இன்னியோட நான் பதிவெழுத வந்து ஒரு வருஷம்
ஆகுது (23 .09.2009)
இந்த தொடர் பதிவுக்கு அழைத்த அமித்து அம்மாவுக்கு நன்றி....!
நான் பதிவெழுத வந்த கதைய சொல்லுறதுக்கு முன்னாடி நான் கம்ப்யுட்டர் வாங்குன கதைய சொல்லணும். நான் செய்யிற வேலைக்கும் கம்ப்யுட்டருக்கும் துளியும் சம்பந்தம் இல்ல! ஒரு நாலு,அஞ்சு வருசத்துக்கு முன்னாடி gprs வசதி உள்ள செல்போன் வாங்கினேன் hutch கார்டு போட்டா இன்டெர் நெட் எல்லாம் வரும்னு கேள்விப்பட்டு hutch சிம் கார்டு வங்கி போட்டேன். அதுல சில ரிங் டோன் சில படங்கள் எல்லாம் வந்தது ..!
ஆகுது (23 .09.2009)
இந்த தொடர் பதிவுக்கு அழைத்த அமித்து அம்மாவுக்கு நன்றி....!
நான் பதிவெழுத வந்த கதைய சொல்லுறதுக்கு முன்னாடி நான் கம்ப்யுட்டர் வாங்குன கதைய சொல்லணும். நான் செய்யிற வேலைக்கும் கம்ப்யுட்டருக்கும் துளியும் சம்பந்தம் இல்ல! ஒரு நாலு,அஞ்சு வருசத்துக்கு முன்னாடி gprs வசதி உள்ள செல்போன் வாங்கினேன் hutch கார்டு போட்டா இன்டெர் நெட் எல்லாம் வரும்னு கேள்விப்பட்டு hutch சிம் கார்டு வங்கி போட்டேன். அதுல சில ரிங் டோன் சில படங்கள் எல்லாம் வந்தது ..!
அதுல ப்ரொவ்சிங் பண்ணலாம்னு சொன்னாங்க
www.dinamalar.com அப்படின்னு டைப் பண்ணினா welcome to dinamalar அப்படின்னு வரும் அதுக்கு மேல ஒன்னும் வராது இன்னும் சில சைட் பேரு கொடுத்து டைப் பண்ணினாலும் எதாச்சும் படம் வரும் அதுக்கு மேல ஒன்னும் வராது நம்ம செல்போன் கெப்பாசிடி அவ்ளோதான் அந்த சைட் எல்லாம் பார்க்கனும்னு ரொம்ப ஆர்வமாயிடுச்சி ! ஒரு ப்ரொவ்சிங் சென்டர் போய் சிஸ்டம் எப்படி ஹாண்டில் பண்ணுறதுன்னு
ட்ரைனிங் எடுக்க முடிவுபண்ணி போய் கேட்டேன் பதினைஞ்சு நாள்ல கத்து கொடுப்பாங்களாம் 750 பீஸ் ன்னு சொன்னாங்க! சரின்னு ட்ரைனிங் போய் கொஞ்ச கொஞ்சமா கத்துகிட்டேன் ஆரம்பத்துல பெயிண்டிங்க்ல இருந்து ஸ்டார்ட் பண்ணுனாங்க அப்போதான் மௌஸ் கண்ட்ரோல் வரும்னு.
தமிழ்ல கம்ப்யூட்டர் சம்மந்தமா கண்ணுல மாட்டுன புக் எல்லாம் வாங்கி படிச்சேன்!கம்ப்யூட்டரின் அருமைய அனுபவிக்க ஆரம்பிச்சதும் அது எனக்கு ஒரு அபூர்வ பொருளா தெரிஞ்சது ! ஒடனே கம்ப்யூட்டர் வாங்க முடிவு பண்ணி ஒரு தெரிஞ்ச ஆள் மூலமா வாங்கியாச்சு.! கம்ப்யூட்டர் வாங்குனதுக்கு வீட்டுல தங்கமணி செம எதிர்ப்பு...! காச ஏன் இப்படி தண்டமா செலவு பண்ணுறீங்க? உங்களுக்கும் கம்யுட்டருக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு ! நாம எதையும் காதுல வாங்காம வழக்கம் போல இருந்துட்டேன்.
