நான் ஹிந்து ..! நீ முஸ்லிம்..! நாம் யார் ..?
நண்பர் புதுகை அப்துல்லா ஒரு பதிவு எழுதி இருக்கிறார்!
கிர்மினல்கள்
! கிர்மினல்களே! என்ற அந்த பதிவில் நேசமுடன் இஸ்லாம் என்ற பதிவரின் பதிவில் பெற்ற மகளை கற்பழித்த ஹிந்து தந்தை கைது. என்ற தலைப்பில் இடப்பட்டு இருந்த பதிவில் ''ஹிந்து தந்தை'' என்று மதத்தை குறிபிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், முஸ்லிம் தீவிர வாதிகள் என பொதுவில் கூறபடுவதால் மன வேதனையை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து தன்னுடைய சிறந்த பதிவுகளில் ஒன்றான தீபாவளி நினைவுகள் பதிவினை மறுபதிவும் செய்து இருக்கிறார்! இதன் மூலம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை என்ற ஒரு உயர்ந்த நோக்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

வெறுப்பை எளிதில் விதைத்து அதன் பலனை உடனடியாக நாமே அடைந்து விடலாம். ஆனால் அன்பை நாம் விதைத்தால் அதன் பலன் தெரிய அடுத்த பல தலைமுறைகள்கூட ஆகும். நீர்,நிலம்,காற்று என அனைத்தையும் வரும் சந்ததிகளுக்கு மாசுபடுத்திக் குடுத்து விட்டோம். அந்த வரிசையில் மதத்தைச் சேர்க்காமல் இருக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு இருப்பதை மறவோம்.
இந்த கருத்தில் மேலும் உயர்ந்து நிற்கிறார்


எங்கள் ஊர் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிகம் கலந்து வாழும் பகுதி! அங்கே எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உண்டு.சிறுவயதுமுதல் ஒரே குடும்பமாக பழகிய பல நட்புகளும் அங்கே உண்டு.தீபாவளி ,ரம்ஜான் எல்லாம் ஒன்றாக கொண்டாடி இருக்கிறோம். ரம்ஜான் பண்டிகையின் போது பண்டிகை காரர்கள் வீட்டில் இருக்கும் பட்சனங்களைவிட எங்கள் வீட்டில் அதிகம் இருக்கும்.எல்லா நண்பர்கள் வீட்டிலிருந்தும் பலகாரங்கள் வந்துவிடும். தீபாவளி சமயங்களில் அவர்கள் வீட்டிலும் அப்டித்தான்.
டேய்! போன தீபாவளிக்கு உங்க வீட்டுல செய்ஞ்ச தேங்காப்பார ரொம்ப நல்லா இருந்துச்சி இந்தவாட்டியும் அம்மாகிட்ட சொல்லி செய்யசொல்லு!! என இஸ்லாமிய நண்பனுக்கு பிடித்த பட்சணங்கள் ஹிந்து வீட்டில் செய்த சம்பவங்களும் உண்டு .நட்பிற்குள் மதம் நுழையுமா ?

நல்ல உறுதியான,புரிந்துணர்வு கொண்ட எந்த ஒரு நட்பிற்குள்ளும் மதம் நுழைய முடியாது! எனக்கு பல இஸ்லாமிய நண்பர்கள் இருந்தாலும் அதில் மிக முக்கியமான மிக நெருங்கிய நண்பன் இருக்கிறான் அவன் பெயர் இப்ராம்ஷா. இப்போது துபாயில் இருக்கிறான். என் எல்லா இன்ப துன்பங்களிலும் பங்கெடுத்தவன் முக்கிய நேரங்களில் இடுக்கண் களைந்தவன்.


