சிவாஜி கணேசன் --பாபு
வண்டிக்காரன் வேடத்தில் அருமையான நடிப்பை சிவாஜி வெளிபடுத்திய படம் இது. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே பாடல் காலத்தால் அழியாதது.
....
எம்ஜியார் --உலகம் சுற்றும் வாலிபன்
இப்போது கூட இதுபோல படம் எடுப்பது கடினம் எம்ஜியார் இயக்கியது ..!
..
கமல் ஹாசன் -- குணா
மாய்ந்து மாய்ந்து பார்த்தபடம் பின்னணி இசையும், படமும் ...! விவரிக்க வார்த்தைகளே இல்லை...!
..
ரஜினி காந்த் -- முள்ளும் மலரும்
இந்த படத்தில்தான் ரஜினி நிஜமான சூப்பர் ஸ்டார் ..!
..
கன்னத்தில் முத்தமிட்டால்
மணி ரத்னம்...! மணி ரத்னம் தான் ...!
..
சத்ய ராஜ் -- கடலோர கவிதைகள்
பாரதிராஜா செதுக்கிய சிற்பங்களில் அழகான ஒன்று
...
கார்த்திக் -- கோகுலத்தில் சீதை
படத்தின் கருத்தும்...! கார்த்திக் நடிப்பும் அசத்தல்..!
பிரபு நடித்த படங்களிலேயே இதுதான் சிறந்ததாக கருதுகிறேன்..!
..
இதயத்தை திருடாதே
ஐயோ ..! அந்த காதலும் ,அந்த பெண்ணும், பாடல்களும் ,பின்னணி இசையும் வசனமும் அந்த குளிர்ச்சியும் ..அடடா ...!
..
இது தொடர் பதிவு ஆமா ...!!!
நான் தொடர அழைப்பது
டவுசர் பாண்டி
மங்கை மேடம்
>
15 comments:
இதயத்தைத்திருடாதே படம் பார்க்காத நண்பனை 'நீ இருக்கறதைவிட செத்துடு'ன்னு சொன்னது ஞாபகம் வருது. ஹிஹி..
மனசுக்குள் மத்தாப்பு ஒரு வித பாதிப்பு பிரபுவோட அடுத்த படம் பார்க்கும் வரை இருந்தது..
பாரதி...பாரதியை படமாக்கி நமக்கு அறிய வைத்த படைப்பு..
இதோ எந்தன் தெய்வம் - அருமையான பாட்டுங்க.
கடலோரக்கவிதைகள்.. ம்ஹூம், பாடலும், படமும், ஒரு கவிதை மாதிரி இருக்கும்.
முள்ளும் மலரும் - அவன் கெட்ட பய்யன் ஸார்ர் - ரஜினி டயலாக் மறக்க முடியுமா????
ஷோபா & படாபட் ஜெயலஷ்மி மறக்க முடியாத திரைநட்சத்திரங்கள்.
1.ஆரம்பகால சிவாஜியை பிடித்த அளவுக்கு இடைக்கால சிவாஜியை பிடிக்கவில்லை, பிற்கால சிவாஜியை...மூச்ச்ச்ச்ச்....
2.உலகம் சுற்றிய வாலிபனில் ஒன்னரை இன்ச் மேக்கப்தான் பெரிய நெருடல்...
3. குணா டைட்டில் போட ஆரம்பிச்சப்ப தூங்கினவந்தான் எழுப்பி விட்டப்ப படம் முடிஞ்சிருச்சு...அதுனால ரெண்டாவது தடவ பார்த்த படம். இது தெரியாம நம்ம பங்காளிப் பயலுக என்னை ஒரு மாதிரியா பார்த்த காலமெல்லாம் உண்டு.
