ஐயோ....வீணாய் போகுதே ...மழைச்செல்வம்...!!!





இந்நேரம் இந்த மழையில் ஒரு வருடத்தில் விவசாயத்திற்கு நமக்கு தேவைப்படும் நீரில் கணிசமான அளவு நீர் வீணாய் கடலில் போய் கலந்திருக்கும்.

இப்படி இங்கேயே உற்பத்தியாகும் நீரிணை கடலில் கலக்கவிட்டு அடுத்தவருடம் கர்நாடகா காரனிடம் கையேந்தி நிற்க போகிறோம்.


வீராணம் ஏரி

அய்யா தமிழக முதல்வரே...!!

ராஜராஜ சோழன் காலத்துக்கு முந்தய காலத்துல கொள்ளிடம் ஆத்துல உபரி தண்ணி அநியாயமா கடல்ல கலக்குரத பார்த்து பொறுக்க முடியாம கட்டுனதுதானே அய்யா வீராணம் ஏரி..! இன்னிக்கு அந்த வீராணம் ஏரியால எவ்ளோ நிலங்கள் பாசன வசதி பெருது...!

நல்லா மேம்பாலம் எல்லாம் கட்டுறீங்க..! அதேபோல இந்த வீணா போற மழை தண்ணிய தேக்கி வைக்குற மாதிரி தடுப்பு அணைகள கட்ட கூடாதா..!

இலவச கலர் டிவி வேணாம்யா...! ஒரு ரூபாய்க்கி அரிசி வேணாம்யா...!

அநியாயமா கடல்ல போயி கலக்குற தண்ணிய தேக்கி வைக்கிறமாதிரி எதாச்சும் நீர்த்தேக்கம், அணை,ஏரி உருவாக்குங்கையா புண்ணியமா போகும்...!

>

46 comments:

ஈரோடு கதிர் said...

தடுப்பு அணை கட்டவேண்டும் என்பதற்காக நம்ம விவசாயிகள் போரட்டமே நடத்தவேண்டும்...

அதை விடுத்து இன்னும் கலர் டிவி எங்க ஊருக்கு வரைலையேனு போராடற நிலைமைக்கு தள்ளியிருப்பதுதான் இவர்களின் வெற்றியே!!!

ப.கந்தசாமி said...

ஐயா,அணைகள் கட்டுவதென்பது சாதாரண காரியமில்லை. அதற்கு தகுந்த இடம் வேண்டும். விவசாய நிலங்களில் எல்லாம் வீடுகளும் தொழிற்சாலைகளும் கட்டிவிட்டோம். தண்ணீர் வீணாகித்தான் போகும். வேறு வழி இல்லை.
ப.கந்தசாமி

வால்பையன் said...

ஜெ ஆட்சியில் மழை நீர் சேகரிப்பு கட்டாயபடுத்தப்பட்டது. மீண்டும் கண்டுக்காமல் விடப்பட்டது நிலத்தடி நீர் கூட சேகரிக்க முடியாமல் போய் விட்டது!

skarthee3 said...

ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கின்ற ஞாயமான ஆசை!!
சரியான நேரத்தில் பதிவிட்டிருக்கிறீர்கள்!!
முந்தைய ஆட்சியில் மழை நீர் சேகரிப்பு என்ற அருமையான திட்டத்தை நிறைவேற்றினார்கள்!!
அதுபோல் இப்போது உங்களது / நமது "நல்லா மேம்பாலம் எல்லாம் கட்டுறீங்க..! அதேபோல இந்த வீணா போற மழை தண்ணிய தேக்கி வைக்குற மாதிரி தடுப்பு அணைகள கட்ட கூடாதா..!"

என்ற ஆசையும் நிறைவேறும் என்று நம்புவோமாக!!

நிஜாம் கான் said...

அண்ணே! நியாயமான கோரிக்கை. ஆனால் கிராமிய மக்கள் சேமிக்கும் மழை நீரில் 2 சதவிகிதம் கூட நகரத்து மக்கள் சேமிப்பதில்லையே? இதில் அரசை நொந்து என்ன பயன். மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால் மழை நீரை சேகரிக்கமுடியாது.

கலகலப்ரியா said...

superb..! அப்டிக் கேளுங்க... எனக்கும் இந்த நப்பாசை அடிக்கடி வர்றதுண்டு..!