ஒரு சமயம் ஒரு நண்பனின் கட்டாய அழைப்பின் பேரில் ஒரு கூட்டத்திற்கு சென்றேன் அது ஒரு ஹிந்து மத அமைப்பின் கூட்டம். பழைய வரலாறுகள் பேசப்பட்டன, மன்னர்கால சம்பவங்கள் எடுத்துகூற பட்டன.முஸ்லிம்களுக்கு எதிரான பல விஷயங்கள் முன்வைக்க பட்டன. இதுபோன்ற சம்பவங்களை மூளைசலவை என்று சொல்கிறார்கள்.சலவை என்றால் சுத்தம் செய்வதுதானே ஆனால் இவர்கள் மூளையை அழுக்காக அல்லவா ஆக்குகிறார்கள்.இவர்கள் சொல்லிய எந்த கருத்தும் என் இப்ராம்ஷா முன்னர் எடுபடவில்லை என் மூளையை அழுக்கடையாமல் சுத்தமாக சலவை செய்தது என் இப்ராம்ஷா வின் நட்புதான். இப்ராம்ஷா பற்றி இங்கு எழுதவே எனக்கு பெருமையாக இருக்கிறது.இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் ஊருக்கு சென்று இருந்தேன் குடும்பத்துடன் .துபாயில் இருந்து இப்ராம்ஷாவும் வந்து இருந்தான்.எல்லோரும் குடும்பத்துடன் உற்சாகமாய் பேசி கொண்டுஇருந்தோம்.அப்போது பிரபல தொலைகாட்சியில் ஒரு செய்தி குண்டு வெடிப்பு பற்றி குண்டு வைத்தவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று செய்தி படிக்கிறார்கள்.இப்ராம்ஷா மனம் நொந்து போகிறான் வெளியில் காட்டி கொள்ளவில்லை.அவன் உற்சாகம் மறைந்து கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடுகிறான்.எங்கோ யாரோ செய்கிற தவறிற்கு ஏன் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் என சொல்லவேண்டும். இதோ என் கண்முன்னே என் நண்பன் நொந்து போகிறான்!
இதே போல நல்ல நட்பு ஏதும் இல்லாத ஒரு தவறும் செய்யாத ஒரு இஸ்லாமியர் இதை பார்க்கும்போது அவருக்கு என்ன தோன்றும் இந்துக்கள் மேல் வெறுப்பும் தன்மதத்தின் பற்றும் அதிகரிக்காதா? சும்மா இருக்கும் ஒருவனை மதவாதியாக மாற்றுவதுயார்?

இந்தியா ஒரு மத சார்பு அற்ற நாடுதானே இப்படி ஹிந்து தீவிரவாதி,முஸ்லிம் தீவிரவாதி,கிறித்தவ தீவிரவாதி என்று சொன்னால் சராசரி மக்களும் மதவாதி ஆகிவிடமாட்டார்களா? அந்த வார்த்தை இந்திய இறையான்மையை பாதிக்காதா ? இப்போது ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாய நபர் ஒருவரை யாராவது அவர் ஜாதியை குறிப்பிட்டு பேசினாலே சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

அப்படி இருக்க! வெகு சாதாரணமாக ஒரு மதத்தை சொல்லி தீவிரவாதிகள் என்று சொல்லி விடுகிறார்கள். அப்படி சொல்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மதத்தை சொல்லி தீவிரவாதிகள் என்று சொன்னால் அந்த வார்த்தையை தேச விரோத சொல்லாக அறிவிக்க வேண்டும்.

நான் ஒரு ஹிந்து! இதில் எந்த மாற்றமும் இல்லை! என் நண்பன் இப்ராம்ஷா ஒருமுஸ்லிம்! அதிலும் எந்த மாற்றமும் இல்லை! நாங்கள் யார்? இந்த பிறவியின்மிக சிறந்த நண்பர்கள் நாங்கள் அதிலும் எந்தவித மாற்றமும் இல்லை!!!இது ஒரு மீள் பதிவு

சபரி மலைக்கு மாலைபோட்டு மலைக்கு போயிட்டு ரெண்டு நாள் முன்னாடிதான் வந்தேன் பயண அனுபவங்கள பதிவா போட இருந்தேன் அதுக்கு முன்னாடி இந்த பதிவ இப்போதைக்கு போடலாமேன்னு தோணுச்சி அடுத்த பதிவு சபரி மலை பயண அனுபவங்கள்.


