நான் புளியமரம் பேசுகிறேன்!

எஸ் .. ! நான் புளியமரம்தான் பேசுறேன் ..! எங்களுக்கெல்லாம் வயசாகிபோச்சு எங்க இனத்துல சின்ன வயசு மரங்கள எங்கயும் பார்க்க முடியல...! யாரும் புதுசா புளிய மரங்கள பயிர் செய்றதா தெரியல..!சில வீடுகள்லயும், தோப்பு பக்கமும் நாங்க இருக்கோம்னா அது நாங்களா வளர்ந்ததுதான்...! ஆமா...! புளிய மரத்த நட்டு எப்போ புளிய அறுவடை பண்ணுறதுன்னு நீங்க நெனைக்கலாம் உண்மைதான் நாங்க வளர வருசகணக்கு ஆகத்தான் செய்யுது அதுக்கு நாங்க ஒன்னும் செய்யமுடியாது ஆனா இப்போ நீங்க பயன்படுத்துற புளி உங்க பாட்டன் முப்பாட்டன் காலத்துல யாரோ வைச்ச மரத்துல இருந்துதானே கிடைக்குது..?
அதுபோல நீங்களும் உங்க வருங்கால சந்ததிக்காக மரம் வைக்கலாம்ல..?
இந்த படங்கள பாருங்க...!







யாரோ அந்த காலத்துல இப்படி ரோட்ட போட்டு ரெண்டு பக்கமும் புளியமரங்களா நாடு முழுக்க நட்டு வைச்சு இருக்காங்க அவங்க தொலை நோக்கு பார்வைய பாராட்டித்தான் ஆகணும்..! இப்படி எல்லா இடங்கள்லயும் யாரு மரங்கள நட்டு வைச்சதுன்னு எனக்கு வயசானதால மறந்து போச்சு..! இத எழுதுற ஜீவனுக்கும் அது தெரியல தெரிஞ்சவங்க யாராச்சும் பின்னூட்டத்துல சொல்லுங்க..!

இந்த ரோட்ட மண் சாலையா பார்த்து இருக்கேன் ,அப்புறம் கருங்கல் சாலையா பார்த்து இருக்கேன் இப்போ தார் சாலையா பார்க்குறேன் ஆரம்ப காலத்துல குதிரை வண்டி ,மாட்டுவண்டில ஆரம்பிச்சு இப்போ கார் ,பஸ்சுன்னு உங்க வளர்ச்சிய பார்த்து சந்தோசப்பட்டு இருக்கேன்..!

இப்படி ரோடு முழுக்க குடை புடிச்ச மாதிரி உங்களுக்கு நிழல் கொடுக்குறதே எங்களுக்கு எவ்ளோ பெரிய சந்தோசம் தெரியுமா ..? எங்களுக்கே சமயத்துல எங்க நிழல்ல நடந்து போகணும்னு ஆசை வரும் ஆனா அது முடியாதுல்ல..! ;;) ரோட்ட அகலபடுத்துறதா சொல்லி சர்வ சாதாரணமா எங்கள வெட்டி போடுறீங்க சரி பரவாயில்ல ..! ரோட அகல படுத்திதான் ஆகணும் பொறுத்துக்கலாம்..! ஆனா அது ஏன் ரெண்டு பக்கமும் உள்ள மரங்கள வெட்டனும் ...? ஒருபக்கம் மட்டும் வெட்டி அகல படுத்தலாமே ...?

நல்ல வேளை எங்க மர கட்டைகள வீடு கட்டவோ அல்லது ஜன்னல்,கதவு போல பயன் படுத்த முடியாது இல்லாட்டி இந்நேரம் எங்கள பாதி அழிச்சு இருப்பாங்க..!


இப்போ எனக்கு கவலை அப்படின்னா இப்போ இருக்குற எங்க எல்லாருக்கும் ரொம்ப வயசாகிபோச்சு இன்னும் கொஞ்ச வருசங்கள்ல நாங்கல்லாம் அழிஞ்சு போய்டுவோம் ..! புதுசா மரங்கள நடாத பட்சத்துல உங்க அடுத்த தலைமுறை ,அதுக்கு அடுத்த தலைமுறை மக்கள் எல்லாம் சமையலுக்கு புளி கிடைக்காம போய்டுமேன்னுதான் வலையா இருக்கு..!