Unknown said...

டிவியும் இலவசமுமே இங்கு நிர்ணயிக்கும் சக்தியாகிவிட்டதே...என்ன செய்ய..

vasu balaji said...

என்னாங்கண்ணே. ஒரு அணைக்கட்டு கட்டினா ஒரு வாட்டி வோட்டு விழும். அப்புறம் அரசியல் நடத்த வேணாமா? இருக்கிற தண்ணிய நாசம் பண்ணிட்டு முல்லைப் பெரியார்ல கட்றான்னு அலறி என்ன பண்ண?

Sanjai Gandhi said...

குட்..

//இலவச கலர் டிவி வேணாம்யா..//

இன்னைக்கு நானும் இது பத்தி தான் எழுதி இருந்தேன்.. ஊதற சங்கை ஊதுவோம்..

S.A. நவாஸுதீன் said...

தமிழகத்தில் கிராமங்களிலாவது இன்னமும் குளம், ஏரிகள் இருக்கின்றன. அதுவும் சரியாக பராமரிக்கப்படாமல். நகரங்களின் நிலமைதான் ரொம்ப மோசம்.

உங்களின் ஆதங்கம் புரிகிறது தல. இந்த அரசாங்கம் இதையெல்லாம் கண்டுகொள்வதேயில்லை. ஜெ.யின் ஆட்சியில் கொண்டுவந்த மழைநீர் சேமிப்புத் திட்டம் எத்தனையோ வல்லுனர்களால் பாராட்டப்பட்ட திட்டம். அதைக்கூடத் தொடரவில்லை.

கல்யாணி சுரேஷ் said...

பாராட்டுதலுக்குரிய பதிவு. நன்றி ஜீவன்.

அன்புடன் நான் said...

அனையை கட்டிப்புட்டா... அப்புறம் எப்படி இலவசங்களை கொடுத்து...அரசியல் செய்யுறது???? உங்க தாகத்தின் நேர்மை இப்போ புரியாது ஜீவன்.
பாராட்டுக்கள்.

டவுசர் பாண்டி... said...

மழை நீர் வடிகால் என்கிற ஒரு திட்டம் இருக்கிறது. வருடம் முழுவதும் தூங்கி வழிந்து விட்டு மழை வந்த உடன் அதிகாரிகள் எப்பாடு பட்டாவது தண்ணீரை வெளியேற்றி விட்டு அப்போதைக்கு தப்பிக்க நினைக்கிறார்களே ஒழிய....

மழை நீர் வடிகால்களை ஆண்டின் நெடுகில் பராமரிப்பதன் மூலம் பெரிய அளவில் சேமிக்க இயலாவிட்டாலும், நிலத்தடி நீர் கணிசமாய் உயர வழி செய்யலாம்.

அன்புடன் நான் said...

Dr.P.Kandaswamy said...
ஐயா,அணைகள் கட்டுவதென்பது சாதாரண காரியமில்லை. அதற்கு தகுந்த இடம் வேண்டும். விவசாய நிலங்களில் எல்லாம் வீடுகளும் தொழிற்சாலைகளும் கட்டிவிட்டோம். தண்ணீர் வீணாகித்தான் போகும். வேறு வழி இல்லை.
ப.கந்தசாமி//

அய்யா வ‌ண‌க்க‌ம்.

விவ‌சாய‌ம் செய்யும் ப‌டி நீர் தேக்கி வைத்திருந்தால் ஏன்ய்யா நில‌த்த‌ விற்க‌ போறாங்க‌..... நில‌த்தை யாரும் விருப்பி விற்ப‌தில்லை அய்யா.
முத‌ல்ல இல‌வ‌ச‌ங்க‌ளை நிறுத்திவிட்டால்... ம‌னித‌ன் த‌ன்மான‌த்தோடு வாழ்ந்து சாவான்.

நீங்க‌ சொல்வ‌துபோல் வேறு வ‌ழியில்லை என்றால் "ம‌னித‌ன் சோற்றுக்கு ப‌தில் ர‌ப்ப‌ரைத்தான் திங்க‌னும்...வேறுவ‌ழியில்லை"

மணிஜி said...

உடம்ப்பு எப்படியிருக்கு?துணைக்கு ஆள் சேர்க்கிறேன்பா

பின்னோக்கி said...