.........


...........................................................................................................................

...................................................................
>

36 comments:

மங்கை said...

மனசு திருப்திக்கு போட்டுட்டீங்க.. இனி பயண அனுபவங்கள போடுங்க... வேற பேசி ஒன்னும் ஆகப்போறதில்லை...

ராஷா said...

தமிழ் நாட்டை போறுத்தமட்டில் எல்லா இடங்களிலும் இந்து, முஸ்லிம் ஒரு குடும்பமாக தான் இருக்காங்க, நன்பர்கள், சக மனிதர்களிடையே எந்த ஒரு வேறுபாடும் இல்லை, - நல்ல பதிவு

நட்புடன் ஜமால் said...

சரியான நேரத்தில் சரியான பார்வை.

-----------------------

செய்தது தவறென்று உணராதவர்களை ஒன்றும் சொல்வதற்கில்லை

ஆனால் அதை சொல்லி சொல்லியே கிழித்து தொங்கவிட்டுகிட்டு இருக்காங்க பலர் - பலரின் வழி மொழிதல்களோடு - பரவாயில்லை - இவர்களை அடையாளம் காண இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

கோபமில்லை ஆனால் சர்வ நிச்சியமாக மனம் நிறைய வருத்தமுண்டு.

நன்றி அண்ணா புரிதல்களுக்கு.

..:: Mãstän ::.. said...

மிகவும் அற்புதமா எழுதிருக்கீங்க ஜீவன்.

சில ____ இருக்கு... மதத்தை வைத்து பிழைக்க, எதுக்கு எடுத்தாளும் மதம் மதம்... சே இவர்களின் சேர்க்கைய பார்த்து நொந்து போய்ருந்த எனக்கு உங்களது பதிவு அற்புதம்.

பீர் | Peer said...

குட்டையை மேலும் குழப்பாமல், இப்போதைக்கு தேவையான பதிவு ஜீவன். உண்மையில் மதநல்லிணக்கம் விரும்புபவர்கள் செய்ய வேண்டியது.

சபரி மலை பயண அனுபவங்களை எழுதுங்க. தெரிந்துகொள்ள ஆவல்.

அபுல் பசர் said...

மதம் வேண்டாம், மனிதம் வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறீர்கள்.
தெளிவான சிந்தனை.
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.
நட்புடன்
அபுல்பசர்

SUFFIX said...

அறிவுப்பூர்வமாக எழுதியிருக்கின்றீர்கள் ஜீவன், அனைவரும் இப்படி நல்லிணக்கத்துடன் சிந்தித்தால் மனிதம் பயன்பெறும். மிக்க மகிழ்ச்சி.

S.A. நவாஸுதீன் said...

தல

தேவையான நேரத்தில் மீள்பதிவாயினும் மிகத் தேவையான பதிவு.

///செய்தது தவறென்று உணராதவர்களை ஒன்றும் சொல்வதற்கில்லை

ஆனால் அதை சொல்லி சொல்லியே கிழித்து தொங்கவிட்டுகிட்டு இருக்காங்க பலர் - பலரின் வழி மொழிதல்களோடு - பரவாயில்லை - இவர்களை அடையாளம் காண இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

கோபமில்லை ஆனால் சர்வ நிச்சியமாக மனம் நிறைய வருத்தமுண்டு.////

இதை நானும் என்னுடைய கருத்தாக பதிவு பண்ண விரும்புகிறேன்

சத்ரியன் said...

ஜீவன்,

மிக நல்ல பதிவு.

