கோனே பால்சும் கொண்டாட்டமும்

ஆயுத பூஜை க்கு மறுநாள் எப்போதும் கடை விடுமுறைதான். அன்றைய தினத்தில் பேச்சுலர்கள் எல்லாம் சிறிய சுற்றுலா செல்வது வழக்கம்.
இந்த தடவை நாங்கள் சென்றுவந்தது கோனே பால்ஸ். சென்னையில் இருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர பிரதேசம் புத்தூர் அருகில் இருக்கிறது இந்த கோனே பால்ஸ் அருவி குளியல் பிரியர்களுக்கு அருமையான இடம் இது .

சென்னை பெரம்பூர் -செங்குன்றம் -பெரிய பாளையம் -ஊத்துக்கோட்டை வழியே சென்றோம் ஊத்துக்கோட்டையுடன் தமிழக எல்லை முடிகிறது . அதிகம் போக்குவரத்து இல்லாத அகலமான சாலை. வழியில் நெறைய நாட்டு ரோஜா ,ஜாதிமுல்லை தோட்டங்களை காணலாம் .






புத்தூருக்கு ஒரு எட்டு கிலோமீட்டருக்கு முன்னர் இடது புறம் ஒரு சாலை பிரிகிறது .



அருவி நெருங்க நெருங்க ஒரு உற்சாகம் தொற்றி கொள்கிறது..! அருவியில் அதிக அளவு தண்ணிர் விழாது இருந்தாலும் திருப்தியாய் குளிக்கலாம் ..!
''தண்ணில'' குளிப்பது கூடுதல் உற்சாகம் .







அருவிக்கு அருகிலேயே ஒரு சிவன் கோவில் உள்ளது

கோவில் உட்புறம்

மசாஜ் செய்துவிட ஆட்கள் இருக்கிறார்கள்



பெரிய கடைகள் ஏதும் கிடையாது சமைத்து தர ஆட்கள் உண்டு ..! சாப்பாடு கொண்டு செல்வது நல்லது ..!நாங்க பிரிஞ்சி சாதமும் சிக்கன் குருமாவும் கொண்டு போனோம்.


அருவியில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தங்கும் விடுதி உள்ளது ஏசி வசதியுடன் அறைகள் உள்ளன. அக்கம் பக்கம் வீடுகள் இல்லாத மலைகாட்டு பகுதி. இங்கே தங்கி நள்ளிரவில் குளிப்பது த்ரில்லிங்காக இருக்கும்



இங்கு குரங்கு கூட்டம் அதிகம். நன்றாக நட்புடனும் அன்புடனும் பழகுகின்றன.


பெண்கள் குளிக்க தனி வசதி ஏதும் இல்லை. உடைமாற்ற அறை அருவிக்கு அருகிலேயே உள்ளது . பாதுகாப்புக்கோ இன்ன பிற விஷயங்களுக்கோ அங்கே ஆட்கள் யாரும் கிடையாது . ஆங்காங்கே உடைந்த மது பாட்டில்கள். குடும்பத்துடன் நிறைய பேர் வருகிறார்கள் ஆனால் குடித்துவிட்டு கும்மாளம் போடுபவர்கள்தான் அதிகம்.




.

>

11 comments:

பொன் மாலை பொழுது said...

நாங்களும் போவோமில்ல!

இது நொம்ப ஓவரு கண்ணா !
ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நாங்களும் வந்திருப்போமுள்ள?
நாங்கன்னா ? .................நானும் என் கூட்டளியும்தான்.அவருக்கு 'தண்ணில' குளிகிறதுன்னா நொம்ப நொம்ப ஆசையாம்.

dheva said...

//''தண்ணில'' குளிப்பது கூடுதல் உற்சாகம் //

அமுதன் புரியுது.. ஹா.. ஹா..ஹா..!

ரொம்ப நாளாச்சு அமுதன் உங்கள பாத்து.. Looking nice in the photo...!

Anonymous said...

தமிழகத்திலிருந்து ஆந்திரம் வந்த நண்பர் தமிழ் அமுதனிடம் ஒரு சிறப்பு பேட்டி

நிருபர் : ஆமாங்க சுமோ கிட்ட ஒருத்தர் நிக்கறாரே அவரை நல்லா கவனிங்க வண்டியை ஆட்டயை போட வந்தவர் மாதிரியே இருக்காரே

நண்பர்: அவர் தாங்க தமிழ் அமுதன்

நிருபர்: எத்தனைஆண்டுகளாக இங்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்

தமிழ் : நேனு 8 ஏன்லுகா

நிருபர் : சார் நீங்க ரொம்ப கஷ்டப்படவேண்டாம் தமிழிலேயே சொல்லுங்க எங்களுக்கு புரியும், தமிழ் உலகளவிய மொழி அல்லவா

தமிழ் : சரிங்க நான் 8 வருடமா இங்கு வரேன்..

நிருபர்: அதான் தெரியுதே குரங்குக்கும் உங்களுக்குமான நெருங்கிய நட்பை பார்க்கும் போதே

தமிழ் : ஆமாங்க இவர்கள் என் பால்ய நண்பர்கள்

நிருபர்: அதுக்காக அவரிடம் இருக்கும் தின்பண்டங்களை நீங்க வாங்கி தின்பது சரியில்லைங்க..

இதுவரை அளித்த பேட்டிக்கு நன்றி...

பேட்டியை முடித்துக் கொண்டு நிருபர் குழு திரும்புகிறது

தோழி said...

நல்லா என்சாய் பண்ணீங்க போல.. கொண்டாடுங்க..

மங்குனி அமைச்சர் said...

ஆமாங்க சார் நல்ல அமைதியான இடம் , இன்னும் கொஞ்சம் தண்ணீர் அதிகமாக வந்தால் நன்றாக இருக்கும்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாய்ப்பு கிடைக்கும்போது போயிடுவோம்.சீசன் டயத்துல போனா நல்லாருக்கும்.

சிம்பா said...

எங்க ஊரு பக்கம் இப்படி கெடுபிடி இல்லாம அருவி இல்லையே...

தோழி said...

//பேச்சுலர்கள் எல்லாம் சிறிய சுற்றுலா செல்வது வழக்கம்.// பேச்சிலர்கள் போறதெல்லாம் சரி, அங்க நீங்க எப்படி?

ஜெயந்தி said...

நாங்க ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்ன போயிருக்கோம்.

sakthi said...

ம்ம்ம்

நடத்துங்க நடத்துங்க

Griesh Kulangara said...

கோனே பால்ஸ் போகும் போது பெரிய வண்டியில் போவது என்றால் பார்மிட் போட வேண்டுமா?