நீங்க சொன்ன மாதிரி இந்த அரசு எதாவது நீர் சேமிக்கறத்துக்கு திட்டம் கொண்டு வந்த நல்லாயிருக்கும். மழை நீர் சேமிப்பு கட்டாயம் ஆக்கப்பட்டதற்கு அடுத்த வருடம் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் 30 சதவிகிதம் அதிகமாகியிருந்தது. அதையாவது நாம ஒழுங்க செஞ்சா போதும்.

க.பாலாசி said...

//நல்லா மேம்பாலம் எல்லாம் கட்டுறீங்க..! அதேபோல இந்த வீணா போற மழை தண்ணிய தேக்கி வைக்குற மாதிரி தடுப்பு அணைகள கட்ட கூடாதா..!//

சரியா சொன்னீங்க தலைவரே....இதில் நான் கதிர் அவர்களின் கருத்தினை வழிமொழிகிறேன்.

நல்ல இடுகை....

ஜெட்லி... said...

உங்க ஏக்கம் தான் எங்களுக்கும்
அண்ணே

மணிப்பக்கம் said...

அணை கட்ட முடியாவிட்டால், குளங்கள், ஏரிகள் கட்டலாம்தானே?!
கருணாநிதிக்கு உருப்படியான வேலைகள் இருக்கின்றன!

Thamira said...

தமிழகத்தில் எங்கெல்லாம் இதற்கு வாய்ப்பிருக்கின்றது என்பது குறித்த ஆய்வுகள் ஏதும் நிகழ்ந்திருக்கிறதா? இதையெல்லாம் அறிந்து சொல்ல பத்திரிகைகளுக்கு எங்கே நேரமிருக்கப்போகிறது?

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம்ம்..
சூப்பரு..

அவருக்குத்தான் வயசாயிடுச்சே காதுகேக்காதே...

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு ஜீவன்!

ரோஸ்விக் said...

நல்ல ஆதங்கம்.

தம்பி,
எனக்கு நிறையா வேலைகள் இருக்கிறது. அண்ணா விட்டு சென்ற பணிகள் நிறைய இருக்கிறது. அவர் ரசனை இல்லாமலும், விளம்பரம் வேண்டாமலும் போய்விட்டார்.

விருதுவழங்கும் விழா.
விருது வாங்கும் விழா.
முரசொலி எழுதவேண்டும்.
பிரபாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி எழுதவேண்டும். அவருக்கு பிறந்த நாள் வருவது உனக்கு நினைவில்லாமல் இருக்கலாம். நீ சிறு நரி கூட்டம். நான் தமிழ் இனத் தலைவர்.
இன்னும் இரண்டு மூன்று தொலைக்காட்சி அலைவரிசை தொடங்க வேண்டும்.
அதில் வரும் நிகழ்ச்சிகளுக்கு தமிழில் பெயரிடவேண்டும்.
மானாட மயிலாடவில் வரும் ஒவ்வொரு பெரிய நெஞ்சங்களுக்கும் தனித்தனியே பாராட்டுக் கடிதம் எழுத வேண்டும்.
இன்னும் இரண்டு மூன்று திரைப்பட கதை வசனங்கள் பாதியில் நிற்கிறது.
எனக்கு உள்ள பல வீடுகளுக்குப் போகவே நேரம் இல்லை.
தலைவனாக பல காரியங்கள் செய்துவிட்டேன்.
எனக்கு காரியம் பண்ணும் பிள்ளைகளுக்குத் தான் இன்னும் ஒன்னும் பண்ணவில்லை.

நிறைய வேலை இருக்குப் பா.

என்னது உனக்கு இலவச கலர் டிவி வேணாமா? சரி சரி விடு அதை எனது நாலாவது வீட்டில் முப்பதாவது அறையில் வைத்துக்கொள்கிறேன்.

எனக்கு அணைக்க மட்டும் தான் தெரியும். அணை கட்டுவது பற்றி தெரியாது...

இருப்பா அடுத்த சினிமா நட்சத்திர விழாவில் ஸ்ரேயா-வுக்கு டிரஸ் செலக்ட் பண்ணி கொடுத்துட்டு வாரேன்.

அப்துல்மாலிக் said...