எனக்கும் நண்பர்களாய் பல “மனிதர்கள்” இருக்கிறார்கள்.

ஷாகுல் said...

//தமிழ் நாட்டை போறுத்தமட்டில் எல்லா இடங்களிலும் இந்து, முஸ்லிம் ஒரு குடும்பமாக தான் இருக்காங்க//

//செய்தது தவறென்று உணராதவர்களை ஒன்றும் சொல்வதற்கில்லை

ஆனால் அதை சொல்லி சொல்லியே கிழித்து தொங்கவிட்டுகிட்டு இருக்காங்க பலர் - பலரின் வழி மொழிதல்களோடு - பரவாயில்லை - இவர்களை அடையாளம் காண இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

கோபமில்லை ஆனால் சர்வ நிச்சியமாக மனம் நிறைய வருத்தமுண்டு//

முழுமையாக வழிமொழிகிறேன்.

நல்ல பதிவு சார்.

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

பதிவு சராசரியாக கைதட்டல் பெறும் ஒன்று. பலர் கைதட்டிவிட்டார்கள் இல்லயா?

முதலில், இத்தகையப்பிரச்சினைகளை, ‘என் நணபர்கள் இப்படி’ ‘நான் பயணித்தபோது ஒருவரைக்கண்டேன்’ என்று தனிமனித உணர்ச்சிகள், அனுபவங்க்களில் அடிப்படையில் எழுதுவதை தவிர்த்துப் பார்க்கவேண்டும்.

உங்கள் கருத்துகளைக் காரசாரமாக மறுப்பவர்கள் ஏராளம் என்பதை மனதில் கொள்வது இப்பிரச்சனைக்கு உங்களின் அணுகுமுறையை மாற்றும். ஒருவேளை அவை உங்களைச் சரியான வழியில் கொண்டும் செல்லலாம்.

எடுத்துக்காட்டாக:

குண்டுகள் வைத்து பொதுமக்களைக் கொன்ற தீவிரவாதிகள் அனைவரும் இசுலாத்தை தம் மதம் எனக்கூறிக்கொண்டு, ‘அல்லாஹு அகபரை’ என்று மூச்சுக்கொருமுறைக் கூறிக்கொள்பவர்கள்தாம். (இங்கு மாலே கான வெடிப்பை நாம் எடுக்கவில்லை).

தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லீம்களே.
முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள அல்ல.

இந்த இருவாசங்களும்தான் நீங்கள் எதிர்னோக்க வேண்டியவை.

பண்ணினீர்களா?

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

முஸ்லீம்கள் உங்கள் நண்பர்களாக இருக்கலாம். ஆயினும் அவர்கள் எங்கு சென்றாலும், தாங்கள் தனிக்குழுவாகவே வாழ்கிறார்கள். காரணம். அவர்கள் local culture என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் வாழ்க்கைமுறை அவர்கள் மதத்தை வழியொட்டியது.

பாதி முசுலீம், கால்வாசி முசுலீம், முக்கால்வாசி முசுலீம் என்றெல்லாம் கிடையா.

இருந்தால் 100/100 முசுலீம். இல்லாவிட்டால் முசுலீம் அல்ல.

எனவேதான், அப்துல் கலாமை முசுலீம் என ஏற்றுக்கொள்வதில்லை.

உலகில் எங்கு சென்றாலும், முசுலீம்களுக்கு அங்குள்ள local cultureவுடம் integrate பண்ணுவது இயலாததாகவிருக்கிறது.

இந்தப்பிளவு எங்கு வாழ்கிறார்களோ, அங்கு பிர்ச்சனை உண்டாக்கிவிடுகிறது. அதனால் அவர்க்ள மனவருத்தமும் மன உலைச்சலுக்கும் ஆளாகி விடுகிறார்கள்.

இதை அவர்களுள் சிலர் (நான் தீவிரவாதிகள் என அழைக்கும்) தங்களுக்குச் சாதகமாகப்பயன்படுத்தி சமூகச்சீர்குலைவுக்கு வித்திடுகிறார்கள்.

