சுற்றுலா பயணிகளை பயமுறுத்தும் சன் டிவி

சன் டிவி யின் நிஜம் நிகழ்ச்சி சுற்றுலாதளங்களையும் அங்குள்ள ஆபத்துகளை பற்றியும் விளக்கி வருகிறது. ஆபத்துகளை பற்றி என்றால் ஆபத்து களை மட்டும் பெரிது படுத்தி பயமுறுத்துகிறது.





அந்தமான்

அந்தமானை பற்றி சொல்லும்போது எப்போதும் அங்கே நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டே இருப்பதாகவும் அங்கே சுற்றுலா சென்றால் அவ்வளவுதான் என்கிற ரீதியில் இருந்தது.

ஒகனேக்கல்

மரண அருவி என்றும், மாதம் மாதம் பலர் இங்கே மரணமடைகிறார்கள் என்றும் எதோ ஒரு சைத்தான் வாழும் இடம்போல ஒகனேக்கல் பற்றி சொல்லி இருந்தனர்.

ஒரு சுற்றுலா தளத்தின் ஆபத்துகளை பற்றி எடுத்து சொல்லுவது தவறில்லை.
ஆனால்..? அந்த இடத்திற்கே போக கூடாது என்பதுபோல சொல்லி பயமுறுத்துவது சரியா ...?

ஒரு நாட்டின் வருவாயில் சுற்றுலா தளங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த சுற்றுலா தளத்தை நம்பி பலர் பிழைப்பு நடத்துகிறார்கள்.

செய்திகளை பரபரப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒரு சுற்றுலா தளத்தின் ஆபத்துகளை மட்டும் பெரிது படுத்தி அந்த இடத்துக்கே மக்களை போகவிடாமல் தடுக்கும் வகையில் செய்திகளை வழங்குவது சரியா ..? அந்த இடத்தை நம்பி பிழைப்பு நடத்துபவர்களை பற்றியும் ,அந்த பகுதியில் வாழும் மக்களின் மனநிலையை பற்றியும் யோசிக்க வேண்டாமா ..?

சன் டிவி செய்வது சரிதானா ...?

>

15 comments:

Rajeswari said...

அப்படியா??

அந்நிகழ்ச்சியை பார்த்தது இல்லை.

ஆனால் நீங்கள் கூறியது போல் ஆபத்துக்களை பெரிதுபடுத்தி சொல்கிறார்கள் என்றால் கண்டிப்பாக சுற்றுலாத்துறைக்கும், அங்கு வாழும் பொது ஜனங்களுக்கும் பாதிப்புதான்.

வால்பையன் said...

சன் டீவி என்னைக்கு சரியா செஞ்சிருக்கு!

விஜய் டீவிய காப்பி அடிச்சு போட்ட நிகழ்ச்சி இது!
அவன் புனைவா போட்டான், இவன் நிஜமா போடுறான்!

ஈரோடு கதிர் said...

// சன் டிவி செய்வது சரிதானா ...?
//

போங்க ஜீவன்
ரொம்ப அப்பாவியா கேள்வி கேக்குறீங்க

Thamira said...

கோ இன்ஸிடெண்ட்? எனது லேட்டஸ்ட் பதிவு.

http://www.aathi-thamira.com/2010/03/blog-post_30.html

Ahamed irshad said...

பணத்துக்காக எதையும் சொல்ற செய்யிற க்ரூப்ங்க அது.

தமிழ் உதயம் said...

சன் டிவிய புறங்கணிங்க.
அதனால் நமக்கொரு நஷ்டமும் வராது.

அப்துல்மாலிக் said...

அதிகமான மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு மீடிய இப்படி நடப்பது கஷ்டமாத்தான் இருக்கு

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அவங்களுக்குத்தேவை பரபரப்பு. அந்தமான்ல சுனாமி வந்தப்பவும் இதே தப்பு தான் பண்ணினாங்க.மக்கள் புறக்கணிக்க ஆரம்பிச்சா தானா சரியாவாங்க! எங்க வீட்டுல 8 வருஷமா தனியார் தொ(ல்)லைக்காட்சி இணைப்பு இல்ல.

மங்கை said...

நானும் பார்த்தேன்...பரபரப்புக்கு செய்திகளை கொடுக்கும் இவர்களிடன் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.. ஊடகங்களை ஒழுங்கு படுத்த ஒன்னும் பண்ண மாட்டேங்கறாங்க

சந்தனமுல்லை said...

ஓ!! பார்க்கலை...நல்லவேளை...

/எங்க வீட்டுல 8 வருஷமா தனியார் தொ(ல்)லைக்காட்சி இணைப்பு இல்ல./

!!

ஜீவன்பென்னி said...

engal veetil thaniyaar tholaikkaatchi arimugamanathilirunthe illai. only doordarshan podhigai indruvarailum.

பின்னோக்கி said...

சன் டிவி காப்பி அடிக்கும் ஆனா 4 வது டிகாக்‌ஷன் மாதிரி கேவலமா விஜய் டிவிய காப்பி அடிக்கிறாங்க.

நடந்தது என்ன மாதிரி இவங்க ஒரு நிகழ்ச்சி தர வேண்டும். ஆனால், செய்தியை தரும் விதத்தில் சொதப்புகிறார்கள். அதுவும் சித்தர் குகை பார்த்து சிரிப்பு வந்தது.

dheva said...

Certainly ... you are very correct...they want to attact the people thorough negative filaments...! We will have to ignore them and not watch there programs...! Thats it....!

பனித்துளி சங்கர் said...

ஒன்றும் சொல்வதற்கில்லை

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in