4.முள்ளும் மலரும்ல...நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்திரிக்காய் என்ற உலகத்தரம் வாய்ந்த பாட்டு மட்டும்தான் நினைவுல தங்கியிருக்கு
5.கண்ணத்தில் முத்தமிட்டால் ஒரு குழந்தையின் பார்வையில் சொல்லப் பட்ட படம்.முடிந்த போன ஒரு காலகட்டத்தின் பதிவாக எதிர்காலத்தில் இருக்கும்.
6.கடலோரக் கவிதைகள் ஒரு மசாலா படம் என்பது என்னுடைய கருத்து. இதே தரத்திலான சமீபத்தைய மசாலா பாலாவின் பிதாமகன்.
7.கோகுலத்தில் சீதை...இயக்குனர் அகத்தியனின் படைப்பு. பெரிய அளவில் வந்திருக்க வேண்டியவர்.இந்த படத்தில் கார்த்திக்கின் நடிப்பை குறிப்பிட வேண்டும்.
8.மனசுக்குள் மத்தாப்பாய் லிசி. மளையால ஒரிஜினலின் முன் இந்தப் படம் ஒன்னுமேயில்லை. கிடைத்தால் பாருங்கள்.
10.பாரதி படத்தை...தாங்கொணா பெருமையுடன் ரிலீஸ் பண்ணினேன்.முதல் காட்சிக்கு அவர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை விட நாலைந்து பேர் அதிகம் வந்திருந்தனர். வலி உணர்ந்த தருணங்களில் அதுவும் ஒன்று.
11. இதயத்தை திருடிய படம்...தொடர்ந்து மூன்று காட்சிகள் பார்த்துவிட்டு, கையில் காசில்லாமல் நள்ளிரவில் நண்பர்களுடன் படம் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டே போன இருபது கிலோ மீட்டரின் புழுதி இன்னமும் ஞாபக அடுக்குகளில் பத்திரமாய் படிந்திருக்கிறது.
ஹேய்! யாருப்பா அது டவுசர்பாண்டி!, எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வந்து பதிவு போடும்படி ஊர்மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்....ஹி...ஹி...
anna,,, kalakitenga,,, kudave enga generation padam poturkalam,, hmm,, :p hahaha,, ipo kuda angadi theru nala iruku,,
தமிழர் கலாச்சாரம் பற்றிய அரிய தகவல்களைக் கொண்ட பதிவு என என் நண்பர் இந்த பதிவின் இணைப்பை தந்தார். என் மீது அவர் எத்தனை கொலைவெறியுடன் இருந்திருக்கிறார் என்பது இப்போது புரிகிறது...
அந்த நல்ல மனசுக்காரர் இங்கே பின்னூட்டம் வேற போட்ருக்காரு...
ஓ.கே தலைவரே -:)
எல்லாம் சிறப்பான லிஸ்ட்டு தான்
கோகுலத்தில் சீதை - ரொம்ப பிடிக்கும் எனக்கு.
nalla therivukal........:)
எல்லாப் படங்களுமே அருமை ஜீவன்.கதை சொல்லும் படங்கள்.
குணா...சொல்ல வார்த்தைகள் இல்லை.அருமையான படம்.
கோகுலத்தில் சீதை,கடலோரக் கவிதைகள்,பாரதி...எல்லாமே.
பாபு எப்போவோ பார்த்த ஞாபகம்.
கதை சரியாக ஞாபகமில்லை.
ஒரு பாட்டு...அதுவும் மனசுக்குள்ள வந்து வந்து போகுது.ஞாபகம் இல்லை.சிவாஜி அவர்கள் ஒரு குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு பாடியிருப்பார்.
நீங்க அப்ப இருந்து நல்லா படம் பாக்குற ஆளுன்னு தெரியுது .........
நீங்க அப்ப இருந்து நல்லா படம் பாக்குற ஆளுன்னு தெரியுது .........
நல்ல தொகுப்பு. :-)
பத்தில் எனக்கு பிடித்தது குணா
விஜய்
நல்ல படங்கள். "கன்னத்தில் முத்தமிட்டால்" எனக்கு மிகப் பிடித்த படம்.
Post a Comment