நான் கம்யூட்டர் வாங்குனநேரம் கஜினி படம் வெளிவந்த நேரம்!
இந்த கால கட்டத்துலதான் பங்கு சந்தை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன் கம்யூட்டர் இருந்தா வீட்டுல இருந்த படியே பங்கு சந்தைல trading பண்ணலாம்னு அதுசம்பந்தமா தமிழ்ல சில புக் வாங்கி படிச்சேன். இங்கிலீஷ் தெரியாததுதான் பெரிய தலைவலியா இருந்துச்சு. ஆனா trading பண்ண இங்கிலீஷ் அதிகம் தெரிய வேண்டிய அவசியம் இல்லாதது ஒரு ஆறுதல்! அப்புறம் icici ல அக்கவுண்ட் ஆரம்பிச்சு trading பண்ணினேன். அப்போவெல்லாம் blog பத்தி அதிகம் தெரியாது!
trading வந்து ஒரு குத்து மதிப்பாத்தான் பண்ணினேன் ஆரம்பத்துல கொஞ்சம் லாபம் ,கொஞ்சம் நஷ்டம் எல்லாம் கலந்து வரவே கொஞ்சம் முதலீட்ட அதிக படுத்தினேன் பங்கு சந்தைல தெரியாம இறங்குனது எவ்ளோபெரியதப்புன்னு
எனக்கு 2008 ஜனவரில வந்த சரிவுலதான் புரிஞ்சது..!
கிட்டதட்ட முதலீட்டுல 70% ஒருசில நாட்கள்லேயே காலி ! என்ன பண்றது ...! தங்க மணிக்கு தெரியாது ..! நானே பல்ல கடிச்சுகிட்டு இருந்துட்டேன்..! அப்போதான் தோணிச்சு பங்கு சந்தை பத்தி தமிழ்ல எதாவது சைட் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்னு ..! அப்போ எனக்கு தமிழ்ல டைப் அடிக்குறது எப்படின்னு தெரியாது! tamil sharemarket,tamil pangu santhai இப்படியெல்லாம் டைப் பண்ணி சர்ச் பண்ணி பார்ப்பேன் ஒன்னும் மாட்டல இந்த சமயத்துல எப்படியோ தமிழ்ல டைப் பண்ணுற soft ware கண்ணுல மாட்டிச்சு சரின்னு தமிழ் பங்கு வணிகம்னு தமிழ்ல டைப் பண்ணி தேடினப்போ கிடைச்சதுதான் திரு ,சரவண குமார் அவர்களின் தமிழில் பங்குவணிகம் என்ற இந்த தளம் . இந்த தளத்த பார்த்த பிறகுதான் என் கம்ப்யூட்டர் பயன்பாட்டுல ஒரு பெரிய மாற்றமே வந்தது.
இந்த தளத்தில பங்கு சந்தை பத்தி தினசரி குறிப்பு கொடுப்பதோடு paisa power அப்படின்னு ஒரு சாட் ரூம் உருவாக்கி அதில வணிக நேரத்துல நல்ல பல தகவல்கள சொல்லி தருவார். மேலும் பல நண்பர்களும் தங்கள் கருத்துகள சொல்லுவாங்க. அங்க அப்போ எல்லோரும் அதிகமா இங்கிலிஷ்ல தான் பேசினாங்க கொஞ்சநாள் சும்மா வேடிக்கை பார்த்துகிட்டே இருந்தேன் அப்புறம் கொஞ்ச கொஞ்சமா நானும் அந்த க்ரூப்ல சேர்ந்துட்டேன்.நல்ல அருமையான நண்பர்கள் அங்க கிடைச்சாங்க! அப்போ அங்க சிலர் சில blog link குடுத்துகுவாங்க அத பார்த்துத்தான் எனக்கும் blog ஆரம்பிக்க ஆசை வந்தது! மாடு மேய்ப்பவன் அப்படின்னு ஒரு blog ஆரம்பிசேன் ஒரு போஸ்ட் எழுதுனதோட சரி அத யாரும் கண்டுகல ..! அத அப்படியே விட்டுட்டேன்...!
அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு paisa power சாட் க்ரூப்ல நண்பர் அருண் ஒரு blog ஆரம்பிச்சார் புழுதிக்காடு அப்படின்னு! அதுல நகை தொழில் பத்தி ஒரு கட்டுரை போல எழுத சொன்னார்! நானும் எழுதினேன்! நல்ல வரவேற்பு அந்த பதிவுக்கு அத பார்த்ததும் மறுபடி எனக்கு blog எழுத ஆசை! சரின்னு மறுபடி blog ஸ்டார்ட் பண்ணினேன் கண்ணாடி அப்படின்னு! முதல்ல பகத் சிங்கின் தாயார் அப்படின்னு ஒரு பதிவு போட்டேன் யாரும் கண்டுகல! புழுதிக்காடு அருண் தன் blog ல குடுத்த ling மூலமா போய்தான் பதிவுலகம் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன் ! அங்க போய் சிலருக்கு கமென்ட் போட்டேன்! ஒரு நாள் ....!நான் எழுதுன முதல் பதிவுக்கு ஒரு கமென்ட்! வந்தது அத பார்த்தும் எனக்கு செம சந்தோசம் ..!ஆஹா ...!நம்மளுக்கும் கமென்ட் போட்டுடாங்க அப்படின்னு எனக்கு முதல் கமென்ட் போட்டது அமிர்த வர்ஷினி அம்மா! இந்த நேரத்துல அவங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன் ;;)!
அப்புறம் சுகமாய் ஒரு பிரசவம் அப்படின்னு ஒரு பதிவு போட்டேன் இதுக்கு நெறைய பேர் கமென்ட் போட்டாங்க! இந்த பதிவுக்கு பிறகுதான் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது நம்மளும் எழுதலாம்னு....! இப்படித்தான் நான் பதிவெழுத
ஆரம்பிச்சேன்....! யப்பாடா.... இந்த ஆறு தன் வரலாற கூறிடுச்சி ......!!!
பாசக்கார பதிவுலகம்....
நான் பதிவெழுத வந்து இன்னியோட ஒரு வருஷம் ஆகுது...!இந்த பதிவுலகத்துல நெறைய நல்ல முத்து,முத்தான நண்பர்கள் சகோதரர்கள்,சகோதரிகள் கிடைச்சு இருக்காங்க ! பதிவு எழுதுறதும் அதுக்கு கிடைக்கிற கமெண்டுகளும் மிகுந்த சந்தோசத்த கொடுக்குது! நம்ம நடைமுறை வாழ்க்கைல எவ்வளவோ பிரச்சனைகள சந்திக்கிறோம் கடை,வேலை,போட்டி,பொறாமை அப்படி எவ்வளவோ சிக்கல்களுக்கு மத்தியில ஒரு ஏசி போட்ட பூங்கா போல மனதுக்கு மகிழ்ச்சியையும் ஒரு உற்சாகத்தையும் பதிவுலகம் கொடுக்குது!
இந்த பதிவுலகில் நான் சந்தோசத்தை கொடுத்து சந்தோசத்தை எடுத்து கொள்ளவே விரும்புகிறேன். இங்க கிடைத்த அனைத்து நட்புகளையும் தக்க வைத்து கொள்ள ஆசை!!யாரிடமும் கோபப்படவோ அல்லது கோபப்படுத்தவோ விருப்பமில்லை...! நன்றி! நன்றி!!நன்றி!!!
>
29 comments:
me the first :)
சூப்பரப்பு, நான் பங்குச்சந்தைல 70% விட்டத மறக்கத்தான் பதிவெழுத வந்தேன். இப்ப ஓரளவுக்கு நஷ்டம் 30% உள்ள வந்திருச்சி......
உங்க ப்ளாக்குக்கு ஒரு வயசு ஆயிருச்சா வாழ்த்துக்கள்!
எனக்கு தெரிஞ்சி உருப்படியா இணையத்தை உபயோகிச்சிருக்கிங்க!