இவற்றையெல்லாம் யோசித்தீர்களா?

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

நான் சொன்ன அனைத்தும் தமிழ்நாட்டு பிராமணருக்கும் பொறுந்தும். அவர்களும் முசுலிகளைப்போலத்தான். நான் தனி என மனப்பான்மை.

தயவு செய்து இன்னும் யோசியுங்கள்.

உண்மைகளை நண்பர்களுக்காக பலியிடக்கூடாது. எனக்கு இசுலாமியத்தோழர்கள் உண்டு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

மங்கை said...
மனசு திருப்திக்கு போட்டுட்டீங்க.. இனி பயண அனுபவங்கள போடுங்க... வேற பேசி ஒன்னும் ஆகப்போறதில்லை...//

Repeetu..

ஜீவன் said...

Blogger ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ///


////முதலில், இத்தகையப்பிரச்சினைகளை, ‘என் நணபர்கள் இப்படி’ ‘நான் பயணித்தபோது ஒருவரைக்கண்டேன்’ என்று தனிமனித உணர்ச்சிகள், அனுபவங்க்களில் அடிப்படையில் எழுதுவதை தவிர்த்துப் பார்க்கவேண்டும்.///

ஏன் தவிர்க்க வேண்டும்..? தனிப்பட்ட நட்புக்களே மத ஒற்றுமையின் ஆணிவேராக இருக்கும் என கருதுகிறேன்..! ஒவ்வொருவருக்கும் அடுத்த மதத்தினர் செய்யும் சில செயல்கள் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்த கூடும் ..! அந்த கோபத்தையும் வெறுப்பையும் தணிப்பது தனிப்பட்ட நட்புகளே...!

////உங்கள் கருத்துகளைக் காரசாரமாக மறுப்பவர்கள் ஏராளம் என்பதை மனதில் கொள்வது இப்பிரச்சனைக்கு உங்களின் அணுகுமுறையை மாற்றும். ஒருவேளை அவை உங்களைச் சரியான வழியில் கொண்டும் செல்லலாம்.////

என் கருத்துகளை எப்படி மறுக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நானும் ஆர்வமாய் இருக்கிறேன் ..! அவர்கள் கருத்து என்னை சரியான வழிக்கு கொண்டு செல்லுமா ...?
பார்க்கலாம் ...!

////தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லீம்களே.
முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள அல்ல.

இந்த இருவாசங்களும்தான் நீங்கள் எதிர்னோக்க வேண்டியவை.///

தீவிர வாதிகள் அனைவரும் முஸ்லிம்களா ???

எப்படி..? நக்சல் பாரிகள் .. மாவோயிஸ்டுகள் எல்லாம் முஸ்லிம்களா ..?
இவர்கள் பொது மக்களுக்கு தீங்கு செய்யவில்லையா ?

முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை இதைத்தான் நானும் சொல்லி இருக்கிறேன்..!

ஜீவன் said...

Blogger//// ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

முஸ்லீம்கள் உங்கள் நண்பர்களாக இருக்கலாம். ஆயினும் அவர்கள் எங்கு சென்றாலும், தாங்கள் தனிக்குழுவாகவே வாழ்கிறார்கள். காரணம். அவர்கள் local culture என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் வாழ்க்கைமுறை அவர்கள் மதத்தை வழியொட்டியது.

பாதி முசுலீம், கால்வாசி முசுலீம், முக்கால்வாசி முசுலீம் என்றெல்லாம் கிடையா.

இருந்தால் 100/100 முசுலீம். இல்லாவிட்டால் முசுலீம் அல்ல.

எனவேதான், அப்துல் கலாமை முசுலீம் என ஏற்றுக்கொள்வதில்லை.

