சோழ நாட்டு இளவரசன்

துயில் எழுந்து காலை கடன் முடித்து, நீராடல்..! இரண்டு தாதி பெண்கள் அழைத்து சென்று வெது வெதுப்பான வெந்நீரில் நீராட்டிவிட நீராடல் முடிந்து வெண் பட்டு உடுத்தி, முத்துமாலை,முதற்கொண்டு ஆபரணங்கள் அணிந்து, அறுசுவையுடன் கூடிய காலை உணவு.

அரசவை!

இளவரசர் வாழ்க!!! இளவரசர் வாழ்க!!!
என்ற ஜெய கோஷங்கள் முழங்க அரசவை விஜயம்!!

மக்களின் குறை கேட்டல், புலவர்கள்,பாடி பரிசில் பெற்றுச் செல்ல அவை கலைகிறது .!

நண்பகல்!

அரண்மனையின் மேல்தளம் !!





குளிர்ந்த வெயில்!! வயல் வெளியால் நெய்யப்பட்ட என் சோழ தேசம். நிறைந்த எங்கள் காவிரித்தாய்!!தூரத்தில் மக்கள் அனைவரும் சுறுசுறுப்புடன் விவசாய பணிகளில்! ஆங்காங்கே குதிரை வீரர்கள்! இரண்டு வீரர்கள் புழுதியை கிளப்பியபடி குதிரையில் வேகமாக சென்றுகொண்டு இருக்க! மன நிறைவுடன் என் தேசத்தை ரசிக்கின்றேன் !!







போரடிக்கும் வேலைக்கு சேர நாட்டில் இருந்து பதினைந்து யானைகள் வாங்க பட்டு உள்ளன.அவை இன்னும் வந்து சேரவில்லை இன்னும் இரண்டு தினங்களில் அவை வந்துவிடும் அவற்றை பழக்க கூடவே பாகன்களும் வருகிறார்கள்.




கீழே இறங்கி வருகிறேன்! இரண்டு தாதியர், இளவரசருக்கு பெண் தேட துவங்கியது முதல் நம் இளவரசர் முகத்தில் தனி களை வந்துவிட்டது
என கிசு கிசு வென பேச மனதில் உற்சாகம் பிறக்கிறது.




மதிய உணவு

மெல்லிய போதை தரும் சுவையான பானம்! அறுசுவை உணவு முடித்து உறங்க செல்கிறேன். தாதியர் கவரி வீச ஆழ்ந்த உறக்கம்..



v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v



ஏங்க! எந்திரிங்க!!! சனி கிழமை ஆனா! ஓவரா சாப்ட்டுட்டு ராத்திரி ஒன்றமணிவரைக்கும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி அறுக்க வேண்டியது,ஞாயித்துகிழமை பன்னெண்டு மணிவரைக்கும் தூங்க வேண்டியது? எந்திரிங்க இந்தாங்க காப்பி குடிங்க!!



என் சிங்க மணி சீற்றத்துடன் கையில் குவளையுடன் என்னை எழுப்ப ( அதான் கனவு முடிஞ்சு போச்சுல்ல அப்புறம் என்ன இலக்கண தமிழு ) ஆமா! நைட் கொஞ்சம் ஓவர்தான்!!!





..
>

20 comments:

harveena said...

annaa,, kanavula kuda,, hahahhaa,, kalakitenga,, bt always ,,,nega ayriram elakana thamizh pesanalum,, kadasila anni solaraduthu than nachunu iruku,, hahhah

vasu balaji said...

இடிவாங்கிய சோழரே! பராக்:))

Unknown said...

அய்யோ இன்னொரு சோழரா??

இந்த சோழனுங்க தொல்லை தாங்க முடியலப்ப்பா...

பாண்டியர்கள் படையெடுத்தாத்தான் சரிப்பட்டு வரும்

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இடிவாங்கிய சோழரே! பராக்:)) //

டபுள் ரிப்பீட்டேய்...

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

ஆனாலும் கனவு அழகு தான், பசுமையாய்

நாம சோழர்கள் தானா!

dheva said...

Gr8 to read all you articlea amuthan. You know me very well me too from madukkur and we used to play criket at our childhood times.

visit my blogs too.. tamil...

http://kazhuhu.blogspot.com
http://maruthupaandi.blogspot.com
http://kurukkathi.blogspot.com

Gr8 to catch you again through your blogs!

dheva said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

தங்கமணியிடம் அடி வாங்க இளவரசர் கூட விதி விலக்கில்லை போல.....

டவுசர் பாண்டி... said...

நல்ல பில்ட்டப்....பண்ணீருக்கீங்க...இதை அப்படியே ஒரு சர்த்திர நாவலா தொடரலாம்ல...

கல்கி,சாண்டில்யண், விக்கிரமன் க்கு அப்புறம் அந்த வரிசைக்கு ஆளில்லை, யோசிங்க சோழரே!

Anonymous said...

அட நீராட்டி விட இரண்டு தாதிப்பெண்கள் கனவை வீட்டில் சொன்னீங்களா இளவரசே....

Anonymous said...

சோழ நாட்டு இளவரசருக்கு பகல்லயே மது அருந்தும் பழக்கமா? toooooo bad prince...

Anonymous said...

//எந்திரிங்க இந்தாங்க காப்பி குடிங்க!!//

இது தாங்க பெண்ணோட மனசு....ஹிஹிஹி

Anonymous said...

//ஏங்க! எந்திரிங்க!!! சனி கிழமை ஆனா! ஓவரா சாப்ட்டுட்டு ராத்திரி ஒன்றமணிவரைக்கும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி அறுக்க வேண்டியது//

ஐய்யோ இப்படி சித்தரவதை பண்றீங்களா இதோ மாதர் சங்கத்தில் உங்கள் பேரில் புகார் கொடுத்து உங்கல் இல்லம் நோக்கி வந்துக் கொண்டு இருக்கிறோம்...

அப்துல்மாலிக் said...

இது மீள்பதிவுலே?

உங்க பதிவை பிந்தொடர இந்த பதிவு ஒரு காரணம்

வாழ்க வளர்க‌

Anonymous said...

ஆயிரத்தில் ஒருவன் திருட்டு வி சீ டி பார்த்து விட்டு தூங்கி இருப்பிங்க போல

SUFFIX said...

படங்கள் பசுமையா நல்லா இருக்கு!!

//கொஞ்சம் ஓவர்தான்!!!// - இன்னும் திருந்தலையா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்க சோழதேசத்துல மதியான அறுசுவை உணவுல போதையான பானம்தான் தருவாங்களோ ;))))))))

விஜய் said...

ராஜ குலோதுங்கவை விட்டு விட்டீர்களே

ரசித்தேன்

விஜய்

சோழன் said...

Dynamic display (No limits):
Unicode:
என்ன இளவரசே ,நீங்கள் தெலுகு மொழி தொடரை பார்த்தீரா,நாற்றம் தூக்கலாக இருக்கு

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

யாரோட பேச்சோ பொழுது விடிஞ்சா போச்சாமே? ஒரு பதிவுல இத விட்டுட்டதா எழுதியிருந்த ஞாபகம்!
ம் தங்க மணி! பாவம்!