நானெல்லாம் இணையத்தை தெரிஞ்சதே வேற உலகத்துல!
mudhal varuda niraivirku vaazthukkal anna :))
naanum ipadi than aarambithen... athuvum enoda mudhal padhivukku vandha commentukkal endrume ninaivil ullavai..
/*கம்ப்யூட்டர் வாங்குனதுக்கு வீட்டுல தங்கமணி செம எதிர்ப்பு...! காச ஏன் இப்படி தண்டமா செலவு பண்ணுறீங்க? */
he he he....
parava illa na.. neenga romba seekramave computer la neraya vishayam kathukutu irukkenga..
pangu sandhai pathi konjam ezhuthunga anna.. naanum therinjikuren :))
புது வருஷம், புது வடிவம், கலக்குங்க அமுதன் கலக்குங்க... இப்பொழுது நடந்தது போல் உள்ளது.. அதற்குள் ஒரு வருடம் உடுண்டோடிவிட்டது...
நாம் இருவருக்குமே நமது குரு திரு.சரோ அவர்களே முன்னோடி...இதில் நன் உங்களுக்கு செய்தது மிக சிறிய உதவி தான்...உங்களின் முதல் பதிவிற்கு என்றென்றும் நான் ஒரு ரசிகன்.
விரைவில் உங்களது கோவை வாழ்க்கை அனுபவங்களை பதிவாக எதிர்பார்கிறேன்...
வாழ்த்துக்கள்...........
நகை தொழிலைப்பற்றி மீண்டும் பதிவு இடவும்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
தாங்களின் அதி விரைவு கற்று தேர்ந்தது முயற்சித்தால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையும் கிடைத்தது
தாங்கள் மேலும் நகை தொழில் பற்றியும், பங்கு சந்தை பற்றியும் பதிவிடவும்
வாழ்த்துக்கள் ஜீவன்...
நீங்க நகைத்தொழில் பத்தி எழுதினீங்க
நான் மரத்தொழில் பத்தி எழுதலாம்ன்னு இருக்கேன்...
நம்மல வளர்த்த கலைய உலகம் அறிய வச்சுட்டீங்க..இதுதான் ஒரு கலைஞன் அந்த கலைக்கு கொடுக்கும் மரியாதை...வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி...இன்னும் நிறைய நகை பற்றி எழுதுங்க...
வாழ்த்துக்கள்
உங்கள் வலைப்பூவின் முதல் பிறந்த நாளுக்கு வாழ்த்துகள்.
அருமை. இணையத்தை அருமையாக உபயோகித்து இருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.
பங்குச் சந்தைகளில், 1991 - ல் சரியான அடி வாங்கியபின், அதன் பக்கமே போவதில்லை.
பிறந்தநாள் காணும் கண்ணாடிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!
உங்கள் அனுபங்கள் உங்களுக்கு ஆசானாக இருந்து உங்களை இவ்வளவு உயரத்திற்கு வளர்த்து விட்டது.
தொட்டது துலங்க இந்நாளில் எனதருமை நண்பர்க்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
இன்னும் மேலும் மேலும் பல சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள்!
நீங்கள் செய்யும் எல்லா தொழிலும் உயர்ந்து விளங்க எனது வாழ்த்துக்கள்!
ஆஹா ஒரு கதை படிச்ச மாதிரி இருந்ததுங்க...
உங்க பதிவுலக பயணத்தோட தொழில் கற்றதையும் எழுதியிருக்கீங்க...கண்டிப்பா அனுபவம் பயன்படும்
//கோபப்படுத்தவோ விருப்பமில்லை...! //
இது பொய் தானே...என்னை எப்படியெல்லாம் கடுப்பேத்தறீங்க...ஹிஹிஹிஹி
வந்த வேலை முடிந்தது வரேன்...