சில அன்பர்கள் மரம் நாடும் அற்புத சேவைல இருக்காங்க அவங்ககிட்ட நான் கேக்குறது என்னன்னா ? கொஞ்சம் புளிய மரங்களையும் சேர்த்து நடுங்க அப்போதான் எதிர்காலத்துல புளியின் தேவையை நிறைவு செய்ய முடியும் இல்லாட்டி இது புளி இல்ல ஆனா புளி மாதிரி அப்படின்னு எதாச்சும் கெமிக்கல் பொருள பயன்படுத்தி அடுத்த தலைமுறை மக்கள் உடம்ப கெடுத்துக்க போறாங்க...!

>

28 comments:

RAMYA said...

ஜீவன் உங்க பதிவை மேலோட்டமா படிச்சேன். மீதி படிச்சி தெளிவா பின்னூட்டம் போடறேன்.

உங்க தொலை நோக்கு பார்வை நல்லா இருக்கு.....

S.A. நவாஸுதீன் said...

தல!

ரொம்ப டாப்பா எழுதி இருக்கீங்க.

முன்னாடியெல்லாம் அதிரை-மதுக்கூர் (வழி துவரங்குறிச்சி) ரோடு பக்கம் புளியமர நிழல்தான் ஸ்பெசாலிட்டியே. இப்போ எப்படி இருக்குன்னு தெரியலை.

புளி போட்டோ போட்டு உமிழ்நீர் சுரக்க வச்சிடீங்க.

///சில அன்பர்கள் மரம் நடும் அற்புத சேவைல இருக்காங்க அவங்ககிட்ட நான் கேக்குறது என்னன்னா ? கொஞ்சம் புளிய மரங்களையும் சேர்த்து நடுங்க அப்போதான் எதிர்காலத்துல புளியின் தேவையை நிறைவு செய்ய முடியும் இல்லாட்டி இது புளி இல்ல ஆனா புளி மாதிரி அப்படின்னு எதாச்சும் கெமிக்கல் பொருள பயன்படுத்தி அடுத்த தலைமுறை மக்கள் உடம்ப கெடுத்துக்க போறாங்க...! ///

ரொம்ப அருமையான யோசனை. ஆமோதிக்கிறேன்.

skarthee3 said...

நண்பருக்கு வணக்கம்!!
சமுதாயத்துக்கு மிகவும் தேவையான, சிந்திக்க வேண்டிய கருத்து!!
அரசாங்கம் இலவசங்களை கொடுக்கும் போது பயனாளிகளை மரம் வளர்த்தல் போன்ற விடயங்களில் கட்டாயமாக ஈடுபடுத்தினால் சமுதாயமும் பயன் பெரும்!!
அரசாங்கம் புலி எண்ணிக்கை குறைவு பற்றி சிந்திக்கும் போது இந்த புளி யை பற்றியும் சிந்திக்க வேண்டும் !!
தொடர்க உம் தொண்டு!! வாழ்த்துக்கள் !!

டவுசர் பாண்டி... said...

//இப்படி எல்லா இடங்கள்லயும் யாரு மரங்கள நட்டு வைச்சதுன்னு எனக்கு வயசானதால மறந்து போச்சு..!//

ஒரு வேளை அசோகர் நட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்....நல்ல நினைவு படுத்தி பாருங்க !

டவுசர் பாண்டி... said...

இப்போது சென்னை போன்ற பெரு நகரங்களில் சூப்பர் மார்கெட்டுகளில் தாய்லாந்து மாதிரியான நாடுகளில் இருந்து இறக்குமதியான புளி கிடைக்கிறது....

வெட்கப்பட வேண்டிய விதயம்....

swizram said...

//ரோட அகல படுத்திதான் ஆகணும் பொறுத்துக்கலாம்..! ஆனா அது ஏன் ரெண்டு பக்கமும் உள்ள மரங்கள வெட்டனும் ...? ஒருபக்கம் மட்டும் வெட்டி அகல படுத்தலாமே ...?//

என் கல்லூரிக்கு போற வழி ல உள்ள எல்லா மரத்தையும் வெட்டிட்டாங்க.... இப்ப அங்க நிழலுக்கு ஒதுங்க கூட மரம் கிடையாது...!!