உலகில் எங்கு சென்றாலும், முசுலீம்களுக்கு அங்குள்ள local cultureவுடம் integrate பண்ணுவது இயலாததாகவிருக்கிறது.

இந்தப்பிளவு எங்கு வாழ்கிறார்களோ, அங்கு பிர்ச்சனை உண்டாக்கிவிடுகிறது. அதனால் அவர்க்ள மனவருத்தமும் மன உலைச்சலுக்கும் ஆளாகி விடுகிறார்கள்.

இதை அவர்களுள் சிலர் (நான் தீவிரவாதிகள் என அழைக்கும்) தங்களுக்குச் சாதகமாகப்பயன்படுத்தி சமூகச்சீர்குலைவுக்கு வித்திடுகிறார்கள்.

இவற்றையெல்லாம் யோசித்தீர்களா?////மைனாரிட்டியாக இருக்கும் எவருக்கும் தோன்றும் உணர்வுகள்தான் நீங்கள் சொல்லி இருப்பது ...! அதற்க்கு காரணம் மெஜாரிடியாக இருக்கும் சிலரின் செய்கைகள்தான்...!

நீங்கள் சொல்லுவதுபோல மைனாரிட்டி ஜாதியினர் கூட நடந்து கொள்ளுவார்கள் அதுவும் ஒரே மதத்தில்....!!!!

ஜீவன் said...

Blogger/// ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

நான் சொன்ன அனைத்தும் தமிழ்நாட்டு பிராமணருக்கும் பொறுந்தும். அவர்களும் முசுலிகளைப்போலத்தான். நான் தனி என மனப்பான்மை.

தயவு செய்து இன்னும் யோசியுங்கள்.

உண்மைகளை நண்பர்களுக்காக பலியிடக்கூடாது. எனக்கு இசுலாமியத்தோழர்கள் உண்டு.///


இங்கே அனாவசியமாக பிராமணர்களை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை

எந்த ஒரு தவறான செயலுக்கும் தகுந்த கூலி உண்டு ...!


இங்கே என்ன உண்மை பலியாகிவிட்டது....?

கலகலப்ரியா said...

:) arumaiyaana pathivu..!

பிரியமுடன் பிரபு said...

வெறுப்பை எளிதில் விதைத்து அதன் பலனை உடனடியாக நாமே அடைந்து விடலாம். ஆனால் அன்பை நாம் விதைத்தால் அதன் பலன் தெரிய அடுத்த பல தலைமுறைகள்கூட ஆகும்.

...

super

RAZIN ABDUL RAHMAN said...

அன்பர் ஜீவன் அவ்ர்களுக்கு,எப்பொதும் தமிழ்மணத்தில் நல்ல பதிவுகளை தேடி படிப்பதுண்டு.ஆனால் எல்லா பதிவிற்கும் பின்னூட்டம் இட நான் விரும்புவதில்லை.ஆனால் தங்களின் இந்த பதிவின் மூலம் மதநல்லிணக்கத்தை போற்றி,நல்ல நட்பை உணர செய்துள்ளீர்கள்,நன்றி,வாழ்த்துக்கள்.நான் அதிகம் முயற்சித்து,அடைய நினைக்கும் எல்லைகளில் முக்கியமானது,மதநல்லிணக்கம்.
நட்புடன்
ரஜின்
http://sunmarkam.blogspot.com/

கபிலன் said...

"வெறுப்பை எளிதில் விதைத்து அதன் பலனை உடனடியாக நாமே அடைந்து விடலாம். ஆனால் அன்பை நாம் விதைத்தால் அதன் பலன் தெரிய அடுத்த பல தலைமுறைகள்கூட ஆகும். "

சூப்பர். ரொம்ப ஸ்ட்ராங்க் மெசேஜ்!

Anonymous said...