வாழ்த்துக்கள் மேலும் இப்படி பல்லாண்டுகள் உங்கள் பதிவுலக நற்பணி தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
/*எவ்வளவோ பிரச்சனைகள சந்திக்கிறோம் கடை,வேலை,போட்டி,பொறாமை அப்படி எவ்வளவோ சிக்கல்களுக்கு மத்தியில ஒரு ஏசி போட்ட பூங்கா போல மனதுக்கு மகிழ்ச்சியையும் ஒரு உற்சாகத்தையும் பதிவுலகம் கொடுக்குது!
*/
உண்மைதான்...
தொடர்ந்து எழுதுங்கள்
ஒரு வருஷம் ஆகிருச்சா... வாழ்த்துக்கள் சகா...!!
என்னமாதிரி புது பதிர்வர்களையும் மதிச்சு பின்னூட்டம் போடுறதுக்கு நன்றி...
தொடரட்டும் உங்கள் பணி....
வலையுலகில் பக்குவமடைந்த பதிவர்களில் நீங்களும் ஒருவர்.
அனாவசியமாக ஒரு பதிவும் உங்கள் யுனிகோடிலிருந்து புறப்பட்டதில்லை..இன்னும் நிறைய எழுதுங்கள்.
ஓராண்டு நிறைவு பெற்றமைக்கு வாழ்த்துகள் தல !!!
ஒரு வருஷம் ஆனவுடனே ப்லாகுக்கு புத்துயிர் கொடுத்து கொண்டாடறீங்க பாருங்க அதுலயே தெரியுது உங்க மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் ஜீவன்
ஆஹா ...!நம்மளுக்கும் கமென்ட் போட்டுடாங்க அப்படின்னு எனக்கு முதல் கமென்ட் போட்டது அமிர்த வர்ஷினி அம்மா //
இம்புட்டு நாளா இந்த சங்கதி எனக்குத் தெரியாதே !!!!!!!
எப்படியோ எழுத்தாளர் பைரவன் ஆகிட்டீங்க. அதுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்.
ஒரு வருசம் ஆனதுக்கு வாழ்த்துக்கள் அண்ணா :)
அப்புறம் புது வீடு நல்லா இருக்கு. எழுத்துதான் கொஞ்சம் பெரிசா இருக்கு
ஒரு வருட வாழ்த்துகள் வருடலோடு
-----------
கடைசி பத்தி அழகு அண்ணா.
ஒரு வருடம் பிளாக் எழுதுனத்துக்கு வாழ்த்துக்கள். இன்னம் பல வருஷம் எழுதப் போறத்துக்கு அடுத்த அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
ஆறு-வின் வரலாறு நல்லா இருந்தது,,,,
கலக்குங்க...
பதிவு மென்மேலும் மெருகி பொலிந்திட வாழ்த்துகள்...
ஆஹா... ஓஹோ.... கத நெம்ப நல்லா இருக்குங்க கேப்டன்ஜி.....!! இதுக்கு திருட்டு டி.வி.டி. எங்க கெடைக்கும்...!!
ஒரு வயுசு ஆனதுக்கு எம்பட வாழ்த்துக்கள்..!!
வாழ்த்துகள் அப்பு.
அன்பு நண்பர் ஜீவன் ,
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .மேலும் உங்கள் எழுத்துகளை வழப்படுத்தி,சமுதாய பணிகளை தொடரவும் .,,,,,,,வாழ்த்துக்கள்
ஒரு வருடம்தான் ஆகுதா!!!. ஆச்சரியமா இருக்கு தல. வாழ்த்துக்கள். வால் சொன்னமாதிரி உருப்படியா இணையத்தை உபயோகப் படுத்தி இருக்கீங்க.
இங்க கிடைத்த அனைத்து நட்புகளையும் தக்க வைத்து கொள்ள ஆசை!!யாரிடமும் கோபப்படவோ அல்லது கோபப்படுத்தவோ விருப்பமில்லை...!
************************
ரொம்ப நெகிழ்ச்சியாவும் சந்தோஷமாவும் இருக்கு தல
வாழ்த்துக்கள் ஜீவன்
அன்பின் ஜீவன்
அருமையான அறிமுகம் - நல்ல இடுகை
நல்வாழ்த்துகள் ஆண்டு நிறைவு விழாவினிற்கு
நட்புடன் சீனாஅ
Post a Comment