//இங்கேயே உற்பத்தியாகும் நீரிணை கடலில் கலக்கவிட்டு அடுத்தவருடம் கர்நாடகா காரனிடம் கையேந்தி நிற்க போகிறோம்.
//

ஜீவன், நம்மால் இப்படி இடுக்கை மட்டுமே எழுத முடியும், இந்த பதிவை உரியவரிடம் சேர்த்தாலே நாம் ஓரளவிற்கு வெற்றிபெற்று விட்டோம். நிச்சயம் சம்பந்தப்பட்டவருக்கு காது கேட்கும் என்ற நம்பிக்கையில் ஏக்கத்துடன் ஒரு குடிமகன்........

கலையரசன் said...

புண்ணியமாவது.. புண்ணாக்காவது!! எங்களுக்கு சுருட்டுர வேலை எவ்வளவோ இருக்கு..

RAMYA said...

நல்ல பதிவு ஜீவன்! தேவையான நேரத்தில், தேவையான பதிவு போட்டிருக்கீங்க.

ஒவ்வொருமுறை மழை வரும்போதும் இப்படி அவலக் குரல எழுவதும், மழை நின்றவுடன் அந்த அவலக்குரல்கள் மறைந்து போவதும் வேடிக்கையான வாடிக்கை ஜீவன்.

சாதராண, அதுவும் நம்மை போல் இருப்பவர்களுக்கு தோன்றுகிற எண்ணங்கள்!!

ஆட்சியில் இருப்பவர்களுக்கு இது தோன்றவேண்டும். தோன்றினால் மட்டும் போதாது உணரவேண்டும். உணர்ந்தால் மட்டும் போதாது.
ஆவன செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆணையிட்ட நடவடிக்கைகள் நிறைவேறும்வரை அவர்கள் ஓயக்கூடாது.

இதுபோல் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு அவசர நடவடிக்கைகளையும் போர்க்கால நடவடிக்கைளாகச் செய்தால் வல்லரசு என்ற அறிய சொல் மிகவும் அருகில் இருக்கிறது இல்லையா??

அண்ணன் வணங்காமுடி said...

//கலையரசன் said...
புண்ணியமாவது.. புண்ணாக்காவது!! எங்களுக்கு சுருட்டுர வேலை எவ்வளவோ இருக்கு.. //

சுருட்டட்டும் ஆனா சட்டியில ஒரு சோறாவது மிச்சம் விட்டா நாடு நல்ல வளம் பேருமே

அண்ணன் வணங்காமுடி said...

வானம் பொழிகிறது, பூமி நனைகிறது,
கட்டவேண்டும் அணை - இல்லை
கேள்விக்குறியாகும் தமிழர்களின் நிலை

அண்ணன் வணங்காமுடி said...

// Dr.P.Kandaswamy said...
ஐயா,அணைகள் கட்டுவதென்பது சாதாரண காரியமில்லை. அதற்கு தகுந்த இடம் வேண்டும். விவசாய நிலங்களில் எல்லாம் வீடுகளும் தொழிற்சாலைகளும் கட்டிவிட்டோம். தண்ணீர் வீணாகித்தான் போகும். வேறு வழி இல்லை.
ப.கந்தசாமி //


புதிதாக தலைமை செயலகம் கட்ட இடம் இருக்கும் போது, அணை கட்ட இடம் இருக்காதா என்ன மனம் இருந்தால் மார்க்கம் உண்டு...

கலை அக்கா said...

நல்ல பதிவு ஜீவன்!

தங்களின் சமூக அக்கறை தெளிவாக தெரிகிறது. இந்த இடுகையை வலைப்பதிவில் இடுவதைவிட நல்ல செய்தித்தாளில் - குறிப்பாக முதல்வரின் பார்வைக்கு போகும் பத்திரிக்கையில் - வெளியிடுங்கள்!

ஊதற சங்கை ஊதிவைப்போம்!! விடியும் என்றும் நம்புவோம்!!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இலவச கலர் டிவி வேணாம்யா...! ஒரு ரூபாய்க்கி அரிசி வேணாம்யா...!

இதையெல்லாம் செஞ்சா தானே ஓட்டு விழும்.

அணை கட்டுனா விழுமா.?

சமூக சிந்தனை மிக்க பதிவு.

யாராவது புண்ணியவான் போற போக்குல படிச்சு எதையாவது செஞ்சா பரவால்ல.