//நாங்கள் யார்? இந்த பிறவியின்மிக சிறந்த நண்பர்கள் நாங்கள் அதிலும் எந்தவித மாற்றமும் இல்லை!!! //

ஆமோதிக்கிறேன்
இப்படித்தான் இருந்தேன் இருக்கிறேன் இருப்பேன் இப்படியே இறப்பேன்...

ஸ்ரீ said...

நல்ல பதிவு ஜீவன்.உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

mohamed ashik said...

தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.
வெந்த புண்ணுக்கு இப்படி-தங்களைப்போல மருந்திட மகாத்மாக்கள் மிகைத்தால் (ஜோ...மாதிரி)காயப்படுத்துபவர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.

//மூளைசலவை என்று சொல்கிறார்கள்.சலவை என்றால் சுத்தம் செய்வதுதானே ஆனால் இவர்கள் மூளையை அழுக்காக அல்லவா ஆக்குகிறார்கள்// - முற்றிலும் புதிய சிந்தனை. இது பரவ-பரப்பப்பட வேண்டும். /மூளைசலவை/--இது அந்த பயங்கரவாதிகளின் பார்வையில் கோர்க்கப்பட்ட - அவர்களே கொடுத்த வார்த்தை திணிப்பு. ஒழிக்கப்பட வேண்டியதுதான். இதற்கு மாற்றாக, "சிந்தனையை மழுங்கடித்து மூளை ஆக்கிரமிப்பு" என்பதுபோல சொல்லலாம்.

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

//ஏன் தவிர்க்க வேண்டும்..? தனிப்பட்ட நட்புக்களே மத ஒற்றுமையின் ஆணிவேராக இருக்கும் என கருதுகிறேன்..! ஒவ்வொருவருக்கும் அடுத்த மதத்தினர் செய்யும் சில செயல்கள் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்த கூடும் ..! அந்த கோபத்தையும் வெறுப்பையும் தணிப்பது தனிப்பட்ட நட்புகளே...!
//

I dont want to argue on this matter. It is your view that amity between different people can be achieved so easily. That is optimism which I dont share with you.

For me, realities do matter. For an amicable society, all parties should agree with one another - more or less. Matha nalliinakkam is a will o' the wisp: the more you go near, the far it moves away. If one party attempts to force its way on others, others will be on their guard; and soon, try to protect their own: and, sometimes, for fear, attempt to force their way. In the world of religions, history has recorded such things happening every now and then. Therefore, matha nallinakkam is always a pipe dream. It is not pessimism. It is a bitter truth based on history.

Ok. lets leave it at that.

Please go over the passage written by you and quoted by me:

My point does not stop at friendships etc. I referred to it because you are basing your blog on certain personal experiences.

My point rather is that:

Emotions will blind your vision. You will continue to live in an imagined world suitable to you.

Bye,,,bye Sir. I have rested my case.

ஹேமா said...

ஜீவன் மனிதன் மனிதனாக வாழத் தெரியாமல் திண்டாடியபடியே தனக்குத் தேவையான தேவையில்லாத விஷ்யங்களைத் தேடிக்கொள்கிறான்.அதில் மதமும் ஒன்று.இதையெல்லாம் கண்டு மனிதனைப் படைத்தவனே திகைக்கையில் நாம் எம்மாத்திரம் !

வால்பையன் said...

பிலால்னு ஒரு நண்பன், யார் கேட்டாலும் என் தம்பியென்றே சொல்லி கொள்வான், ஆனா பாவம் அவனுக்கு தான் பல பேரிடம் ஏத்து விழுகுது(அவன் சொந்தங்களிடம்)

மனித நேயமே செத்து போன மாதிரி தெரியுது!

பிரியமுடன்...வசந்த் said...

இப்பதிவு முன்னமே வாசிச்சேன் ஜீவன்..

இதுதான் மீள்ள்ள்ள்ள்ள் பதிவு...

RAMYA said...

ஏற்கனவே படிச்சிருந்தாலும் இப்போது படிக்க தேவையான இடுகை.

