))
நான் சொன்ன மொழிகள்ல எல்லாம் மரம் வருது பாருங்க ........நன்றி !!

தமிழ் அமுதன் said...

//அமுதா said...

"தனிமரம் தோப்பாகாது"

மரத்தைக் காப்போம்

சாரி... மரவளம் காப்போம் இன்னும் பொருத்தமோ?///

சரியா சொன்னீங்க ! நன்றி !!

தமிழ் அமுதன் said...

/// ஹேமா said...

அட இப்படியும் பதிவுகள் போடலாமே!

பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.

கடுகு போன இடம் ஆராய்வார்.
பூசனிக்காய் போன இடம் தெரியாது.////

கலக்கல் நன்றி !!!

தமிழ் அமுதன் said...

/// ராமலக்ஷ்மி said...

எல்லாம் கேட்டவைதான் எனினும் ஒருசேர வாசிக்கையில் அருமை. நல்ல பதிவு ஜீவன்!

மரமொழி யாவும் நீங்கள் சொல்லி விட்டீர்கள்.

ஒரு புல் மொழி:

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.///

புல் மொழி அருமை!;;)

உங்க ''புல் மொழி க்காக இந்தாங்க ஒரு ''காய் மொழி''

கத்தரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்துதான் ஆகணும்!

பழங்கள்ல வர்றமாதிரி ''கனி மொழி'' ஏதும் கிடைக்கல !!
நன்றி அம்மா!!

தமிழ் அமுதன் said...

''கனி மொழி'' கிடைச்சுடிச்சி ''பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி''

தமிழ் அமுதன் said...

/// அபுஅஃப்ஸர் said...

ஆஹா நல்லாயோசிக்கிறீங்க தல‌

மரமண்டையானு சொல்லுவாங்களே இதுவும் பொருந்துமோ///

ஹா ஹா அப்படியும் வைச்சுக்குவோம்!!!

S.A. நவாஸுதீன் said...

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் பாட்டுதான் பட்டுன்னு நினைவுக்கு வருது. மத்தத யோசிச்சு அடுத்த பின்னூட்டதுல போடுறேன் தல

S.A. நவாஸுதீன் said...

தனி மரம் தோப்பாகாது

RAMYA said...

1. மரத்தின் பழம் மரத்தண்டை விழும்.

2. ஆள் பழுத்தால் அங்கே! அரசு பழுத்தால் இங்கே!

3.புளிய மரத்தில் ஏறினவன் பல் கூசினால் இறங்குவான்.

4.தீட்டின மரத்திலே கூர் பார்க்கிறது.

5.ஓதி பெருத்தால் உரலாமா.

6.ஓதி மரம் தூணாமோ, ஒட்டாங்கிளிஞ்சல் துட்டு ஆமோ?

இப்போதைக்கு இதுதான் நினைவிற்கு வந்தது. பிறகு யோசித்து எழுதறேன் :))

S.A. நவாஸுதீன் said...

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.

பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.

பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.

பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?

பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.

பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?

S.A. நவாஸுதீன் said...

காய்த்த மரம்தான் கல்லடிபடும்.

சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

RAMYA said...

ரெண்டாவது இன்னிங்க்ஸ் ஜீவன்.

ஏதாவது பார்த்து போட்டு கொடுங்க :-)

1.மரத்தை வைத்துக் கொண்டு பழத்தை கோரவேண்டும்.

2.ஏற்படாத மரத்திலே எண்ணாயிரம் காய்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சி. திடீர்னு ஏன் மரத்துக்கிட்ட பேச ஆரம்பிச்சிட்டீங்க ஜீவன்

Unknown said...

// தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு ! //

வால்பையனோட பேரன்ட்ஸ் டையலாக்காச்சே ....!! இப்போ இங்க ரிப்பீட்டு ஆயிருக்கு....!!

// பனை மரத்துக்கு கீழ நின்னு பால குடிச்சாலும் அது கள்ளா தான் தெரியும்! //

இப்புடிதானுங்கோ... நானு பல எடத்துல மாட்டிகிட்டேனுங் தலைவரே...!!

// ஒதியன் பெருத்தா உத்திரத்துக்கு ஆகாது ! //

ஏனுங் தலைவரே.... ?? உத்தரத்துல பெயிண்டு உருஞ்சு போயிருமிங்குளா..?

// அடிச்சு வளர்க்காத பிள்ளையும் .. ///

பாவம் ... உடுங்க... அ.மு.செய்யது கொலந்தபுள்ள.......

// ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது ! //

முந்தானி முடுச்ச்சா....?? ம்ம்.... ம்ம்.... அடுச்சோட்டுங்க தலைவரே....!!!

// ஆலும் ,வேலும் பல்லுக்குறுதி //

வேல் எடுத்து பல்லுல குத்துனா எப்புடி பல்லு உறுதியாகுமுங் தலைவரே.....!!

// ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை ! //

இருக்குற ஊருக்கு குஷ்பூ வா.....???

// புடிச்சாலும் புடிச்சான் புளியன்கொம்பபோல! //

மாட்டு கொம்பா புடுச்சா ரணகளம் ஆயிருமுங் தலைவரே.....!!

// இலவு காத்த கிளிய போல ! //

தலைநகரம் படத்துல வடிவேலு சொன்ன கதைங்களா...??

// வாழையடி வாழையாக ! //

அதுக்கு கீழ வாழப்பூவு.....

// எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன? //

நயன்தாராவா.....??

// போகும்போது புளியமரத்தடியில் போ
வரும்போது வேப்பமரத்தடியல் வா! //

ஏனுங் தலைவரே....... ஒன் வே ரூட்டுங்குளா ......??

// மரத்த வைச்சவன் தண்ணி ஊத்துவான்!! //

வெக்காதவன் உப்பு வெண்ணி ஊத்துவான்.......

// ஆல்போல் தழைத்து அருகு போல்வேரோடி
மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்! //

ஷகிலா மேடம் படத்துல வந்த பாட்டு மாதிரியே இருக்குதுங்கோ தலைவரே....!!

போயிட்டுவாரனுங்கோவ்......!!

தமிழ் அமுதன் said...

/// S.A. நவாஸுதீன் said...

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் பாட்டுதான் பட்டுன்னு நினைவுக்கு வருது. மத்தத யோசிச்சு அடுத்த பின்னூட்டதுல போடுறேன் தல////

///தனி மரம் தோப்பாகாது///

///அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.

பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.

பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.

பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?

பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.

பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?///

காய்த்த மரம்தான் கல்லடிபடும்.

சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

ஆஹா !!!! அற்புதம் பாஸ் கலக்கிடீங்க! கேட்டறியாத பல பழமொழிகள் நன்றி!!

தமிழ் அமுதன் said...

/// RAMYA said...

1. மரத்தின் பழம் மரத்தண்டை விழும்.

2. ஆள் பழுத்தால் அங்கே! அரசு பழுத்தால் இங்கே!

3.புளிய மரத்தில் ஏறினவன் பல் கூசினால் இறங்குவான்.

4.தீட்டின மரத்திலே கூர் பார்க்கிறது.

5.ஓதி பெருத்தால் உரலாமா.

6.ஓதி மரம் தூணாமோ, ஒட்டாங்கிளிஞ்சல் துட்டு ஆமோ?

இப்போதைக்கு இதுதான் நினைவிற்கு வந்தது. பிறகு யோசித்து எழுதறேன் :))

ரெண்டாவது இன்னிங்க்ஸ் ஜீவன்.

ஏதாவது பார்த்து போட்டு கொடுங்க :-)

1.மரத்தை வைத்துக் கொண்டு பழத்தை கோரவேண்டும்.

2.ஏற்படாத மரத்திலே எண்ணாயிரம் காய்.////

ரெண்டு இன்னிங்ஸூம் அசத்தல்!!!

தமிழ் அமுதன் said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சி. திடீர்னு ஏன் மரத்துக்கிட்ட பேச ஆரம்பிச்சிட்டீங்க ஜீவன்///

ஆமாங்க!! மர தமிழன்! அப்படித்தான்!;;)

தமிழ் அமுதன் said...

/// லவ்டேல் மேடி said...

// தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு ! //

வால்பையனோட பேரன்ட்ஸ் டையலாக்காச்சே ....!! இப்போ இங்க ரிப்பீட்டு ஆயிருக்கு....!!

// பனை மரத்துக்கு கீழ நின்னு பால குடிச்சாலும் அது கள்ளா தான் தெரியும்! //

இப்புடிதானுங்கோ... நானு பல எடத்துல மாட்டிகிட்டேனுங் தலைவரே...!!

// ஒதியன் பெருத்தா உத்திரத்துக்கு ஆகாது ! //

ஏனுங் தலைவரே.... ?? உத்தரத்துல பெயிண்டு உருஞ்சு போயிருமிங்குளா..?

// அடிச்சு வளர்க்காத பிள்ளையும் .. ///

பாவம் ... உடுங்க... அ.மு.செய்யது கொலந்தபுள்ள.......

// ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது ! //

முந்தானி முடுச்ச்சா....?? ம்ம்.... ம்ம்.... அடுச்சோட்டுங்க தலைவரே....!!!

// ஆலும் ,வேலும் பல்லுக்குறுதி //

வேல் எடுத்து பல்லுல குத்துனா எப்புடி பல்லு உறுதியாகுமுங் தலைவரே.....!!

// ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை ! //

இருக்குற ஊருக்கு குஷ்பூ வா.....???

// புடிச்சாலும் புடிச்சான் புளியன்கொம்பபோல! //

மாட்டு கொம்பா புடுச்சா ரணகளம் ஆயிருமுங் தலைவரே.....!!

// இலவு காத்த கிளிய போல ! //

தலைநகரம் படத்துல வடிவேலு சொன்ன கதைங்களா...??

// வாழையடி வாழையாக ! //

அதுக்கு கீழ வாழப்பூவு.....
// எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன? //
நயன்தாராவா.....??

// போகும்போது புளியமரத்தடியில் போ
வரும்போது வேப்பமரத்தடியல் வா! //

ஏனுங் தலைவரே....... ஒன் வே ரூட்டுங்குளா ......??

// மரத்த வைச்சவன் தண்ணி ஊத்துவான்!! //

வெக்காதவன் உப்பு வெண்ணி ஊத்துவான்.......

// ஆல்போல் தழைத்து அருகு போல்வேரோடி
மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்! //
ஷகிலா மேடம் படத்துல வந்த பாட்டு மாதிரியே இருக்குதுங்கோ தலைவரே....!!

போயிட்டுவாரனுங்கோவ்......!!

அய்யா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது !!!