மாதேவி said...

நல்ல பதிவு ஜீவன்.சிந்திப்பார்களா?

Anonymous said...

விரயமாகிக் கொண்டிருக்கிறது காலம்
இரையாகிக் கொண்டிருக்கிறது உயிர் உரமாகிக் கொண்டிருக்கிறது உடல்கள்...வீணானால் என்ன மழை?

நமக்குள்ளும் ஒற்றுமை பொருப்பு கடமை உணர்வும் வேண்டுமல்லவா?

sakthi said...

அன்புள்ள ஜீவன் ,
மிக நல்ல பதிவு .ஆனால் தன் வீடு தன் குடும்பம் என்று அரசியல் நிலை இருக்கும் போது இந்த மாதிரி ஆதங்க பதிவுகள் நாம் ஆதங்க பட மட்டுமே முடியும் .ஒவ்வொரு அரசியல் வாதியும் மனசாட்சியுடன் நடக்க வேண்டும். மக்கள் நலன் கருதும் தலைவன் தோன்ற வேண்டும். அது இனிமேல் நடக்காது .ஒரு வேலை கடவுள் மறு அவதாரம் எடுத்தால் பார்க்கலாம் . கடவுளே மக்களை காப்பாற்று

Admin said...

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிகள்

thiyaa said...

//
Dr.P.Kandaswamy said...
ஐயா,அணைகள் கட்டுவதென்பது சாதாரண காரியமில்லை. அதற்கு தகுந்த இடம் வேண்டும். விவசாய நிலங்களில் எல்லாம் வீடுகளும் தொழிற்சாலைகளும் கட்டிவிட்டோம். தண்ணீர் வீணாகித்தான் போகும். வேறு வழி இல்லை.
ப.கந்தசாமி

November 9, 2009 6:22 PM
//


இது என்னவோ உண்மைதான்

தாரணி பிரியா said...

நல்ல பதிவு ஜீவன் அண்ணா ஆனா இது பத்தி அரசியல்வாதிங்க சிந்திப்பாங்களா?

DR SHENBAGA GANESH BABU D said...

tamilamuthan sir kalakunga

அமுதா said...

நாங்களும் பேசிட்டு இருந்தோம்... ஏன் இப்ப எல்லாம் டேம் கட்டறது பத்தி யாரும் பேசறது இல்லைனு...அதில் நிறைய பிரச்னைகள் இருக்கும் ... இடம் பார்த்து ஊர்மக்களை இடம் பெயர்ப்பது என்று பல சிக்கல்கள் உண்டு என்றாலும் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஏதேனும் ஆராய்ச்சி நடந்ததா என்று தெரியவில்லை??/

Thamira said...

உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்.

SUFFIX said...

சென்ற வாரம் செய்தியில் மேலும் 40 லட்சம் வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வினியோகிப்பது குறித்து முதல்வர் கூட்டம் கூட்டினார் என்பதை கேட்கும் போது மனதுக்கு கஷ்டமாகவே இருந்தது, தாங்கள் கூறிய கருத்துக்களும் அவர்களுக்கு எட்டியால் நல்லது.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பதிவு ,நியாயமான விஷயம். ஆனா என்ன பண்றது பாவம் ,அரசியல்வாதிகளுக்கு காசு எண்ணவே நேரம் பத்தாது.

சத்ரியன் said...

ஜீவன்,

ஜீவனுள்ள பதிவு.

(குடி தண்ணிக்கு கஸ்டம் இருந்துக் கொண்டேயிருந்தாத்தான் சாமி, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாத்திமாத்தி "மடயர்களை" ஆள முடியும்.

"இதுகூடத் தெரியாம பதிவு போடறாரம் பதிவு")

நட்புடன் ஜமால் said...

நல்லா மேம்பாலம் எல்லாம் கட்டுறீங்க..! அதேபோல இந்த வீணா போற மழை தண்ணிய தேக்கி வைக்குற மாதிரி தடுப்பு அணைகள கட்ட கூடாதா..!]]

அப்ப அரசியல் எப்படி செய்றது அண்ணா

விஜய் said...

அவசிய பதிவு

வாழ்த்துக்கள்

விஜய்

கிருத்திகாதரன் said...

நிஜம்தான்..நிலைமை இப்படிதான்..