நான் உங்களின் பயணக் கட்டுரைதான் எதிர்பார்த்தேன் ஜீவன்.

விரைவில் அதை போடுங்க!

புலவன் புலிகேசி said...

ஜீவன் மதம் பிடித்த ஒரு சில மனிதர்(?)களால்தான் பிரிவினைகள் தோற்றுவிக்கப்படுகிறது....நல்ல பதிவு..

அமுதா said...

/*RAMYA said...
ஏற்கனவே படிச்சிருந்தாலும் இப்போது படிக்க தேவையான இடுகை.

நான் உங்களின் பயணக் கட்டுரைதான் எதிர்பார்த்தேன் ஜீவன்.

விரைவில் அதை போடுங்க!
*/
ரிப்பீட்

அரங்கப்பெருமாள் said...

//சலவை என்றால் சுத்தம் செய்வதுதானே ஆனால் இவர்கள் மூளையை அழுக்காக அல்லவா ஆக்குகிறார்கள்.//

ரொம்ப சரி...

ரோஸ்விக் said...

//ஹேமா said...
ஜீவன் மனிதன் மனிதனாக வாழத் தெரியாமல் திண்டாடியபடியே தனக்குத் தேவையான தேவையில்லாத விஷ்யங்களைத் தேடிக்கொள்கிறான்.அதில் மதமும் ஒன்று.இதையெல்லாம் கண்டு மனிதனைப் படைத்தவனே திகைக்கையில் நாம் எம்மாத்திரம் !//

//புலவன் புலிகேசி said...
ஜீவன் மதம் பிடித்த ஒரு சில மனிதர்(?)களால்தான் பிரிவினைகள் தோற்றுவிக்கப்படுகிறது.... //

வழிமொழிகிறேன்

SUMAZLA/சுமஜ்லா said...

இதுவரை எனக்கெதிராக வெளிவந்த எந்த ஒரு இடுகையிலும் நான் ஒரு பின்னூட்டம் கூட இடவில்லை...ஆயினும் இந்த இடுகையின் கீழ் அவ்வாறு என்னால் இருக்க முடியவில்லை!

மனிதர்களுக்காக வந்தது தான் மதம்...ஆக, முதல் தேவை மனிதம்! அவரவர்கள் மதம் அவரவர்களுக்கு புனிதமானது...ஆனால், மத சகிப்புத் தன்மையை (secularism) நாம் பள்ளி நாட்கள் முதலே படித்து வருகிறோம்!

எனக்கு மாற்று மதத் தோழிகள் தான் அதிகம்...! பிரச்சினையான நேரத்தில், எனக்கெதிராக எழுதியது மாற்று மத அன்பர்கள் என்றாலும், எனக்கு ஆறுதலளித்து அரவணைத்ததும் மாற்று மதத் தோழர், தோழிகள் தான்... ஆக, மதத்தால் ஒன்றுமில்லை...எல்லாம் மக்களின் புரிந்துணர்வில் தான் இருக்கிறது!

ஒருவனை நமக்கு பிடிக்கிறது என்றால், அவர் செய்யும் கிறுக்குத் தனங்கள் கூட பிடிக்கும்! அதே போல ஒருவனை நமக்குப் பிடிக்கவில்லை என்றால், அவன் நல்லது செய்தால் கூட கெட்டதாகத் தான் தெரியும்(வேண்டாத....கைபட்டால் குற்றம் என்ற பழமொழி போல)

முடிந்தவரை எதிரிகளை மன்னிப்போம், அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்...இந்த புத்தாண்டில் இதை ஒரு சபதமாக எடுத்துக் கொள்வோம்!

சிங்கக்குட்டி said...

அற்புதம் ஜீவன்.

வருட இறுதியில் ஒரு நல்ல பதிவை படித்த மனநிறைவுடன் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி!.

எம்.எம்.அப்துல்லா said...

anna thank u :)

i am out of station now. will call u after i reach chennai.