//இது புளி இல்ல ஆனா புளி மாதிரி அப்படின்னு எதாச்சும் கெமிக்கல் பொருள பயன்படுத்தி அடுத்த தலைமுறை மக்கள் உடம்ப கெடுத்துக்க போறாங்க...!//

சரியா சொன்னீங்க !!!

SUFFIX said...

சாலைகளின் இரு புறமும் மரங்கள், அதனிடையே பயணம் செல்வதின் இன்பம் அலாதி தான். அருமையா எழுதி இருக்கீங்க ஜீவன்!!

சந்தனமுல்லை said...

அருமையான இடுகை..படங்கள் பார்க்க பார்க்க குளிர்ச்சி! அசத்தல் இடுகை ஜீவன்!

ஜெட்லி... said...

நல்லா சொன்னிங்க அப்படின்னு சொல்லிட்டு
போக விருப்பமில்லை...நாமும் ஏதாவது செய்யணும்
பாஸ்...

விஜய் said...

நல்ல பதிவு

எல்லா மரங்களையும் நடவேண்டும் புவி வெப்பமயமாதலை தடுக்க

விஜய்

அமுதா said...

நல்ல பதிவு ஜீவன். புளியமரம்... ஒரு காலத்தில் அந்த இலை, பிஞ்சு, உதைப்பழம், பழம் என்று எல்லாவற்றையும் சுவைத்துள்ளேன். இப்பொழுது நான் எங்கும் பார்ப்பதில்லை

மங்கை said...

அவனாசி ரோட்லேயும் ஒரு மரம் இல்லை...எல்லாம் வெட்டிட்டாங்க.. ரொம்ப நாள் கழிச்சு வர்ரவுங்களுக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு.. ஹ்ம்ம்ம்

ஹேமா said...

புளியைப் பற்றிச் சொன்னாலும் செய்தி இனிப்பானது ஜீவன்.

பிரபாகர் said...

சின்ன வயசில ரோட்டோர புளிய மரத்துல கல்லால அடிச்சி, விழுந்து கிடந்தத வீட்டுக்கு எடுத்து வருவோம், சாப்பாடு எடுத்துகிட்டு போற தூக்கு பொவுனியில... எல்லாம் மாறிடுச்சிங்க... நினைவுகளை கிளரும் இடுகை.

பிரபாகர்.

ரோஸ்விக் said...

தல எங்க தோப்புல கிட்டத்தட்ட 50 - 70 புளிய மரம் இருக்கு...அதை பராமரிக்க ஆளு வரமாடேங்கிறாங்க...பராமரிப்பு செலவும் ரொம்ப அதிகமா இருக்கு. ஆடு மேய்க்கிரவங்க அதன் கிளைகளை வெட்டி ஆட்டுக்கு போட்டுடுறாங்க...

இப்பவெல்லாம் மரம் வளர்ப்புங்கிறது என்னமோ கிராமத்தான் செய்ய வேண்டிய வேலையின்னு நகர நாகரீக கண்மணிகள் கருதுறாங்க...

என்ன செய்ய??

ஈ ரா said...

புளிய மரத்தடி என்ற பதம் அடிக்கடி பிரயோகத்தில் இடம்பெறும் வார்த்தை... நீங்கள் சொல்லி இருப்பதைப் பார்த்தால் இன்னும் கொஞ்ச நாளில் புளியம் பழம் எட்டாக்கனி ஆகிவிடும் என்று நினைக்கிறேன்...

புளியம் பழம் அடிக்கப்போய் மாட்டி கொண்ட காலமும், அதில் உப்பு உறைப்பு போட்டு கருங்கல்லில் அடித்து துவையலாக்கி உண்ட இளம் வயது இயற்கை சமையல் நினைவுக்கு வந்து ஏங்கச் செய்கிறது..
புளிய இல்லை கூட ருசியாகத் தான் இருக்கும்....

விழிப்புணர்வை ஏற்படுத்தும் தங்கள் பதிவிற்கு ஒரு வணக்கம்....

நன்றி

கல்யாணி சுரேஷ் said...

ரொம்ப அருமையான பதிவு. ( சாலையோரங்களில் மரம் நட்டது அக்பர் தானுங்களே?)

அமிர்தவர்ஷினி அம்மா said...

குட் போஸ்ட்

இத எழுதுற ஜீவனுக்கும் அது தெரியல //

ஒரு சின்ன திருத்தம்

இது எழுதற ஜீவனுக்கும் வயசாகிப்போனதால அது தெரியல அப்படின்னு இருக்கனும் ;)

Anonymous said...

உங்கள் ஆதங்கம் புளியமரம் வாயிலாக அழகா சொல்லியிருக்கீங்க..

இல்லங்களில் முதியோர்களையே விட்டு வைக்காத நாம எப்படி சாலையோரத்தில் மரங்களை விட்டுவைப்போம் ஹைவேஸ் வேணுமில்ல....

Anonymous said...

//அதுபோல நீங்களும் உங்க வருங்கால சந்ததிக்காக மரம் வைக்கலாம்ல..?//

வைக்கணும் .....
நல்ல மெசேஸ் சொல்லியிருக்கீங்க....

Anonymous said...

இது புளி இல்ல ஆனா புளி மாதிரி அப்படின்னு எதாச்சும் கெமிக்கல் பொருள பயன்படுத்தி அடுத்த தலைமுறை மக்கள் உடம்ப கெடுத்துக்க போறாங்க...!

இன்னும் உடம்பு கெடாமலா இருக்கு புளி மட்டும் கெமிக்கல் இல்லாமல் கிடைத்தால் போதுமா?

ஐய்யோ புளிய மரமே நாங்க மனசே கெட்டுப் போய் தான் வாழ்ந்துகிட்டு இருக்கிறோம்....

sakthi said...

மிக அருமையான பதிவு தமிழ் ,
அரசாங்கம் மரங்களை வளர்ப்போம் என்று கூறும் வேளையில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் நீங்கள் கூறுவது போல யாரோ நல்ல சில இதயங்கள் நமக்காக தண்ணீர் ஊற்றி வளர்த்த மரங்களை (உயிர்களை)அழித்து வருகிறது.உங்களுக்கு தெரியும் அவினாசி சாலையில் V.O.C .PARK முதல் AIRPORT வரை எத்தனை பெரிய நிழல் தரும் மரங்கள் இருந்தன .இப்போது ஒன்றும் இல்லை எல்லாம் வெட்டி சாய்தாகிவிட்டது.நிழலுக்கு கூட ஒதுங்க முடியாது .அந்த காலத்தில் சிலர் மரங்களை நட்டனர் .இந்த கால அவசர உகத்தில் நடுபவர் யாரோ ??????????????.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல இடுகை.

அத்திரி said...

புளியைப்போல் நல்ல புளிப்பான பதிவு.............

நினைவுகளுடன் -நிகே- said...

அருமையான யோசனை

நட்புடன் ஜமால் said...

நல்ல பதிவண்ணே

இன்னும் சில பல காலங்கள் கழித்து இந்த பதிவு மீயூஸத்தில் இருக்கும் அந்த புளிய மரத்தை போல ...

RAMYA said...

புளியமரம் எங்கே யாரு கண்டுபிடிச்சாங்க, யாரு மொதல்லே உபயோகப் படுத்தினாங்க, எப்படி இந்தியாவுக்கு வந்தது என்று அலைந்து திரிஞ்சி தேடினதுலே ஏதோ ஓரளவிற்கு புரிஞ்சுது.

ஆனால் இன்னும் அதில் சந்தேகம் உள்ளது. அதனால் இத்தோட புளியமரத்தைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை முடிச்சிக்கலாம்னு வெறும் கையை வீசிக்கிட்டு வந்துட்டேன். மன்னிக்க நண்பா:))

புதுசு புதுசா யோசிச்சு எழுதற உங்க டெக்னிக் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மண்டை காஞ்சி போகுது அது வேறே விஷயம். அதுதான் உங்க எழுத்திற்கு கிடைத்த வெற்றின்னு சொல்லுவேன்!

ஆனா இந்த முறை புளியமரத்தை சுத்தி சுத்தி அலைய வச்சீங்க பாருங்க அவ்வ்வ்வவ்வ்வ்வ்....

Thamira said...

ஒண்ணும் பிரச்சினையில்லைண்ணே.. இம்போர்ட் பண்ணிட்டாப்போச்சி.! :-))